திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள்
உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்
நிர்வாஹகனான நீ
உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை
ஐயோ -வந்து அங்கீ கருத்து அருள வேண்டும்
என்கிறார் –

————————————————————————————————————————————-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே

————————————————————————————————————————————————–

கூவிக் கொள்ளாய் –
மேலே கூவிக் கொள்ளாய் -என்றவர்
இங்கேயும் -கூவிக் கொள்ளாய் -என்கிறார் காணும் –
விடாய் கொண்டவன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமாறு போலே
ஆற்றாமை மிக்கு செல்லா நின்றாலும் பாசுரம் இது அன்று இன்றிக்கே இருக்கிறபடி –

கூவிக் கொள்ளும் அளவும் போராது
வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –
ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகி முறைமை அன்று
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –
எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு
நாம் செலுத்தல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ –
வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லன்காம் பிரபலார்த்தன
மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்
அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்

அந்தோ –
உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே-
தொளையாத மாணிக்கம் –
அனுபவிக்கப் படாத ரத்னம் -என்றபடி –
அன்றிக்கே
உலகத்துக்கு ஒப்பான அழகு அன்றிக்கே வேறு பட்டு இருக்கையாலே
பொல்லா -என்கிறார் -என்னுதல்
அன்றிக்கே
கண் எச்சில் வாராமைக்காக -பொல்லா -என்கிறார் -என்னுதல்
நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –
என்பார் -பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார் –
க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என் –
என்பார் -என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார்

நன்று -உலகங்கட்கு எல்லாம் வேறு பட்டவனாய் இருப்பினும்
ஸ்வரூபத்தை பார்த்து ஆரி இருக்க வேண்டாமோ -என்னில்
அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே -என்கிறார் -மேல்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –
பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ
வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –
என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்
பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

ஆயின் பேற்றுக்கு உடலாக நீரும் சில செய்தாலோ என்ன
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே-
செருக்கு அற்றவர்கள் ஆகித் தொழும் பிரமன் சிவன் முதலாயினோர்கட்கு எல்லாம்
காரணமான திரு நாபிக் கமலத்துக்கும் கிழங்கு ஆனவனே –
கார்யம் இல்லாத போது ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களாய்
இருப்பார்கள் ஆதலாலும் -தங்களுக்கு ஒரு கார்யம் வந்த வாறே எல்லாரும் கூடி தொழுவார்கள் ஆதலானும்
மேவித் தொழும் -என்கிறார்
அன்றிக்கே
யான் எனது -என்ற செருக்கு அற்றவர்களாய் தொல்கிரார்கள் என்பார் -மேவித் தொழும் -என்கிறார் என்னுதல் –
இதனால் மற்றை பிரமன் முதலாயினோர் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கின்றார்கள் இலர் என்பதனையும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்
உதவுமவன் அன்றோ நீ –
என்பதனையும் தெரிவித்த படி –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்ல அறியாமையாலே
பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –

நித்ய சூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்
புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்
-உம்பர் அந்த அதுவே –
அவர்களுக்கும் மேலான நித்ய சூரிகட்கும்
அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே
சதா பஸ்யந்தி சூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்
அது -என்று
நித்ய சூரிகளோடு
பிரமன் முதலாயினர்களோடு
வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற
சாமாநாதி கரண்யத்துக்கு காரணம்
கார்ய காரண பாவம் என்னும் அத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -சுருதி -இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா-

நிர்வாஹன் நீ
ஐயோ
மேவித் தொழும் முதல் கிழங்கு
அனைவருக்கும் சத்தை உன்னால்
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ
ஆற்றாமை மிக்கு சென்றாலும் பாசுரம் இதுவே
தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
கூவிக் கொள்ளாய்
அது மட்டும் போதாது
வந்து
ஸ்வரூபம் பரகத ச்வீகாரம்
சுவகத ச்வீகாரம் கூடாதே
மிதிலை -நப்பின்னை -ருக்மிணி தேரில் ஏற்றி வந்து கொண்டான்
உனக்கு அவத்யம் காண்
தத் சத்ருசம் பவேத்
பெருமை -அவத்யம்
தொழுது எழு என்னும் இதுவும் மிகை நினைப்பவன்
வருகை அசக்யம் பொறுக்க ஒண்ணாது
வருகை அவனுக்கு விவஸ்யம்
அந்தோ
இத்தை நான் உனக்கு சோழ வேணுமோ
என் பொல்லாக்  கரு மாணிக்கமே
வடிவு அழகைக் காட்டி
நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் கிரமத்தில்
அழகை காட்டி அனன்யார்கை ஆக்கி
துளையாத மாணிக்கம் பொல்லாக் கரு மாணிக்கம்
பொல்லா -உலகில் இல்லா  மாணிக்கம்
ஸ்வரூபம் பார்த்து ஆரி  இருக்க வேன்ன்டாவோ என்னில்
உன்னை ஒழியவும் நன் உளனாக வேணுமே
இருக்க வஸ்து இல்லையே

நின் அல்லால்  இல்லை
கொடி கொள் கொம்பை ஒழிய
வேரை அறுத்து படர சொன்னால் படருமோ
ஜலான் மச்யம்
பேற்றுக்கு நீரும் உடலாக செய்ய வேண்டாவோ
ப்ரஹ்மா ருத்ரன் எல்லாருக்கும் ஆதி காரணம் நீ முதல் கிழங்கு
அவர்களே தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்ளகிறார்கள்
ஆவிக்கு ஒரு பற்று கொம்பு சொல்லக்  கூடத் தெரியாத
அறியாமை காரணம் ப்ரஹ்மாதிகளுக்கு-அஹங்காரம்
நித்யர் அபிமானம் இல்லை சொல்ல வேண்டியது இல்லை
நாம் சொல்லித் தான்
மேவி -ஓன்று கூடி தொழும்
அல்லாத பொது சண்டை
தங்களுக்கு கார்யம் செய்ய கூடிக் கொள்வார்கள்
அபிமான ரஹீதராய் தொழும்
முதல் கிழங்கு
காரணம் திரு நாபிக்கும் முதல்
உம்பர் -அவர்களுக்கும் மேம்பட்ட  நித்யர்
அந்த அது அவர்களுக்கும் மேம் பட்ட பிராப்ய வஸ்து
அது பிரமான பிரசித்தி சகா
அப்படிப் பட்ட நீ வந்து என்னை கூவிக் கொள்ள
கீழும்  மேலும் சொல்லிய சாமானாதி காரண்யத்துக்கு நிபந்தனம் காரணம் கார்ய காரண பாவம்
தரமி ஐக்கியம் இல்லை
ஸ்வரூப ஐக்கியம் இல்லை
அந்தர்யாமி
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம-ப்ரஹ்மத்தை காரணமான  கொண்டது
ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

—————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: