திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்
என் கார்யம் -நான் செய்யவோ
பிறர் செய்யவோ
முடிந்தேனே அன்றோ –
என்கிறார்

———————————————————————————————————————-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –

——————————————————————————————————————————

போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து
உபேஷித்து-

என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்
எல்லையான -என்னை -என்னுதல்

நீ –
படைப்பே தொடங்கி
இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கறை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்

என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்
கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ன் கச்யசித் -ஜிதந்தே
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –

புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து
என்னைக் கை விட்டால் -என்றபடி –

பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு
ஆற்றல் இல்லாதவனான நான்
என்ன உபாயத்தைக் கொண்டு
என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –

அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –

எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு
காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி
என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தாராவே இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி
நீரைப் பருகுமாறு போலே
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத
இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்
கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104

பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –
என்கிறார்

சர்வ ரஷகன் நீ என்னை உபேஷித்தால்
நான் ரஷிக்கவோ  யார்தான் ரஷிக்க
முடிந்தேன்
யாரை கொண்டு
ஆரா அமுதனாய் ஆனாய்
உன் பக்கல் நின்றும் பிரித்து
என்னை உபேஷித்து
அநந்ய கதியான என்ன
சிருஷ்டி தொடங்கி இது வரை அருளின நீ
ஞான சக்திகளால் பூரணன்
அக்கரை ஏற முடியாதவனை அமுக்கினது போலே
என்னை நீ
கண்ணும் காலும் இல்லாதவனுக்கு உள்ளவன் உதவ வேண்டாவோ
ஞானம் கண்
சக்தி கால்
இரண்டும் இல்லாத என்னை இரண்டாலும் பூரணன் ஆன நீ
ஆள் பார்த்து ஊழி தரும் நீ
எதிர் சூழ் புக்கு திரியும் நீ
வளைப்பு இட்டு கேட்கிறார்
உன்னை விட்டு ஒரு ஷணம் கூட  தரிக்க முடியாத என்னை
புறம்போக்கு புறம்பே போக்க விட்டு வீணாக உபயோகம் இல்லாத படி
என் கார்யம் நான் செய்வேனாக
யாரைக் கொண்டு
எத்தை கொண்டு
எந்த உபாயம்
எந்த புருஷார்த்தம்
அந்தோ
வினைச் சொல் இல்லாமல்
புருஷார்த்தம் சேதனன் மூலம் என்பதால் யாரைக் கொண்டு என்கிறார்
அசேதன கிரியா களபரங்கள் அனுஷ்டானம்
தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான்-சக்கரக்கையன்  போக்கினால் தான் போகும்
குளியல் வெறும் சரீரம் புறம்பே  மட்டும் சுத்தி பண்ணும்
ஆரைக் கொண்டு புருஷார்த்தம் -எந்த கார்யம் செய்து என்னாமல்-
அந்தோ -மாம் ஏகம் சரணம் விரஜ உபதேசித்த உனக்கு
அத்தை அனுஷ்டானம் செய்து உள்ள நான் சொல்ல வேண்டி இருக்கிறதே
தலை எழுத்து அந்தோ
நீ சொன்னதை
எனது எனபது என்
யான் எனபது என்
முடிந்தேன்
கரணங்கள்
தீர இரும்பு உண்ட நீர் போலே
உறிஞ்சிக் கொள்ளும்
ஆத்மாவை பருகிக் கொண்டாய்
காய்ச்சல் தீர நீரை நிச்ஷேமாக புஜிக்குமா போலே
நிரதிசய போக்யதை போலே
இரும்பு அனன்று கொண்ட நீர் போலே திரு மங்கை ஆழ்வார்
உன் விடாய் தீர
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக என்னவுமாம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
விபக்தி வேற்றுமை உறுப்பு மாறாடி இரண்டு நிர்வாகம்
சந்தாபம் தீரும் படி உன்னை புஜிக்க
பேறும் உம்மதானால்
சாதனமும் உம்மால் ஆக வேண்டாவோ என்ன  என்றானாம்
ஆழ்வார் சாதனம் அனுஷ்டானம் நீ
காரணம் கார்யம் நீ தானே
எனது எனபது என்ன
யான் எனபது என்ன
சரீர ரஷணம் சரீரி ஒழிய செய்வார் உண்டோ
நீ தான் சரீரி
நீ செய்து அருள வேண்டும் என்கிறார்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: