திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இப்படி பக்தி யோகத்தால் அடைவதற்கு
தகுதி இல்லாதவர்களாகி
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து
அவன் செய்து அருளும் படியை
அருளிச் செய்கிறார்

——————————————————————————————————————–

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே

————————————————————————————————————————

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிறப்பு ஒழுக்கம் ஞானம்
இவற்றால் குறைய நின்றாரே யாகிலும்
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினார்க்கு
எல்லாம் பாதுகாப்பவன் ஆம் –
மேலே சொன்ன பாசுரங்களாலும் சொன்ன பக்தி யோகம்
எல்லாருக்கும் செய்யத் தக்கது அன்று
இப்பாசுரத்தில் சொல்லுகிற பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது -என்கிறார் –
சம அஹம் சர்வே பூதேஷு ந மே த்வேஷ்யா அசதி ந பிரியா
யே பஜந்தி து மாம் பக்த்யா மயிதே தேஷு சாபி அஹம் -ஸ்ரீ கீதை -9-24-
நான் எல்லா பிராணிகளாலும் அடையப் படும் பொழுது
விருப்பு வெறுப்பு இல்லாது -எல்லாருக்கும் ஒத்தவனாய் இருக்கிறேன்
எனக்கு தாழ்வு கருதி விடத் தக்கவனும் இலன் –
உயர்வு கருதி கொள்ளத் தக்கவனும் இலன் – என்னக் கடவது அன்றோ –
பகவத் விஷயம் தான் பரிச வேதியாய் இருக்கும் -அன்றோ
இரும்பைக் கூட பொன் ஆக்கும் அன்றோ
கைசிகத்தில் பகவத் சம்பந்தம் உடையவன் ஒரு சண்டாளன் உடைய கூட்டுறவு
பிராமணன் உடைய ஒழுக்கக் கேட்டிற்கு பரிகாரம் ஆயிற்று
அவ்விடத்தில் எல்லாம் சொல்லுகிற பொருள் இதுவே யாயிற்று –

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
இவன் தன் பக்கலிலே பரத்தை வைத்த அன்று தொடங்கி
இவனை ஒழிய
தனக்கு செல்லாமை உண்டாய் இருக்கச் செய்தேயும்
இவனுடைய ருசியைப் பின்பற்றி
சரீரம் பிரியும் அளவும் காலத்தை எதிர் நோக்கினவனாய் நின்று
பின்னர் மரணம் உண்டானால்
பரம பதத்தைக் கொடுக்கும் உபகாரகன்
தன் திருவடிகளைப் பற்றின அன்றே
தான் இருக்கிற இடத்தில் இவனைக் கொடு போய்
சேர வைத்துக் கொள்ள வேண்டி இருக்கச் செய்தேயும்
நடுவில் இவன் இருக்கும் நான்கு நாள்களும்
அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே –
மரணமானால் -என்கிறார் –
மரணமானால் -என்கிறது தனக்கு ஆற்றல் இல்லாமையால் அன்று –
இவன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து
முடிக்கப் பெறாமையாலும் அன்று –
இவனுடைய ருசியைக் கடாஷித்து நிற்கிறான் இத்தனை
என்றபடியைத் தெரிவிக்கிறது
இப்பாசுரத்தில் -மரணமானால் -என்றதனைத் திரு உள்ளம் பற்றியே தான் மேல் கூறிய அர்த்த விசேடங்கள் எல்லாம் –

அரண் அமைந்த -மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
அரண் ஆம்படி சமைந்த
இதனால் நித்ய சூரிகள் பாரிய இருக்கிறவன் இங்கே நின்றான்
என் வருகிறதோ என்று
அஞ்ச வேண்டாது இருக்கையை தெரிவித்தபடி –


தரணி யாளன் –
பூமிக்கு நிர்வாஹகன்
சம்சாரிகளுக்கு ரட்சகன் -என்றபடி –

தனது அன்பர்க்கு அன்பாகுமே –
தன்னிடத்தில் அன்பினை உடையார் பக்கல் தானும்
பேர் அன்பினை உடையவன் ஆம் –
அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி
அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின்
அன்பாகும் -என்கிறார் –

பக்தி யோகம் முடியாதார் பிரபத்தி
நிதான பாசுரம்
தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்
ஈடும் எடுப்புமில் ஈசன்
சரீர அவசானத்திலே அந்த சரீரம் உண்டான பிராரப்த கர்மம் முடித்து
ஜன்மம் விவாகம் மரணம் மூன்றும்
தாரணி யாளன் பூமிப் பிராட்டி
முன்பே நப்பின்னை சொல்லி
தனது அன்பருக்கு அன்பாகும்
அநந்ய பிரயோஜனர்
காகாசுரன் அபதாரம் செய்து ரத்தம் கரை காயாமல்
கீழே மூன்று பாட்டில் பக்தி யோகம் அதி கிருதா –
வேத அத்யயனம்
பிரபத்திக்கு இச்சை ஒன்றே போதும்
சர்வ பூதம் சமோஹம்
குளிகை -தொட்டாலே தங்கம் –
வஸ்து தாரதாம்யம் பார்க்காமல்
கௌசிக மகாத்மியம் சம்பாஷ்னம் மாத்ரமே பிரம்மா ரஜஸ் உய்ந்து போனான்
பகவத் சம்பந்தம் பெற்றால்
கீழ்; மேல் எழு பிறப்பும் கேசவன் தமர்
சரண் அடைந்த அன்று தொடங்கி அவனை விட்டு செல்லாமை உண்டாய் இருக்கச் செய்தேயும்
மரணமானால் -கஷ்டம் பட்டு சரீரம் விச்லேஷம் காலம் எதிர் பார்த்து
போகம் எய்தி தம்மை அடைய கோபால சுவாமி
அது போலே எனக்கும் ஆக வேண்டும்
நம் ஆல்வாரினி யாம் உறாமை
தப்பாக அர்த்தம்
அவர் மனச் போலே
பிழை எனக்கு –
நிறைய இடங்களில் சொல்லி விஷய போகம் இவருக்கு ஆசை இல்லை
அவருக்கு போகம் கொடுத்து மோஷம்
கருத்து அறிந்து எனக்கும் கொடுத்து அருள வேணும் -என்கிறார் –
குழந்தை இருவருக்கும் அதே உடை அதே போலே அதுவே இல்லையே
அது போலே -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அடுத்தசரீரம் ருசி வருவதுக்கு முன்பே கூட்டிச் செல்கிறான்
விலக்காமை இருக்குமே

பிரான் -உபகாரன்
மரணம் ஆக்கி வைகுந்தம் கொடுக்கு பிரான் அபத்தம் பாடம் காஞ்சி
மரணம் ஆக காத்து இருக்கிறான்
திருவாய் மொழி சிலர் சுப கார்யம் அனுசந்த்ஹிக்காமல் மரண திருவாய் மொழி
திரு விருத்தம் ஆத்தில் சொல்லாமல் கோயில் குளத்தில் சொல்லுவார்
சரம தசையில் மட்டும் சொல்லி
அபத்தம்
நன்றாக அனுபவிக்கக் கூடிய பிரபந்தம் இவை
இவன் இருக்கும் நாலு நாளும்
தனக்கு அசக்தி இல்லை
இவனுக்கு கர்தவ்யமும் இல்லை திருவடி பற்றின பின்பு
நடுவில் -பரி பூர்ண ருசி வர -விட்டு வைக்கிறான் வருத்தம் உடன்
மரணம் ஆனால் -காத்து இருக்கிறான்
இவன் ருசியை கடாஷித்து
அவதாரிகை இது வைத்தே -மரணம் ஆனால்
அரண் அமைந்த
அஞ்ச வேண்டாம் படி
தாரணி யாளம் பூமி நிர்வாஹன் பூமி பிராட்டிக்கு அன்பாளன்
அன்பாகும் அன்பு வடிவு கொண்டால் போலே

——————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: