திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்
கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்தங களே வடிவு உடையவனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்
சர்வேஸ்வரனாய்
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்
எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த
ஆயிரம் திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான
இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்
என்கிறார்-

——————————————————————————————————————————————————

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

—————————————————————————————————————

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –
தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள
அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-

தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்
இருப்பதாலே அவர்களுக்குபாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –
தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்
அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு
அவை
அயனை அரனை அவா அற்று
அரியை அலற்றி
வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்
சூழ் அரியை அலற்றி
வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –
மற்று ஒரு வகை

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்
ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பெரும் உண்டானார்கள்
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்

பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான
பரம பக்தியால் பிறந்த தாயிற்று
இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்
ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு
பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்
தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்
இவ் உலகத்தில் பிறந்து வைத்தே
நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்
இவர்களுடைய பிறப்பும் –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீக கல்யாணைகக
ஞானனந்த ச்வரூபனாய்
லஷ்மி சமேதனாய்
சர்வேச்வரனாய்
அந்தராத்மாவாய்
தம்மை காண விடாய்த்து
இப்படிப் பட்டவன்
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
அவாவில் அந்தாதி
பக்தியால் தூண்டப் பட்டு பிறந்த திருவாய்மொழி
பெற்று அல்லது தரிக்க முடியாத பரம பக்தி
நித்யர்
நம்புவார் பதி வைகுந்தம் கண்ணி நுண் சிறு தாம்பு
வல்லார் சம்சாரத்தில் பிறந்து வைத்து நித்யர் உடன் ஒப்பர்

அரி அயன் அரன்
மூவரையும் சொல்லி
முதல் கிழங்கே
முனியே நான் முகனே முக்கண் அப்பா
சாமானாதி கரண்யம்
அவா அறச் சூழ் அரியை
ஆசை அறும் படி அங்கீ கரித்த
அரதி அரி
பாபம் துக்கம் அபஹரித்து போக்கி
சர்வ அபேஷிதம் அருளி
கலந்தபடி
அவா அறச் சூழ் விசேஷணம்-முக்கிய உபகாரம்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மா
சரீரம் -ஆத்மா -பரமாத்மா வரை செல்லும் சப்தம்
ஆஸ்ரிதர் விடாய் தீரும்படி தன்னைக் கொடுப்பவன்
பேச நின்ற சிவனுக்கும்
பேச நின்ற
பேசுவதால் நிற்பவன்
எடுத்தால் விழுவான்
இவன் அந்தராத்மாவாக இருப்பதால் ஈஸ்வரன் என்று சொல்லும்படி
சத்தா ஹேது இவன் ஆதீனம்
அயனை அரனை அவா அற்று என்ற
அரியை அலற்றி வீடு பெற்ற
அயனை அரனை அவா அற்று வீடு பெற்ற
தைத்ர்யா பீடா அவர்கள் ஆபத்தையும் போக்கி
மூன்று அர்த்தம் காட்டி அருளி

அவாவில் அந்தாதி
பக்தி பலாத்காரம்
இவர் உடைய மைத்ரேயா பகவான் இவர் அவா
பராசரர் சொல்லி மைத்ரேயர் கேட்க போலே
ஆச்சார்யர் தூண்ட சிஷ்யர் திருப்பி சொல்வது போலே
உபாத்யாயர் ஸ்தானம் அவா
பக்தி சொல்லச் சொல்ல
மற்றவர் கவிகள் கடல் ஓசை போலே
பக்தியால் பிறந்த சொல்லுக்கு ஏற்றம் உண்டே
பரி பாடல் போன்றவை இதன் வைபவம் இல்லையே
அவாவில் அந்தாதி
பரம பக்தியால் -பிரிந்து தரிக்க ஒண்ணாத
ஈஸ்வரனுக்கே அவ்த்யம் அனுக்ரகிக்க விட்டால்
கர்ம ஞான யோகம் இல்லாமல்
பகவத் பிரசாதம் பாதி தாங்கள் யத்னம் பாதி உபாசகர்
சாஸ்த்ரிகள் தெப்பக் கையர் போலே
இவர் அடியிலே -ஆரம்பத்தில் திருவடியிலே
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மன்னே
கர்ம ஞான பக்தி ஸ்தானம் அவன் அனுக்ரகம் சாத்திய பக்தி இல்லை
சாதனா பக்தி இல்லை
உயர்ந்தே பிறந்தார்
பிறந்தார் உயர்ந்தே
பெரும் தேவர் கைகர்யா பரர்கள்
சம்சாரத்தில் இருந்தும் நித்யர் உடன் ஒப்பர்
விண்ணுளாரிலும் சீரியர்
கற்றவர்களும் பெறுவார்
தோல் கன்றுக்கும் இரங்கும்
அப்யசித்தால் பெறுவோம்
அனுபவித்த கோபிகள்
அனுகரித்த ஆண்டாள்
அனுசந்தித்த நாமும் பெறுவோம்
கீதை வேதம் போலே இல்லாமல்
திருவாய்மொழி எம்பெருமானே எதிர் கொண்டு அழைத்து
ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து கோஷ்டி பிரசாதம்

———————————————————————————————————————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கித்
தனியாகி நின்று தளர்ந்து –நனியாம்
பரம பக்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை உற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

சாரம்
மா முனிகள்
முனி மாறன்
தனியாகி நின்று தளர்ந்து
தமியேன்
சம்சாரி கூட்டு இல்லை
நித்யர் கூட்டு இல்லை
பரம பக்தியால் நைந்து
பங்கயத்தாள் கோன் திருவடி சேர்ந்து
உயர்ந்து சேர்ந்தான்

————————————————————————————————————————————————–

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவி பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்ற பதிகம் பதிகமதாக இசைத்தனனே -சடகோபர் அந்தாதி

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: