திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ப்ரீதியின் மிகுதியாலே
மேல் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்
திருக் கண்ணபுரம் என்ற வார்த்தையினைச் சொல்லவே
எல்லா துன்பங்களும் போம் -என்கிறார் –

——————————————————————————————————————–

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –

———————————————————————————————————————–

இல்லை அல்லல் –
எல்லா துன்பங்களும் போம் –

எனக்கேல் இனி என் குறை –
இனி எனக்கு என்ன குறை உண்டு -என்றது –
பகவானை அனுபவிப்பதற்கு விரோதியான துன்பங்கள் எல்லாம் போன பின்பு
நான் அனுபவிப்பதற்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்தது -என்றபடி –

அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் –
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்கிற
திரு மார்பினை உடையவன்
அவனைப் பற்றுகிற காலத்தில்
நம்மிடத்து உண்டான குறைகளை அவன் பாராதபடி
குற்றம் செய்யாதவர் யார் -என்பாரும் அருகே உண்டு என்றபடி

கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் சொல்ல –
திண்ணியதான மதிளை உடைய திருக் கண்ணபுரத்தை வாயாலே சொல்ல –
நாளும் துயர் பாடு சாராவே –
பக்தியைச் செய்வதற்கு சாதனம் இல்லாமல் –
பிரபத்தியைச் செய்வதற்கு மன உறுதி இல்லாமல்
இருக்குமவர்கள்
திருக் கண்ணபுரம் -என்று வாயாலே சொல்லவே
எல்லா துக்கங்களும் போம்

தாம் பெற்ற பேற்றை சொல்லி
மகா விசுவாசம் இல்லாதார்
திருக்கண்ணபுரம் உக்தி மாதரம் சொன்னாலே போதும்
அல்லல் இல்லை
சகல துக்கங்களும் போன பின்பு
அனுபவத்துக்கு தேச விசேஷம் போக வேண்டாம்
பெரிய பிராட்டியார் ந கச்சத் ந அபராது சொல்வாரும் உண்டே இங்கே
வாயாலே சொல்ல –
பக்தி வேண்டாம்
பிரபத்தி வேண்டாம்
உக்தி மாத்ரமே
உறுதி இல்லாதார் -திவ்ய தேசம் பெயரை சொன்னாலே போதும்
போயஸ் கார்டன் இருக்கிறேன் சொன்னாலே போதும் இந்த காலத்தில்
எம்பெருமான் திவ்ய தேச மகிமை

————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: