ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் –ஸ்ரீ பாஷ்ய பெருமை ஸ்ரீ P.B.A .ஸ்வாமிகள் -அனுபவம்

ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கி ஸ்ரீ பராசர பட்டர் வேண்டிக் கொண்டிய படி
பரி சிதமிவ அதாபி கஹநம் பஹூ முகய வாணீ விலசிதம்   -என்று
அதிகம்பீர வாக் விலாசங்களைக் கொண்டு அமைந்த ஸ்ரீ பாஷ்யம்

சத் கதிஸ் சத் க்ருதிஸ் சத்தா சத் பூதிஸ் சத் பராயணா
சத் க்ருதிஸ் -ஜகத் சிருஷ்டி முதலான சிறந்த கார்யங்கள் மற்றவர் வியாக்யானம்
பட்டர் -கிருஷ்ண பரமாக வசுரேதா திருநாமம் தொடங்கி
சத் க்ருதி -என்பதற்கு
தயிர் வெண்ணெய் களவு செய்தது
உரலோடு ஆப்புண்டு இருந்தது
குரவை ஆய்ச்சியரோடு கோத்தது -என்பன
ஆண்டாள் உன் தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு   எத்திறம்
உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே
நம் ஆழ்வாரை மோஹிக்கச் செய்த இந்த செயலை விட்டு வேறு ஒன்றையா  சத் கிருதி எனபது

—————————————————————

விஜி தாத்மா விதேயாத்மா சத் கீர்த்திஸ் சின்ன சம்சய உதீர்ணஸ் சர்வதஸ்  சஷூர் அநீசஸ் சாஸ்வத ஸ்திர –
விஜி தாத்மா -மனத்தை  அடைக்கினவர்  ஜிதேந்த்ரியர்  -என்றார் பிறர்
தம் அடியார் பக்கல் தான் தாழ நின்று வெற்றியை அவருக்கு அருளி தான் தோல்வியை ஏற்றுக் கொள்பவர் -பட்டர்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்  -அடியவர்கள் விரும்பா நிற்க
மம சிரஸி மண்டனம் கோபிகா தண்டனம்-என்று பேசின பெருமாள் திரு உள்ளம் உகக்கும் வியாக்யானம் இது அன்றோ
கூடாரை வெல்லுமவன் கூடுவார் இடம் தோற்பான்

விஜி தாத்மா அவிதேயாத்மா -யாருக்கும் விதேயப் படாத ஸ்வரூபம் உள்ளவர்
பட்டர் -விதேயாத்மா -நிற்பதோ இருப்பதோ கிடப்பதோ போவதோ வருவதோ உண்பதோ
எல்லா வற்றிலும் பக்தர்கள் உடைய கட்டளைக்கு விதேயப் பட்டு இருக்கும் ஸ்வரூபம் உள்ளவர்
கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா
என்றவாறே பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு கிளம்புவதும்
பைந்நாகப் பாயைக் விரித்துக் கொள் -என்றதும் சொன்ன வண்ணம் செய்த பெருமான் யதோத்தகாரி -விதேயாத்மா தானே
ஞாநீ து ஆத்மைவ  மே மதம் -ஞானிக்கு விதேயன் என்று தானே அருளி –
சரீர லஷணம்  அனுஷ்டானத்திலும் காட்டி அருளி
சேனயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமே அச்யுத -என்று அர்ஜுனன் கட்டளை இட தான் அமைத்து வைத்து
நாம் பார்த்த சாரதி அன்றோ இந்த பார்த்தசாரதி

சின்ன சம்சய
கை இலங்கு நெல்லிக் கனி போலே எப்பொழுதும் பார்ப்பவர் ஆதலால் சங்கை இல்லாமல் -ஐயம் திரிபு மறுப்பு  அற-என்பர் பிறர்
பட்டர் -யதார்த்தமான புகழை பெற்றவர் -சௌலப்யம் இருப்பதால்  –
அறியப் படுபவரோ இல்லையோ
எளியவரோ அரியவரோ வசப்படுவாரோ போன்ற சங்கைகளை தனது நடத்தையால் அறுத்து  அருளுபவன் என்றே வியாக்யானம்

அநீச
தமக்கு மேல் ஈஸ்வரர் இல்லாதவர் -பிறர்
பட்டர் -தமக்குத் தாம் கடவர் அல்லர் பக்த பாரதீநத்வத்தாலே ஸ்வா தந்த்ர்யம் இழந்து அநீச –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பார்
வெந்நீரைக் காய்ச்சி நாரணா நீராட  வாராய்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
செண்பகப் பூச் சூட்ட வாராய்
வரும் எம்பெருமானை உகப்பிக்கும் இந்த வியாக்யானம்

——————————————————————-

வஸூர் வஸூ நாஸ் சத்யஸ் சமாதமா  சம்மிதஸ் சம

அசம்மித -என்ற திரு நாமம் ஆக்கி அபரிச்சின்னர் என்பர் பிறர்
பட்டர் -சர்வ பிரகாரத்தாலும் அடியார்களுக்கு பரிச்சின்னரே யாவார்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
தொல்லை இன்பமாகிய பகவானை -அபரிச் சின்னன் என்று ஓதிக் கிடப்பதற்கு பிரதியாக பரிச்சின்னனாக கண்டாள் யசோதை

—————————————————————

அர்த்த அநர்த்தோ மஹா கோச

அநர்த்த –
தாம் விரும்ப வேண்டிய பொருள் இல்லாதவர் -என்றார் பிறர்
பட்டர் -அல்ப பலன் விரும்பும் பாஹ்ய ஹீனர்களால் விரும்பப் படாதவன்

மஹா கோச –
அன்ன மய பிராண மயாதிகளான ஐந்து மஹா  கோசங்களில் இருப்பவர் -பிறர்
பட்டர் -பக்தர்களுக்கு அளவிறந்து அருளினாலும் குறைபடாத
நவ நிதிகள் ரத்நாகரங்கள் தம்முடைய பொக்கிஜமாக உடையவர்

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: