திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்
பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்
பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி
என் பக்கல் மிக்க காதலைச் செய்த
உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ
என்கிறார்-

——————————————————————————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –

———————————————————————————————————————————

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே
அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே
அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை
நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -எனபது
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –
அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –
என் அன்புக்கு அடி இல்லையோ –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை
இரண்டு பிறையைக் கவ்வி
நிமிர்ந்தால் போலே
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ
இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று
அன்றிக்கே
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே
காதலி அழுக்கோடு இருக்க
தாமான படியே வருவார் ஆகில்
காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே
விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு
திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக
கடலைக் கடைந்தவனே
கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த
நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்
அன்றிக்கே
நீளம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்
அவை மிக்கு இருந்த காரணத்தால்
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்
என்னை பெறுகைக்கு செய்து
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு
உன்னைப் போக விடுவேனோ
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்
கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

அவா தூண்ட வெளிப்பட்ட ஆயிரம்
அவா உபாத்யாயாராக
ஆசார்யர் உரு சொல்லி மீண்டு நாம் சொல்வது போலே
ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த இதத்தாய் எம்பெருமானார்
த்வரையால் தூண்டப்பட்டு அருளிய திருவாய் மொழி
காதல் கடல் புரைய விளைத்து -தத்வ த்ரயங்களையும் தாண்டி
பர பக்தி பர ஞானம் பரம பக்தி தலை எடுத்து -அவாவில் அந்தாதி
பெரும் தேவி கேட்டு அருளி -பெருமைக்கு தக்க தேவி ராமாவதாரம் ஒரே தேவி
உனக்கு ஏற்ற கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய
நம்பிள்ளை திரு முன்பே அனுபவிக்க பெற்றோம்
பெரும் தேவி தாயார் -தேவப் பெருமாள் பெருமைக்கு தக்க
இரட்டை புறப்பாடு
மகா நவமி சேர்த்தி உத்சவம்
உத்தரம் சேர்த்தி
அயர்வறும் அமரர்கள் அதிபதி
இமையோர் தலைவா தொடங்கி

சேர்த்தி புறப்பாடு சேவிக்க பெரும் கூட்டம்
த்வயார்த்தம் சொல்லும் பாசுரம்
த்வயம் பிரதிபாதிகன் தேவ பெருமாள்
பெரிய பிராட்டியார் பரிக்ரகம்
அன்பா என் அன்பே
என்னிடம் அன்பு வைத்ததால்
வைதேகி ஆலிங்கனம் செய்து கராதிகள் வதம் ஆனபின்பு
பூமிப் பிராட்டி போல என்னை அனுக்ரகித்து
பெரிய பிராட்டி கடல் கடைந்து
சம்சார ஆர்ணவம் என்னை எடுத்து
அதி வியாமோகம் செய்த பின்பு
உன்னை இனி தப்ப விடுவேனோ
அன்பாகிய என் அன்பா
பிராட்டி பக்கல் சிநேகமே ஹெதுவாகி
அவளுக்கு அன்பாகிய என்னிடம் அன்பாகி
சரம தசையில் பட்டர் வார்த்தை
அனுசந்தானம் செய்து கொண்டு
த்வயம் அர்த்தானுசந்தானம்
எப்பொழுதும் துடிக்கும் அதரம்
இந்த பாசுரம் அனுசந்தித்த பின்பு
கோல மலர்ப் பாவைக்கு ஸ்ரீ மத் சப்தம்
நஞ்சீயர் அருளிச் செய்ததாக நம்பிள்ளை அருளிச் செய்வர்

அகலகில்லேன் இறையும்– ஒழிவில் காலம் இரண்டையும் சேர்த்து இந்த பாசுரம்
காஞ்சிபுரத்தில் சொல்வது பொருத்தம்
துயர் அறு சுடர் அடி தேவ பெருமான் திருவடி
பொது நின்ற பொன் அம் கழல் திருவரங்கம் திருவடி
பூவார் கழல் திருவேங்கடம் திருவடி
திரு நாரணன் தாள்கள் திரு நாராயணபுரம்
சதுஸ் ஸ்லோகி
ஸ்தோத்ர ரத்னம் இரண்டும் காஞ்சி த்வய விவரணம்
தம்முடைய அன்புக்கு அடி கோல மலர்ப்பாவை அன்பாகியதால் எனக்கு அன்பன்
நேரடி தொடர்பு இல்லை
சம்பந்தம் பிராட்டி மூலமே தான்

கோல வராகம் கோட்டிடை கொண்ட எந்தாய்
பெரிய அவதாரம்
மேரு பரல் போலே
பிறை இரண்டு கவ்வி
திரு விக்ரமன் விட பெரியதாய் –
பூமி பிறையில் உள்ள மறு போலே

ஒரு திருவடிக்கு போருமானது மண்
வராக அவதாரம்
அஞ்சன கிரி போலே
இரண்டு பிறை -இரண்டு கோரைப் பல்கள்
நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
பூமிக்கு திருஷ்டாந்தம்
மறு போலே சின்னதாக இருக்க
இரண்டு பிறை கவ்வி சொல்லி
மாசுடம்பில் நீர் வாரா மானமில்லா பன்றி
நீற்றுக்கும் சேற்றுக்கும் இறாயாத வராக
திருஷ்டி கழிக்கிறார்
பசி தூர்த்து கிடந்த பார் மகள் பிரணயதுக்கு சேர வந்து
சுத்த சத்வ மாயம்
உபமானம் அபிமானம் இல்லா பன்றியாய்
அவன் அழிவுக்கு இட்ட வடிவு ஆலத்தி திருஷ்டி கழிக்கிறார்
மேன்மை அழியும் படி தாலா நின்று
ஸ்வா பாவிக திரு மேனி
மகா நவமி அலங்காரம் போலே
ஒன்றாய்
ஒப்பற்றதாய் வராகம் சஜாதீயம் வராகத்தில் ஒன்றாய்
மாய மான் போலே இல்லை ராஷச வாடை வீச மற்ற மான்கள் கிட்டே வர வில்லை

உடம்புடன் உராசும் படி அவதாரத்தில் மெய்ப்பாடு
கோரக் கிழங்கும் உண்டு நஞ்சீயர் ஈடுபட்டு அனுபவம்
ஒன்றாய்
விம்ம வளர்ந்த அத்விதீயம்
ஒட்டு விடுவித்து எடுத்த
சம்சார பிரளயம்
கடல் கடைந்தாய் பெரிய பிராட்டிக்காக வியாபாரம்
நீலக் கடல்
நீல மேக சியாமளன் நிழலீட்டால்
மூலிகைகள் போட்டு நீலம்
நிறத்தால் நீல ரத்னம் சொல்லி ரத்னாகாரம் -நீலக் கடல்
இப்படி மூன்று அர்த்தங்கள்
உன்னை பெற்று இனி போக்குவேனோ
எனக்காக இப்படி பண்ணி அருளி
ஆழ்வாரை பெற பண்ணி
பெற்று இனி போக்குவேனோ
பெற்ற பின்பு
கையிலே கிடைத்த மாணிக்கத்தை கடலில் பொகட்டுவார் உண்டோ
உன்னை போக விட மாட்டேன்
கிருஷி பண்ணி
ஆழ்வாரை பெற எம்பெருமான் கிருஷி பலம்
விட சக்தன் அல்லன்

—————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: