பெரிய பிராட்டியார் பக்கல் போலே
என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து
அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென
அங்கீ கரித்து அருளாய் –
என்கிறார்-
———————————————————————————————————————————–
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
————————————————————————————————————————————–
எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே
எபோழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்
நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –
எனது ஆவியை –
என்னுடையது என்னுமஅதுவே காரணமாக
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
என் உடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா பூஎ
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே
எக்காலத்தும் அனுபவித்தாய் –
இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்
நடுவே குறை கிடக்க விடாதே
அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –
இவ்வாத்மாவையும்
இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த
காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –
புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி
ஆயிற்று கண்கள் இருப்பன –
செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று
முறுவல் இருப்பது
பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது
உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்
மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தைவடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –
இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று
அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அத்தேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அத்தேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை
நியாய அத்தேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –
கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்
தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –
பெரிய பிராட்டியார் பக்கல் போலே
புஜித்த நீ
பிரகிருதி ஆத்மா இரண்டிலும்
சடக்கு என அனுக்ரகம் செய்து அருள வேண்டும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
எனக்கு ஆரா அமுதாய்
உப்பு ச்சாறு போலே இல்லாமல்
நித்யர்கள் அனுபவிக்கும்
என் கடல் படா அமுதம்
அது கடல் பட்ட அமுதம் -உப்புச் சாறு
ஆரா அமுதம்
சதா செவ்யமாய்
சக்றுத் செவ்வியம் உப்பு சாறு
நித்யர்கள் எல்லாரும் அனுபவிக்கும்
சம்சாரி எனக்கு
மனக்கு மனத்துக்கு
என்னுடைய ஆத்மாவை ஆரா அமுதாய்
என்னுடைய என்பதால் ஈடுபாடு
அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் காமுகன் போலே
இன்னுயிர்
பகவத் அபிப்ராயத்தால்
தவ தவ
அவன் வார்த்தை
மம போய் தவ
உன்னுடைய வஸ்துவை கேட்டார்
திரும்பி சொல்லி
செவ்வாய் கிழைமை மங்கள வாரம் சொல்வதுபோலே
இடக்கு அடக்கி
நாசமாக போகும் ஆத்மா சொல்லாமல் இன்னுயிர்
பிரகிருதி சம்பந்தம் கொண்டதை தண்ணிது
மனக்கு மனத்துக்கு
மன்னி உண்டிட்டாய் பொருந்தி உண்டிட்டாய்
கிண்டி கிளிறி வேகமாக உண்பர் இந்தியர்
வெளி நாடு உண்பது நிதானம் செய்யும் பொழுது வேகமாக
நிரந்தரமாக புசித்தாய்
இனி உண்டு ஒழியாய்
பாதியில் விடாமல்
மனசுக்கு ஆராமை
இருவரும் இருவருக்கும்
குறை கிடக்க விடாமல்
நீ ஆரம்பிக்கும் கார்யம் முழுக்க தலைக் கட்டி
இவ்வள்ளவு புகுர நிறுத்த நான் சக கரிக்க வேண்டுமோ
உன் கார்யம் செய்ய
போக்யத்வம் மட்டும் இல்லை
போக்த்ருத்வமும் உண்டு இந்த அமுதத்துக்கு
நான் நன்றாக சாப்பிட
நீ நன்றாக சாப்பிடு
புனக்காயா நிறம்
புண்டரீக கண்
இந்த அல்ப ஆத்மாவிலும் சரீரத்திலும் த்யாஜ்யமான தேகத்தில் வயாமோகம்
உனக்கு சேருமோ
உன்னை உகந்தாருக்கு சேருமோ
வாயால் சொன்னாலே கன்னி போகும்
எம்பெருமானை வாசா சொல்லவும் போறதா படி மென்மை
கோல மலர்ப் பாவை நேராக சொல்லி
புஷ்பம் பரிமளம் எடுத்து வடிவாக்கி
மலர்ப்பாவை
உனக்கு சத்ருசமாக
——————————————————————————————————————————–
Leave a Reply