திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நம்முடைய எல்லா துக்கங்களும் கெட
திரு மோகூரிலே வந்து சுலபனாய் நிற்கிறவனை
அடைவதற்கு வாருங்கோள் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்

———————————————————————————————————-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே

———————————————————————————————————————-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி –
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று ஆயிற்று
தங்களை தாங்களே ஈச்வரர்களாக மதித்துக் கொண்டு இருக்கிற தேவர்களும்
சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களுக்கும் வார்த்தை
இடர் கெட –
வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக
எம்மை –
முன்- ஈச்வரோஹம் – என்று இருந்தவர்கள்
ஆபத்து மிக்கவாறே
ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-
எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும் -என்றாப் போலே
தங்கள் வெறுமையை முன்னிடுவார்கள் இத்தனை –
போந்து அளியாய் –
அவதரித்து வந்து காப்பாற்ற வேண்டும் -என்பார்கள் -என்றது
முன்பு எல்லாம் விருப்பற்று இருந்தவர்கள்
ஓன்று கெட்டவாறே-படி காப்பாரை பிடிக்குமாறு போலே
நாங்கள் ஆபத்தை அடைந்தவர்களாய் வர நீ கிடக்கிறது என் -என்பார்கள் என்றபடி
என்று என்று ஏத்தி தொடர –
தங்களுக்கு வந்த ஆபத்தாலே இடை விடாதே புகழ்ந்து
வடிம்பிட்டு -நிர்பந்தித்து -அடைவதற்காக –

சுடர் கொள் சோதியைத் –
ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று
பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே
மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்
அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக
உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –

தேவரும் முனிவரும் தொடர –
தேவர்களும் இருடிகளும்
ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை
அநந்ய பிரயோஜனரை
அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –
பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்
ஆதலின் -படர் கொள் பாம்பு -என்கிறார் –
தன்னுடைய செர்க்கையாலே
சர்வஞ்ஞானானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரை க்கு
இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் -பள்ளி கொள்வான் -என்கிறார்

திரு மோகூர் –
தேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்
நமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –

இடர் கெட வடி பரவுதும் –
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக
அவனுடைய திருவடிகளை அடைவோம் –

தொண்டீர் வம்மினே –
நம்மோடு ஒரு குலத்தாராய்
இருப்பார் அடங்க திரளுங்கோள்

சமஸ்த துக்கங்களும் போக்க
இடர் கெட அடி பரவுதும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் இதில்
முனிவர் -இடர் கெட -போந்து -துக்கம் போக்க
சுடர் கொள் சோதியை
தேவர் முனிவர்
படர் கொள் பாம்பணை பள்ளி கொள்வான்
எம்மை இடர் கெட போந்து -ஈஸ்வர அபிமானிகள் தேவர் சாப அனுக்ரக சமர்த்தர் முனிவர்
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசன
எம்மை ஈச்வரோஹம் -என்று இருந்தவர் ஏகி பஸ்ய-சரீராணி -கழுத்தும் கப்ப்படுமாகவந்து ஸ்திரீகள் புத்ரர்கள் கூட்டி வந்து
போந்து -அவதரித்து
அளியாய் ரஷிக்க வேண்டும்
முனு உபேஷித்து இருந்தவர்கள்
படி காப்பானை -ஆபன்னராய் நாங்கள் வர நீ கிடப்பது என்ன
தலையாரி –
என்று என்று இடைவிடாதெ
வடிம்பிட்டு நிர்பந்தம் பண்ணி
ஆபத்து காலத்தில் ஆகிலும் நம் இடம் வந்தார்கள் உஜ்ஜ்வலன்
சுயம் பிரகாசன் -அல்ப பிரியஜனம் பெற ஆழ்வார் வயிறு பிடிக்கிறார் யென்னவுமாம்
தேவர்
ஈச்வரோஹம்
முனிவர் ஐஸ்வர்யம் வேண்டி
அநந்ய பிரயொஜனரை அடிமை கொள்பவன் கிடீர் படர் கொள் பாம்பணை
சேர்த்தி ஸ்பர்சத்தால் மலர்ந்த
சென்றால் குடையாம்–
சர்வஞ்ஞன் அஞ்ஞர் போலே நித்தரை செய்யும் படி படர் கொள் பாம்பணை
ஸ்பர்சத்தால் மலர்ந்த பணங்கள்
தேவாதிகளுக்கு சுலபன் போலே
நமக்காக திரு மோகூர்
சகல துக்கங்களும் போகும்
தொண்டீர் சகோதரி –
அனைவரையும் வம்மின் அழைக்கிறார் –

திரு மோகூரிலும்  பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதி
திரு நீர் மலை அப்படி -நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -நான்கு சந்நிதிகள் வைத்து

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: