திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அவனை அடையுங்கோள்-
உங்கள் துக்கத்தையும்
துக்கத்துக்கு காரணமான பிறப்பினையும்
போக்கி அருளுவான் –
என்கிறார்

————————————————————————————————————-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே

—————————————————————————————————————–

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
தனது திருவடிகளை அடைந்தார்க்கு –
இன்னார் இனியார் என்னாதே –
எல்ல்லார்க்கும் சுலபன் ஆம்
இதாநீம் மாக்ருதா வீர ஏவம்விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம்கார்யம் சீதய மம -யுத்தம் -41-4-
இன்று அடைந்தது ஒரு குரங்காகிய சுக்ரீவனைக் குறித்து
சீதையால் தான் எனக்கு கார்யம் என்ன இருக்கிறது -என்றாரே அன்றோ

பிணியும் சாரா-
உங்களுடைய எல்லா துன்பங்களை போம் –

பிறவி கெடுத்து ஆளும் –
அந்த துன்பங்களுக்கு காரணமான பிறப்பினைப் போக்கி
அடிமை கொள்ளும் –

மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
மணியாலும் பொன்னாலும் செய்த மதிளாலே சூழப் பட்ட
திருக் கண்ணபுரத்திலே
திருக் கண்ணபுரம் பரமேட்டி -என்று கூட்டுக –

பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –
பரமபதில் இருக்கும் படியில் ஒன்றும் குறை இல்லாத படி
ஆயிற்று இங்கு இருப்பது
அவன் திருவடிகளில் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான
கைங்கர்யத்தைச் செய்யுங்கோள் –
அங்கு நித்ய சூரிகள் பணிய இருக்குமவன்
இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே
பணியப் பாருங்கோள் -என்பர்
திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின் -என்கிறார்
நாளும் பிணி தணியும் ஏதம் சாரா -என்னும் இது
தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482
என்னும் சூத்ரத்தின் பொருள் என்பர்

அணியன் ஆகும்
ஆஸ்ரயித்தால் துக்கம் துக்க ஹேது  சம்சாரம் போக்கி
கிட்டி -வந்து
சுலபன்
இன்று ஆஸ்ரயித்த திர்யக்  குறித்து கிம் கார்யோ சீதையா மம- என்றான்
சீதை விட
வானர தலைவன்
என்னை நியமித்து இருக்க கூடாதோ
சுக்ரீவம் நாதம் இச்சதி லோக நாதன்
இன்று ஆஸ்ரயித்த குரங்குக்கு இந்த வார்த்தை
துக்க ஹேது ஜன்மம் போக்கி
வெள்ளி
பொன் ஏய்ந்த
மணி பொதிந்த
படிப்படியாக ஏற்றி கொண்டு
பரம பதம் குறையாமல்
பரமேஷ்டி
அவனாகும் நீள் கடல் வண்ணனே -நெஞ்சினால் நினைப்பவர்
முதலி ஆண்டான் இங்கு இருப்பவனே அங்கு பிரதான்யம்
நாளும் பரமேட்டி பாதம் பணிந்தால்
நித்யர் பணியுமா போலே

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: