திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ
என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ
என்கிறார்

—————————————————————————————————————————–

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே

—————————————————————————————————————————

உம்பர் அம் தண பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்
நிலமாய் இருந்துள்ள மொள்ள பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண-அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை
காரண நிலையில் கார்யத்துக்குதகுதியாய் நின்று
தன் கார்யத்தாலே
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே
தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை
ஆதலின் பாழேயோ -என்கிறார்
உம்பர் அம் த ண பாழ் -என்கிற இதனால்
ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை
அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்
அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –

அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான
ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே
காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று
இதனால் விசெஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்
விசெஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்
ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா
பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனா போலே –

அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான
அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்
நீ இட்ட வழக்கு -என்கிறது –

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்
பிரசித்தமாய் இருப்பவனும் நீ
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை
கார்ய காரண தன்மை அடியாய் வந்தது
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை
அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம செதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே
காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு
அதனை விட்டு
அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ
என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்
என்னை
உன்னால் அல்லது செல்லாத என்னை
போர விட்டாய்
அவன் பக்கலில் நின்றும் பிறி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி
குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி
பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது
நலன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-

சர்வ நிர்வாஹன்
என் கார்யம்  நானே செய்ய பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் என்பதே அர்த்தம்

நெறி  காட்டி நீக்குதியோ
நான் ஒன்றும் செய்யப் போவது இல்லை நீ பிரயத்தனம் செய்து கொள்
என்னை போர விட்டிட்டாய்
எம் பரம் சாதிக்க  உற்று
பாழ் போட்ட வயல் -ஒன்றும் விதைக்க வில்லை
மூல பிரகிருதி மோஷம் பந்தம்
உம்பர் அம் தண்  உயர்ந்த குளிர்ந்த அழகியதாய்
மேலாக -மூல பிரகிருதி மகதாதி பதார்த்தங்களுக்கு காரணம்
தன்னுடைய ஏக தேசத்தாலே

நிர்வாககன்
ஜீவாத்மா வழியாக அச்சிதுக்கு நிர்வாககன் இல்லை
ஜீவத் தவாறாக மட்டும் இல்லை
நேராக நிர்வாககன் மூல பிரக்ருதியே என்கிற இத்தால்
ஜீவத்வாரா மட்டும் இல்லை
அசித்துக்கும் எம்பெருமான் அனு பிரவேசம் உண்டே
ரூபம் தான் மாறும்
அவஸ்தா பேதம் உண்டாகும் அடியோடு அழியாது
அனைத்துக்கும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
நிஷ்கிருஷ்ட பிரத்வியும் சரீரம்
இது வழியே சரீரம் இல்லை
இரண்டுக்கும் நிர்வாககன்
பாழேயோ-பிரகிருதி வேற பரமாத்மா வேற மீமாம்சகரை  அழித்து
ஸ்வரூபென தாதாம்யம் அஞ்ஞானத்தால்  மாயா வாதி அத்வைதி  சுத்த பேதம் இல்லை
பேதமும் உண்டு அபத்தமும் உண்டு
பேத அபேத சம்ப்ரதாயம்
பெதொவா அபெதொவா பேத அபெதவோ மூன்றும் உண்டு
சாஸ்திரம் மூண்டும்
அந்தர்யாமி என்பதால் அபேதம்
தான்குகிரவன் விசெஷனம் பேத அபேதம்
பரமாத்மா தன்மை ஜீவாத்மா தன்மை அசேதன தன்மை அபேதமும் உண்டு

அதனுள் மிசை ஆத்மா தத்வம் நிர்வாககன்
காரண அவஸ்தை சொல்லி
சூஷ்ம நிலையில்
சூஷ்ம சித் அசித் ப்ரஹ்ம காரணம் காரண அவஸ்தை
நியாய வைசேஷிக மாயாவாதி பஸ்மம் இல்லை
விசேஷ பிரதான்யம் சொல்வான்
விசேஷணம் விசேஷ்யம் கொள்ளாமல் அபரமாத்ம்யம் மித்யா என்பார் தள்ளி
நீ யேயோ
தனியாக சொல்லி
பாழ் மட்டும் சொல்லாமல்
ஈஸ்வரன் இல்லாமல் ஸ்திதி இல்லை
சேதனன் இல்லாமல் சரீரம் இல்லையே
ஆவி பிரிந்தது உயிர் பிரிந்தது ஆத்மா சாந்தி அடையட்டும் சொல்லி ஸ்வரூபென ஐக்கியம் இல்லையே

ஓட்டுனர் இல்லை
பரமாத்மா பிரிந்து  போவது இல்லை
அனைத்துக்கும் உப லஷணம்
அம்பரம் நல் ஜோதி
அதனுள் பிரம்மன் ப்ரஹ்ம ருத்ராதிகளும் நீ இட்ட வழக்கு
பஞ்சீ கரணம்
அண்டம் அப்புறம்
ப்ரஹ்மாதிகள் சிருஷ்டித்து
உம்பர் தேவர்
யாதவர் யாது அவர் மற்று உள்ளவர்கள் படைத்த முனி
சாமானாதி கரண்யம்
காரிய காரணம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்மா
பூர்வ கர்மங்கள் அனுசந்தானம் செய்து சிருஷ்டித்து நினைப்பதால் முனி
ததாஸ் தேவ குரு தஸ்யாமி
சூஷ்ம காரண அவஸ்தா ப்ரஹ்மம்
முனிவரும் கார்ய அவஸ்தா ப்ரஹ்மம்
நீயே காரணம்
நீயே காரியம்
என் கார்யம் நீ செய்வதாக ஏறிட்டு கொண்டு
அத்தை உபெஷித்து
அசேதனம் பொகட்டுமா போலே
என்னை
உன்னால் அல்லது செல்லாமை உணர்ந்த என்னை
பிறி கதிர்  என்பதே இல்லை
சகலத்தையும் நிர்வஹ்கிக்கிற நீ
குணம் நடமாடாத தேசத்தில் தள்ளி

ஞானம் பெருக்கி
பிராப்தி அளவும் கொண்டு போகாமல்
நளன் தமயந்திக்கு வழி காட்டியது போலே
சூதில் இழந்த நளன்
அப்பா வீட்டுக்கு போகும் வழியையும் தம் வீட்டுக்கு போகும் வழியையும் காட்டி
துணி வெட்டி பிரிந்தான்
தன்னுடன் கஷ்டப் படக் கூடாது என்று
தகப்பனார் வீட்டுக்கு போனாள்
நெறி காட்டி நீக்குதியோ

—————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: