Archive for March, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 19, 2014

தாம் விரும்பியது
செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி
அவனுக்கு திரு ஆணை
இடுகிறார்-

————————————————————————————————————————————————

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –

——————————————————————————————————————————————————-

மாயம் செய்யேல் –
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே
மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –

என்னை –
என் ஒருவனையும் -அடைக்கலம் புகுந்த என்னை –
இதனால் உன்னுடைய லீலா விபூதி முடிந்து விடாதே காண் –
அன்றிக்கே –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா
மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ
அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் -என்கிற
உன்னுடைய வார்த்தையை நம்பி
அலர் மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் புகுந்தேன் -என்று
புகல் புக்க என்னை வஞ்சியாதே கொள் -என்னுதல் –

இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் -துக்கப் படாதே -என்னாமையாலே -அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் –
உன் திரு –
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே
உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி
உன்னுடைய செல்வம் -என்னுதல்
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்
ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக
நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்
வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யென் என்கிறபடியே –

மார்வத்து மாலை –
கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே
திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய
மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்
பொரி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு இத்தனையுமே அன்றோ
திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது
உன்னுடைய திரு -எனபது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
பூங்குழல்
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

திரு ஆணை நின் ஆணை கண்டாய் –
திருவினுடைய ஆணை காண் –
என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –
போக வல்லை யாகில் போய்க் காண் -எனபது கருத்து –
வளைத்து வைத்தேன் -இனிப் போகல ஒட்டேன் உன் தன் இந்த்ர ஞாலங்களால்
ஒளித்திடில் இன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-

எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை
உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
அன்றிக்கே –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி
மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று
அவள் இடம் கோபம் வையாதே
எந்நாளும் சீதையாளும்ம் ஆணை -என்ற பெருமாள் போலே
இங்கேயும்
பெரிய பிராட்டியார் ஆணை
நின் ஆணை -காண் -என்கிறார் -என்னலுமாம் –

நீர் இட்ட ஆணை உம்முடைய ஸ்வரூபத்துக்கு மாறு பட்டது காணும் –
அடியார் ஆனால் நாம் செய்து இருக்கிறபடி கண்டு இருக்க வேண்டும் காணும்
என்ன
மாறுபட்டது அன்று -என்கிறார் பின் இரண்டு அடிகளாலும் தாவது -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி நீக்குகிறார் -என்றபடி
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன
அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று
தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்
பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்
நேசம் செய்து –
பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ
என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ
அகலகில்லேன் இறையும் -என்று அவள் செல்லாமை கண்டே அன்றோ அவள் பக்கல் அன்பு செலுத்தினாய் –
இன்னும் ஒரு மாசம் தான் இருப்பேன் -மன்னன் மேல் ஆணை -திருவடி வார்த்தை சொல்லக் கேட்டு பெருமாள் கார்யம் செய்தாரே

உன்னோடு என்னை –
உன்னை அறிந்தாயோ
என்னை அறிந்தாயோ –

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கவி நீ -3-6-7-
அதற்கு எதிர் தலை அடியேன் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அன்றிக்கே
இவன் அணு அளவினன்-எவப்படுகின்றவன் –
நாம் எங்கும் பரந்து இருப்பவன் -எவுகின்ற்றவன் -என்று பார்த்தாயோ -என்னுதல் –

உயிர் வேறின்றி ஒன்றாகவே –
உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது
உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-
என்னும்படி
என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது
தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கையும்
உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்கையும் படி அன்றோ -நீ செய்த செயல் –
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா
அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –

கூசம் செய்யாது கொண்டாய் –
சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை
என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் –
முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்
பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல
என்னை என் வழியில் விடாதே
உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்
இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து –
ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய்
சாஸ்த்ரன்களால் அறிவிக்கும் அளவு போராது
குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது
உட் கண்ணால் காணலும் போராது –
உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
அந்தோ –
தன்னை ஒழியச் செல்லாமையை
தானே விளைத்து
கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

அபேஷிதம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி
பிராட்டி மேல் ஆணை
உன் மேல் ஆணை
நிர்பந்திக்கிறார்
மாயம் செய்யேல் என்னை
உன் திரு
மார்பத்து மாலை -அவள் மாலை போலே
நங்கை
வாசம் செய் பூம் குழலாள் ஆணை
நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து
கூசம் செய்யாது கொண்டாய்
கூவிக் கொள்ளை  வந்து அந்தோ
மாயம் செய்யேல் ஆற்றாமை மிக்கு மீண்டும் நிர்பந்திக்க
மாசுச என்னாமையாலே மாயம் செய்யோம் சொல்ல வில்லை
இத்தால் உன்னுடைய லீலா விபூதி முடியாதே
எல்லாம் உன் மாயம்
மாயா தெய்வி குணா மம மாயா துரத்யயா
மாம் ஏவ -தரந்திதி
உன்னை சரண் அடைந்தேன்
உன் வார்த்தையை விச்வசிது
அலற மேல் மங்கை உரை மார்த்பா உன் அடிக் கீழ் வந்து புகுந்தேன்
மாம் ஏவ பிராட்டி மாம் ஏவ அவன்
பிராட்டி உடன் கூடிய என்னை
சரணம் புகுந்த என்னை வஞ்சியாதே கொள்
கீதா வாக்கியம் பொய் ஆகக் கூடாதே
இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் மாசுச சொல்ல இல்லை
பெரிய பிராட்டியார் மேல் ஆணை
உன் திரு
நாட்டுக்கு சம்பத் நீ
உனக்கு செல்வம் இவள் உன் திரு
உன்னுடைய திரு உனக்கே சேஷப்பட்ட
திரு வுக்கும் திருவாகிய
விஷ்ணுர் ஸ்ரீ
ஸ்ரீ ஸ்ரீயா
எம்பெருமான் உடைய செல்வம் இவள் என்னவுமாம்

எம்பெருமானுக்கும் பெருமை
தேவத்வம் அச்துதே
ஸ்ரத்தையா தேவ தீவு காந்தி தேஜஸ் பிராட்டியால்
திருமா மகள் கேள்வா தேவா
உலகு  உண்ட பெரு மாயா
தீவு க்ரீடா காந்தி 12 அர்த்தங்கள்
திரு மா மகள் கேள்வன் என்பதால் அத்தனையும்
ஸ்ரத்தையா அதேவ த்வத்வம் அச்துதே
தேவன் அல்லாதவன் பிராட்டியால் தேவன் ஆகிறான்
ஜனகாத்மஜா –
ஆதார ஆதேய பிரதானம் இரண்டும் உண்டே பிராட்டி பெருமாள்
சக்தி சம்ப்ரதாயம் இல்லையே
ருத்ரனை கீழே போட்டு மிதித்து
மகா லஷ்மி குடம்ப பாங்கு
அடங்கா பிடரி ருத்ர காளி
ஆதேயம் ஆதாரம் ஒழிய சத்தை இல்லை
இரண்டும் ஒன்றுக்கு உள்ளே
ஆதேயம் பிராட்டி
ஆதாரம் பெருமாள் விட்டு இருப்பே இல்லை
பிரிந்த நிலை  இல்லையே
திரு வில்லா  தேவரை
நிரூபக தர்மம்
தம்மையே ஒக்க அருள் செய்து
திருப்பதி மொட்டை தேடுவதுபோலே அவனை எப்படி காண்பது
திரு வில்லா தேவர் அடையாளம்
அவளால் இவன் இருப்பு
ஆதார ஆதேய பிரதானம்
நிரூப்யம் பகவான்
நிரூபகம் பிராட்டி
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூப ஸ்திதி இல்லை
தங்கிய மார்பன்
அலர்மேல் மங்கை உறை மார்பன்
ந அபி  ஷணம் ஜீயதே
பாஸ்கரன் பிரபை
சூர்யன் ஆதாரம் ஒளி விசேஷ்யம்
மாணிக்கம் ஒளி போலே
மார்பத்து மாலை
சம்பத்தை ஏற்படுத்துவது மட்டும் இல்லை
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு
பக்தாநாம் -எல்லாம் அடியவர்க்கு
மார்பமும் பிராட்டிக்கு
கோதை மாலை -மார்பத்து மாலை
பெரியாழ்வார் ஈடுபட்டு  ஆண்டாளுக்கு இட்ட திரு நாமம்
நங்கை
ஸ்வரூப ரூப குண விபூதிகளும் அவளால்

எங்கும் வியாப்தி
பகவான் ஸ்வரூபென வியாப்தி
ஸ்ரீ ஞானத்தால் வியாபித்து
அவனை தவிர எல்லாரும் அணு
ஞானத்தால் தார தாம்யம் இல்லை
ஞானம் ஏக தயா சாம்யம்
நம்பி
நங்கை
பரி பூர்ணம்
சீதா சீதை வரும் வட சொல் திரிபு
இங்கு இருந்து அங்கு போகாதே
நங்கா சரி இல்லை
கோதா
கோதை வேறு இது அதுவாகாது
பதிம் விச்வச்ய அவனுக்கும் இவள் பூர்தியால் பொரி புறம் தடவ வேண்டும் படி இருக்கை
பிராட்டியால் அல்லாதார் காட்டில் வாசி
ஸ்ரீ மானுக்கு நி ஸ்ரீகன் சமம் இல்லை
வாசம் செய் பூம் குழல் நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும்
சர்வ கந்த ஏற்றம் இத்தளையால் வந்தது
திரு ஆணை நின் ஆணை கண்டாய்
இட்ட அடி பேர ஒண்ணாத படி
போக வல்லையாகில் போய் காண்
திரு வின் ஆணை என்னுடையது இல்லை
நின் ஆணை உனக்கு
திரு மேல் ஆணை உன் மேல் ஆண்மை
உனக்கு நீ உகந்தார் ஆணை
அல்லாருக்கு உன் ஆணை

பரத ஆழ்வான்-கைகேயி ஒன்றும் செய்யாதே என் மேல் சீதை மேல் ஆணை
மாதரம் தாம் ரஷம் ந ரோஷம் குறு கோபம் காட்டாதே
மீற முடியாதே –
பெருமாள் வார்த்தை போல் ஆழ்வார் வார்த்தை
உம்முடைய ஸ்வரூபம் விருத்தம் சேஷ பூதர் கட்டளை இடலாமா
அடிமை பட்டவர் செய்த படி கண்டு இருக்க வேணும்
இத் திருவாய் மொழி முழுவதும்  இப்படி
உன்னை விட்டு ஒரு ஷணமும் பிரிந்து இருக்க முடியாதே
தம்முடைய செல்லாமையும் பிராப்தியும் உண்டே
ஆற்றாமை மிகுதி
பாரதந்த்ர்யம் -ஸ்வரூபம் சேஷி செய்வதை பார்த்து இருக்க
வஸ்துவே இல்ல்லையாகில் பார தந்த்ர்யம்
வஸ்து இருக்க -சேஷ பூதனை உலனாய் கண்டு இருக்க வேணுமே
இல்லாமை
பிருதக் ஸ்திதி பிரதக் பிராப்தி உண்டா
உன்னை விட்டு தனியாக இருப்போ பிராப்தியோ இல்லையே
நேசம் செய்து
உன்னுடன் என்னை கூசம் செய்யாது கொண்டாய்
உயிர் வேறு இன்று கொண்டே
நேசம் -பெரிய பிராட்டியார் பக்கலில் செய்யாத நேசம் செய்தாய்
உயிர் வேறு இன்றி ஒன்றாகவே செய்தாய்
தேசமோ அது –என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
உன் விடாய் தீர
உன்னை அறிந்தாயோ
என்னை அறிந்தாயோ
உன்னோடு என்னை
விழுமிய அமரர் முனிவர் முனிவர் விழுங்கும் கன்னல் கனி நீ
தாழ்ந்த நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அணு பரிமாணன்
விபு நியமகன்
பார்க்காமல்
ஆத்மா பேதம்
ஈர் உடல் ஓர் உயிர் போலே கலந்து
உன்னுடைய மேன்மை அறியாமல் கூச்சமே இல்லாமல் என்னுடன் கலந்தாய்
சங்கோசம் இல்லாமல்
தலை மேல் சுமந்து
பாஸ்கரே பிரபாதய அவிசாதம் சுருங்கி
என்னுடைய ஆத்மா உன்னுடைய ஆத்மா வேறு என்று சொல்ல முடியாமல் கலந்து
அயோக்யதை பாராமல்
முதலில் பூர்வ விருத்தம்
பாலகனாய் பல தீமை
அயோக்யன் வள எழு உலகில் உன்செல்லாமை காட்டி சேர்த்து கொண்டாய்
அன்று நீ செய்தில்லை ஆகில்
இத்தனையும்செய்த பின்
கூவிக் கொள்ளை வந்து
கூவ வேணும்
கொள்ள வேணும்
வர வேணும்
சாஸ்திரம் அறிவிப்பு போராது
குணம் அனுபவம் மட்டும் போரது
கிட்டி அனுபவிக்க வேணும்
சாஷாத்காரம் மட்டும் போறாது
வந்து
அதுக்கும் நீயே வர வேண்டும்
செல்லாமை நீயே விளைவித்து முகம் காட்டாமல் இருப்பாயோ அந்தோ
கதறுகிறார்

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 19, 2014

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –
அதற்கு மேலே
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்
மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்

பல பல துக்கங்களை உடையதாய்
தாண்ட முடியாததாய்
பேர் ஆழமாய்
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்
இருக்கும் படியையும் நினைந்து
அக்கணத்தில் பெறாமையாலே
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று
மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே
வள வே ழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமை யோடு
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே
இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்
சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

————————————————————————————————————————————————

நிர்ஹெதுகமாக
உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி
உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து
நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க
விட ஒண்ணாது
என்கிறார்-

முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்
ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச யாதிச
உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-

ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா
ஸ ஏவபாதி அத்திச பால்யதி
ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி
விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன
மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை
இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச
அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
உயிர் பரம் பொருளின் கூறே யாகும்
அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்-

ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே
ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே
வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ
இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே
பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே
அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே
தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தன்னாரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –
அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே
தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –
தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட
ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி
அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்
அப்பறமா புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-

தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன
இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-

ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு
சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக
சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்
முதலிய செயல்களை செய்யுமாறு போலே
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்
அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்
அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து
யாதி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்
சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி
சரீரத்தை காட்டுகிற சொல் ஆத்மா வரையிலும் தன் பொருளைக் குறிக்கும் என்கிற
நியாயத்தாலே
தனக்கு சரீரமாய் இருக்கும் பிரமனைக் காட்டக் கூடிய நான் முகன் என்ற சொல்லாலே
அவனில் வேறாய் அவனுக்கு ஆத்மாவாய் இருக்கிற எம்பெருமான் சொல்லப் படுகையாலே
நான்முகனே -என்ற சொல்லால் -எம்பெருமானை விளிக்கிறது —

முக்கண் அப்பா –
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்
ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி
ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது
எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-
அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ
அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர் -என்கிறபடியே
அழிக்கப் படுகின்ற பொருள்களோடு

அழிக்கின்ற வனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக் கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –
அப்பா –
என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது
படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ –
நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்
சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
எங்கனே என்னில்
தம் தாம் கைகளைக் கொண்டு கண்களை கலக்கிக் கொள்வாரைப் போலே
படைத்த படைப்பு பேற்றுக்கு உடல் அன்றியே தீம்புக்கு உடல் ஆனவாறே
சிறு குழந்தைகளை கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு காப்பாற்றும் தாய் தந்தையரைப் போலே
உறுப்புகளையும் உறுப்பக்களோடு கூடிய சரீரத்தையும் நீக்கி அழித்திட்டு விக்கியும் உபகாரமாம் படி இருக்கிறபடி
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா
அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்
அப்படியே உலகத்தை அளிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி
ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத
தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரன்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை
சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
தன்னுடைய த்யானத்திலே இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்த்ரியங்கள் -என்று தொடங்கி
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்ப்பிக்க நினைந்து த்யானம் செய்தான் –
த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது
அது தான் தண்ணீர்
அது பொன் மயமான அண்டம் ஆயிற்று
அந்த அண்டத்தின் நின்று நான்கு முகங்களை உடைய பிரமன் உண்டானான்
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தான்
அங்கனம் த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது
அவ வேர்வையின் நின்றும் குமுழி உண்டாயிற்று
அந்த குமுழியின் நின்றும் முக்கண்களை உடையனாய்
சூலத்தை கையிலே தரித்தவனாய் ஒரு புருஷன் உண்டானான்
என்று சொல்லுகிற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயண ஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ
சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்
ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற
பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
படைத்தல் அழித்தல் களுக்கு இடையில்
பருந்து இறாஞ்சினால் போலே இறாஞ்சிக் கொண்டு போவார்களே அன்றோ காப்பார் இல்லா விட்டால்
அதற்காக படைத்தல் அழித்தல் செய்யும் தலைவர்களாய்
ஆதி தேவர்களாய் உள்ள
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே
ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்
தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா சவேதேஷூ

வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய்
உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன் வேதம் வேதாங்களில் பேசப்படுகிறான்
கர்மம்களுக்கு தகுதியாக உயர்வு தாழ்வு இன்றி
கண் அழிவு இன்றி செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே
படைத்தல் அழித்தல் களுக்கு ஆள் இடும் –
காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்
ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்
எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு
ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே
சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை -என்றும் சொல்லுகிறபடியே

நான் முகனே முக்கண் அப்பா –
என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு பொய் விசெடியத்திலே இளைப்பாறினார்
இங்கு விசெஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே -என்று
ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்
இந்த திரு மேனியை பற்றுக் கோடாக சொல்லா நிற்கச் செய்தே
இதனை விட்டு திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போ என்கிறது
இதனை விடச் சொல்லுகிறது அன்று
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போவான் என் -என்கையிலே தான் கருத்து-

பொல்லா என்பதனை -கரு மாணிக்கம் -என்பதனோடு சேர்ப்பது
பொல்லாக் கரு மாணிக்கம் என்று கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்
அன்றிக்கே
அழகிலே வேறுபட்ட சிறப்பினை உடைமையாலே கூறுகிறது -எண்ணுதல்
கனிவாய் –
அவாக்ய அநாதர -பேசாதவன் -விருப்பமில்லாதவன் என்று சொல்லப் படுகிறவன் –
அனுகூலரைக் கண்டு -அங்கனம் சொல்லப் படுகின்ற நிலை நீங்கி புன் முறுவல் செய்து நிற்கும்படியைச் சொல்கிறது –
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி –
தாமரைக் கண் –
வினவப் புக்கு விக்கித் தடுமாறினால் குறையும் தலைக் கட்டும் கண்களைச் சொல்லுகிறது
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ
அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே
திருவருள் புரிய வேண்டும்
பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் -என்கிறபடியே
கரு மாணிக்கமே –
குளிர்ந்து -இவ் உலகத்தில் விடாய் தீர அணைக்கும் உடம்பைச் சொல்லுகிறது
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத
மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால்
விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான
இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது -என்கிறபடியே
கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது-

என் கள்வா –
என் இசைவு இன்றிக்கே என்னைக் கவர்ந்தவனே –
கருமத்தாலே இறைவன் உடையதான ஆத்மாவை முன் தோற்றாதே நின்று கவர்வான் இவன்
வடிவினைக் காட்டி இவனைக் கவர்வான் அவன் –
சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ
இவனுடைய -என்னின் -உரம் இருப்பது
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி
ஸ்ரீ ஜனக ராஜன் பெண் பிள்ளையை நீர் வார்ப்பித்து தனக்கு ஆக்கினாப் போலே அன்றோ –

ஆத்மாவை தனக்கு ஆக்கிக் கொள்ளுகையாவது –
தனியேன் ஆர் உயிரே –
என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து
பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே
இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்
பரமபதத்திலே புகப் பெறாமையும்
நோக்கித்- தனியேன் -என்கிறார் –
பிராட்டி அசோக வனத்தில் அரக்கிகள் நடுவே இருந்தால் போல் காணும் இவருக்கு
இவ் உலக மக்கள் நடுவே இருப்பு
உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே —

என் தலை மிசையாய் வந்திட்டு –
செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே -10-8-5-
தலை மேலே தாள் இணைகள் -என்று சொல்லுகிறபடியே குறைவு இல்லாமல் வந்து தோற்றி –
நர்ஹெதுகமாக வந்து தோற்றி -என்னுமாம் –

இனி
உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே
பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு

நான் –
வழிச் சுவடு அறிந்த நான்

போகல ஒட்டேன் –
தம்முடைய செல்லாமையாலும்
சம்பந்தத்தாலும்
தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –

அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா
சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்
உணவு இல்லாதவனும்
ஒளி இழந்த முகத்தை உடையவனும்
செல்வம் இல்லாத பிராமணன் போலே
எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இ றே

போகல ஒட்டேன் –
வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது
போம் போது உன் கார்யம் உன்னதோ –
இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்
விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா
யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்
நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு
மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று
நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு
விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து
நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –

அங்கன் வேண்டுவான் என் -என்ன
என்னையே –
எஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்
ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்
பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய
சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே
விரகம் தின்று
குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் –
அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு
இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

முனியே
மானஸ அனுபவம் இது வரை
வஸ்து கிடைக்க வேண்டுமே
கையிலே காட்டி மறைத்து வைத்தால் ஆர்த்தி பீரிட்டு துடிக்குமே
கதறுதல்
உடனே திருவடிகளில் சேர்த்து கொள்ள
பரம பக்தி
பர பக்தி இது வரை
பாவனா பிரகர்ஷம் பர ஞானம் சோந்து
பரம பக்தி இனி அனுபவம்

தாம் பெற்ற பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றதாக
மாதவன் தாமரைக் கண்டு உகந்து அனயாபதேச முகத்தால் அருளிச் செய்தார்
அதுவும் மானச அனுபவம்
துடிப்பு அதிகம் மிக்கு
தசரத -சக்ரவர்த்தி பதினாரியம் வருஷம் கழித்து பிறந்த பெருமாள் காட்டுக்கு போன பின்பு
கண் இழந்தான் பெற்று இழந்தான் போலே
முன்புற்ற நிலையே தேவலை
பெற்ற பின்பு மறுபடியும் இழந்து
ஆழ்வார் பெற்றது போலே அனுபவம் பெற்ற பிபு
துக்கம் அதிகம்
இனி நான் உன்னை போகல ஒட்டேன்
இனி உன்னைப் போக்குவேனோ
கதருகிறார்
அனுக்ரகம் அருளி தாளினை சேர்த்து கொண்டான்
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்

எதிரே நிற்க தயங்கிய நிலை போனது
தூது விடவும் ஷமர் இல்லை
திருவாணை நின் ஆணை
சங்கோசம் இல்லாமல் ஆற்றாமை
நிர் ஹிருதயம் கூட இறங்கும் படி
அவனுக்கும் பரம பதத்தில் இருப்பு கொள்ளாமல்

காட்டுத் தீயில் அகப்பட்டார் போலே
பெரும் மிடறு கூப்பிடுகிறார்
குரங்குகள் ராவணன் அடி பட்டு பெருமாள் திருவடிகளில் விழுந்தால் போலே
சரணம் அடைந்தாள் போலே
தரிக்க மாட்டாமையாலே சரணம் புகுகிறார்
பரம தயாளு
இப்படி துக்கம் படி நாம் அல்லவோ விட்டு வைத்தோம்
தாம் நொந்து
பெரிய திருவடி மேலே இவர் ஆசைப் பட்ட படி
பிராட்டி உடன்
அடியார்கள் உடன் சேர்த்து
அவா அற சூழ்ந்து
அவா அற்று வீடு பெற்ற இவர் விடாயும் தீர்த்து
இதுக்கு அவ்வருகு தம் விடாயும் தீரும் படி
தத்வ த்ரயம் விளாக் கொலை கொண்ட ஆழ்வார் அவா
திமிங்கலம் வஸ்துக்களை முழுங்கும்
அத்தையே விழுங்கும் திமிங்கில  கிலம்
ஆழ்வார் அவாவும் குளப்படியாய் அவன் த்வரை கடல் போலே சம்ச்லேஷித்து அருளினான்

பிரபந்தம் பிரமேயம் சர்வேஸ்வரன்
பிரபந்தம் பிரமாணம் அவாவில் அந்தாதி
பிரபந்தம் பிரமாதா மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
சாதுக்கள் சுக்ருத பலம் அவதார பிரயோஜனம் சர்வேஸ்வரன் அவதாரம் போலே

நிர்ஹெதுகமாக சௌந்த்ர்யாதிகளை  காட்டி-பொல்லாக்  கரு மாணிக்கமே
உன்னை விட செல்லாமையை விளைவித்து
சம்சாரத்தில் விட்டு வைத்து
பண்டு போலே குணா அனுபவம் பண்ண வைத்து விலகக் கூடாது
இனி நான் போகல ஒட்டேன்
முனியே
மனன சீலன்
நினைத்து கொண்டு இருப்பவன்
ரிஷிகள் எம்பெருமானை நினைத்து கொண்டே முனி
அவன் -மனனம் இவர்களை நினைந்தே இருப்பதால்
நான் முகனே
முக் கண் அப்பா
சாமானாதிகரா
அந்தர்யாமியாக இருந்து
சரீர ஆத்மா பரமாத்மா பர்யந்தம்

போகல ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல்
படைத்தல் காத்தல் அழித்தல்
முனியே
ஜகத் சிருஷ்டி மானச சங்கல்பம் சிந்தனை உடைய சர்வாதிகன்
பகுச்யாம் பிரஜாயேயா
பகு பகவ சங்கல்பம்
நெஞ்சில் கொண்டதால் முனியே
கரண களேபர அசித் கல்பமாய் இருக்கும்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி பண்ண முடியாத
சோகப் படும் நிலைமை
சதேவ தன்னை சொல்லும் சொல்லால் சொல்லும்  படி
சதா ஏகாகி ந ரமேதா
என்றும் நினைவை சொல்லலாம் படி

சர்வம் கலு இதம் ப்ரஹ்மா
எல்லாம் ப்ரஹ்மம் தான்
எல்லாம் ஓன்று ஏக வஸ்து இல்லை நெருங்கின தொடர்பு  ப்ரஹ்மாவை ஆத்மாவை உடைய
தத் ஜலம்
தத்தஜம்
தல்லம்
அவன் இடம் உண்டாகி அவன் இடம் லயித்து
ரஷணம் உப லஷணம்
ஸ்ருஷ்டவ் சிருஷ்டி சம்கர்தா
சுயம் பிரபு ஸ்ரீ விஷ்ணு புராணம்

பூதம் மகத்த அவயகதம் அசரம் தமஸ்
பர் தேவே ஏகி பவதி
பகுச்யாம் சங்கல்பித்து
விவக்தம் ஆக்கி
தமஸ் சப்தம் வாச்யம் ஆக்கி வெளி இட்டு
அசரம் அவயகதம் மகான் அகங்காரம்
பூத தன்மாத்ரம் பூதம்
திவ்ய சங்கல்பம் சிருஷ்டி
முனி

பர ப்ரஹ்மம் பர தத்வம் பரமாத்மா ஸ்வரூபம் முனியே
சகா ஏகாகி ந ரமேத
தனியாக இருந்து சோகம் சூழ்ந்து
நாம ரூபங்கள் இழந்து அசித் கல்பமாய் ஒட்டிக் கொண்டு கிடந்தால் போலே

சர்வேஸ்வரன் தானும் அசித் கல்பமாய்
தலை நரைத்து கவலை
அசித் கல்பமாய் இவனே பண்ணி
தானும் பிரிந்து சகா ஏகாக்கி ந ரமேதி
முனியே
சிருஷ்டிக்க சங்கல்பம்
சமுத்ரம் தாண்ட திருவடி சங்கல்ப்பித்தது போலே
தது ராவண சீதாயாக-நினைத்தான்
ராவணன் -சீதை சத்ருவை அழிக்க
தேடுவதற்காக தாண்ட இவர் சங்கல்பித்த
கடல் கொண்ட வஸ்துவை   மீட்க
அதுவாக வெளியில் தள்ளினால் உண்டு
பழுவான வஸ்துமுழுக
பிரேதம் லேசாக
பிணம்  கணம் நீரில் மிதக்க
கடல் கொண்ட வஸ்துவை நாடுகைக்கு திருவடி நினைத்தால் போலே
மானஸ சங்கல்பம்

பாவம்
நான் இல்லாத அன்று நிர்ஹெதுகமாக உண்டாக்கின நீ
நானே கதற சேர்த்துக் கொள்ள வேண்டாமோ
அம்மே என்பாரை போலே
காரண களேபரம்  -உண்டாக்கி
ஆசைப் பட்ட எனக்கு உதவலாகாதோ
நீ நினைக்கும் அன்று தான் உதவுவாயா
நான் பிரார்த்தித்தால் உதவலாகாதோ

முனியே நீ நினைத்து உதவி
நான் உன்னை அடைய நினைத்து கேட்டால் பண்ணலாகாதோ
குரங்குகள் பிழைப்பித்து
மானுஷ வேஷம் கொண்டதால் இந்த்ரன் வரம் பெற்று

நான் முகனே
ப்ரஹ்மாவை சிருஷ்டித்து
ஜீவத்வாரா பிரவேசித்து
தன் கார்யம் தன் சரீரம் கொண்டு செய்து அருளி
இரண்டு வித அனுபிரவேசம்
செத்தனர் தங்கள் சரீரம் கொண்டு தம் தாம் பிரவ்ருத்தி நிவ்ருதிகளை செய்வது போலே
பிரமனைக் கொண்டு
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம ஜகத் சிருஷ்டி செய்து அருளி
முனியே சமஷ்டி சிருஷ்டி
நான் முகனே வியஷ்டி சிருஷ்டி
இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம்
வல்லவனுக்கு புல்லும்  கார்யம்
அல்பனான பிரமன் கொண்டு கார்யம் செய்ய வல்ல நீ
இருந்து படைக்கும் ஆசனத்தொபாதி பிரமன்
அசேதனம் மகதாதிகள் கொண்டு சிருஷ்டித்தல்
சேதனன் பிரமன் கொண்டு சிருஷ்டி வாசி இல்லையே

இரண்டும் பரதந்த்ரம் ஒக்கும்
இவற்றுக்குள் பேதம் இருந்தாலும்
அவனைப் பார்த்தால் வாசி இல்லை
நிஷ்க்ருஷ்ட ஆத்மா வஸ்துவுக்கு தேவத்வம்  மனுஷ்யத்வம் இல்லை
இவனை சொல்லும் சொல் அவனை சொல்லும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
எல்லாம் அவனுக்கு சரீரம்
சரீர வாசி சப்தம் சரீரி பர்யந்தம் போகுமே
சதுர முக சப்தம் எம்பெருமானை சம்பாதிக்கும்
அந்தர்யாமி
முக்கண்  அப்பா ருத்ரன்
சம்ஹாரம்
வ்யஷ்டி -அவனையும் இவன் சம்ஹரிக்க
யஸ்ய பிராமச்ய ஒத்தனம் மிருத்யு யஸ்ய  உப செஷணம்
ஊருகாய் போலே
சம்ஹாரனையும் சம்ஹர்க்கும்
அவனில் வேறாய் அவனுக்கு அந்தராத்மா பகவானை
அப்பா –
முக்கண் அப்பா உபகாரகன்
இவன் செய்வது பெரிய உபகாரம்
முடித்ததால் மேலும்  ஆபத்து விளைக்கும் பாபங்கள் செய்ய
நாலு நாள் கழித்து ஸ்ருஷ்டிக்கிலும் சத்தை கிடக்கும்

தீம்பிலே கண் வளர்ந்து சத்தியே அளித்து
தம் தாம் கைகளை கொண்டு கண்ணை கலக்கிக் கொள்வாரை போலே
சிறு பிரஜைகளை கையிலே விலங்கிட்டு காக்கும் தாயார் போலே
ருத்ரன் சம்ஹாரம் செய்து உபகரிக்கும்
முக்கண் அப்பா
ந நஷத்ராணி ந ஆபோ  ந அக்னி ந சோம ந சூர்யா
ந பிரம்மா ந ஈசா சொல்லி
மனசால் த்யானித்து
தஸ்ய லலாடாத் -வேர்வை
ஹிரன்ய மண்டலம் பர்மா வந்து
மனசால் த்யானம் வ்யர்வை உத்புதம் நீர் குமிழி சூல பாணி ருத்ரன்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றும்
என் பொல்லாக் கனி வாய் –கரு மாணிக்கமே ரஷணம்
இல்லா விடில் பருந்து தூக்கி போகுமே
நடுவில் தான் வந்து
யது வம்சம் இஷ்வாகு வம்சம் வந்தது போலே
சஜாதீயனாய் திரு அவதாரம்
ஆதி தேவன்
விஷ்ணு
ஸ்வரூபென ரஷணம்
தாமே கண் அழிவு அற்று செய்ய வேண்டுவதால்
ரஷணம் தானே எரித்துக் கொண்டு
ஆள் இட்டுசெய்ய முடியாதே

விஷ்ணு
ஆள் இட்டாலும் வேறு சிலரால்
ந பாலான சாமர்த்தியம்
புருஷோத்தமம் ஒருவனாலே முடியும் சமர்த்தன் ஒருவனே
என் பொல்லாக் கரு மாணிக்கமே
கண்ணை செம் பளித்துக் கொண்டு நான் முகனே முக் கண் அப்பா
திவ்ய மங்கள விக்ரக அழகு இங்கு
விசெஷணமே உத்தேச்யம்
கனி வாய்
தாமரைக் கண்
திரு மேனிக்கு அப்பால் போக மாட்டாமல்
சுபம் ஆச்ராயம் உபாசகன்
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் போக விடச் சொல்லாமல் இதுக்கு உள்ளே திவ்ய ஆத்மா ஸ்வரூபம் தாத்பர்யம்

முனியே -ஜகத் ரஷன சிந்தை மனன சீலன்
போக மோஷ சூன்யமாய் கிடக்கிறதே பகுச்யாம் சிந்தனை
நான்முகனே -அந்தர்யாமியாய் இருந்து சிருஷ்டி
முக் கண் அபா -ருத்ரனை சரீரமாக கொண்டு சம்ஹாரம் செய்து அருளும்
பாலான சாமர்த்தியம் ஒருவனுக்கே
அப்பா -உபகாரன் சம்ஹாரம் பெரிய உபகாரம் சத்தை கேட்டு போக ஒட்டாமல் அழிப்பதால்
என் பொல்லா   -அனைத்துக்கும் விசேஷணம்
முன்பு விசேஷயத்தில் ஊன்றி
இதில் விசெஷணத்திலே ஊன்றி  -திவ்ய மங்கள விக்ரஹம்
ஓர் உருவம் பொன் உருவம் ஹிரண்ய கர்ப்பம்
ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் உருவம் ஸ்ரமஹரமான
மூ உருவும் கண்ட போது ஓன்று ஆகும் சோதி ஆம் சோதி
மற்ற இரண்டும் அழியும் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
ஆறங்கம் கூற அவதரித்த
பொல்லா -கனிவாய்
திருமேனிக்கு அப்பால் போகாதவர்கள் ஆழ்வார்கள்
சுபாஸ்ரயம்
இத்தை விட்டு தஸ்மின் அந்தக ஸ்வரூபம் உபாசிக்க சொல்லி வேதாந்தம்
விட சொல்லாமல் திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போக வேண்டும்
த்யானம் திவ்ய மங்கள விக்ரகம் தான ஸ்லோகம்
பொல்லா கரு மாணிக்கத்துடன் சேர்த்து
கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்

திருஷ்டி பரிகாரம்
அழகில் விசஜாதீயம் பொல்லா சந்தோஷத்தில் வார்த்தை
விபரீத லஷனை
கனிவாய் அதரம் புன் சிரிப்பு அவாகி அநாதார தத்வம் ஸ்மிதம் பண்ணினதை சொல்லுகிறது
பெரிய ஸ்தானம் கௌரவம் –
பங்கம் ஏற்பட்டு ஜீவாத்மாவைக் கண்டதும்
தாபம் ஆரி போகுமே கடாஷம்
கர்மம் அனலம் தகிக்கப் பட்டு இருக்கும் ஜீவாத்மா த்யானம் தேக சாந்திக்கு திவ்ய மங்கள விக்ரஹம்

தாமரைக் கண் -வினவ புக்கு விக்கி தடுமாறினால்
உணர்ச்சி மேல் இட்டு குறையும் திருக் கண்ணால் தலைகாட்டும்
அக்ரூரர் அவலோசன
பிரார்த்திக்க வேண்டாத படி ரஷிக்கும்
கரு மாணிக்கம்
சம்சாரம் தாபம் தீர அணைக்கும் உடம்பு
ஏஷ சர்வ பூதேஷு

கள்வா
என் இசைவு இன்றிக்கே என்னை அபகரித்தவன்
வடிவை காட்டி அபகரிக்கும் பலே திருடன்
திருடன் இடம் திருடி
சோரேன ஆத்மா அபஹாரினாம் நாம் திருடன்
நம் ஆத்மவஸ்துவை திருட்டு தனமாக பக்காத் திருடன்
என் கள்வா
இவருடைய
ஸ்ரீ ஜனக ராஜன் பிள்ளையை நீர் வார்த்து ஆக்கிக் கொள்வது போலே
ஏற்கனவே அவனுடையது
மதிநலம் அருளி
இசைவை பிறப்பித்து
கிருஷி பலன்
இயம் சீதா மாமாசுதா நீர் வார்த்து கொடுத்தாப் போலே
மகா பலி தானம் போலே
அஹங்காரம்
அபகரித்து
யாசகனாய் மீட்டுக் கொண்டான்
தனியேன் ஆர் உயரே
சுவட்டை அறிவித்து
பிரிந்தால் தரியாமல்
பூனை காய்ச்சி இல்லை தடவி
பார்த்தால் சம்ச்டாரிகள் ஓடி போக
தனியேன்
மயர்வற மதி நலம் அருளி சம்சாரிகள் நித்யர் கூட்டு இல்லை
அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்
பிரிந்தாலும் முடியாதபடி குணம் காட்டி தரிப்பித்து
தனியேன் ஆர் உயிரே
பிராட்டி அசோகா வனத்தில் ராஷசிகள் நடுவில் இருந்தாப் போலே
பிராண ஹேதுவாய் இருந்து பிரிந்து முடிக்க பெறாமல்
என் தலை மிசையாய் வந்து இட்டு
தலை மேலே தாளிணைகள் பரி பூரணமாக
நிர்ஹெதுகமாக வந்து அருளி
ஜகத் ஒன்றும் செய்யாதது போலே
என்னாலும் செய்யப் போவது இல்லை
தானே தயாமான மனனாய் கொண்டு
இவ்வளவாக கொண்டு நிறுத்தி
இனி மேல் உள்ளதும் உனக்கே பரம்
என் தலை மேல் ஓடுவது உன் தலையில் ஓடும்

தடுக்கவும் -செல்லாமை காரணம்
வளைக்கவும் -பிராப்தி சம்பந்தம்
பரத ஆழ்வான் மறியல் –
காலில் விழுந்து அனுக்ரகம் செய்யும் அளவும்
அதி பிரவ்ருதியான கார்யம்
நெஞ்சுக்கு உள்ளே புகுந்த உன்னை போகல ஒட்டேன்
குழந்தை லொட்டை சொல்லும் ஆழ்வார் வார்த்தை
உள்ளே புக உனது ஸ்வா தந்த்ர்யம்
வந்த பின்பு  உன் கார்யம் உன்னதோ போகல ஒட்டேன்

சர்வஞ்ஞன் அறிய இவருக்கு உண்டான த்வரையாய் இப்படி
பிறபாட்டுக்கு லஜ்ஜிக்கும் அவன்
ரொம்ப வெட்கம் தண்ட காரண்ய ரிஷிகள் இடம் பெருமாள் வார்த்தை
இனி நான் போகல ஒட்டேன் என்கிறார்
ஒன்றும் மாயம் செய்யேல்
அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான சப்தாதி விஷயங்கள் காட்டி அதுவே அமையும்
அறிந்த பின்பு உம்பர் என் குறை ஈதே வேண்டுவது குணங்கள் காட்டி
இனி பெற்றேனாக பண்ணி -பாவனை உண்டாக்கி மானச அனுபவம் மட்டும் பண்ணிவித்து
மாயம் செய்யேல் என்னை
விரகம் தின்று சேஷித்த திருமேனி காட்டுகிறார்
சரீரம் மாதரம் அவர்களுக்கு
இவருக்கு ஆத்மா ஸ்வரூப நாசம்
பகவானை விரகித்தாருக்கு
மாயம் செய்யேல்

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்
நித்ய சூரிகளோடு ஒப்பர்
என்கிறார்-

—————————————————————————————————————————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே

————————————————————————————————————————

வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்
தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –

அந்தமில் பேர் இன்பத்து –
எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட
இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு கணம் ஆயிற்று சுகம் உள்ளது
அதனையும் அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
எப்பொழுதும் மலர்களை உடைத்தான சொலையாலே
சூழப் பட்ட
திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கிபோலே காணும் சோலை செய்வது -அலர் –

சந்தங்கள் ஆயிரத்து –
விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

இவை வல்லார் முனிவரே –
இப்பதத்தினை கற்க வல்லார்
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து
அவற்றிலே ஈடுபட்டவராய்
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே
இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

நிகமத்தில்
அந்தமில் பேர் இன்பத்தில்
நித்யர் உடன் ஒப்பர்
இவை வல்லார் வந்தவர் எதிர் கொள்ள
எம்பெருமானும்
வந்து அவரே எதிர் கொள்ள
அவர் -சர்வேஸ்வரன் பிராட்டிமார் உடன்
மா மணி மண்டபம்
ஆனந்தமில் பேர் இன்பம்
இன்பம்
பேர் இன்பம்
அந்தமில் பேர் இன்பம்
அநந்த கிலேச
நிரதிசய ஆனந்தம்
சம்சார சாகரம் கோசரம் அநந்த  கிலேச பாஜனம்
எதிர் தட்டாக
சுகம் என்று பிரமிக்கும் துக்கம்
பாம்பு
ஒரு ஷணம்
ஜடபரதன் மான் குட்டி ஆசை கொண்டு மானாக பிறந்து
பெண் மான் கூட
பாணம்
சம்சாரத்தில் ஒரு ஷணம் சுகம் அனுபவிக்க முடியாமல்
பாண்டு கெடுக்க -அ ல்ப ஆயுஸ்
புலி பாலும் கிணறு பாம்பு புலி எலி கடிக்க தென் சொட்ட நாக்கால் பீஷ்மர் சொல்லிய கதை
கீழே நரகம்
மேலே ஸ்வர்க்கம் போன்ற
சம்சாரத்தில் இருந்து
சுகமே இல்லையே
அது தான் அந்தமில் பேர் இன்பம்
ஆடி  ஆடி 2-4 அடியார்கள் உடன் கூடுவது என்று கொலோ
மாயப்பிரான் அடியார் குலான்களை உடன் கூடுவது
எதோ உபாசனம் பலம்
அடியரொடு இருந்தமை
பாகவதர்கள் உடன் சேர்ந்தார்
குருகூர் நித்ய வசந்தம்
ஆழ்வார் அருளிச் செய்த
பரம  பதம் -திரு நகரி தொடங்கி பரம பதம் வரை அலங்க்ருதம்
எழு பொழிலும் ஆக்கி வைத்தான்
போக்கிலே ஒருப்பட்டவாறே
சத்தங்கள் ஆயிரம்
சந்தஸ் ஆயிரம் எண்ணுதல்
வேத ரூபம் சாந்தோக்யம்
இவை வல்லார்
பகவத் குண அனுபவம் பண்ணி
அதிலே அவ்வருகே போக மாட்டாமல் முனிவர்
அமரர்
ஆழ்வார் குண அனுபவ நிஷ்டர் அதனால் முனிவர் தம்மைப் போலே ஆவார்
அதிலே ஈடுபட்டு
கால் வாங்க மாட்டாமல் பலன் சொல்லி தலைக் கட்டினார்

———————————————————————————————————————————————————–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்த அங்கு
அடியருடனே இருந்த ஆற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி

சாரம்
மா முனிகள்
சூழ்ந்து நின்ற மால் ஆழ்வார் இடம் அன்பு கொண்டு சூழ்ந்து
வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து
அடியார் உடன் இருந்த வாற்றை
உரை செய்த
முடி மகிழ் சேர் ஞான முனி
மனன சீலர்

—————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

நித்ய சூரிகள் இவர்களை
கொண்டாடும் படியை
அருளிச் செய்கிறார் -.

——————————————————————————————————————————————-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

—————————————————————————————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று —

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று
வேறு சிலர் –
இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து
வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்
விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற
இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே -வைகுந்தம்புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புன்யத்தைக் காட்டுகிறது –

நல் வேதியர் –
யத்ர ரிஷய பிரதம ஜாயே புராணா
எவ்விடத்தில் காண்கின்றவர்களும் முன் தோன்றியவர்களும்
பழமையானவர்களும் –
யத்ர பூர்வே சாத்யா சந்திதேவ –
எங்கும் உள்ளவர்களும் பற்றத் தக்கவர்க்களுமான தேவர்கள்
தத் விப்ராச விபத்யவ ஜாகுயாம்ச சமிந்ததே விஷ்ணோ யத் பரமம் பதம்
எங்கும் பரந்து இருக்கின்ற திரு மாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ

அந்த பரம பதத்தை -ஞானம் நிறைந்தவர்களும்
துதிப்பதையே தன்மையாய் உடையவர்களும்
எப்பொழுதும் ஜாக்ரதையோடு கூடினவர்களுமான
நித்ய சூரிகள் அடைகிறார்கள் -என்று
வேதங்களால் சொல்லப் பட்டவர்கள் –

பதியினில் –
ஆதி சேடன் -பெரிய திருவடி முதலானவர்கள்
தங்கள் திரு மாளிகைகளிலே கொடு புக்கு –

பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்
நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்
என்ற வாசி வையாதே
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து
அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து
திருவடிகளை விளக்குவார்கள் –

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து
எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ணப் பிரசாதத்தையும்
நிறை குபங்களையும்
மங்கள தீபங்களையும் -ஏந்தி –

மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்
தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே
இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

நித்ய சூரிகள் இவர்களை கொண்டாடும்படியை அருளிச் செய்கிறார்
விதி வகை புகுந்தனர்
பாக்ய அனுகூலம்
திரு பத தீர்த்தம்
நிதி ஸ்ரீ சடகோபன் பரம நிதி
ஜீயர் சுவாமிகள் எழுந்து
நல சுண்ணம் வாசனை
நிறை குடத்தில் விளக்கு
இவர்கள் சொல்லும் வார்த்தை
நாம் பண்ணின பாக்ய பலன்
விஷயங்கள் நடந்த சம்சாரத்தில்
விண்ணுளாரிலும் சீரியர்
அனனியா பிரயோஜனர்
இவர்கள் என்ன பாக்கியம் சிலர் சொல்ல
அது வார்த்தை இல்லை
அது கிடக்கட்டும் நாம் செய்த பாக்கியம்
ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் பாக்கியம் சொல்லிக் கொள்ளும்படி பகவத் விஷயம்

சதா பச்யந்தி சூரய
பல நீ காட்டி இருந்தாலும்
பகவானை நினைத்து தொழுவார் விண்ணில் உள்ளாரை விட உயர்ந்தவர்கள் திருவிருத்தம்
புகுந்தனர்
கீழ் புகுவது அடைவது
இங்கே புகுந்தனர் நுழைந்து விட்டார்கள்
தங்கள் பாக்கியம் காட்டி
யத்ர பூர்வ சாத்ய-வேதங்களால் பிரதிபாத்ய நித்யர்
பிரதம சாதா முதலில் உண்டான
புராதானர்
விழித்துக் கொண்டு
நல வேதியர்
வேதத்தில் சொல்லப்  பட்டவர்கள்
பதியினில் பாங்கினில் பதங்கள்
அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் என்று வாசி இல்லாமல்
ஸ்ரீ வைஷ்ணவர்
தங்கள் கிரஹத்தில்
எப்படி சேர்க்க வேண்டும்
அனந்தன் கருடர் போல்வார்
பதியினில் தங்கள் கிரகத்தில்
பாங்கினில் சம்சாரி சேதனன் நினையாதே
தங்களையும் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் நினைக்காமல்
சிம்காசனம் ஏற்றி வைத்து தாள நின்று
திரு நாராயணபுரம் கோஷ்டியில் உள்ள அனைவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம்
பரஸ்பர  நீச பாவனை கடல் ஓசை ஆக்காமல்
எனக்கு ஆகட்டும்
அவனுக்கு ஆகட்டும்
அனைவர் திருவடிகளையும் தொட்டு
குழந்தைகள் காலையும் தொட்டு
பாங்கினில் சேர்க்க வேண்டும்
பரிசாரிகைகள் எதிரே வந்து
திருவடி நிலை
நிதிபரம தனம் ஸ்ரீ சடகோபம்
வாசனை பொடிகள்
மங்களமான சத்கார
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
குடம் விளக்கு பொடி சுத்த
தேசாந்தர பிரஜை வந்தால் தாய் முகம் மலருமா போலே மதி முகம்
மஞ்சள் கந்த பிரசாதம்
நிறை குடம் மங்கள தீபங்கள் ஏந்தினர் வந்தே

———————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

பரமபதத்தில் சென்று திரு வாசலில்
முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –
இது என்ன புண்ணியத்தின் பலம் –
என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

—————————————————————————————————————————————–

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

—————————————————————————————————————————————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்
திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து
கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே
இவர்கள் கொள்ளுவதும் அது –
புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே
குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே
வைகுந்தம் புகுதலும்
கோபுர வாசல் தாண்டி உள்ளே புக
ஸ்ரீ வைகுண்ட நாதன் அடியார்கள் எங்களுக்கு நாதன்
பரமபதம் அவர்களுக்கு ஒப்படைத்து
எங்கள் பதம் நீங்கள் கை கொள்ள வேண்டும்
பயிலும் திரு உடையார் எவரேலும் என்னை ஆளும் பரமரே
ஆழ்வார் போலே
இவரை தங்களக்கு சுவாமி
கை கொடுத்து கொண்டு புக்கு
திருக் கையிலே பிரம்பு அதிகார ஸ்தானம் லத்தி
கைங்கர்யமே கொடுத்து கொள்ளுகிறார்கள்
இருவருக்கும் அதுஎ பிரதானம்
புகுதலும் -எமர் இடம் புகுதுக என்னலும்
அமரரும் முனிவரும்
குணா நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
பரத ஆழ்வான் நினைத்து பிரிந்து இருந்து குண நிஷ்டர் முனிவர்
இளைய பெருமாள் கூடவே இருந்து கைங்கர்யம்
இருவரும் வியந்தனர்
பிணங்கி வானவர் பிதற்றும்
துஷ்யந்தி ரமயத
இரு வகை  கோஷ்டி உண்டே
கதை பேசி பேசும் கேட்கும் சந்தோஷம் இருவகை உண்டே

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
கடலில் நீர் சக்யத்தில் ஏறுவது போலே
பாக்கியம் நாம் செய்து இருக்கிறோம்
நீர் தானே மேலே போகாதே
மழை தான் கீழே பொழியும்
சம்சாரிகள் பரமபதம் புகுவது
இது என்ன பாக்ய பலம்
மண்ணவர் விதியே -மண்ணவர் பாக்கியம்
அதை விட உசந்தது தங்கள் பாக்கியம்

நாம் பாக்கியம் செய்தோமே என்று வியந்தார்கள்
விதி -பாக்கியம் அமர கோஷம்
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
நாங்கள் அங்கே புக பாரித்து இருக்க
நீங்கள் இங்கே புகுவதே
இச்சுவை தவிர -அச்சுவை வேண்டேன்
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
நாங்கள் அங்கே போக நினைத்து பறித்து இருக்க
நீங்கள் இங்கே வந்தது என்கல்பரம பாக்கியம் கொண்டாடி
காஞ்சி சுவாமி காட்டி அருளி
6000 படியில் இந்த அர்த்தம் காட்டி

சப்தாதி விஷயங்களில் பழகி போந்தவர்கள் இங்கே வருவதே
புண்ணிய பலம்
நாம் என்ன பாக்கியம் பண்ணினோமே என்று விஸ்மயப் பட்டார்கள் 6000 படி

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே
பரமபததுக்கு புறம்பாக
நித்ய சூரிகள் இவர்களை
எதிர் கொள்ளுகிறபடியை
அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

———————————————————————————————————————

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று –
கோவிந்தன் தனக்கு -இவர் -குடி அடியார் -என்று –
அவனுடைய எளிமையில் தோற்று
உற்றார் உறவினர்களோடு எழுதிக் கொடுத்தவர்கள் என்றாயிற்று
நித்ய சூரிகள் ஆதரிப்பது –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே –
இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்
இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

முடி யுடை வானவர் –
அவனைப் போன்ற பெருமையில் குறைவு அற்றவர்கள் ஆயிற்று இவர்களை ஆதரிப்பார்கள்
திருமுடி அவனுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்குமாகில் வாசி என் என்னில்
அவன் சேஷித்வத்துக்கு முடி சூடி இருப்பான்
இவர்கள் சேஷத்வத்துக்கு முடி சூடி இருப்பவர்கள் –

முறை முறை எதிர் கொள்ள –
வகை வகையாக தாம் தப்பாமல் எதிர் கொள்ள –
யத்ர பூர்வே சாத்யா -புருஷ சூக்தம்
எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்
சாத்யா -உத்தேச்யர்
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்
சொல்லுகிறபடியே
தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் –
இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாய்
ஒக்கத்தை உடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான
திரு மதிளிலே திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –

வடிவுடை மாதவன்-
மகோத்சவம் இவ ஆசாத்யா புத்ரானன விலோகனம்
யுவவே வாசுதேவ அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-52-
கிழத்தன்மை விட்டு வாசுதேவன் காளைப் பருவத்தை அடைந்தான் -என்கிறபடியே
கம்சனைக் கொன்ற பின்பு பிள்ளையைக் கண்ட
ஸ்ரீ வசுதேவரும் தேவகி பிராட்டியாரும் போலவும் –
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்
என்று சொல்லப் பட்டால் போலவும் –
அன்றிக்கே –
வடிவுடை மாதவன் –
தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த
வடிவை உடைய
திருமகள் கேள்வன் -என்னுதல் –

வைகுந்தம் புகவே –
பரம பதத்தில் புகுகைக்காக
வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-

புறம்பாக நித்ய சூரிகள் எதிர் கொள்ள
கோபுரம்
கோவிந்தன் தனக்கு இவர்கள் குடி அடியார்
முடி வைத்த வானவர் முறையாலே எதிர் கொள்ள
கொடி-கோபுரம்
சௌலப்யம் தோற்று சபரிகரமாக எழுதிக் கொடுத்தவர்கள்
குடும்பம் வேண்டியவர் எல்லாரும்
குடந்தை எம் கோவலன் கீழே
கோவிந்தன்
அங்கும் கோவிந்தான்
கோ வாக்கு பூமி
திருக்குடந்தை வாசகம் பெற்றவன்
திருக் கோவலூர் பூமி தானம் பெற்ற
கிடை அடியார் கோவிந்தன் அணைக்கு
விபவங்கள் உகந்து அருளின நிலங்களில் ஆசை  வைத்து  
இப்படி ஈடுபட்டவர்கள் என்பதால் ஸ்லாக்கிப்பர்கள்
முடி உடை வானவர்
அவனோபாதி கிரீடம்
தம்மையே ஒக்க அருள் செய்வான்
தம்மைப் போலே ஆக்கி வைத்து இருப்பான்
த்வார பாலகர்கள் அழகாக இன்றும் சேவிக்கலாம்

சங்கு சக்கரம்   கிரீடம் உண்டே
பாகவதர்களையும் அவனைப் போலே நினைக்க தன் அவன் ஆசை
திரு அபிஷேகம் அவனுக்கும் இவர்களுக்கும் ஒக்கும் என்றால் வாசி என்ன
கிரீடம் அபிஷேகம் செய்யும் காலத்தில் அணிந்து
கொண்டை கொப்பாரம்
கிரீடம் மகுடம் சூடாவதம்சம்
ஹம்ச வாகனம் கொண்டை மகுடம்
கருட வாகனம் கொப்பாரம் சூடாவதம்சம்
ரஷகத்வதுக்கு உதி செஷித்வ சூசகம்
அடிமை செஷத்த்வ சூசகம்
பர்யாயமாக முறை வைத்து எதிர் கோல
அடியார்கள் குழாங்கள் தங்களுக்கு உதேச்யர்
நித்யர் முக்தர் சேர ஆசை பட்டார்
பூர்வே சாத்யாக முனமே இருப்பவர்கள்
வர வேர்க
வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்க்ரதம
கௌரவம் என்பதால்
வீடு திருத்துவான் வைத்து இருந்தான்
மதிள் மேலே கோபுரம்
அடைய வளைந்தான் முதல்
வடிவுடை மாதவன் வைகுந்தம்
அழகிய திருமேனி
கம்ச வதத்துக்கு பின்பு -தளர்ந்த -வசுதேவர் தேவகி
60 வயசில் கம்ச வதம் பின்பு பிள்ளையை கண்டதும் யவனம் திரும்ப
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி போலே
யவனம் வந்தது
ஆழ்வார் அடைந்த பின்பு  
நித்ய யுவா
யவனம் புதுக் கணித்தது
ஸ்ரீ யபதி யதான பரமபதம்
தங்கள் வரவால் உண்டான ஹர்ஷத்தால்
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினப் போலே

——————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

மருத்துக் கணங்களும்
வசுக் கணங்களும்
தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்
என்கிறார் –

————————————————————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

—————————————————————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்
ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி
திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது

கிளர் ஒளி மணி முடி –
மிக்க ஓளியை உடைத்தாய்
ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி –
மருதரும் வசுக்களும் அவன் சென்று செய்த கிருஷியின் பலம் அன்றோ
என்று கொண்டாடா நிற்பார்கள்
வியூக விபவங்களின் அளவு அன்றிக்கே
திருக் குடந்தையிலே திருக் கண் வளர்கிற
நீர்மையிலே தோற்று
பரம்பரையாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ
இவர்கள் என்று ஆயிற்று அவர்கள் ஆதரிப்பது –

பரம பதம் அணித்தான போதும் ஆரா அமுதனை நினைந்து கொண்டே அருளுகிறார் நம் ஆழ்வார் இதில்
திருமங்கை மன்னனும்
தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும்
சூழ்புனல் குடந்தையே தொழுது -என்றும்
சொற் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும் –
திரு எழு கூற்று இருக்கை-பிரபந்தமும்
சரம பிரபந்தம் திரு நெடும் தாண்டகத்தில்
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைத்திட்டேன் –
என்றும் திருக் குடந்தை விஷயமாக அருளிச் செய்தார் –

மருத் கணங்கள்
வசுக் கணங்களும்
தங்கள் எல்லையில் -தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம்
செல்லலாம் இடம் எல்லாம் சென்று
இன்னும் பரம பதம் புக வில்லை
வழியில் உள்ள லோகங்கள் சொல்லி கொண்டு
ஒரு நிமிஷம் மாதரம் லோகாந்தரம் போனவர்கள் ஆகையால்
தொடர்ந்து
வேகமாக போக
நிமிஷம் இமை கொட்டும் காலம்
தேவர் அநுமிஷார்
ஸ்தோத்ரம்  பண்ணிக் கொண்டு பின் தொடர்ந்து
எல்லைக்குள் பர்யாப்தி பிரவாமையாலே
சடக்கு என போவதற்கு அடி ஏன் என்னில்
காண்பது ஏன் ஞான்ற்று கொலோ
உடன் கூடுவது எண்டு  கொலோ
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும்
அவனும் த்வரிப்பவன்
நஜீவேயம்  ஷணம் அபி துடித்துக் கொண்டு
எல்லையும் தாண்டி
கேசவன்
கோவிந்தன்
பிரகமாதிகளுக்கு முகம் கொடுக்க கடல் கிடந்தது -கேசவன்
சயனம் இவர்கள் குறை தீர்க்க
பரமபதம் களவு இருக்கையாக
ஆழமான கடல்
எம் கேசவன் ஆஸ்ரிதருக்கு கேசி அளித்து
எம் கோவலன்
கிருஷ்ணன் பிற்பாடருக்கு
குடந்தை எம் கோவலன்
காஞ்சி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்
குடந்தை திருக் கோவலூர்
இரண்டுக்கும் பெருமை
திவ்ய பிரபந்தம் பெற்று கொடுத்த
குடையில் உள்ள கோவலன்
குடி அடியார் இவர்கள் என்று கொண்டு
இதனால் திரு நாட்டிலும் மறக்க முடியாத திருக் குடந்தை
ஆரா அமுதே மூல காரணம்
முன்னமே படிந்தது இருந்தது ஆழ்வாருக்கு சர்வஞ்ஞன்
திருமங்கை
பாடத் தொடங்க திருக் குடந்தையே தொழுது இரண்டாம் பாட்டில்
திரு நெடும் தாண்டகம் குடந்தை அடி நாயேன் தலைக் கட்டி
திரு ஏழு கூற்று இருக்கையும் அருளிச்செய்தார்
குடந்தையன் கோவலன் இரண்டு திவ்ய தேச அனுபவம்
அடியார் என்று கொண்டு
முதல் அவதாரம் அங்கே திவ்ய பிரபந்தங்கள்
மிக்க ஒளியை உடைய
ஆதி ராஜ்ய சூசகம் திரு அபிஷேகம்
குடி அடியாள பரம்பரையாக பனி செய்து
எழுதிக் கொடுத்து
ஸ்தோத்ரம் சொல்லி
நோ பஜனம் ஸ்மரம் இருந்தாலும் மறக்க முடித்த திவ்ய தேசங்கள்
தரமி ஐக்கியம்
அடியவர்களுக்காக ஆக்கி இருவரும் உண்டே

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

உபசரித்தல் முன்னாக
தெய்வப் பெண்கள் உகந்து
இவர்களை வாழ்த்தினார்கள் –
என்கிறார் –

———————————————————————————————————————————————-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

———————————————————————————————————————————-

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே
வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு
நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்
இவிடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மாற்
குளிரப் பார்க்குமாறு போலே
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று
கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே
பரிபவம் செய்யப் பட்டவன்
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

மானஸ அனுபவம்
எல்லாருக்கும் தமக்கு கிடைத்த பேறு
அன்யாபதேசம்
நாரணன் தமர்
தன்னைக் கண்டு சொல்லாமல்
தமர்களை கண்டு
வலிவில் மடுத்து
யாக பலங்களை சமர்பித்த அளவே அன்றிக்கே
வைதிகர் வேத நல வாயினர்
அங்கும் ஆராதானாதிகள் உண்டு
சாதனானுஷ்டானம் அங்கும்
அகில் தொடக்கமான த்ரவ்யங்களை கொண்டு விரை கமழ் நறும் புகை
பிரவர்த்தித்தார்கள்
ச்ப்ருஹநீயமான புகை
காலங்கள் வலம்  புரி கலந்து எங்கும்  இசைத்து த்வநித்தார்கள்
மாற்றி மாற்றி
த்வனிக்கும் பொழுது -இசைத்தனர் -கின்னரர் போல் யார் என்று சொல்லாமல்
ஆழியான் தமர் நீங்கள் வானகம் ஆள்மின்கள்
பரம ஆகாசம் ஆள ஸ்தோத்ரம்
பக்தாநாம் தவம் பிரகாசதே -தன் விபூதியை அவனும் இருப்பது
திரு சின்னம் கௌரி காளம்
ஆளுகைக்கு குறை என்ன என்பார்கள்
வாள் ஒண் கண் மடந்தையர் ஒளி மிக்க மடந்தையர்
அங்கும் ஸ்திரீ ரூபத்தில் முக்தர் கைங்கர்யம்
ஆதிசேஷன் பாம்பு உண்டு
உரைத்தனர் தம் தேவியர்க்கே கீழே 7எலாம் பத்து கடைசி பாசுரம்
பூசித்து உரைப்பர் தம் தேவியர்க்கே
கண் அழகாய் வர்ணித்து
தாய்மார்கள் தேசாந்தரம் போன பிரஜையை குளிர நோக்கு
இத்தனை நாள் கை கழிய போனார்களே
ஒளியை உதிய அழகிய கண்களால் குளிர நோக்கி
ஸ்வரூப விஷயம் சோழ வில்லை
இவர்களை கண்டதாலே கண்ணுக்கு உண்டான ஒளியையும் அழகையும்  சொல்கிறார்
புத்திக் கணித்தன
மகிழ்ந்தே
பக்தாக்கள் சொல்வதால் இல்லை
ப்ரீதியால்  ஆசை உடன் செய்கிறார்கள்
பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசர் இங்கே  பரிபவம் கேலி செய்ய
அங்கெ அதே காரணம் சத்கார்யம்
தனக்குள்ளு அவ்வருகே உயர்ந்தவர்கள்
இவர்களை காட்டிலும் மேம்பட்டவர்கள் இல்லை
அவர்கள் கூட கௌரவிக்கிரார்கள்

————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 17, 2014

ஆதி வாஹிகத் தலைவர்களான
வருணன் இந்த்ரன் முதலானவர்களும்
மற்றும் உள்ளாறும்
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை
அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————–

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே

———————————————————————————————————————–

மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –
என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –

வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்
வாசல் -வழி
அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –

போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்
என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –

வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –
மேலே உள்ள லோகங்களிலே
வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்
தங்கள் யாகங்களின் பலன்களை
இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்
தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ
பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –

———————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

மேலே உள்ள உலகங்களில் தேவர்கள்
இவர்கள் போகிற வழிகளிலே
தங்குகைக்காக தோப்புக்கள் அமைத்தும்
வாத்தியம் முதலானவற்றால் ஒலியை உண்டாக்கியும்
கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்

———————————————————————————————————————————————–

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே

————————————————————————————————————————–

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –
பரந்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ
இங்குத் தங்கிப் போவார்களோ என்னும்
நசையால் தேவர்கள் தோப்பு சமைத்தார்கள்
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று
தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலேகண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது
இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –
இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று –
தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது
அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே

கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் –
சூர்யர்கள் நிலை விளக்கு போலே
இங்கனே எழுந்தருள இங்கனே எழுந்தருள
பார்த்தருள பார்த்தருள என்று கைகளை நிறையே காட்டினார்கள்
அன்றிக்கே அர்ச்சிராதி களான ஆதி வாஹிக கூட்டங்கள் ஆகவுமாம்-

அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த –
அங்கே கால் தாழ்வார்கள் என்று
அது கேளாதபடி
அதிரா நின்றுள்ள ஒலியை உடைய முரசங்கள்
அலையை உடைய கடல் போலே முழங்கின
அன்றிக்கே
இங்கு தங்குகையில் உண்டான ஆசையின் மிகுதி தோற்ற வாத்தியங்களை ஒலிக்கச் செய்தார்கள் என்றுமாம் –

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –
கொட்டு ஓசையாலும்
ஆள்கள் எதிரே சென்று சொல்லுகையாலும்
சென்ற இவர்களுக்கு ஒப்பித்த படியே கொடுக்கைக்காக
பிராட்டியோடு கூட அளித்து அளித்து ஒப்பிக்கிறபடி
மாதவன் தமர்க்கே
பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்
என்று ஒப்பிக்கிறபடி –
திருமகள் கேள்வனுடையஒப்பனை அழகிலே அகப்பட்டு
அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
இங்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றதே காரனமாக பங்கு பெறாதே
திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்களை கொடுக்கிறபடி
மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல
நீ ஆந்தராளிகன்-சம்சார்யும் இன்றி முக்தனும் இன்று நாடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன
நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ –

என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-

தோப்புக்கள் சமைத்தும்
வாத்யாதிகள் கோஷங்கள்
பந்தல் போட்டு இன்று செய்வது போலே
ஆஸ்வாசம் செய்ய
மாதவன் தமரக்கு
பார்த்த பார்த்த இடம் எங்கும்
இவர்கள் இங்கே தங்கி  போவார்களோ என்று வழி எல்லாம்
இமையவர்கள் ச்வாபாவிகம் இல்லை
தோப்பு சமைக்கும் த்வரையாலே இரவு கண் விழித்து
நாலு வீதி தோரணம் மா முனிகள் உத்சவம்
தூங்காமல் செய்து
நம்முடைய  உத்சவம் இமையவர்
இளைய பெருமாள் உறங்காது கைங்கர்யம் 14 வருஷம்
சோம்பல் தூக்கம் விட்டது போலே
இவர்கள் புக்கு தங்க மாட்டார்கள்
தம் தாம் ஸ்வரூப லாபத்துக்கு அவர்கள் கிஞ்சித் கரித்து
ராஜாக்கள் ஒரு கால் அழகிது சொல்ல  -மானாவி சமைப்பது
மகா நவமி தர்பார் நவராத்ரியில்
வளைவு இன்று வைப்பது போலே

banner  வைத்து
தப்பி தவறி கண்ணில் படாதோ என்று
ராஜாக்கள் ஒரு கால் கண்டு சிறிது அழகிது என்று போவதற்காக
இருப்பிடம் வகுத்தனர்
கதிறவர் நிலை விளக்கு போலே
பன்னிரண்டு ஆதித்யர்
இங்கே யெழ வேண்டும் கை காட்டி
இதே யோ பவ
அர்ச்சிராதி ஆதி வாஹிக கணங்கள் -தேஜஸ் உடன் கூடி
முரசங்கள்
கால் தாழ கூடாது என்று
எழுந்து அறுக்க கேளாத படி முரசங்கள்
சீக்கிரம் பரமபதம்
வாத்திய கோஷங்கள்
ஒப்பித்த படியே கொடுக்கைக்காக
அழித்து அழித்து ஒப்பித்து கொள்வானாம் அவனும்
பிராட்டி உடன்
மது விரி துழாய்
மாதவன்
கைங்கர்யம் செய்யவது மிதுனத்தில்
புருஷகாரமாக
ஸ்ரீயபதி ஒப்பனை அழகில் நெஞ்சை பறி கொடுத்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்காக
இப்படி
எதிர் கொண்டு இருப்பிடம் கொடுக்கும் படி
ஸ்ரீ வைஷ்ணவம் என்பதே கொண்டு கௌரவிக்க படுகிறார்கள் அங்கே

——————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-