திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்
உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும்
உடையவனுடைய திருவடிகளை அல்லது
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்
வேறு புகழ் உடையோம் அல்லோம் –
என்கிறார் –

—————————————————————————————————————

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே

———————————————————————————————————————

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் –
இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி
எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –
எல்லா காலத்துக்கும் இது ஒழிய
வேறு துணை உடையோம் அல்லோம் –

ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி –
தாரையும் குளிர்த்தியையும் உடைய
திருத் துழாயின் ஒளியை உடைத்தான அழகிய மாலை –
அலங்கல் -ஒளி-அசைதலுமாம் –
பின்னே போகா நின்றால்-அடி மாறி இடும் போது –
வளையும் அசைந்து வரும்படியைக் கூறியபடி –
திருமேனியிலே சேர்ந்து இருப்பதனாலே வந்த புகரைச் சொன்னபடி –

ஆயிரம் பேருடை –
தோளும் தோள் மாலையுமான அழகைக் கண்டு
இவன் ஏத்தப் புக்கால்
இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி
கணக்கு இல்லாத திருப் பெயர்களை உடையவன் –

யம்மான் –
வடிவு அழகினைக் கண்டு
சம்பந்தம் இல்லாதவர்களை ஏத்திற்றாக வேண்டாதே –
ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி-82-
என்று ஏத்தாத நாள்களுக்கும் வயிறு பிடிக்க வேண்டும்படியான விஷயம் –

நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் –
அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து
கை வந்து இருக்குமவர்களாய்
வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்
அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்
இதனால் அத் தேசத்தில் வசிப்பதனாலே –
அடைந்தவகளை பாது காத்தலே மிக உயர்ந்த தர்மம்
என்று சர்வேஸ்வரனும் அதிலே நிலை நிற்க வேண்டும்படியான நகரம் -என்பதனைத் தெரிவித்தபடி
அவ் ஊரிலே சென்று அடைந்தவர்களை
நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –

நலம் கழல் அவன் –
அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்
நினையாத திருவடிகள் –
அன்றிக்கே –
அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்
இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும்
நான் விட மாட்டேன் -என்னுமவன் என்னலுமாம்-
வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ
ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன
தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –
அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய
நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
அவன் -என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக

போக ஹேது ஒப்பனை
உஜ்ஜீவிக்க திரு நாமங்கள்
திருத் துழாய் மாலை சூட்டி -கொண்டு ஆயிரம் பேர் உடை அம்மான்
தடம் அன்றி நாம் இலம்
எம்மைக்கும் இலம் கதி
நலம் கொள் நான்மறையாளர் வாழும்
அவன் திருவடிகள் ஒன்றே புகல்
மற்று ஓன்று கதி இலம் எம்மைக்கும் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
ஈன தண் துழாய் தாரை குளிர்ச்சி அழகிய மாலை
அலங்கல் ஒளி அசைவு
ஆயிரம் -அசந்கித
அம்மான் -பிராப்தி சம்பந்தம்
அழகும் -ஆழி அம் கை அம்மானை ஏத்தாது  இருந்தேன் கீழ் நாள்களில் எல்லாம்
ஏத்தா நாள்களுக்கும் வயிறு பிடிக்கும்படி
ஆன்ருசம்சயம்-கருணை ஐயோ -தர்மம் இது ஒன்றே
நலம் கொள் நான்மறை இது தான்
வேதம் வல்லவர்கள்
நன்மையால் மிக்க நான் மறை யாளர்
பிராட்டி கூரத் ஆழ்வான் ஆண்டாள் போல்வார் –
ஹிம்சித்த ராஷசி
ஆழ்வான் நாலூரானுக்கும்
ஆண்டாள் -அபராதம் வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் அபசார ஷாமணம் பண்ணிக் கொள்ளாமல் மாண்டானே
வேதம் வியாச பதம் அர்த்தம் சொல்பவர்
வர்த்தனம்
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்
ஆஸ்ரித சம்ரஷணமே உத்தேச்யம்
அவனுக்கும் இங்கே இருப்பதால் கருணை வந்தது
ஆஸ்ரயிக்க செல்வாரை அஸ்மாத் துல்யோ பவது -விபீஷணனை எங்களைப் போலே முதலிகள்
நலம் கொள் நான் மறை வாணர்கள் நம்மையும் அவர் போலே
நலம் கழல் -குணா தோஷம் நிரூபணம் செய்யாத திருவடிகள்
நத்யஜேயம் என்னுபவன்-வத்யதாம் -கொல்லப் படட்டும் என்பார் இதே சுக்ரீவன் பரிவின்காரணம்

அவன் அடி –
அவன் இரண்டு இடத்திலும்
பாத நிழல் தடம்
சம்சார வெக்கை தீர்க்க
வாசுதேவ தரு சாயை
மரகத மணித் தடாகம்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: