திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஆதி வாஹிகத் தலைவர்களான
வருணன் இந்த்ரன் முதலானவர்களும்
மற்றும் உள்ளாறும்
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை
அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————–

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே

———————————————————————————————————————–

மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –
என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –

வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்
வாசல் -வழி
அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –

போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்
என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –

வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –
மேலே உள்ள லோகங்களிலே
வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்
தங்கள் யாகங்களின் பலன்களை
இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்
தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ
பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –

———————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: