ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -101-199-அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்

101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம் நத்யஜேயம் -கதஞ்சன -தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

102-வ்ருஷாகபி –
கபி -வராஹம் -வராஹமாக தானே தோன்றி ரஷித்து அருளுபவன் -பரத்வ பரமான திரு நாமம் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தை -10-10-7

103- அமேயாத்மா –
அறிய முடியாதவன் -அப்ரமேய -46-போலே -அனுக்ரஹ வெள்ளம் அளவிட முடியாதது
பற்றுடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–எளிவரும் இயல்வினன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –

104-சர்வ யோக விநிஸ்ருத –
எல்லா உபாயங்களாலும் அடையப் படுபவன் -எந்த தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சம் -நம்பத் தக்கவன்
நம்பனை ஞாலம் படைத்தவனை -3-7-8-

105-வஸூ-
ஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –
எண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –
மீ ண்டும் 271/701 வரும்

106-வஸூமநா –
ஆஸ்ரிதரை நிதியாக நினைப்பவன்
துயரறு சுடர் அடி -1-1-1- தனது துயர் போய் சுடர் விட்டு பிரகாசிக்கும் திருவடிகள் ஆஸ்ரிதர் ஒருவனை பெற்றால் –
ச மகாத்மா ஸூ துர்லப -என்று எண்ணுமவன்-
தளிர் புரையும் திருவடி என் தலை மீளவே -திரு நெடும் -1
கருகி வாடி இருந்தவை தளிர் விட்டனவே ஆழ்வார் தலை மேல் ஸ்பர்சத்தால்

107 ஸத்ய –
சத்துக்களுக்கு அனுகூலன்
அவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்

108-ஸமாதமா –
ஆஸ்ரிதர்களை சமமாக எண்ணுபவன் –
வேடன் வேடுவச்சி வசிஷ்டன் குரங்கு -வாசி இன்றி
ஈடும் எடுப்புமில் ஈசன் -1-6-3-
பொது நின்ற பொன் அம் கழல் –

109-ஸம்மித –
அடங்கிய பொருளாய் இருப்பவன்
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே-
மே ராம -என்று தசரதன் சொல்லும் படி
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –

110-ஸ்ம –
எல்லார் இடமும் சமமாய் இருப்பவன்
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
சமோஹம் சர்வ பூதேஷு –

111-அமோக –
உறவு வீண் போகாதவன்
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28

112-புண்டரீ காஷ –
விண்ணோர்க்கு கண்ணாவான்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
திவீவ சஷூராததம் –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே-திரு விருத்தம் -97
புஷ்கராஷ தாமரைக் கண்ணன் -40 திரு நாமம் –

113-வ்ருஷ கர்மா –
நற் செயலை செய்பவன் -தாப த்ரயத்தையும் குளிரச் செய்பவன்
வ்ருஷ -ஸ்ரேஷ்ட தர்மம்
ஜன்ம கர்ம மே திவ்யம் –

114-வ்ருஷா க்ருதி-
தர்மமே உருவானவன் -குளிர்ந்த திருமேனி உடையவன்
அறவனை ஆழிப்படை அந்தணனை -1-7-1-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -8-5-1-

115-ருத்ர –
ஆனந்த கண்ணீர் விடச் செய்பவன் -திவ்ய ரூபம் சேஷ்டிதங்கள் இவற்றால் உருகச் செய்பவன்
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் -7-2-1-
வன் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -பெருமாள் திரு -2-3-
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பரகுணா விஸ்ட –
தாய் எடுத்த சிறு கோலுக்கு அஞ்சி அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -பெருமாள் திரு -7-8-

116-பஹூ சிரா
பல தலைகளை உடையவன்
சஹச்ர சீர்ஷா புருஷ -ஆதி சேஷனாய் பூமியைத் தாங்குபவன்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10-

117-பப்ரு –
பரிப்பவன் -தாங்குபவன் சர்வ பூதானி மத் ஸ்தானி
நாகமேந்து மண்ணினை காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6

118-விஸ்வ யோநி-
அனைத்து உலகத்தவருடன் தொடர்பு கொண்டவன்
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
அணியனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்9-9-10-6/7/8/
சரணம் -ரஷகன் அன்பன் -தோஷம் காணாதவன் மெய்யன் -வேண்டியது கொடுப்பவன் அணியன் சுலபன்-

119-சுசிச்ரவா
நல் வார்த்தைகளைக் கேட்பவன் -சுசி -தூய்மை பெற்றது
மடி தடவாத சோறு -மகா மதி விதுர –
இன் கவி பாடும் பரம கவிகளான ஆழ்வார்களின் ஈரச் சொற்களை உகந்து கேட்பவன்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே-4-5-10
இன்ப மாறி -இன்பம் பயக்கும் மேகம் -இன்பப் பாக்களை வர்ஷிக்கும் -அடியாருக்கும் சர்வேஸ்வரனுக்கும் இன்பம் பயக்கும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -பெரிய திரு மொழி -6-10-10-
மா முனிகள் வாயிலாக ஓர் ஆண்டு ஈடு கேட்டருளினானே-

120- அம்ருத –
ஆராவமுதன் -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திக்கும் விஷயம்
காணத் தெவிட்டாத ஆரா அமுதம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -2-5-4
ஆரா வமுதே அடியேனாவி அகமே தித்திப்பாய் -5-8-10-

121–சாஸ்வத ஸ்தாணு –
என்றும் நிலைத்து இருப்பவன் –
தேவர் அமிர்தம் போலே பிறர் கடத்திக் கொண்டு போகாதபடி நிலைத்து இருந்து தன்னை அனுபவிக்கக் கொடுப்பவன்
தேவ லோக அமர்த்தம் ஒரு தடவையே பானம்
இது சதா பச்யந்தி அம்ருதம்
தன்னையே அருளுமவன்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -அமுதம் உண்டு களித்தேனே -10-8-6-

122-வராரோஹா –
வரம் -மிக உயர்ந்த –
ஆரோஹணம் -பகவத் பிராப்தி
மேலான அடையத் தக்கவன் -பரம பத நாதன் -பர வாசுதேவன்
விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன் -நான் திரு -13

——————————————————————————————————————————————

2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

இது வரை -கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –
வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

123-மஹா தபா –
சிறந்த ஞானம் உடையவன் -யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டகோ
ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது
கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் -சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயரும் மற்றும் யாதுமில்லா அன்று உயர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

125- ஸ்ர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –
யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –
சர்வ வித் -ஞான பூர்த்தி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனிமாப்பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7

126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்
ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –
தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

——————————————-

129-வேத –
வேத சாஸ்த்ரங்களை தருபவன் –
வேத நான்காய் விளக்கு ஒளியாய் -திருநெடு -1
சாஸ்திரங்கள் சாஸ்திர ஜன்ய ஞானத்தையும் தந்தவன்
இதுவும் சங்கர்ஷணன் மூர்த்தியைப் பற்றியது –சாஸ்திர பரதன்
நேதா -நடத்துபவன் பந்தா மார்க்கம் ப்ரஹ்மன ஆசார்ய-அறிவிப்பான் போன்ற திரு நாமங்கள் இத்தாலே
வேதத்தை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை -பெரிய திரு மொழி -2-3-2-
சுடர் போல் என் மனத்து இருந்த வேதா -பெரிய திருமொழி -6-2-9-

130-வேதவித் –
வேதங்களை அறிந்தவன்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -திரு நெடு -30
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -திருச்சந்த -9

131-அவ்யங்க-
வேதாங்கங்கள் நிறைந்து இருப்பவன் சிஷை –வியாகரணம் சந்தஸ் -நிருக்தம் -கல்பம் -ஜோதிஷம்
இவர் வாயில் நல வேதம் ஓதும் வேதியர் வானவராவர் -பெரிய திருமொழி -9-2-1-

132-வேதாங்க –
வேதங்களை சரீரமாக -அங்கங்களாக -உடையவன்
அவன் ஆஜ்ஞ்ஞா ரூபமே வேதம் -அதனால் அவன் சரீரம் போலே
சுருதி சம்ருதிர் மமை வாஜ்ஞா-
சந்தோகன் பௌழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாமவேதி -பெரிய திரு மொழி -5-5-9-

133-வேதவித் –
வேதார்த்தமான தர்மங்களை அறிந்தவன் -அவற்றை சாஸ்திர விஹித தர்மங்களை சேதனர்கள் அனுஷ்டிக்க செய்து -பிரத்யும்னன் –
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-
இவற்றை நன்கு அறிந்தவன் -இவற்றால் அறியப் படுபவன் -இவற்றை நமக்கு அளிப்பவன் –

134-கவி -அநிருத்தன் பரமான திரு நாமம்
அதிக்ரமித்துப் பார்ப்பவன் -சர்வஞ்ஞன் -மேல் மூன்று திரு நாமங்களும் சர்வஞ்ஞதையையே பேசுகின்றன
என்னையும் நோக்கி என் னல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையும் நோக்குகின்றார் -பெரிய திரு மொழி -9-2-1-
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லும்

135-லோகாத் யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
உலகங்களை அறிந்தவன்
உலகம் மூன்று உடையாய் -6-10-10-

136- ஸூராத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
ஸூரர்களை அறிந்தவன்
அமரர்கள் அதிபதி -வானோர் தலைமகன்

137-தர்மாத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
தர்மத்தை அறிந்தவன் –
வேதத்தின் சுவைப் பயன் -பெரிய திருமொழி -2-3-2-
தர்மங்கள் அனுஷ்டிப்பாருக்கு தக்க பலன் அளிப்பவன்
தருமம் அறியாக் குறும்பன் -நாச்-116-ஏச்சு

————————————————————————————–

138-க்ருதாக்ருத -அநிருத்தன் பரமான திரு நாமம்
இஹ பர பலங்களை அளிப்பவன் –
க்ருதம் பிரவ்ருத்தி தர்மம் அக்ருதம் நிவ்ருத்தி தர்மம் அறிந்து பலங்களை அளிப்பவன் –
கோலம் கொள் சுவர்க்கமும் யானே கோலமில் நரகமும் யானே கோலம் திகழ மோக்கமும் யானே -5-6-10

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் -வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் சூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்
தமாசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர
ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

143-ப்ரா ஜிஷ்ணு –
இந்த சதுர்புஜ ரூபத்துடன் பக்தர்களுக்கு தன்னை பிரகாசப்ப் படுத்துபவன்
அர்ஜுனன் -தேனைவ ரூபேண சதுர்புஜேன சஹஸ்ரபாஹோ பவவிச்வமூர்த்தே -ஸ்ரீ கீதை -11-6-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்
அப்பூச்சி காட்டுகின்றான் ஐதிகம்
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் -திருப்பாவை -30

144-போஜனம் –
அனுபவத்துக்கு விஷயம்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
விழுமிய அமரர் விழுங்கும் கோதிலின்கவி -நந்தனார் களிறு -பெரிய திருமொழி -2-3-2-

145-போக்தா
அனுபவிப்பவன்
அஹம் அன்னம் அஹம் அந்நாத –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
அவாவறச் சூழ் அரி -10-10-11
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-

146- ஸஹிஷ்ணு –
ஷமிப்பவன் -சர்வான் அசேஷத ஷமஸ்வ
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்கு மேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2-

———————————————————————————-

மேல் விபவ அவதார திரு நாமங்கள்
3-1- பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
மத்யே விரிஞ்ச கிரீசம் பிரதம அவதாரம்

147-ஜகதாதிஜா –
ஜகத்தின் ஆரம்பத்தில் உண்டானவன்
முதலாம் திரு உருவம் மூன்று ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் -பெரிய திரு -72-என்று சொல்லி முதல்வா -என்கிறார் ஆழ்வார்
முதலாவார் மூவரே அம மூவர் உள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -பொய்கையார் -15
முதல் தனி வித்தேயோ முழு மூவுலகாதிக்கு எல்லாம்-10-10-9

148-அநக-
தோஷம் அற்றவன் -அமலன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குற்றமில் சீர் கற்று -7-1-1-
மீண்டும் -835 -வரும்
தீதில் சீர் திருவேங்கடத்தான்
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் -கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

149-விஜய
வெற்றி -வெற்றியை அருளுபவன்
ப்ரஹ்மன் சிவன் -தங்கள் செயல்களை வெற்றிகரமாக நடத்த அருளுபவன்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை சாவமுள்ளன நீக்குவானை -3-6-2- சாவம் -கேடு தடை

150-ஜேதா-
ஜெயிப்பவன்
ப்ரஹ்ம சிவன் முதலான தேவர்களை அடக்கி ஆள்பவன்
நிறுத்தினான் தெய்வங்களாக அத தெய்வ நாயகன் தானே -5-2-8-
இறைவ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து எத்துவரே -2-2-10

151-விச்வயோநி –
ஜகத் காரணன் –
தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதல் வித்தாய் -2-8-10
கள்வா எம்மையும் எழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -2-2-10-
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பேரு நாயகன் -திரு வாசி -1
முன்பே 118 இதே திரு நாமம் பார்த்தோம் -தன்னை கிட்டியவரை சேர்த்துக் கொள்பவன்

152- புநர் வஸூ-
வசிப்பவன்
அந்தராத்மாவாக இருந்து ப்ரஹ்ம சிவன் முதலாக ஜகத் நிர்வாஹம்
ச ப்ரஹ்ம ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட்
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாம் -9-3-2

——————————————————————————————————————————————————-

3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-
153-உபேந்திர
கஸ்யபர் அதிதி – 12 ஆவது பிள்ளை –இந்த்ரன் தம்பி -குறள் மாணி –

154-வாமந-
குள்ளன் -வாமானி ஸூ காணி நயதி
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா -பெரிய திரு -16-என்று வயிறு பிடிக்குபடி –

155-
ப்ராம்ஸூ –
உயர்ந்தவன் -த்ரி விக்கிரமனைச் சொல்கிறது -சர்வ வ்யாபினே
ஓங்கி உலகளந்த உத்தமன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
தீர்த்தன் உலகளந்த சேவடி
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் -பெரிய திருமொழி -5-8-9-

156-அமோக –
பழுது படாதவன் -வாட்டமில் புகழ் வாமனன் -2-4-1-
மோகம் வ்யர்த்தம் அமோகம் அது இல்லாமை
இந்த்ரன் ஐஸ்வர்யம் பெற்றான் -மகா பலி ஔ தார்யன் பட்டம் பெற்றான் –
தன சம்பந்தம் வீண் போகாதவன்

157-சுசி –
தூயவன் -பிரதிபலன் எதிர்பாராமல் –
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -7-10-11-
அமலனாதி பிரான்
அந்தணன் -மீண்டும் 252-வரும்

158-ஊர்ஜித –
பலவான் -நமுசியை சுழற்றிய பலம்

159-அதீந்த்ர –
இந்தரனுக்கு மேம்பட்டவன் -தேஜஸ் செயல்களால்
இந்திரற்கும் பிரமற்கும் முதலானவன் -திரு நெடு -4

160- சங்க்ரஹ –
எளிதில் க்ரஹிக்கப் படுபவன் -ஆஸ்ரித ஸூ லபன்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன்-
இரந்தும் தேவர்களை ரஷித்தவன்

161-ஸர்க –
சிருஷ்டிக்கப் படுபவன் -இச்சை அடியாக ஆஸ்ரிதர்க்காக தானே -பிறப்பித்துக் கொள்பவன்
உயர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப்
பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

162-த்ருதாத்மா –
ஆத்மாக்களை தரிப்பவன் -அதிதி கஸ்யபர் -தன்னை முற்றூட்டாக கொடுத்து தரிக்கப் பண்ணுமவன்-
காராயின காள நன் மேனியினன் –நாராயணன் நாங்கள் பிரான் அவனே
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் -9-3-1-

163-நியம –
அடக்குமவன் -ஆஸ்ரித விரோதிகளை அடக்கி
சூழல் பல பல வல்லான் –உலகை கேழல் ஒன்றாகி யிடந்த கேசவன் –வேழ மருப்பை யொசித்தான் -1-9-2-
மீண்டும் -869-வரும் நிச்சயிப்பவன் -தேவதைகள் மூலம் பூஜா பலன் அளிப்பவன்

164-யம –
ஆள்பவன் -அந்தர்யாமியாய் இருந்து நடத்துபவன் -யமனையும் நியமிப்பவன்
வீற்று இருந்து எழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை -4-5-1-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –நாச் -11-3-
மீண்டும் -870-வரும்

———————————————————–

3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170

165-வேத்ய –
அறியக் கூடியவன் -யாவராலும் அறிய எளியவன்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-
இடைசிகள் குரங்குகள்
நமோ நமோ வாங்மனசைக பூமயே –

166-வைத்திய –
வித்யைகளை கற்று அறிந்தவன் –
பிறவி நோய்க்கு மருந்து அறிந்தவன் -மருந்தாய் இருப்பவன்
பேஷஜம் -585-பிஷக் -586-பின்னர் வரும்
மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-
கெடுமிடராய வெல்லாம் கேசவா -என்ன -10-2-1-
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஔ ஷதம் ஜாஹ்நவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி

167-ஸதா யோகி-
எப்பொழுதும் விளித்து இருப்பவன் –
முனியே உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -5-4-10

168-வீரஹா –
வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்

169-மாதவ –
ஞான ப்ரதன்-வித்யைக்கு ஈசன்
கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
மா -மௌ நம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்
மீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்

170-மது –
தேனிலும் இனியவன்
தேனில் இனிய பிரானே -பெரிய திருமொழி -2-7-1-
தேனே மலரும் திருப் பாதன்
எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே -10-7-2-
அமுதூரும் என் நாவுக்கே -மதுரகவி ஆழ்வார்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -அமுதனார்

——————————————————

3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்

171-அதீந்த்ரிய
புலன்களுக்கு எட்டாதவன்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை யல்லன் -2-5-10-
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் -சிந்தைக்கும் கோசரம் அல்லன்

172-மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மா மாயனே மாதவா -1-5-6-
எல்லையில் மாயன் -3-10-8-

173-மஹோத்ஸாஹ-
மிக்க ஊக்கம் உடையவன் -சங்கல்ப மாதரம் -எல்லாம் அவன் அதீனம்
செய்வார்களைச் செய்வேனும் யானே -என்னும் -5-6-4-
மன் பல் உயிர் களுமாகிப் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ் விளையாட்டு உடையான் -3-10-8

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே திறம்பாமல் மலை எடுத்தேன் திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் -5-6-5-

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –
பச்யத்ய சஷூ சஸ்ருணோதி அகர்ண-
யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ச்வத-
பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
வின் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்
சோதியாய சோதி நீ அதுண்மையில் விளன்கினால் -திருச்சந்த -34
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

179-அநிர்தேச்ய வபு –
ஒப்பிட்டுச் சொல்ல முடியாத திரு மேனி –
ஞான பல சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் பூரணன்
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -1-6-3-
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம் பரன் –8-8-2-
ஒருவரையும் நின் ஒப்பார் இலா என்னப்பா -பெரிய திரு மொழி -8-1-2-

180- ஸ்ரீ மான் –
திவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

181-அமேயாத்மா –
அளவிட்டு அறிய முடியாதவன் –முன் 103-அப்ரமேய -46
அளத்தற்கு அரியாய் ஆதிப் பெரு மூர்த்தி எம்பெருமானை ஆரே அறிவார்
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56

————————————————————————–

3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-

182-மஹா த்ரித்ருத் –
பெரு மலையைத் தாங்குமவன்-
மஹா கூர்மமாய் -மந்தர மலை –ஒரு சுண்டு விரலால் கோவர்த்தன மலை
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த எம் கூத்தாவோ -7-6-3
குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளன் -முதல் திரு -86

183-மகேஷ் வாஸ –
சர மழை பொழிபவன் -வில்லாளி
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா -6-10-4
சார்ங்கம் உத்தைத்த சர மழை -திருப்பாவை -4

184-மகி பர்த்தா-
பூமியைத் தரிப்பவன் -ஆதி கூர்மமாக -வராஹ பிரானாய்-
எயிற்றிடை மண் கொண்ட வெந்தை -பெரியாழ்வார்
நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6

185-ஸ்ரீ நிவாஸ-
அலர் மேல் மங்கை உறை மார்பன் -6-10-10
என் திரு வாழ் மார்வர் -8-3-7-
மலிந்து திருவிருந்த மார்பன் -மூன்றாம் திரு -57
பஸ்யதாம் சர்வ தேவாநாம் யாயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம்

186 ஸதாங்கதி –
பக்தர்களுக்கு புகலாய் உள்ளவன் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
மீண்டும் -451- பற்றிலார் பற்ற நின்றவன்

—————————————————————-

3-6- ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்

187- அநிருத்த-
ஒருவராலும் தடை செய்ய முடியாதவன் –
விபவ அவதார கிழங்கு – பாற்கடலில் துயிலும் -அநிருத்த பாகவான்–நினைவூட்டும்
அநிருத்தன் நின்றும் அவதரிக்கும் ஹம்ச ரூபியைச் சொல்லும்
ஏழு உலகும் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-
மீண்டும் -644

188-ஸூராநந்த –
அமரர்களை களிப்பூட்டும் பெருமான் -ரஷிப்பவன்
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் வணங்கி -1-5-2-

189-கோவிந்த –
தேவர்களால் துதிக்கப் படுபவன்
கோ -சொல் -ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
மீண்டும் 543-பூமியை மீட்பவன் ரஷிப்பவன்
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் விரும்பித் தோலும் மாலார் -5-1-8-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -திருப்பாவை -27

190-கோவிதாம் பதி
சொல் அறிபவர்களுக்கு ஸ்வாமி –வேத வாக்குகள் அறிந்தவர் கோ விதா
யஞ்ஞத்தால் ஆராதிக்கப் படுமவன்
வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரத்தாதியான் -9-10-9-
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர் கை தொழ விருந்தாய் -5-7-5

191-மரீசி-
கிரணமானவன் -ஒளியைச் சொல்கிறது
குந்த மலர் குருக்கத்தி போலவும் நிறை மா மதி போலவும்
ஆதி அம சோதி என்கோ வானவர் போகம் என்கோ ஒளி மணி வண்ணனையே -3-4-4-

192-தமந-
அடங்கச் செய்பவன் -தமயதி இதி தமந -சம்சார தாபத்தை அடங்கச் செய்பவன் போக்குமவன்
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றை -1-3-4-
திகழும் பவளத் தொளி யப்பன்–பெருய திரு மொழி -7-10-6

193-ஹம்ஸ-
ஹம்சாவதாரம் பண்ணுமவன்
ஹம்ஸ -அழகிய நடை -மோஹனமான புன் முறுவல்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப் படுத்த வம்மான் -திரு நெடு -30
சுத்த சத்வ -சுபாஸ்ரய –பரம ஹம்ஸாய த்யான ஸ்லோகம்
அச்சுதன் அமலன் என்கோ கனி என்கோ பால் என்கோ -3-4-5-
பால் -சுத்த சத்வம் -அமலன் -சுத்தன் –

194- ஸூபர்ண-
அழகிய சிறகுகளை யுடையவன்
ஸூபர்ணோ ஹி கருத்மான்
சம்சார கடலை கடக்க
தவா ஸூபர்ணா-இரண்டு பறவைகள் மரத்தில் ஸ்ருதி
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வருவான் -நாச் -14-3
மீண்டும் -859-தாண்ட உதவுமவன் -தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

————————————————————

3-7- பத்ம நாபா வதாரம்-195-199-

195-புஜகோத்தம –
திரு அநந்த ஆழ்வானுக்கு ஸ்வாமி -புஜகம் -ஆதி செஷன் -தஸ்ய உத்தம -சேஷி
அனந்தன் மேல் கிடந்த புண்ணியன் -திருச்சந்த -45
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் -திரு விருத்தம் -62

196-ஹிரன்ய நாப –
எழில் உந்தியான் –
கொப்பூழில் எழு கமலப் பூவழகன் -நாச்-11-2
தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1

197-ஸூதபா
சிறந்த ஞானம் உள்ளவன்
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி -4-8-6

198-பத்ம நாபன் –
கீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347

199-பிரஜாபதி –
பிரஜைகளுக்கு ஸ்வாமி
தேவர்களுக்கு எல்லாம் தேவன்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தொர் தெய்வக் குழாங்கள்
கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம்
உலகும் உயிரும் ஒன்றும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: