திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அநந்ய பிரயோஜனருக்கு சுலபனாய்
பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான்
என்கிறார்

————————————————————————————————————————————–

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே

——————————————————————————————————————————————-

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்கள் –
அவர்கள் யாரேனும் ஆகிலும்
அவர்கள் உடைய விருப்பத்தை முடிய நடத்தும் –

பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் –
புறம்பே பிரயோஜனாந்தரங்களை பெற விரும்பி
அடைகின்றவர்கட்கு
இவ் உலகில் மேலும் மேலும் ஆசையை உண்டாக்கக் கூடிய
அந்த பேறுகளை விரும்பிக் கொடுத்தவனாய்
தன்னைக் கொண்டு அகலுவான் –
கிருஷ்ண ஆஸ்ரையா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ்ய பாண்டவ
கிருஷ்ண பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா -பாரதம் -துரோண பர்வம் -183-24
பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்
கிருஷ்ணனையே தங்கட்கு துணையாக உடையவர்கள் -என்கிறபடியே
இருப்பார்க்கு மெய்யனாய்இருப்பான்
படைத் துணை வேண்டி வந்த துரியோதனனுக்கு –
நாராயண கோபாலர்களை அடையக் கொடுத்தானாய்
தான் பாண்டவர்களுக்காக நின்று
அத்தலையை அழியச் செய்கையாலே பொய்யன் ஆகும் –

செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் –
செய்களிலே வாளையானது உகளித்து வசிக்கிற
திருக் கண்ணபுரத்திலே
நிற்கிற மேலான பந்து
இதனால் மீன் முதலான பிராணிகளும் களித்து வாழும்படியான
இனிமையை உடைத்தான தேசம் என்பதனைத் தெரிவித்த படி –

ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –
தன்னை மனத்தில் வைப்பவர்கட்கு
கையாளாய் இருப்பன் –
அநந்ய பிரயோஜனருக்கு –
இமௌ ஸ்ம முனி சார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ
ஆஜ்ஞ்ஞாபய யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் -பால -31-4-
முனி புங்கவரே-நாங்கள் உம்மை அடைந்தவர்களாய்
உமக்கு வேலையாளாய் இருக்கிறோம்
என்கிற படியே இருப்பன் –

மெய்யனாகும்-விரும்பித்  தொழுவார்க்கு எல்லாம்
தன்னையே கொடுத்து
யோக ஷேமம் வஹாம் அஹம்
பிரயோஜனாந்த பரர்க்கு கேட்டதை கொடுத்து
ஐஸ்வர்யம் கைவல்யம்
கொடுத்து அகன்று
கிறிஷ்ணாஸ்ரைய
கோபாலர் நாராயணர் கொடுத்து அகன்றான்
மொத்த படையையும் அழித்து-
திர்யக் க்குகளும் களித்து வர்த்திக்கும் போக்யதை உடைய தேசம்
அநந்ய பிரயொஜனர்க்கு கிம் கரோ
அஹம் வேதமி -மகாத்மா அறிந்தேன்
ஒன்றுமே தெரியாதே
ஏவிப் பணி கொள்ள வேணும்
பாண்டவர்களுக்கு கிம் கரோ இருந்தான்

—————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: