தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-
அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்
எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-
அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்
சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி
உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்
இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது
வேறு உருவம் இல்லையாகில் அன்றோ
அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது
பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்
எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை
காண வேண்டும் –
என்கிறார் –
—————————————————————————————————————————————
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ
—————————————————————————————————————————————-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான
எல்லாவற்றுக்கும்
மூன்று விதக் காரணங்களும் ஆனவனே
இதனால் -காப்பாற்ற என்று புக்கால்
காப்பாட்ட படுகின்ற பொருள்களின்
துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்
தனி -துணைக் காரணம்
வித்து -முதல் காரணம்
முதல் தனி உன்னை –
முதன்மை பெற்றவனாய்
ஒப்பற்றவனாய்
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை
எனை நாள் வந்து கூடுவன் நான் –
என்று வந்து கூடுவேன்
அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை
உணர்ந்தாருக்கு
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்
நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது
உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்
உபமானம் இல்லாததாய்
அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்
முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து
ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்
விளைக்கும் விலை நிலமாக
இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே
நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள
மீண்டும் அவதாரிகையும்
வியாக்யானமும் அருளுகிறார் –
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்
தனி -துணைக் காரணம்
வித்து -முதல் காரணம்
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –
மூ உலகு என்கையாலே
கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று
மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச
ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்
பதினாயிரமும்
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட
எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே
இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது
ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்
மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி
முதல் தனி உன்னை –
மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை
-இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள
முதல்வனாய்
ஒப்பு இன்றிக்கே
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்
உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை
ஆகா இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை
கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்
உன்னை
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –
காட்டும்
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ
உன்னை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான
அழகிய திருமுகமும்
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்
கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்செற்றும் படி
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற திரு உதர பந்தமும்
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க
திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்
சங்கு
சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய
அடையாளம் பண்ணப் பட்டதாய் –
நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மேள்ளடியாக
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளை யும் உடையையாய்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –
எனை நாள் வந்து கூடுவன்
என்று வந்து கிட்டக் கடவேன்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி
நான்
அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்
உபமானம் இல்லாததாய்
அங்கும் இன்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான
கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்
முதல்
மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்
நியமிக்க கூடியதாய்
தனி
உபமானம் இல்லாததாய்
சூழ்ந்து
மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –
அகன்று ஆழ்ந்து உயர்ந்த –
பரந்து இருக்கும் இடத்தில்
ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த
முடுவிலீயோ –
அளவிட்டு அறிய முடியாததான
ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே
முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு
சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே
என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்
முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்
இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற
உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்
காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய
சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்
இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது
உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்
பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு
அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
எல்லாம் அவனுக்கு சரீரம்
ஜகத் சரீரமாக இருக்கும் இருப்பை காட்டி கொடுக்க
அது உகந்தாருக்கும் உகவாதாருக்கும் பொதுவாக
உனக்கு வேறு ஆகாரமும் உண்டே
தனிப் பட்ட திவ்ய மங்கள விக்ரகம் உண்டே
அத்தை சேவிக்க வேண்டும்
திரு நாட்டில்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமாய் நிலா நிற்ப நித்ய சூரிகள் புடை சூழ
அந்த ஆகாரம் சேவிக்க வேணும்
திரு இந்தளூர் திரு மங்கை ஆழ்வார்
தீ எம்பெருமான் -அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ திரு இந்தளூரிலே
முதல் தனி வித்தேயோ
உன்னை என்று வந்து கூடுவேன்
ஜகத் காரணம்
முதல் -நிமித்த காரணம்
தனி சககாரி காரணம்
வித்து -உபாதான காரணம்
மூன்று லோகம் கிருத அகிருத கிருதகிருத்ய
அண்டானாம் கோடி கோடி சகஸ்ராணி
முழு உலகுக்கு ஆதி
எல்லா வற்றுக்கும் முதல் தனி வித்து
ஒப்பு இல்லாமல் பரி பூரணன்
ஜகத் சரீரியான உன்னை
லீலா விபூதி விசிஷ்டன் -உலகு சப்தம் சொல்லி
நித்ய விபூதி விசிஷ்டன் -உன்னை சப்தம்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப
பரமபத திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசை
அர்ச்சிராதி
திருமுடி தொடங்கி முடிச் சோதி
ஆயன் குழல்
வில்லும் தளிரும் அழகிய திரு முகமும்
நாய்சிமார்
கற்பக காவலா தோள்கள்
கோயில் கட்டணம்
அகலகில்லேன் பிச்சேரும்படி
நித்ய முதிர் அழகு செண்டேறி
திரு உந்தியும்
சிற்றிடையும்
அந்தி போல் நிறத்தாடையும்
திருத் தோள்களும்
கணை கால்களும்
கூசித் தொழும் மெல்லடி
நிரதிசய போக்கியம்
எழு உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும் உன்னை
என்றைக்கு வந்து கிட்டக் கடவேன்
பிராட்டிமார் போலே கூடுவேன் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்
என்பதால் கூடுவேன் என்கிறார்
கடி மா மலர்ப் பாவை ஷட்கம்
என்றைக்கு சேரப் போகிறேன் சொல்லாமல்
கூடப் போகிறேன் கேட்கும் பிராப்தி உண்டே
வடிவைக் காண ஆசைப் பட்ட
முதல் பிரதானம்
தனி அத்விதீயம்
முற்றும் வியாபித்து
மூல பிரகிருதி பாழாய் நிர்வாககன்
சேதனனுக்கு போக மோஷங்கள்விளைத்துக் கொள்ள -அடைய
பயிர் போடாமல் நிலம் வைத்து
பாழாய் போட்டு என்ன வேண்டும் ஆனாலும் போடலாம்
இனி மேல் தான் விதைக்கப் போகிறான்
போகம் நரகம் மோஷம் விளைவித்துக் கொள்ள ஈடாக
வெறும் கலம் பிரகிருதி ஆத்மா
ஜீவாத்மா சப்தம் -சித் சேதனன் முதல் தனி சூழ்ந்து அத்தையும் வியாபித்து
அபரிச்சின்ன மான ஆத்மா தத்வம் நிர்வாககன்
முடிவிலி நிர்வாககன்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த ஞானத்தால் வியாபித்த ஆத்மா தத்வம்
தர்ம பூத ஞானம் மலர்ந்து
கர்மத்தில் இருந்து விடு பெற்ற
நித்ய தத்வம்
முதல் தனி வித்தாய்
நான் உன்னை கண்டு கொண்டேன் ஞானத்தால்
இனி என்று வந்து கூடுவேன்
அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரகத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ
காரண கார்ய
சூஷ்ம நிலை காரண அவஸ்தை
ஸ்தூல நிலை கார்ய அவஸ்தை
இருப்பை காட்டி
இது போராது
தேச விசேஷத்தில் கண்டு அனுபவிக்க வேண்டும்
———————————————————————————————————————————————————–
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-