ஸ்ரீ தேவ ராஜ அஷ்டகம் –

ஸ்ரீ ராமானுஜ பிள்ளை -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர் -அருளிச் செய்த -ஸ்ரீ காஞ்சி பூர்ண சதகம் நூலில் உள்ள தனியன்கள் –

ஸ்ரீ மத் காஞ்சீ முநிம் வந்தே கமலா பதி நந்தனம்
வரதாங்க்ரி சதா சங்கரசாய ந பராயணம் –

ஸ்ரீ திருக் கச்சி நம்பி -தமப்பனார் -கமலாபதி யாக இருக்கலாம்
ஸ்ரீ தேவப் பெருமாள் திருவடி சேவையே ரசாயன சேவா ஸ்தாநீயம் நம்பிக்கு –

தேவப் பெருமாளுடைய திருவடிகளிலே இடைவிடாது
அன்பு பூண்டு இருத்தலாகிற
ரசாயன சேவையிலே ஊற்றம் யுடையவரும்
ஸ்ரீ கமலாபதி என்பவருடைய திருக் குமாரருமான
ஸ்ரீ திருக் கச்சி நம்பிகளைத்
தொழுகின்றேன் -என்கை-

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம்
ராமானுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் சஜ்ஜ நாஸ்ரயம்

தேவப் பெருமாளுடைய திருவருளுக்குக் கொள்கலமானவரும்
மிகச் சிறந்தவரும்
எம்பெருமானாருக்கு பூஜ்யரும்
சத்துக்களுக்கு ஆஸ்ரய பூதருமான
திருக் கச்சி நம்பிகளை தொழுகிறேன் என்கை-

————————————————————————————–

நமஸ்தே ஹஸ்தி சைல ஸ்ரீ மன் அம்புஜ லோசன
சரணம் த்வாம் பிரபன்நோஸ்மி பிரணதார்த்தி ஹராச்யூத

1-ஹஸ்தி சைல -அர்ச்சை
2-ஸ்ரீ மன் -பரத்வம் -வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே–லிங்க புராண ஸ்லோகம்
3-அம்புஜ லோசன -அழகிய வடிவம் கொண்ட ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி விபவம்
4-பிரணதார்த்தி ஹர-ஷீராப்தி நாதன்-வணங்கியவர்கள் துன்பத்தை போக்கி அருளுபவர்
5-அச்யூத -அந்தர்யாமித்வம்
இவ்வைந்து விளிகளும் ஸ்ரீ தேவராஜ பெருமாளையே குறிக்கும் –
நமஸ்தே-தே நமஸ் -உன்னை உணங்குகிறேன்

—————————————————————————————-

சமஸ்த பிராணி சந்த்ராண ப்ரவீண கருனேல்பண
விலசந்து கடாஷாஸ்தே மய்யஸ்மின் ஜகதாம பதே -2-

ஸ்ரீ மான் ஆகையாலே சமஸ்த பிராணிகளையும் ப்ரவீணமான கருணையால் -கடாஷித்து அருள வேண்டுமே
அம்புஜ லோசனன் என்பதால் செங்கண் சிறி சிறிதே கடாஷித்து அருள வேண்டுமே

சந்த்ராண–த்ராண -ரக்ஷணம் -சந்தரான நன்றாக ரக்ஷணம்
கருனேல்பண-கருணா சாகரம்

—————————————————————————————–

நிந்திதா சார கரணம் நிவ்ருத்தம் க்ருத்யகர்மண
பாபீ யாம்சம் அமர்யாதம் பாஹி மாம் வரதப்ரபோ–3-

இதம் குரு இதம் மாகார்ஷீ -இத்தை செய் இத்தைச் செய்யாத -சாஸ்திரம் -விதி நிஷேத ரூபங்கள் –
இத்தால் -முதலில் அருளிய -பிரணதார்த்தி ஹர -விவரிக்கிறது

————————————————————————————————–

மேல் ஸ்லோகங்கள் -அச்யுத -விபரணம் -ஆக அமைகிறது

சம்சார மருகாந்தார துர்வ்யாதி வயாக்ரா பீஷனே
விஷய ஷூத்ர குல்மாட்யே த்ருஷாபாத பசாலி நி–4-

சம்சாரம் ஆகிய கொடிய காட்டிலே
கொடிய நோய்கள் ஆகிற புலிகளினால் பயங்கரமாயும்
ஆசையாகிற மரங்கள் அடர்ந்ததாயும்
சப்தாதி விஷயங்கள் ஆகிய ஆகிய சிறு புதர்கள் நிறைந்ததாயும்

—————-

புத்ர தார க்ருஹ ஷேத்ர மிருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே
க்ருத்யாக்ருத்ய விவேகாந்தம் பர்ப்ராந்த மிதஸ் தத–5-

மக்கள் மனைவியர் வீடு நிலம் ஆகிய கானல் நிரம்பியனதுமான
இன்னது செய்யத் தக்கது இன்னது செய்யத் தகாதது என்கிற விவேகம் இன்றிக்கே
இங்கும் அங்கும் சுழன்று உழலுபவனாய்

—————–

அஜஸ்ரம் ஜாதத் த்ருஷ்ணார்த்தம் அவசன் நாங்க மஷமம்
ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் கிலேச சம்ஸ்ரயம்–6-

எப்போதும் விடாய்த்தவனாய்
உடல் இளைத்தவனாய்
அசமர்த்தனாய்
சக்தி பலம் ஆரோக்கியம் இவை ஒன்றும் இல்லாதவனாய்
கிலேசங்கள் மிக இருக்கப் பெற்றவனாய்

—————–

சம்தப்தம் விவிதைர் துக்கை துர்வ சைரவ மாதிபி
தேவராஜ தயா ஸிந்தோ தேவதே ஜகத் பத்தி —7-

சொல்ல முடியாத இப்படிப் பட்ட பலவகை துன்பங்களினால்
தாபம் உற்றவனாய் இருக்கிற அடியேனை
கருணைக் கடலான தேவராஜனே
தேவாதி தேவனே
உலக்குக்கொர் முத்தைத் தந்தையே

——————–

த்வ தீஷண ஸூதா சிந்து வீசி விஷே பச்கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்சமாம் -8-

காருண்யம் ஆகிற காற்றினால் கொண்டு தள்ளப் பட்டவையும்
குளிர்ந்தவையுமான
உன்னுடைய கடாஷ அம்ருத நதி பிரவாஹத்
திவலைகளினால்
நனைத்து அருள வேண்டும்
என்கிறார்

மேல் உள்ள ஐந்து ஸ்லோகங்களும் குளகம்-எனப்படும் –

சம்சாரம் மருகாந்தாரே – பாலைவனமாக சொல்லி
த்ருஷா பாதபசாலிநி -உண்டோ என்னில்
மொட்டை மரங்கள் மலட்டு மரங்கள் பாலைவனத்திலே உண்டே
சகல தாபங்களும் தீர்ந்து குளிர
தேவப் பெருமாள் திருவருள் நோக்க மழை பொழிவை -பிராரத்து தலைக் கட்டுகிறார் -திருக் கச்சி நம்பிகள் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கச்சி நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: