திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அடையும் இடத்தில் நப்பின்னை பிராட்டி
புருஷகாரமாக அடைமின் –
அவன் உங்களைக் காப்பாற்றுவான் –
என்கிறார் –

———————————————————————————————————————–

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே

————————————————————————————————————————-

மானை நோக்கி –
மான் நை நோக்கி
மானானது நையும்படியான நோக்கை உடையவன் -என்றது
மான் தோற்று நாணும்படி ஆயிற்று நோக்கு இருப்பது -என்றபடி –

மடப்பின்னை தன் கேள்வனைத்-
பெண்மை முதலான குணங்களை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு கேள்வனை –

தேனை –
எல்லை இல்லாத இனியனை
இதனால்
இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உங்களைக் குடிக்கச் செய்வது –
என்ற குறிப்புத் தோன்றும் –

வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –
செவ்விப் பூவைக் கொண்டு
தூவி நீங்கள் அடையும் கோள்
தேனையும்
செவ்விப் பூவையும்
சேர்க்கை போலே காணும் பற்றுலதல் ஆவது –

வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
ஆகாசத்தோடே பொறாமை கொண்டு அதனைத் தள்ளுமா போலே
இருக்கிற மதிள்களாலே சூழப் பட்ட ஊரை
இதனால்
பகைவர்களுக்கு கிட்ட ஒண்ணாதபடி அரண் அமைந்த ஊர்
என்பதனைத் தெரிவித்தபடி –

தான் நயந்த பெருமான் –
அடியார்களோடு கூடி இருந்து குளிர்வதற்கு பாங்கான தேசம்
என்று அதனை விரும்பி வசிக்கிற
சர்வேஸ்வரன் ஆனவன் –

சரண் ஆகுமே –
உங்களுக்கு ரட்சகன் ஆகும்
அம் மதிள் அவனுக்கு அரண் ஆனால் போலே
உங்களுக்கு அவன் மதிள் ஆம் -என்றபடி –

நப்பின்னை பிராட்டி புருஷாகாரம்
தேன்-அவனே
மது  -அவன் திரு நாமம்
வான் ஒக்கம்
தான் நயந்து
மான் -திருக்கண்கள் -விக்ரக
மட ஆத்மா குணங்கள் நிறைந்த நப்பின்னை
நிரதிசய போக்யமானவன்
மருந்தும் விருந்தும் தேன் போலே

இந்த வேப்பம்குடி சாரை உங்களுக்கு சொல்லுகிறேன்
தேனை
கஷாயம் குடி நீர்
தேனையும் செவ்விப்பூவையும் சேர்த்து
பூவை அவன் திருவடிகளில் சேர்த்து –
சுலபமான விஷயம்
நீர் -அதிகாரிகள்
மதிள் பெருமை –
விரும்பி வர்த்திக்கிற திவ்ய தேசம்
சுயம் வக்த திவ்ய தேசம் ஆழ்வார் –
நமக்கு அவன் அரண்
திவ்ய தேசத்துக்கு மதிள் அரண் போலே

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: