திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

திருக் கண்ணபுரத்தில் நின்று அருளினவன்
உபய விபூதி நாதன் ஆயிற்று
உங்கள் துயர் கெட
அநந்ய பிரயோஜனராய்
வேறு  ஒரு பயனையும் கருதாதவர்களாய்
வணங்குங்கோள்
என்கிறார்

—————————————————————————————————————————

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே

————————————————————————————————————————–

தொண்டீர் –
ஆசை சிறிது உடையீரான நீங்கள் -என்னுதல்
அன்றிக்கே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்வதற்கு இட்டு பிறந்த -நீங்கள் -என்னுதல்

நும் தம் துயர் போக –
துயர்களும் மேலே கூறிய இவர்களுக்கு வேறுபட்டு அன்றோ இருப்பன –
சிற்றின்பத்தின் ஆசையால் உளதாய துயர் -என்னுதல்
சர்வேஸ்வரனை இறைஞ்சப் பெறாமையால் உளதாய துயர் -என்னுதல் –

நீர் ஏகமாய் –
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல்
அன்றிக்கே
நீங்கள் எல்லாரும் ஒரே மிடறாய் -என்னுதல்
தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ –

விண்டு வாடா மலரிட்டு -நீர் இறைஞ்சுமின்
அலரத் தொடங்கின அளவாய்
கழிய அலர்ந்து வாடாத பூ -என்றது
செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள் -என்றபடி

வண்டு பாடும் பொழில் சூழ்
வண்டுகள் தேனை உண்டு
அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

திருக் கண்ணபுரத்து -அண்ட வாணன் அமரர் பெருமானையே
திருக் கண்ணபுரத்திலே வந்து எளியனாய் இருக்கிறவன்
உபய விபூதி நாதன் ஆயிற்று -என்றது
இவ் உலகத்துக்கு நிர்வாஹகனுமாய்
நித்ய சூரிகளுக்கும் நிர்வாஹகன் -என்றபடி
இங்கே இறைவனைப் பற்றும் விரோதியைப் போக்கிக் கொண்டு
பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேடம் தேடித் போக வேண்டா
நித்ய சூரிகளும் இங்கே வந்து சீல குணத்தை அனுபவிக்கும்படி ஏற்றம் உண்டே அன்றோ இங்கு
குருடருக்கு வைத்த சாலையிலே விழித்து இருப்பார்க்கு பயன் இல்லை
அப்படி அன்று இங்குத்தை நிலை
பிரதிமாசு அப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு
அம்மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்
தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று
ஆளவந்தார் அருளிச் செய்யும்படி
இனி
திருக் கண்ணபுரத்து அண்டவாணன் அமரர் பெருமானை -என்பதற்கு
பரமபத நிலையனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியும் ஆனவன்
என்னலுமாம் –

உபய விபூதி உக்தன்
நெஞ்சினால் நினைப்பவன்
இவனே அவன் முதலியாண்டான் வார்த்தை
அண்ட வாணன் தலைவன் –
விரும்பி வர்த்திக்கும் தேசம்
தொண்டீர் துயர்
இஷ்ட அநிஷ்டம் அதிகாரி -மாறும்
வாடா மலர் இட்டு
வண்டுகள் -சாம கானம்
நிரதிசய போக்கியம் தேசம்
அமர்ந்து எளியவனாய்
தேச விசேஷம் போக வேண்காலாந்த்ரம் வேண்
ஷீலா
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -கணபுரத்தில்
சீலாதிக்யம் இங்கே
கண் தெரியாதவர் -வைத்த விழித்து இருப்பாரும் புகலாம் படி
நித்யர்களும் இங்கே வந்து அனுபவிக்கலாம் படி
handi  capped –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அபி -சம தர்சினாம் –
இவர்கள் கூட அனுபவிக்கலாம் படி ஆளவந்தார் –
அல்ப புத்தி உள்ளாறும்
யோகிகள் ஹிருதய சேவை போலே
மேட்டில் ஏறினால் பள்ளத்தில் பாய்வது சொல்ல வேண்டாம் இ றே
இமையோர்கள் வந்து ஏத்தும் படி
தொண்டீர் வாருமினோ

—————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: