திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தாம் விரும்பியது
செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி
அவனுக்கு திரு ஆணை
இடுகிறார்-

————————————————————————————————————————————————

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –

——————————————————————————————————————————————————-

மாயம் செய்யேல் –
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே
மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –

என்னை –
என் ஒருவனையும் -அடைக்கலம் புகுந்த என்னை –
இதனால் உன்னுடைய லீலா விபூதி முடிந்து விடாதே காண் –
அன்றிக்கே –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா
மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ
அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் -என்கிற
உன்னுடைய வார்த்தையை நம்பி
அலர் மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் புகுந்தேன் -என்று
புகல் புக்க என்னை வஞ்சியாதே கொள் -என்னுதல் –

இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் -துக்கப் படாதே -என்னாமையாலே -அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் –
உன் திரு –
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே
உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி
உன்னுடைய செல்வம் -என்னுதல்
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்
ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக
நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்
வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யென் என்கிறபடியே –

மார்வத்து மாலை –
கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே
திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய
மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்
பொரி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு இத்தனையுமே அன்றோ
திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது
உன்னுடைய திரு -எனபது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
பூங்குழல்
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

திரு ஆணை நின் ஆணை கண்டாய் –
திருவினுடைய ஆணை காண் –
என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –
போக வல்லை யாகில் போய்க் காண் -எனபது கருத்து –
வளைத்து வைத்தேன் -இனிப் போகல ஒட்டேன் உன் தன் இந்த்ர ஞாலங்களால்
ஒளித்திடில் இன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-

எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை
உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
அன்றிக்கே –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி
மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று
அவள் இடம் கோபம் வையாதே
எந்நாளும் சீதையாளும்ம் ஆணை -என்ற பெருமாள் போலே
இங்கேயும்
பெரிய பிராட்டியார் ஆணை
நின் ஆணை -காண் -என்கிறார் -என்னலுமாம் –

நீர் இட்ட ஆணை உம்முடைய ஸ்வரூபத்துக்கு மாறு பட்டது காணும் –
அடியார் ஆனால் நாம் செய்து இருக்கிறபடி கண்டு இருக்க வேண்டும் காணும்
என்ன
மாறுபட்டது அன்று -என்கிறார் பின் இரண்டு அடிகளாலும் தாவது -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி நீக்குகிறார் -என்றபடி
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன
அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று
தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்
பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்
நேசம் செய்து –
பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ
என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ
அகலகில்லேன் இறையும் -என்று அவள் செல்லாமை கண்டே அன்றோ அவள் பக்கல் அன்பு செலுத்தினாய் –
இன்னும் ஒரு மாசம் தான் இருப்பேன் -மன்னன் மேல் ஆணை -திருவடி வார்த்தை சொல்லக் கேட்டு பெருமாள் கார்யம் செய்தாரே

உன்னோடு என்னை –
உன்னை அறிந்தாயோ
என்னை அறிந்தாயோ –

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கவி நீ -3-6-7-
அதற்கு எதிர் தலை அடியேன் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அன்றிக்கே
இவன் அணு அளவினன்-எவப்படுகின்றவன் –
நாம் எங்கும் பரந்து இருப்பவன் -எவுகின்ற்றவன் -என்று பார்த்தாயோ -என்னுதல் –

உயிர் வேறின்றி ஒன்றாகவே –
உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது
உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-
என்னும்படி
என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது
தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கையும்
உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்கையும் படி அன்றோ -நீ செய்த செயல் –
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா
அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –

கூசம் செய்யாது கொண்டாய் –
சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை
என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் –
முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்
பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல
என்னை என் வழியில் விடாதே
உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்
இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து –
ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய்
சாஸ்த்ரன்களால் அறிவிக்கும் அளவு போராது
குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது
உட் கண்ணால் காணலும் போராது –
உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
அந்தோ –
தன்னை ஒழியச் செல்லாமையை
தானே விளைத்து
கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

அபேஷிதம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி
பிராட்டி மேல் ஆணை
உன் மேல் ஆணை
நிர்பந்திக்கிறார்
மாயம் செய்யேல் என்னை
உன் திரு
மார்பத்து மாலை -அவள் மாலை போலே
நங்கை
வாசம் செய் பூம் குழலாள் ஆணை
நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து
கூசம் செய்யாது கொண்டாய்
கூவிக் கொள்ளை  வந்து அந்தோ
மாயம் செய்யேல் ஆற்றாமை மிக்கு மீண்டும் நிர்பந்திக்க
மாசுச என்னாமையாலே மாயம் செய்யோம் சொல்ல வில்லை
இத்தால் உன்னுடைய லீலா விபூதி முடியாதே
எல்லாம் உன் மாயம்
மாயா தெய்வி குணா மம மாயா துரத்யயா
மாம் ஏவ -தரந்திதி
உன்னை சரண் அடைந்தேன்
உன் வார்த்தையை விச்வசிது
அலற மேல் மங்கை உரை மார்த்பா உன் அடிக் கீழ் வந்து புகுந்தேன்
மாம் ஏவ பிராட்டி மாம் ஏவ அவன்
பிராட்டி உடன் கூடிய என்னை
சரணம் புகுந்த என்னை வஞ்சியாதே கொள்
கீதா வாக்கியம் பொய் ஆகக் கூடாதே
இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் மாசுச சொல்ல இல்லை
பெரிய பிராட்டியார் மேல் ஆணை
உன் திரு
நாட்டுக்கு சம்பத் நீ
உனக்கு செல்வம் இவள் உன் திரு
உன்னுடைய திரு உனக்கே சேஷப்பட்ட
திரு வுக்கும் திருவாகிய
விஷ்ணுர் ஸ்ரீ
ஸ்ரீ ஸ்ரீயா
எம்பெருமான் உடைய செல்வம் இவள் என்னவுமாம்

எம்பெருமானுக்கும் பெருமை
தேவத்வம் அச்துதே
ஸ்ரத்தையா தேவ தீவு காந்தி தேஜஸ் பிராட்டியால்
திருமா மகள் கேள்வா தேவா
உலகு  உண்ட பெரு மாயா
தீவு க்ரீடா காந்தி 12 அர்த்தங்கள்
திரு மா மகள் கேள்வன் என்பதால் அத்தனையும்
ஸ்ரத்தையா அதேவ த்வத்வம் அச்துதே
தேவன் அல்லாதவன் பிராட்டியால் தேவன் ஆகிறான்
ஜனகாத்மஜா –
ஆதார ஆதேய பிரதானம் இரண்டும் உண்டே பிராட்டி பெருமாள்
சக்தி சம்ப்ரதாயம் இல்லையே
ருத்ரனை கீழே போட்டு மிதித்து
மகா லஷ்மி குடம்ப பாங்கு
அடங்கா பிடரி ருத்ர காளி
ஆதேயம் ஆதாரம் ஒழிய சத்தை இல்லை
இரண்டும் ஒன்றுக்கு உள்ளே
ஆதேயம் பிராட்டி
ஆதாரம் பெருமாள் விட்டு இருப்பே இல்லை
பிரிந்த நிலை  இல்லையே
திரு வில்லா  தேவரை
நிரூபக தர்மம்
தம்மையே ஒக்க அருள் செய்து
திருப்பதி மொட்டை தேடுவதுபோலே அவனை எப்படி காண்பது
திரு வில்லா தேவர் அடையாளம்
அவளால் இவன் இருப்பு
ஆதார ஆதேய பிரதானம்
நிரூப்யம் பகவான்
நிரூபகம் பிராட்டி
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூப ஸ்திதி இல்லை
தங்கிய மார்பன்
அலர்மேல் மங்கை உறை மார்பன்
ந அபி  ஷணம் ஜீயதே
பாஸ்கரன் பிரபை
சூர்யன் ஆதாரம் ஒளி விசேஷ்யம்
மாணிக்கம் ஒளி போலே
மார்பத்து மாலை
சம்பத்தை ஏற்படுத்துவது மட்டும் இல்லை
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு
பக்தாநாம் -எல்லாம் அடியவர்க்கு
மார்பமும் பிராட்டிக்கு
கோதை மாலை -மார்பத்து மாலை
பெரியாழ்வார் ஈடுபட்டு  ஆண்டாளுக்கு இட்ட திரு நாமம்
நங்கை
ஸ்வரூப ரூப குண விபூதிகளும் அவளால்

எங்கும் வியாப்தி
பகவான் ஸ்வரூபென வியாப்தி
ஸ்ரீ ஞானத்தால் வியாபித்து
அவனை தவிர எல்லாரும் அணு
ஞானத்தால் தார தாம்யம் இல்லை
ஞானம் ஏக தயா சாம்யம்
நம்பி
நங்கை
பரி பூர்ணம்
சீதா சீதை வரும் வட சொல் திரிபு
இங்கு இருந்து அங்கு போகாதே
நங்கா சரி இல்லை
கோதா
கோதை வேறு இது அதுவாகாது
பதிம் விச்வச்ய அவனுக்கும் இவள் பூர்தியால் பொரி புறம் தடவ வேண்டும் படி இருக்கை
பிராட்டியால் அல்லாதார் காட்டில் வாசி
ஸ்ரீ மானுக்கு நி ஸ்ரீகன் சமம் இல்லை
வாசம் செய் பூம் குழல் நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும்
சர்வ கந்த ஏற்றம் இத்தளையால் வந்தது
திரு ஆணை நின் ஆணை கண்டாய்
இட்ட அடி பேர ஒண்ணாத படி
போக வல்லையாகில் போய் காண்
திரு வின் ஆணை என்னுடையது இல்லை
நின் ஆணை உனக்கு
திரு மேல் ஆணை உன் மேல் ஆண்மை
உனக்கு நீ உகந்தார் ஆணை
அல்லாருக்கு உன் ஆணை

பரத ஆழ்வான்-கைகேயி ஒன்றும் செய்யாதே என் மேல் சீதை மேல் ஆணை
மாதரம் தாம் ரஷம் ந ரோஷம் குறு கோபம் காட்டாதே
மீற முடியாதே –
பெருமாள் வார்த்தை போல் ஆழ்வார் வார்த்தை
உம்முடைய ஸ்வரூபம் விருத்தம் சேஷ பூதர் கட்டளை இடலாமா
அடிமை பட்டவர் செய்த படி கண்டு இருக்க வேணும்
இத் திருவாய் மொழி முழுவதும்  இப்படி
உன்னை விட்டு ஒரு ஷணமும் பிரிந்து இருக்க முடியாதே
தம்முடைய செல்லாமையும் பிராப்தியும் உண்டே
ஆற்றாமை மிகுதி
பாரதந்த்ர்யம் -ஸ்வரூபம் சேஷி செய்வதை பார்த்து இருக்க
வஸ்துவே இல்ல்லையாகில் பார தந்த்ர்யம்
வஸ்து இருக்க -சேஷ பூதனை உலனாய் கண்டு இருக்க வேணுமே
இல்லாமை
பிருதக் ஸ்திதி பிரதக் பிராப்தி உண்டா
உன்னை விட்டு தனியாக இருப்போ பிராப்தியோ இல்லையே
நேசம் செய்து
உன்னுடன் என்னை கூசம் செய்யாது கொண்டாய்
உயிர் வேறு இன்று கொண்டே
நேசம் -பெரிய பிராட்டியார் பக்கலில் செய்யாத நேசம் செய்தாய்
உயிர் வேறு இன்றி ஒன்றாகவே செய்தாய்
தேசமோ அது –என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
உன் விடாய் தீர
உன்னை அறிந்தாயோ
என்னை அறிந்தாயோ
உன்னோடு என்னை
விழுமிய அமரர் முனிவர் முனிவர் விழுங்கும் கன்னல் கனி நீ
தாழ்ந்த நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அணு பரிமாணன்
விபு நியமகன்
பார்க்காமல்
ஆத்மா பேதம்
ஈர் உடல் ஓர் உயிர் போலே கலந்து
உன்னுடைய மேன்மை அறியாமல் கூச்சமே இல்லாமல் என்னுடன் கலந்தாய்
சங்கோசம் இல்லாமல்
தலை மேல் சுமந்து
பாஸ்கரே பிரபாதய அவிசாதம் சுருங்கி
என்னுடைய ஆத்மா உன்னுடைய ஆத்மா வேறு என்று சொல்ல முடியாமல் கலந்து
அயோக்யதை பாராமல்
முதலில் பூர்வ விருத்தம்
பாலகனாய் பல தீமை
அயோக்யன் வள எழு உலகில் உன்செல்லாமை காட்டி சேர்த்து கொண்டாய்
அன்று நீ செய்தில்லை ஆகில்
இத்தனையும்செய்த பின்
கூவிக் கொள்ளை வந்து
கூவ வேணும்
கொள்ள வேணும்
வர வேணும்
சாஸ்திரம் அறிவிப்பு போராது
குணம் அனுபவம் மட்டும் போரது
கிட்டி அனுபவிக்க வேணும்
சாஷாத்காரம் மட்டும் போறாது
வந்து
அதுக்கும் நீயே வர வேண்டும்
செல்லாமை நீயே விளைவித்து முகம் காட்டாமல் இருப்பாயோ அந்தோ
கதறுகிறார்

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: