திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்
எல்லா உலகங்களையும் படைக்கின்ற இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை அடையவே
நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –
என்கிறார்

——————————————————————————————————————————

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே

——————————————————————————————————————————

மற்று இலம் அரண் –
வேறு ஒரு அரணை உடையோம் அல்லோம் –
அவன் தான் பாது காப்பவன் ஆகத் தக்க வல்லவனோ -என்னில்
இது அன்றோ அவன் படி -என்கிறது மேல் –

வான் பெரும் பாழ் தனி முதலா –
இவ்வருகு உண்டான கார்யக் கூட்டங்கள் முழுதும் அழிந்த அன்றும்
தாம் அழியாமையாலே வலியதாய்அளவு இல்லாததாய்
போக மோஷங்களை விளைப்பத்தாய்
ஒப்பற்றதான
மூலப் பகுதி தொடக்கமாக

சுற்றும் நீர் படைத்து –
ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8-
முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார் -என்றபடியே
ஆவரண ஜலத்தை உண்டாக்கி –

அதன் வழித் தொல் முனி முதலா –
அவ்வழியாலே

தேவ சாதிகள் முதலான வற்றை நோக்கப் பழையனாய்
மனன சீலனான பிரமன் தொகட்டக்கமாக
முற்றும் தேவரோடு உலகு செய்வான் -திரு மோகூர்
எல்லா தேவ சாதியோடும் கூட
எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன்
வசிக்கிற திருமோகூர்

சுற்றி நாம் வலம் செய்ய –
நாம் சென்று
விடாதே வலம் வருதல் முதலானவைகளைச் செய்ய –

நம் துயர் கெடும் கடிதே –
வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம்சடக்கென போம் –
யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே
அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்
விந்ததே அதச அபயம் கதோபவதி -தைத்ரியம் -7
இந்த பரம் பொருள் இடத்தில்
பயம் இன்மைக்காக
இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை
எவன் அடைகிறானோ
அவன் பயம் அற்றவனாக ஆகின்றான் -என்னக் கடவது அன்றோ –
ஆனபின்பு மற்று இலம் அரண் –

அவர்ஜநீயம்-தவிர்க்க முடியாத ரஷணம் பொறுப்பு
உத்பாதகன் வர்த்திக்கும் திவ்ய தேசம்
வான் ஆகாசம்
பெரும் பாழ் மூல பிரகிருதி
ஆவரண ஜலம் படைத்து
மற்று அரண் இலன் –
அவன் தான் ரஷகனாக வல்லானோ
படைத்து -கார்ய வர்க்கங்கள் அழிந்தாலும் தான் அழியாத சிறப்பு
வான் பெரும் பாழ் -சிறந்த அத்விதீயமான மூல பிரகிருதி
கார்யங்கள் ரூபம் மாறும் –
வஸ்து நேராக அழியாது
நாமம் ரூபம் ஆகாரம் அழிந்து குடம் மாறி தூள் மண் ஆவது போலே
அப்பொழுதும் மூல பிரகிருதி மாறாமல் -வலியதாய்
அபரிச்சின்னமாய்
போக மொஷன்கலை விளக்கும் அத்விதீயமான மூல பிரகிருதி தொடக்கம்
சுற்று நீர் ஆவரண ஜலம்
தேவாதி -சதுர முகன் தொடக்கமாக -தொன் முனி -மனன சீலன் முனி
முற்றும் தேவரோடு உலகும் உண்டாக்குமவன்
இவனே ரஷகன் என்று காட்டி
அவனே திரு மொகூரில் எழுந்து அருளி
சுற்றி நாம் வலம் செய்ய
நம் இடர் -வழி துணை இல்லா துக்கம் போகும்
எதோ உபாசனம் பலம் –
கேட்டதை அளிப்பன் சர்வேஸ்வரன்
உன் திருவடிகள் தான் வேணும் –
த்வயம் அர்த்தம் -உத்தர வாக்கியம் சேர்த்தியில் அவர்கள் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம்
பயம் கெட்டவனாக போகிறான் -அத -உபநிஷத்
ஆனபின்பு மற்று இலன் அரண் –

————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: