திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தன்னை அடைகின்றவர்களுடைய
விரோதிகளைப் போக்கி
அவர்களுக்கு மிகவும் அன்பன் ஆம்
என்கிறார் –

———————————————————————————————————–

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே

————————————————————————————————————–

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினார்க்கு
விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-
இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர் என்றால் போலே
அவர்கள் உடைய குற்றங்கள் தோற்றாதபடி
அன்புள்ளவனே இருப்பான்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும்
என்பவனே அன்றோ
நன்று
இவர்கள் உடைய விரோதி செய்வது என் -என்ன
ப்ரஹ்லாதன் உடைய விரோதி பட்டது படும் என்கிறார் –

செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான் –
இரணியன் ஆகிற அசுரன் உடைய சரீரத்தை
வருத்தம் இல்லாமல் கிழித்தவன் –

நன் பொன் ஏய்ந்த மதிள் -சூழ்
நல்ல பொன்னாலே செய்யப் பட்ட மதிள் -என்றது
விரும்பத் தக்க மதிள் -என்றபடி

திருக் கண்ணபுரத்து அன்பன் –
அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம்
என்று விரும்பி வசிக்கிற ஊர் –

நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே –
தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு
தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க
அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே
தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை
விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –

ஆஸ்ரயிப்பார் பிரதி பந்தம் போக்கி
ஹிரண்யன் முடித்தாள் போலே
அன்பன் ஆகும் -சரணாகத வத்சலன்
தோஷம் பார்க்காமல்
தோஷம் இருந்தாலும் -விபீஷண அங்கீகாரம்
தோஷம் இருந்தாலும் –
பெரிய வாச்சான் பிள்ளை தனி ஸ்லோகம் -தன் அடியார் பாசுர வியாக்யானம்
தோஷம் இருக்கிறது யத்யபி -சப்தம் -வார்த்தை பாடு ஆக்கி
திருவடி நல்லவன் ஏத்து கொள்ள வேண்டும்
மற்றவர் பொல்லாதவன் கூடாது
இரண்டையும் பெருமாள் ஏற்றுக் கொண்டு
பொல்லாதவன் தோஷம் இருக்கு இருந்தும் கொள்வேன்
ஹிரண்யன் பட்டது படும்
செம்பொன் ஆகம் ஹிரண்யன்
கோபத்தால் உருகி கிள்ளிக் களைந்தான் -உருகு பதம் ஆக்கி
கிளித்தான்
பொன்னாலே -முன்பு வெள்ளி
திருக்கண்ணபுரத்து அன்பன்
மெய்யர்க்கு மெய்யன்
அநந்ய பிரயொஜனர்க்கு இவனும் அநந்ய பிரயொஜனராய்
அனந்யா சிந்த -வஹாம் யஹம் தலையால் சுமக்கிறான்
மித்ர பாவம் உள்ளாருக்கு நத்யஜேயம்

——————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: