திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை
பெற்று வைத்து
இனி விட உபாயம் -இல்லை
என்கிறார்-

————————————————————————————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ

———————————————————————————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது
என்று இருக்கிறேனோ
அன்றிக்கே
உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு
மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று
இருக்கிற ஆத்மாவின் அளவேயோ
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை
தனித்து இயலும் தன்மையை உடையவனாய்
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு
நிர்வாஹகனாய்
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்
நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று
இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது

உன்னை பெற்ற பின்பு
கிடைத்தற்கு அரிய
இனி போக விடுவேனோ
முதல் தனி வித்தேயோ
இரு வினை -நிர்வாகன்
எல்லாம் அவனே
முற்றும் வயிற்றில் வைத்து ரஷித்து
முத்திரை
போனால் போகும் விட மாட்டேன்
antique value
பெற்றே தீர வேண்டும்படி
தாரகன் உன்னை
விபசாரியாக போந்த
என் தனி பேர் உயிரே
தாழ்ந்த எனக்கு
உன்னை நீ அறியாயோ
என்னை நீ அறியாயோ
ஒரு நொடி பொழுதும் பிரிந்து தரிக்க முடியாத என்னை
உபமான ரஹீதனாய் -தனி
பேர் -ஆத்மா சிறிய உயிர்
பரமாத்மா விபு என்பதால் பேர் உயிர்
உயிர் தாரகன்
தரித்து இருக்க
ஆத்மாவின் அளவேயோ வரில் போகேடன் போகல் தேடேன்
ஈடு பாடு இல்லை
உன்னை
தனி பேர் உயிரே
முற்ற இரு வினையாய்
உன்னால் அல்லல் யாவராலும் குறை வேண்டேன்
யாரைக் கொண்டு
சாதனம் வேறு இல்லையே
உன்னை ஒழிய வேறு சில கர்மங்கள் ஸ்வ தந்த்ரம் இல்லையே
அவை சாதனம் இல்லையே

எம்பெருமான் ஆனந்தம் அடைந்து அருளுவதால்
கர்மம் ஸ்வ தந்த்ரம் என்று இருந்தால் ஆறி இருப்பேன்
உற்ற இரு வினை புண்ய பாப ரூபம் பெரிய வினை
வினையாய் நிர்வாகனாய் இருந்து
த்வமேவ உபாயம் சரணம் பவ
உயிராய் -கர்மம் பண்ணுபவனும் நீயே
கர்த்தாவும் நீயே
உன் ஆதீனம் இல்லாமல் இருந்தால் ஆறி இருப்பேன்
அனுஷ்டாதாவுக்கும் நிர்வாகன்
கர்ம பலனும் உன்னாலே
தரை லோக்யம்
சம்சாரமும் நீ இட்ட வழக்கு
பெரும் தூறு புக்க இடம் அறிய முடியாத
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
ஒளிந்தாய் -யத் ஆத்மா ந வேத -கண்ணுக்கு விஷயம் இல்லாமல்
என் முதல் தனி வித்தேயோ
எல்லாரும் துடிக்க வில்லை
லேகியம் கொடுத்து
மயர்வற மதி நலம் அருளி
உடனே உன்னை அடைய துடிக்கிறேன்
எல்லா பிரத்யனமும் நீ ஆனபின்பு ஆறி இருப்பேனோ
கிருபையும் ஏறிப் பாயாமல் இருக்க
எல்லாம் நீயாய் இருக்க
நானும் ஓர் அடி எடுத்து இருந்தால் ஆறி இருக்கலாம்

————————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: