நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்
என்று தம் லாபத்தை பேசுகிறார்
———————————————————————————————————————–
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே
————————————————————————————————–
மணித் தடத்து அடி –
தெளிந்த தடாகம் போல் ஆயிற்று திருவடிகள் இருப்பன -என்றது
சிரமத்தை போக்கக் கூடிய திருவடிகள் -என்றபடி –
மலர்க் கண்கள் –
அத்தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன –
பவளச் செவ்வாய் –
பவளம் போன்ற சிவந்த திரு அதரத்தை உடையனாய் –
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-
தனக்குத் தானே ஆபரணமாய் இருக்கும்
பெரிய நான்கு திருத் தோள்களையும் உடைய தெய்வம்
அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்
தன் உகப்பு தோற்றின புண் முறுவலும்
கடக் கண் நோக்கம்
முதலானவைகளையும் உடையவனாய்
ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே
அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று
தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி –
வெற்றியில் விருப்பத்தோடு ஆயிற்று போவது
திவு கிரீடா விஜிகீஷா -தெய்வம் தாது –
வழியிலே எங்கே என்ன தடை வருகிறதோ என்று ஆசிலே வைத்த
கையும் தானுமாயிற்று போவது
ஆசு -ஆயுதத்தின் பிடி –
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்-
அசுரக் கூட்டத்தை என்றும் துணிக்கும் பெரு மிடுக்கன்
உறைபொழில் திரு மோகூர் –
வசிக்கின்ற -பொழிலை உடைய -திரு மோகூர்
சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –
நணித்து –
கிட்டிற்று –
நம்முடை நல்லரண் –
நம்மை பாதுகாக்கக் கூடிய நகரத்தை –
நாம் அடைந்தனமே –
காப்பாற்ற பட வேண்டும் என்னும்
விருபத்தை உடைய நாம்
கிட்டப் பெற்றோம் –
அரணாகிற-திரு மோகூர் அடையப் பெற்றோம்
தனது லாபத்தை பேச
யாரானும் யாதாகிலும் செய்யட்டும்
திவ்ய மங்கள விக்ரஹம்
தெளிந்த தடாகம் போலே மாணிக்க தடாகம்
உள்ளுக்குள் இருப்பது வெளியில்
ரமநீயம் பிறசன்னாம்பு பம்பை நதி
சத்துக்கள் ஹிருதயம் முகம் பார்த்தே அகம் அறியலாம்
திருவடிகள் அப்படி இருக்க ஸ்ரமஹரமான
மலர்க்கண்கள் தடாகம் பூத்தாப் போலே
பவளச் செவ்வாய்
தனக்கு தானே ஆபரணம் திரு தோள்கள்
வழித் துணை யாக இருக்க இவை வேண்டுமே
ஸ்ரமஹரமான வடிவு மணித் தடாகம்
உகப்பு தோற்ற ஸ்மிதா தீஷணாதிகள் குளிர கடாஷித்து
பலம் -நால் தடம் தோள்
கல் மதிளுக்கு உள்ளே புகுவது போலே
பிராட்டி -பெருமாள் வனம் -போகும்
விஜிகீஷா -விசேஷண-வெல்லும் இச்சை -மோஷம் இச்சா முமுஷா போலே
அடியார் விரோதி வெல்ல நால் தடம் தோள்
என்ன பிரதி பந்தகம் வருகிறதோ
பிரயோக சக்கரம்
ஆசீயில் வைத்த திருக்கைகள்
திருவரங்கம் பெரிய கோயில் பிரயோக சக்கரம்
விளம்பம் கூடாது என்று
அசுரரை -என்றும் துணிக்கும் மிடுக்கன்
நித்ய வாசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு போலே
கிட்டி -கிட்டிற்று
நம்முடைய நல்லவன்
நாம் அடைத்தோம்
ரஷன அபெஷை உடைய நாம் கிட்டினோம்
தம்முடைய லாபம் பேசுகிறார்
———————————————————————————————————————-
Leave a Reply