திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

திரு மோகூரிலே நின்று அருளின
பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு பாதுகாவல் நமக்கு இல்லை –
என்கிறார் –

————————————————————————————————————————-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே

—————————————————————————————————————————-

கூத்தன் –
நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –
அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா
ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-
என்கிறபடியே
நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவனப் முன்னே போக பின்னை போகையாவது
கூத்துக் கண்டு போகை யாயிற்று –
ஆடல்பாடல் அவை மாறினார் தாமே -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்னக் கடவது இறே
அவன் திருக் குழலை வாய் வைத்த போது
அரம்பையர்கள் குழல் ஓசையைக் கேட்டு பாடுதளைத் தவிர்ந்தார்கள் –
அவன் நடை அழகினைக் கண்டு ஆடுதலைத் தவிர்ந்தார்கள் –

கோவலன்-
தன்னை தாள விட்டு அடியார்களை பாதுக்காக்குமவன் -கண்டகர்ணன் -பிசாசத்துக்கு மோஷம் கொடுத்து வழி நடத்தியவன் அன்றோ –

குதற்று வல்லசுரர்கள் கூற்றம் –
மிறுக்குகளைப் பண்ணுகின்றவர்களாய்
பெரு மிடுக்கை உடையராய் உள்ள அசுரர்களுக்கு யமனாக உள்ளவன் –
ஞானக் கண் தா கனம் ஒக்கும் பவம் துடை நஞ்சிருக்கும்
தானக் கண்டா கனல் சோதி என்று ஏத்தும் வன்தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்றோது ஒலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பரகதி என் அப்பனே – திருவேங்கடத் தந்தாதி
கண்ட கனவின் பொருள் போலே யாவும் பொய் காலன் என்னும்
கண்டாகன் ஆவி கவர்வதுவே மெய் கதி நல்கு எனக்கு
அண்டகனா இப்பொழுதே செல்க என்று அருள் கார் அரங்கன்
கண்டகனாவின் புறக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினோ – திரு வரங்க தந்தாதி –

ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் –
இன்று அடைகிற நமக்கும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -10-9-9-என்கிறபடியே
எப்பொழுதும் தன்னையே அனுபவித்து கொண்டு இருப்பவர்க்கும்
ஒக்க இனியன் ஆனவன் –

வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் –
அழகிதான நீர் நிலத்தையும்
வளவிதான வயலையும் உடைய
திரு மோகூரிலே நின்று அருளின மேலான பந்து –
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்

தாதா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்
என்னும் பரம ஆப்ததமன்
தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே பாரத்தை விட்டவனாய்
பாரம் இல்லாதவனாம் படியான ஆப்த தமன் -என்றபடி –

தாமரை யடி யன்றி –
நம்பத் தகாதவனாய் இருப்பினும்
விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –

மற்று இலம் அரணே –
பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் -என்றது
இனிமை இல்லையாகிலும்
விட ஒண்ணாதபடி
புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –

பரம ஆப்த தமன் திருவடிகள் ஒன்றே ரஷணம்
ஆத்தன் சப்தம் இங்கு
கூத்தன் வல்லார் ஆடினால் போல நடக்கை
அகர பிரயோ ராம அனுஜகாம
மையோ -விரி சோதியில் மறைய -பொய்யோ எனும் இடையால் கம்பர்
மரகதமோ -ஐயோ -நீல மேனி அழியா அழகு உடையான்
கூத்து கண்டு போவது போலே
ஆடல் பாடல் மறந்தனர் தாமே
அப்சரஸ் பாடல் ஆடல் தவிர
கோவலன் தன்னை தாழ விட்டு கோவை மேய்த்து ரஷிக்கிறவன்
பிசாசு கண்டா கர்ணன் மோஷம் கொடுத்து
அசுரர் கூற்றம் -குடற்று -அசுரர்
எமன்
ஏத்தும் நமக்கும் இன்று ஸ்தோத்ரம்
வைகுந்தத்து அமரர்  முனிவர்  போலே
ஒக்க இனியன்
குணா அனுபவ கைங்கர்ய நிஷ்டர்
நீர் நிலம் வயல்கள்
ஆப்தன் பரம பந்து
அஹம் ஸ்மராமி -தான் தனக்கு இல்லாமல் நயாமி பரமாம் கதிம்
தன்னை தானே அஞ்சி ந்யச்த பரனாக ஒரு கால் சொல்லி வைத்து இருந்தாலும்
அங்கெ நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி
ஆப்தன் இல்லா விட்டாலும் விட ஒண்ணாத தாமரை அடிகள்
மற்று அரண் இல்லை
போக்யதை இல்லா விட்டாலும் இவனே அரண் பிராப்தி அவன் தான்

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: