திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –
அதற்கு மேலே
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்
மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்

பல பல துக்கங்களை உடையதாய்
தாண்ட முடியாததாய்
பேர் ஆழமாய்
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்
இருக்கும் படியையும் நினைந்து
அக்கணத்தில் பெறாமையாலே
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று
மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே
வள வே ழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமை யோடு
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே
இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்
சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

————————————————————————————————————————————————

நிர்ஹெதுகமாக
உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி
உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து
நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க
விட ஒண்ணாது
என்கிறார்-

முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்
ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச யாதிச
உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-

ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா
ஸ ஏவபாதி அத்திச பால்யதி
ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி
விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன
மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை
இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச
அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
உயிர் பரம் பொருளின் கூறே யாகும்
அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்-

ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே
ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே
வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ
இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே
பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே
அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே
தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தன்னாரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –
அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே
தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –
தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட
ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி
அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்
அப்பறமா புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-

தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன
இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-

ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு
சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக
சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்
முதலிய செயல்களை செய்யுமாறு போலே
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்
அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்
அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து
யாதி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்
சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி
சரீரத்தை காட்டுகிற சொல் ஆத்மா வரையிலும் தன் பொருளைக் குறிக்கும் என்கிற
நியாயத்தாலே
தனக்கு சரீரமாய் இருக்கும் பிரமனைக் காட்டக் கூடிய நான் முகன் என்ற சொல்லாலே
அவனில் வேறாய் அவனுக்கு ஆத்மாவாய் இருக்கிற எம்பெருமான் சொல்லப் படுகையாலே
நான்முகனே -என்ற சொல்லால் -எம்பெருமானை விளிக்கிறது —

முக்கண் அப்பா –
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்
ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி
ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது
எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-
அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ
அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர் -என்கிறபடியே
அழிக்கப் படுகின்ற பொருள்களோடு

அழிக்கின்ற வனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக் கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –
அப்பா –
என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது
படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ –
நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்
சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
எங்கனே என்னில்
தம் தாம் கைகளைக் கொண்டு கண்களை கலக்கிக் கொள்வாரைப் போலே
படைத்த படைப்பு பேற்றுக்கு உடல் அன்றியே தீம்புக்கு உடல் ஆனவாறே
சிறு குழந்தைகளை கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு காப்பாற்றும் தாய் தந்தையரைப் போலே
உறுப்புகளையும் உறுப்பக்களோடு கூடிய சரீரத்தையும் நீக்கி அழித்திட்டு விக்கியும் உபகாரமாம் படி இருக்கிறபடி
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா
அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்
அப்படியே உலகத்தை அளிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி
ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத
தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரன்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை
சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
தன்னுடைய த்யானத்திலே இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்த்ரியங்கள் -என்று தொடங்கி
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்ப்பிக்க நினைந்து த்யானம் செய்தான் –
த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது
அது தான் தண்ணீர்
அது பொன் மயமான அண்டம் ஆயிற்று
அந்த அண்டத்தின் நின்று நான்கு முகங்களை உடைய பிரமன் உண்டானான்
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தான்
அங்கனம் த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது
அவ வேர்வையின் நின்றும் குமுழி உண்டாயிற்று
அந்த குமுழியின் நின்றும் முக்கண்களை உடையனாய்
சூலத்தை கையிலே தரித்தவனாய் ஒரு புருஷன் உண்டானான்
என்று சொல்லுகிற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயண ஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ
சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்
ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற
பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
படைத்தல் அழித்தல் களுக்கு இடையில்
பருந்து இறாஞ்சினால் போலே இறாஞ்சிக் கொண்டு போவார்களே அன்றோ காப்பார் இல்லா விட்டால்
அதற்காக படைத்தல் அழித்தல் செய்யும் தலைவர்களாய்
ஆதி தேவர்களாய் உள்ள
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே
ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்
தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா சவேதேஷூ

வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய்
உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன் வேதம் வேதாங்களில் பேசப்படுகிறான்
கர்மம்களுக்கு தகுதியாக உயர்வு தாழ்வு இன்றி
கண் அழிவு இன்றி செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே
படைத்தல் அழித்தல் களுக்கு ஆள் இடும் –
காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்
ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்
எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு
ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே
சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை -என்றும் சொல்லுகிறபடியே

நான் முகனே முக்கண் அப்பா –
என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு பொய் விசெடியத்திலே இளைப்பாறினார்
இங்கு விசெஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே -என்று
ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்
இந்த திரு மேனியை பற்றுக் கோடாக சொல்லா நிற்கச் செய்தே
இதனை விட்டு திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போ என்கிறது
இதனை விடச் சொல்லுகிறது அன்று
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போவான் என் -என்கையிலே தான் கருத்து-

பொல்லா என்பதனை -கரு மாணிக்கம் -என்பதனோடு சேர்ப்பது
பொல்லாக் கரு மாணிக்கம் என்று கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்
அன்றிக்கே
அழகிலே வேறுபட்ட சிறப்பினை உடைமையாலே கூறுகிறது -எண்ணுதல்
கனிவாய் –
அவாக்ய அநாதர -பேசாதவன் -விருப்பமில்லாதவன் என்று சொல்லப் படுகிறவன் –
அனுகூலரைக் கண்டு -அங்கனம் சொல்லப் படுகின்ற நிலை நீங்கி புன் முறுவல் செய்து நிற்கும்படியைச் சொல்கிறது –
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி –
தாமரைக் கண் –
வினவப் புக்கு விக்கித் தடுமாறினால் குறையும் தலைக் கட்டும் கண்களைச் சொல்லுகிறது
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ
அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே
திருவருள் புரிய வேண்டும்
பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் -என்கிறபடியே
கரு மாணிக்கமே –
குளிர்ந்து -இவ் உலகத்தில் விடாய் தீர அணைக்கும் உடம்பைச் சொல்லுகிறது
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத
மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால்
விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான
இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது -என்கிறபடியே
கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது-

என் கள்வா –
என் இசைவு இன்றிக்கே என்னைக் கவர்ந்தவனே –
கருமத்தாலே இறைவன் உடையதான ஆத்மாவை முன் தோற்றாதே நின்று கவர்வான் இவன்
வடிவினைக் காட்டி இவனைக் கவர்வான் அவன் –
சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ
இவனுடைய -என்னின் -உரம் இருப்பது
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி
ஸ்ரீ ஜனக ராஜன் பெண் பிள்ளையை நீர் வார்ப்பித்து தனக்கு ஆக்கினாப் போலே அன்றோ –

ஆத்மாவை தனக்கு ஆக்கிக் கொள்ளுகையாவது –
தனியேன் ஆர் உயிரே –
என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து
பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே
இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்
பரமபதத்திலே புகப் பெறாமையும்
நோக்கித்- தனியேன் -என்கிறார் –
பிராட்டி அசோக வனத்தில் அரக்கிகள் நடுவே இருந்தால் போல் காணும் இவருக்கு
இவ் உலக மக்கள் நடுவே இருப்பு
உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே —

என் தலை மிசையாய் வந்திட்டு –
செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே -10-8-5-
தலை மேலே தாள் இணைகள் -என்று சொல்லுகிறபடியே குறைவு இல்லாமல் வந்து தோற்றி –
நர்ஹெதுகமாக வந்து தோற்றி -என்னுமாம் –

இனி
உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே
பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு

நான் –
வழிச் சுவடு அறிந்த நான்

போகல ஒட்டேன் –
தம்முடைய செல்லாமையாலும்
சம்பந்தத்தாலும்
தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –

அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா
சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்
உணவு இல்லாதவனும்
ஒளி இழந்த முகத்தை உடையவனும்
செல்வம் இல்லாத பிராமணன் போலே
எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இ றே

போகல ஒட்டேன் –
வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது
போம் போது உன் கார்யம் உன்னதோ –
இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்
விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா
யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்
நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு
மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று
நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு
விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து
நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –

அங்கன் வேண்டுவான் என் -என்ன
என்னையே –
எஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்
ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்
பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய
சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே
விரகம் தின்று
குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் –
அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு
இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

முனியே
மானஸ அனுபவம் இது வரை
வஸ்து கிடைக்க வேண்டுமே
கையிலே காட்டி மறைத்து வைத்தால் ஆர்த்தி பீரிட்டு துடிக்குமே
கதறுதல்
உடனே திருவடிகளில் சேர்த்து கொள்ள
பரம பக்தி
பர பக்தி இது வரை
பாவனா பிரகர்ஷம் பர ஞானம் சோந்து
பரம பக்தி இனி அனுபவம்

தாம் பெற்ற பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றதாக
மாதவன் தாமரைக் கண்டு உகந்து அனயாபதேச முகத்தால் அருளிச் செய்தார்
அதுவும் மானச அனுபவம்
துடிப்பு அதிகம் மிக்கு
தசரத -சக்ரவர்த்தி பதினாரியம் வருஷம் கழித்து பிறந்த பெருமாள் காட்டுக்கு போன பின்பு
கண் இழந்தான் பெற்று இழந்தான் போலே
முன்புற்ற நிலையே தேவலை
பெற்ற பின்பு மறுபடியும் இழந்து
ஆழ்வார் பெற்றது போலே அனுபவம் பெற்ற பிபு
துக்கம் அதிகம்
இனி நான் உன்னை போகல ஒட்டேன்
இனி உன்னைப் போக்குவேனோ
கதருகிறார்
அனுக்ரகம் அருளி தாளினை சேர்த்து கொண்டான்
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்

எதிரே நிற்க தயங்கிய நிலை போனது
தூது விடவும் ஷமர் இல்லை
திருவாணை நின் ஆணை
சங்கோசம் இல்லாமல் ஆற்றாமை
நிர் ஹிருதயம் கூட இறங்கும் படி
அவனுக்கும் பரம பதத்தில் இருப்பு கொள்ளாமல்

காட்டுத் தீயில் அகப்பட்டார் போலே
பெரும் மிடறு கூப்பிடுகிறார்
குரங்குகள் ராவணன் அடி பட்டு பெருமாள் திருவடிகளில் விழுந்தால் போலே
சரணம் அடைந்தாள் போலே
தரிக்க மாட்டாமையாலே சரணம் புகுகிறார்
பரம தயாளு
இப்படி துக்கம் படி நாம் அல்லவோ விட்டு வைத்தோம்
தாம் நொந்து
பெரிய திருவடி மேலே இவர் ஆசைப் பட்ட படி
பிராட்டி உடன்
அடியார்கள் உடன் சேர்த்து
அவா அற சூழ்ந்து
அவா அற்று வீடு பெற்ற இவர் விடாயும் தீர்த்து
இதுக்கு அவ்வருகு தம் விடாயும் தீரும் படி
தத்வ த்ரயம் விளாக் கொலை கொண்ட ஆழ்வார் அவா
திமிங்கலம் வஸ்துக்களை முழுங்கும்
அத்தையே விழுங்கும் திமிங்கில  கிலம்
ஆழ்வார் அவாவும் குளப்படியாய் அவன் த்வரை கடல் போலே சம்ச்லேஷித்து அருளினான்

பிரபந்தம் பிரமேயம் சர்வேஸ்வரன்
பிரபந்தம் பிரமாணம் அவாவில் அந்தாதி
பிரபந்தம் பிரமாதா மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
சாதுக்கள் சுக்ருத பலம் அவதார பிரயோஜனம் சர்வேஸ்வரன் அவதாரம் போலே

நிர்ஹெதுகமாக சௌந்த்ர்யாதிகளை  காட்டி-பொல்லாக்  கரு மாணிக்கமே
உன்னை விட செல்லாமையை விளைவித்து
சம்சாரத்தில் விட்டு வைத்து
பண்டு போலே குணா அனுபவம் பண்ண வைத்து விலகக் கூடாது
இனி நான் போகல ஒட்டேன்
முனியே
மனன சீலன்
நினைத்து கொண்டு இருப்பவன்
ரிஷிகள் எம்பெருமானை நினைத்து கொண்டே முனி
அவன் -மனனம் இவர்களை நினைந்தே இருப்பதால்
நான் முகனே
முக் கண் அப்பா
சாமானாதிகரா
அந்தர்யாமியாக இருந்து
சரீர ஆத்மா பரமாத்மா பர்யந்தம்

போகல ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல்
படைத்தல் காத்தல் அழித்தல்
முனியே
ஜகத் சிருஷ்டி மானச சங்கல்பம் சிந்தனை உடைய சர்வாதிகன்
பகுச்யாம் பிரஜாயேயா
பகு பகவ சங்கல்பம்
நெஞ்சில் கொண்டதால் முனியே
கரண களேபர அசித் கல்பமாய் இருக்கும்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி பண்ண முடியாத
சோகப் படும் நிலைமை
சதேவ தன்னை சொல்லும் சொல்லால் சொல்லும்  படி
சதா ஏகாகி ந ரமேதா
என்றும் நினைவை சொல்லலாம் படி

சர்வம் கலு இதம் ப்ரஹ்மா
எல்லாம் ப்ரஹ்மம் தான்
எல்லாம் ஓன்று ஏக வஸ்து இல்லை நெருங்கின தொடர்பு  ப்ரஹ்மாவை ஆத்மாவை உடைய
தத் ஜலம்
தத்தஜம்
தல்லம்
அவன் இடம் உண்டாகி அவன் இடம் லயித்து
ரஷணம் உப லஷணம்
ஸ்ருஷ்டவ் சிருஷ்டி சம்கர்தா
சுயம் பிரபு ஸ்ரீ விஷ்ணு புராணம்

பூதம் மகத்த அவயகதம் அசரம் தமஸ்
பர் தேவே ஏகி பவதி
பகுச்யாம் சங்கல்பித்து
விவக்தம் ஆக்கி
தமஸ் சப்தம் வாச்யம் ஆக்கி வெளி இட்டு
அசரம் அவயகதம் மகான் அகங்காரம்
பூத தன்மாத்ரம் பூதம்
திவ்ய சங்கல்பம் சிருஷ்டி
முனி

பர ப்ரஹ்மம் பர தத்வம் பரமாத்மா ஸ்வரூபம் முனியே
சகா ஏகாகி ந ரமேத
தனியாக இருந்து சோகம் சூழ்ந்து
நாம ரூபங்கள் இழந்து அசித் கல்பமாய் ஒட்டிக் கொண்டு கிடந்தால் போலே

சர்வேஸ்வரன் தானும் அசித் கல்பமாய்
தலை நரைத்து கவலை
அசித் கல்பமாய் இவனே பண்ணி
தானும் பிரிந்து சகா ஏகாக்கி ந ரமேதி
முனியே
சிருஷ்டிக்க சங்கல்பம்
சமுத்ரம் தாண்ட திருவடி சங்கல்ப்பித்தது போலே
தது ராவண சீதாயாக-நினைத்தான்
ராவணன் -சீதை சத்ருவை அழிக்க
தேடுவதற்காக தாண்ட இவர் சங்கல்பித்த
கடல் கொண்ட வஸ்துவை   மீட்க
அதுவாக வெளியில் தள்ளினால் உண்டு
பழுவான வஸ்துமுழுக
பிரேதம் லேசாக
பிணம்  கணம் நீரில் மிதக்க
கடல் கொண்ட வஸ்துவை நாடுகைக்கு திருவடி நினைத்தால் போலே
மானஸ சங்கல்பம்

பாவம்
நான் இல்லாத அன்று நிர்ஹெதுகமாக உண்டாக்கின நீ
நானே கதற சேர்த்துக் கொள்ள வேண்டாமோ
அம்மே என்பாரை போலே
காரண களேபரம்  -உண்டாக்கி
ஆசைப் பட்ட எனக்கு உதவலாகாதோ
நீ நினைக்கும் அன்று தான் உதவுவாயா
நான் பிரார்த்தித்தால் உதவலாகாதோ

முனியே நீ நினைத்து உதவி
நான் உன்னை அடைய நினைத்து கேட்டால் பண்ணலாகாதோ
குரங்குகள் பிழைப்பித்து
மானுஷ வேஷம் கொண்டதால் இந்த்ரன் வரம் பெற்று

நான் முகனே
ப்ரஹ்மாவை சிருஷ்டித்து
ஜீவத்வாரா பிரவேசித்து
தன் கார்யம் தன் சரீரம் கொண்டு செய்து அருளி
இரண்டு வித அனுபிரவேசம்
செத்தனர் தங்கள் சரீரம் கொண்டு தம் தாம் பிரவ்ருத்தி நிவ்ருதிகளை செய்வது போலே
பிரமனைக் கொண்டு
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம ஜகத் சிருஷ்டி செய்து அருளி
முனியே சமஷ்டி சிருஷ்டி
நான் முகனே வியஷ்டி சிருஷ்டி
இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம்
வல்லவனுக்கு புல்லும்  கார்யம்
அல்பனான பிரமன் கொண்டு கார்யம் செய்ய வல்ல நீ
இருந்து படைக்கும் ஆசனத்தொபாதி பிரமன்
அசேதனம் மகதாதிகள் கொண்டு சிருஷ்டித்தல்
சேதனன் பிரமன் கொண்டு சிருஷ்டி வாசி இல்லையே

இரண்டும் பரதந்த்ரம் ஒக்கும்
இவற்றுக்குள் பேதம் இருந்தாலும்
அவனைப் பார்த்தால் வாசி இல்லை
நிஷ்க்ருஷ்ட ஆத்மா வஸ்துவுக்கு தேவத்வம்  மனுஷ்யத்வம் இல்லை
இவனை சொல்லும் சொல் அவனை சொல்லும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
எல்லாம் அவனுக்கு சரீரம்
சரீர வாசி சப்தம் சரீரி பர்யந்தம் போகுமே
சதுர முக சப்தம் எம்பெருமானை சம்பாதிக்கும்
அந்தர்யாமி
முக்கண்  அப்பா ருத்ரன்
சம்ஹாரம்
வ்யஷ்டி -அவனையும் இவன் சம்ஹரிக்க
யஸ்ய பிராமச்ய ஒத்தனம் மிருத்யு யஸ்ய  உப செஷணம்
ஊருகாய் போலே
சம்ஹாரனையும் சம்ஹர்க்கும்
அவனில் வேறாய் அவனுக்கு அந்தராத்மா பகவானை
அப்பா –
முக்கண் அப்பா உபகாரகன்
இவன் செய்வது பெரிய உபகாரம்
முடித்ததால் மேலும்  ஆபத்து விளைக்கும் பாபங்கள் செய்ய
நாலு நாள் கழித்து ஸ்ருஷ்டிக்கிலும் சத்தை கிடக்கும்

தீம்பிலே கண் வளர்ந்து சத்தியே அளித்து
தம் தாம் கைகளை கொண்டு கண்ணை கலக்கிக் கொள்வாரை போலே
சிறு பிரஜைகளை கையிலே விலங்கிட்டு காக்கும் தாயார் போலே
ருத்ரன் சம்ஹாரம் செய்து உபகரிக்கும்
முக்கண் அப்பா
ந நஷத்ராணி ந ஆபோ  ந அக்னி ந சோம ந சூர்யா
ந பிரம்மா ந ஈசா சொல்லி
மனசால் த்யானித்து
தஸ்ய லலாடாத் -வேர்வை
ஹிரன்ய மண்டலம் பர்மா வந்து
மனசால் த்யானம் வ்யர்வை உத்புதம் நீர் குமிழி சூல பாணி ருத்ரன்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றும்
என் பொல்லாக் கனி வாய் –கரு மாணிக்கமே ரஷணம்
இல்லா விடில் பருந்து தூக்கி போகுமே
நடுவில் தான் வந்து
யது வம்சம் இஷ்வாகு வம்சம் வந்தது போலே
சஜாதீயனாய் திரு அவதாரம்
ஆதி தேவன்
விஷ்ணு
ஸ்வரூபென ரஷணம்
தாமே கண் அழிவு அற்று செய்ய வேண்டுவதால்
ரஷணம் தானே எரித்துக் கொண்டு
ஆள் இட்டுசெய்ய முடியாதே

விஷ்ணு
ஆள் இட்டாலும் வேறு சிலரால்
ந பாலான சாமர்த்தியம்
புருஷோத்தமம் ஒருவனாலே முடியும் சமர்த்தன் ஒருவனே
என் பொல்லாக் கரு மாணிக்கமே
கண்ணை செம் பளித்துக் கொண்டு நான் முகனே முக் கண் அப்பா
திவ்ய மங்கள விக்ரக அழகு இங்கு
விசெஷணமே உத்தேச்யம்
கனி வாய்
தாமரைக் கண்
திரு மேனிக்கு அப்பால் போக மாட்டாமல்
சுபம் ஆச்ராயம் உபாசகன்
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் போக விடச் சொல்லாமல் இதுக்கு உள்ளே திவ்ய ஆத்மா ஸ்வரூபம் தாத்பர்யம்

முனியே -ஜகத் ரஷன சிந்தை மனன சீலன்
போக மோஷ சூன்யமாய் கிடக்கிறதே பகுச்யாம் சிந்தனை
நான்முகனே -அந்தர்யாமியாய் இருந்து சிருஷ்டி
முக் கண் அபா -ருத்ரனை சரீரமாக கொண்டு சம்ஹாரம் செய்து அருளும்
பாலான சாமர்த்தியம் ஒருவனுக்கே
அப்பா -உபகாரன் சம்ஹாரம் பெரிய உபகாரம் சத்தை கேட்டு போக ஒட்டாமல் அழிப்பதால்
என் பொல்லா   -அனைத்துக்கும் விசேஷணம்
முன்பு விசேஷயத்தில் ஊன்றி
இதில் விசெஷணத்திலே ஊன்றி  -திவ்ய மங்கள விக்ரஹம்
ஓர் உருவம் பொன் உருவம் ஹிரண்ய கர்ப்பம்
ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் உருவம் ஸ்ரமஹரமான
மூ உருவும் கண்ட போது ஓன்று ஆகும் சோதி ஆம் சோதி
மற்ற இரண்டும் அழியும் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
ஆறங்கம் கூற அவதரித்த
பொல்லா -கனிவாய்
திருமேனிக்கு அப்பால் போகாதவர்கள் ஆழ்வார்கள்
சுபாஸ்ரயம்
இத்தை விட்டு தஸ்மின் அந்தக ஸ்வரூபம் உபாசிக்க சொல்லி வேதாந்தம்
விட சொல்லாமல் திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போக வேண்டும்
த்யானம் திவ்ய மங்கள விக்ரகம் தான ஸ்லோகம்
பொல்லா கரு மாணிக்கத்துடன் சேர்த்து
கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்

திருஷ்டி பரிகாரம்
அழகில் விசஜாதீயம் பொல்லா சந்தோஷத்தில் வார்த்தை
விபரீத லஷனை
கனிவாய் அதரம் புன் சிரிப்பு அவாகி அநாதார தத்வம் ஸ்மிதம் பண்ணினதை சொல்லுகிறது
பெரிய ஸ்தானம் கௌரவம் –
பங்கம் ஏற்பட்டு ஜீவாத்மாவைக் கண்டதும்
தாபம் ஆரி போகுமே கடாஷம்
கர்மம் அனலம் தகிக்கப் பட்டு இருக்கும் ஜீவாத்மா த்யானம் தேக சாந்திக்கு திவ்ய மங்கள விக்ரஹம்

தாமரைக் கண் -வினவ புக்கு விக்கி தடுமாறினால்
உணர்ச்சி மேல் இட்டு குறையும் திருக் கண்ணால் தலைகாட்டும்
அக்ரூரர் அவலோசன
பிரார்த்திக்க வேண்டாத படி ரஷிக்கும்
கரு மாணிக்கம்
சம்சாரம் தாபம் தீர அணைக்கும் உடம்பு
ஏஷ சர்வ பூதேஷு

கள்வா
என் இசைவு இன்றிக்கே என்னை அபகரித்தவன்
வடிவை காட்டி அபகரிக்கும் பலே திருடன்
திருடன் இடம் திருடி
சோரேன ஆத்மா அபஹாரினாம் நாம் திருடன்
நம் ஆத்மவஸ்துவை திருட்டு தனமாக பக்காத் திருடன்
என் கள்வா
இவருடைய
ஸ்ரீ ஜனக ராஜன் பிள்ளையை நீர் வார்த்து ஆக்கிக் கொள்வது போலே
ஏற்கனவே அவனுடையது
மதிநலம் அருளி
இசைவை பிறப்பித்து
கிருஷி பலன்
இயம் சீதா மாமாசுதா நீர் வார்த்து கொடுத்தாப் போலே
மகா பலி தானம் போலே
அஹங்காரம்
அபகரித்து
யாசகனாய் மீட்டுக் கொண்டான்
தனியேன் ஆர் உயரே
சுவட்டை அறிவித்து
பிரிந்தால் தரியாமல்
பூனை காய்ச்சி இல்லை தடவி
பார்த்தால் சம்ச்டாரிகள் ஓடி போக
தனியேன்
மயர்வற மதி நலம் அருளி சம்சாரிகள் நித்யர் கூட்டு இல்லை
அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்
பிரிந்தாலும் முடியாதபடி குணம் காட்டி தரிப்பித்து
தனியேன் ஆர் உயிரே
பிராட்டி அசோகா வனத்தில் ராஷசிகள் நடுவில் இருந்தாப் போலே
பிராண ஹேதுவாய் இருந்து பிரிந்து முடிக்க பெறாமல்
என் தலை மிசையாய் வந்து இட்டு
தலை மேலே தாளிணைகள் பரி பூரணமாக
நிர்ஹெதுகமாக வந்து அருளி
ஜகத் ஒன்றும் செய்யாதது போலே
என்னாலும் செய்யப் போவது இல்லை
தானே தயாமான மனனாய் கொண்டு
இவ்வளவாக கொண்டு நிறுத்தி
இனி மேல் உள்ளதும் உனக்கே பரம்
என் தலை மேல் ஓடுவது உன் தலையில் ஓடும்

தடுக்கவும் -செல்லாமை காரணம்
வளைக்கவும் -பிராப்தி சம்பந்தம்
பரத ஆழ்வான் மறியல் –
காலில் விழுந்து அனுக்ரகம் செய்யும் அளவும்
அதி பிரவ்ருதியான கார்யம்
நெஞ்சுக்கு உள்ளே புகுந்த உன்னை போகல ஒட்டேன்
குழந்தை லொட்டை சொல்லும் ஆழ்வார் வார்த்தை
உள்ளே புக உனது ஸ்வா தந்த்ர்யம்
வந்த பின்பு  உன் கார்யம் உன்னதோ போகல ஒட்டேன்

சர்வஞ்ஞன் அறிய இவருக்கு உண்டான த்வரையாய் இப்படி
பிறபாட்டுக்கு லஜ்ஜிக்கும் அவன்
ரொம்ப வெட்கம் தண்ட காரண்ய ரிஷிகள் இடம் பெருமாள் வார்த்தை
இனி நான் போகல ஒட்டேன் என்கிறார்
ஒன்றும் மாயம் செய்யேல்
அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான சப்தாதி விஷயங்கள் காட்டி அதுவே அமையும்
அறிந்த பின்பு உம்பர் என் குறை ஈதே வேண்டுவது குணங்கள் காட்டி
இனி பெற்றேனாக பண்ணி -பாவனை உண்டாக்கி மானச அனுபவம் மட்டும் பண்ணிவித்து
மாயம் செய்யேல் என்னை
விரகம் தின்று சேஷித்த திருமேனி காட்டுகிறார்
சரீரம் மாதரம் அவர்களுக்கு
இவருக்கு ஆத்மா ஸ்வரூப நாசம்
பகவானை விரகித்தாருக்கு
மாயம் செய்யேல்

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: