Archive for February, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 20, 2014

நிகமத்தில் –
மேலான வண்மையை உடைய
திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லார்க்குத்
துன்பம் எல்லாம் நீங்கும்
என்கிறார்

———————————————————————————————————

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே

—————————————————————————————————————-

ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை-
நம் செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்
என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது
அவன் குடக் கூத்தினை நினைத்து
இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –

வாய்த்த வாயிரத்துள் இவை –
சர்வேஸ்வரனுக்கு நேர் பட்ட ஆயிரத்துள்ளே
வாய்த்தவை ஆயின இவை –

வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –
மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த
பத்து
கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சோபனா மம
ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9-

ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே
என்பது பிரசித்தம்
தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே
இத் திருவாய் மொழியின் இனிமையாலே
திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –
இவை
ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –
இப்பத்தினை கற்க வல்லார்க்கு
உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று
வருந்த வேண்டாதபடி
காளமேகம் வழித் துணையாம்

நிகமத்தில்
துக்க நிவ்ருத்தி
ஔதார்யம் மிக்க
திரு மோகூருக்கு ஈத்த பத்து
ஆயிரமும் -திருவரங்கனுக்கு
திருவேங்கடத்துக்கு இவை பத்து
ஏத்த வல்லாருக்கு
குற்றேவல் பாடம்
குற்றேவல்கள் என்றும்
குடமாடு கூத்தனை நமர்காள் ஏத்துமின்
வாய் படைத்த பிரயோஜனம்
குருகூர் சடகோபன் குற்றேவல் அந்தரங்க வாசிக்க அடிமை
ஆயிரத்துள் இவை
வண்  திரு மோகூருக்கு ஈத்த பத்து
ரஷகன்
கைம்முதலாக
ரத்னம் ஹாரித –
முத்து -அளவில் பெரிதாக இருந்தால் அரசன் இடம் இருக்க வேண்டும்
ரத்னா ஹாரி -உயர்ந்த திருவாய் மொழி திரு மோகூருக்கு கொடுத்து அருளி
இனிமையால் இந்த திவ்ய தேசம் கொடுத்து ஈத்த பத்து
வழித் துணை இல்லாத இடர் கெடும்
தானே காள மேகமாக வந்து கூட்டிச் செல்வான்

—————————————————————————————————————————————-

தாள் அடைந்தோர் தங்கட்கு தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி–மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் எனக்
கேதம் உளதெல்லாம் கெடும்-91

சாரம்
மா முனிகள் –
தானே வழித் துணையாம்
தாள் அடைந்தார் தங்கட்கு
கதி யாக்கி
மீளுதல்  ஏதம் குற்றம் இல்லாத விண் உலகில்
ஏற என்னும் மாறன்
திரு நாமம் சொல்ல தடைகள் நீங்கும்

—————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 20, 2014

மூ வேழ் உலகும்
உலகினுள் மன்பதையும் ஆகிய
எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன்
வசிக்கின்ற திரு மோகூரை
நமர்காள் ஆதரித்து ஏத்துங்கோல்ள்
என்கிறார்
——————————————————————————————————————
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்

—————————————————————————————————————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று –
நம்மை பாதுகாக்கும் பொருளாக
நாம் கிட்டின நல் அரண் என்று
அந்த தேவர்கள் பாசுரம் இருக்கிறபடி –

நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே
நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –

தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் –
பிறரை துன்புறுத்துதலையே தங்களுக்கு
தொழிலாகக் கொண்ட அசுரர்களுக்கு அஞ்சி
வந்து சரணம் புக்கால் –

காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் –
காதலுக்கு தகுதியான வடிவம் கொண்டு
புறப்பட்டுக் காப்பாற்றுகிறவன்
வசிக்கிற திரு மோகூர் –

நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் –
நம்முடையவர்களே
ஊரின் பெயரை வாயாலே சொல்லி
நினைத்து
உவகையின் மிகுதியால்
ஏத்துங்கோள்

பந்துக்கள் ஆனால்
சர்வாதிகன் வர்த்திக்கும் தேசம்
ஆத்மா பந்துக்கள் ஆழ்வாருக்கு நாம் எல்லாம்
கிட்டி ஸ்துதிக்க
அசுரர் அஞ்சி
காம ரூபம் கொண்டு -இஷ்ட பட்ட திரு மேனி நம் இச்சை அவன் இச்சை
நாமம் ஏத்தி
நாம் அடைந்த நல் அரண் -தேவர்கள் பாசுரம் இருக்கும் படி
ஆபத்துக்கு இவனே உபாயம் அறிந்த காரணம் நல்ல அமரர்
அசுரர் காட்டில் வ்யாவிருத்தி இத்தனை இ றே
பிரயொஜனாந்த பரர்
நமக்கு என்று -என்றும் நல்ல அரண் பாட பாதம்
வியாக்யானம் -என்று கொண்டு -அர்த்தம்
24000 படிமட்டும் தனி என்று வியாக்யானம் இல்லை
அசுரர்களுக்கு அஞ்சி வார்த்தை சொல்லி சரணம் புக்கு
காம ரூபம் ரஷனத்துக்கு அனுரூபமான வடிவு
பிரளயம் -வராக நீருக்கும் செற்றும் இராயாத
ஹிரண்யன் நரன் சிங்கம்
வாமனன் -ஹிரண்யன் போலே பொல்லாதவன் இல்லை மனம் கவர்ந்து கொள்ள
ரஷனத்துக்கு அநு ரூபமான வடிவு
அடியார் இச்சை கொண்ட வடிவு
நாமமே நவின்று திவ்ய தேசம்
நமர்காள் நம்முடையவர்
ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் –

———————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 20, 2014

நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்
என்று தம் லாபத்தை பேசுகிறார்

———————————————————————————————————————–

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே

————————————————————————————————–

மணித் தடத்து அடி –
தெளிந்த தடாகம் போல் ஆயிற்று திருவடிகள் இருப்பன -என்றது
சிரமத்தை போக்கக் கூடிய திருவடிகள் -என்றபடி –

மலர்க் கண்கள் –
அத்தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன –

பவளச் செவ்வாய் –
பவளம் போன்ற சிவந்த திரு அதரத்தை உடையனாய் –

அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-
தனக்குத் தானே ஆபரணமாய் இருக்கும்
பெரிய நான்கு திருத் தோள்களையும் உடைய தெய்வம்
அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்
தன் உகப்பு தோற்றின புண் முறுவலும்
கடக் கண் நோக்கம்
முதலானவைகளையும் உடையவனாய்
ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே
அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று
தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி –
வெற்றியில் விருப்பத்தோடு ஆயிற்று போவது
திவு கிரீடா விஜிகீஷா -தெய்வம் தாது –
வழியிலே எங்கே என்ன தடை வருகிறதோ என்று ஆசிலே வைத்த
கையும் தானுமாயிற்று போவது
ஆசு -ஆயுதத்தின் பிடி –

அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்-
அசுரக் கூட்டத்தை என்றும் துணிக்கும் பெரு மிடுக்கன்

உறைபொழில் திரு மோகூர் –
வசிக்கின்ற -பொழிலை உடைய -திரு மோகூர்
சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –

நணித்து –
கிட்டிற்று –

நம்முடை நல்லரண் –
நம்மை பாதுகாக்கக் கூடிய நகரத்தை –

நாம் அடைந்தனமே –
காப்பாற்ற பட வேண்டும் என்னும்
விருபத்தை உடைய நாம்
கிட்டப் பெற்றோம் –

அரணாகிற-திரு மோகூர் அடையப் பெற்றோம்
தனது லாபத்தை பேச
யாரானும் யாதாகிலும் செய்யட்டும்
திவ்ய மங்கள விக்ரஹம்
தெளிந்த தடாகம் போலே மாணிக்க தடாகம்
உள்ளுக்குள் இருப்பது வெளியில்
ரமநீயம் பிறசன்னாம்பு பம்பை நதி
சத்துக்கள் ஹிருதயம் முகம் பார்த்தே அகம் அறியலாம்
திருவடிகள் அப்படி இருக்க ஸ்ரமஹரமான
மலர்க்கண்கள் தடாகம் பூத்தாப் போலே
பவளச் செவ்வாய்
தனக்கு தானே ஆபரணம் திரு தோள்கள்
வழித் துணை யாக இருக்க இவை வேண்டுமே
ஸ்ரமஹரமான வடிவு மணித் தடாகம்
உகப்பு தோற்ற ஸ்மிதா தீஷணாதிகள் குளிர கடாஷித்து
பலம் -நால் தடம் தோள்
கல் மதிளுக்கு உள்ளே புகுவது  போலே
பிராட்டி -பெருமாள் வனம் -போகும்
விஜிகீஷா -விசேஷண-வெல்லும் இச்சை -மோஷம் இச்சா முமுஷா போலே
அடியார் விரோதி வெல்ல நால் தடம் தோள்
என்ன பிரதி பந்தகம் வருகிறதோ
பிரயோக சக்கரம்
ஆசீயில் வைத்த திருக்கைகள்
திருவரங்கம் பெரிய கோயில் பிரயோக சக்கரம்
விளம்பம் கூடாது என்று
அசுரரை -என்றும் துணிக்கும் மிடுக்கன்
நித்ய வாசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு போலே
கிட்டி -கிட்டிற்று
நம்முடைய நல்லவன்
நாம் அடைத்தோம்
ரஷன அபெஷை உடைய நாம் கிட்டினோம்
தம்முடைய லாபம் பேசுகிறார்

———————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 20, 2014

திரு மோகூரிலே நின்று அருளினவனான
ஆண் பிள்ளையான
சக்கரவர்த்தி திருமகனை அடைய
நம்முடைய துக்கம் எல்லாம் போம் –
என்கிறார்

————————————————————————————————————————————————-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே

——————————————————————————————————————————–

துயர் கெடும் கடிது –
துயர் கடிது கெடும்
விரும்பாது இருக்கச் செய்தே
நம்முடைய துக்கங்கள் தம்மடையே
சடக்கென போகும் –

அடைந்து வந்து –
வந்து அடைந்து
வந்து கிட்டி –

அடியவர் தொழுமின் –
வழித் துணை இல்லை -என்று வருந்துகிற நீங்கள்
அடைந்து வணங்குமின் –

உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
உயர்ந்த சோலைகளாலும்
அழகிய தடாகங்களாலும்
அலங்கரிக்கப் பட்ட
ஒளியை உடைய
திரு மோகூர்
சோலையைக் கண்டால் -அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
தடாகங்களைக் கண்டால் சிரமத்தை போக்குகின்ற அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –

பெயர்கள் ஆயிரம் உடைய-
சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த
பெயர்களோபாதி போரும் ஆயிற்று
இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்
யஞ்ஞ சத்ரு ப்ரஹ்ம சத்ரு -என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு
அழுந்தும்படி –

தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –
சக்கரவர்த்தி பெற்ற
நீல மணி போலே இருக்கிற
தடாகத்தை
அடைந்து வந்து அடியவர் தொழுமின்
பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்
மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்
வழியில் உள்ள மரம் என்ன
மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன
இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே
அடியவர்கட்கு பாதுகாவலனாய்
சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான
அந்த இராவணன் -என்கிறபடியே
விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்
அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-
என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக
என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –
வழி நடத்துமவன் அன்றோ –

ஆண் பிள்ளை தசரதாத்  மஜனை ஆஸ்ரயிக்க துக்கங்கள் போகும்
துயர் கடித்து கெடும்
அபெஷியாதெ இருக்க தன்ன்னடையெ சடக்கு என போகும்
வந்து கிட்டி அடியவர்களே நீங்கள் ஆஸ்ரயிக்க வாரும்
சோலைகள் தடாகங்கள் உள்ள திவ்ய தேசம்
சோலை வடிவுக்கு ச்மாகரமாக
தடாகம் ஸ்ரமஹரமான
ஒளி
உயர் கொள் சோலை கம்பீரம்
வாசத் தடம் போல்
மரகத மணித் தடாகம்
பெயர்கள் ஆயிரம் உடைய மரகத மணித் தடாகம்
வியாக்யானம் பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர்
பர ஹிம்சை பண்ணி சம்பாதித்த பெயர்கள்
ராவ இதி ராவணன்
பெயர் வைக்கவே துயரம் விளைவிக்க
துஷ் சப்தம் -வந்தாலே அரக்கர்
ஈஸ்வரன் ரஷத்து  படைத்த பெயர்கள்
பிரம சத்ரு யஞ்ஞா சத்ரு போலே இவர்கள் பெயர்கள்
வல் -பெரும் மிடுக்கர்
சக்கரவர்த்தி பெற்ற நீல மணி பெருமாள்
தடாகம் -தீர்த்தம் ஆட பருக –
வல் அரக்கர் கழுத்தில் கல்லை கட்டி விழ –
அழுந்த –
பதி தரு மறு வாபி –பதி தரு போகிற வழியில் உள்ள மரம் இளைப்பாற –
மறு வாபி மருகாந்தாரம் பாலை வனத்தில் கிணறு போலே
கிணறில் ஜலம் சர்வ போக்கியம் அனைவருக்கும்
பிரகஸ்தன் இடம் விபீஷணன் சொல்லிய வார்த்தை
காகுஸ்த -உகவாதார்களுக்கு -பாதாள -பாதகம்
அடியவர் வந்து தொழுமின்
வழி காட்டிய பெருமாள் –
நல்லவர்களுக்கு -கச்ய லோகாம் ஜடாயு மோஷம்
என்னால் அனுமதிக்கப் பட்டாய் அநுத்தமான் லோகன் கச்ச –
பரம பதம் -மேல் பட்ட பதம் இல்லாததாய் இருக்குமே
அவனே சரண் -மற்று இலம்
மனுஷ்ய பாவத்தில் மோஷ பிரத்வம் அருளியது
பரத்வம் வெளிப்பட்டது
சத்தியத்தால் லோகங்கள் வென்றவன்
சத்யம் தவிர பேசாமல் இருந்தால் சொல்வது எல்லாம் சத்யம் ஆகும்
நடுவில் திரு வீதிப் பிள்ளை -கொண்டாடி நம்பிள்ளை அருளிச் செய்த அர்த்தம்

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 20, 2014

நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்
எல்லா உலகங்களையும் படைக்கின்ற இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை அடையவே
நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –
என்கிறார்

——————————————————————————————————————————

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே

——————————————————————————————————————————

மற்று இலம் அரண் –
வேறு ஒரு அரணை உடையோம் அல்லோம் –
அவன் தான் பாது காப்பவன் ஆகத் தக்க வல்லவனோ -என்னில்
இது அன்றோ அவன் படி -என்கிறது மேல் –

வான் பெரும் பாழ் தனி முதலா –
இவ்வருகு உண்டான கார்யக் கூட்டங்கள் முழுதும் அழிந்த அன்றும்
தாம் அழியாமையாலே வலியதாய்அளவு இல்லாததாய்
போக மோஷங்களை விளைப்பத்தாய்
ஒப்பற்றதான
மூலப் பகுதி தொடக்கமாக

சுற்றும் நீர் படைத்து –
ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8-
முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார் -என்றபடியே
ஆவரண ஜலத்தை உண்டாக்கி –

அதன் வழித் தொல் முனி முதலா –
அவ்வழியாலே

தேவ சாதிகள் முதலான வற்றை நோக்கப் பழையனாய்
மனன சீலனான பிரமன் தொகட்டக்கமாக
முற்றும் தேவரோடு உலகு செய்வான் -திரு மோகூர்
எல்லா தேவ சாதியோடும் கூட
எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன்
வசிக்கிற திருமோகூர்

சுற்றி நாம் வலம் செய்ய –
நாம் சென்று
விடாதே வலம் வருதல் முதலானவைகளைச் செய்ய –

நம் துயர் கெடும் கடிதே –
வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம்சடக்கென போம் –
யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே
அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்
விந்ததே அதச அபயம் கதோபவதி -தைத்ரியம் -7
இந்த பரம் பொருள் இடத்தில்
பயம் இன்மைக்காக
இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை
எவன் அடைகிறானோ
அவன் பயம் அற்றவனாக ஆகின்றான் -என்னக் கடவது அன்றோ –
ஆனபின்பு மற்று இலம் அரண் –

அவர்ஜநீயம்-தவிர்க்க முடியாத ரஷணம் பொறுப்பு
உத்பாதகன் வர்த்திக்கும் திவ்ய தேசம்
வான் ஆகாசம்
பெரும் பாழ் மூல பிரகிருதி
ஆவரண ஜலம் படைத்து
மற்று அரண் இலன் –
அவன் தான் ரஷகனாக வல்லானோ
படைத்து -கார்ய வர்க்கங்கள் அழிந்தாலும் தான் அழியாத சிறப்பு
வான் பெரும் பாழ் -சிறந்த அத்விதீயமான மூல பிரகிருதி
கார்யங்கள் ரூபம் மாறும் –
வஸ்து நேராக அழியாது
நாமம் ரூபம் ஆகாரம் அழிந்து குடம் மாறி தூள் மண் ஆவது போலே
அப்பொழுதும் மூல பிரகிருதி மாறாமல் -வலியதாய்
அபரிச்சின்னமாய்
போக மொஷன்கலை விளக்கும் அத்விதீயமான மூல பிரகிருதி தொடக்கம்
சுற்று நீர் ஆவரண ஜலம்
தேவாதி -சதுர முகன் தொடக்கமாக -தொன் முனி -மனன சீலன் முனி
முற்றும் தேவரோடு உலகும் உண்டாக்குமவன்
இவனே ரஷகன் என்று காட்டி
அவனே திரு மொகூரில் எழுந்து அருளி
சுற்றி நாம் வலம் செய்ய
நம் இடர் -வழி துணை இல்லா துக்கம் போகும்
எதோ உபாசனம் பலம் –
கேட்டதை அளிப்பன் சர்வேஸ்வரன்
உன் திருவடிகள் தான் வேணும் –
த்வயம் அர்த்தம் -உத்தர வாக்கியம் சேர்த்தியில் அவர்கள் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம்
பயம் கெட்டவனாக போகிறான் -அத -உபநிஷத்
ஆனபின்பு மற்று இலன் அரண் –

————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 19, 2014

திரு மோகூரிலே நின்று அருளின
பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு பாதுகாவல் நமக்கு இல்லை –
என்கிறார் –

————————————————————————————————————————-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே

—————————————————————————————————————————-

கூத்தன் –
நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –
அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா
ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-
என்கிறபடியே
நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவனப் முன்னே போக பின்னை போகையாவது
கூத்துக் கண்டு போகை யாயிற்று –
ஆடல்பாடல் அவை மாறினார் தாமே -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்னக் கடவது இறே
அவன் திருக் குழலை வாய் வைத்த போது
அரம்பையர்கள் குழல் ஓசையைக் கேட்டு பாடுதளைத் தவிர்ந்தார்கள் –
அவன் நடை அழகினைக் கண்டு ஆடுதலைத் தவிர்ந்தார்கள் –

கோவலன்-
தன்னை தாள விட்டு அடியார்களை பாதுக்காக்குமவன் -கண்டகர்ணன் -பிசாசத்துக்கு மோஷம் கொடுத்து வழி நடத்தியவன் அன்றோ –

குதற்று வல்லசுரர்கள் கூற்றம் –
மிறுக்குகளைப் பண்ணுகின்றவர்களாய்
பெரு மிடுக்கை உடையராய் உள்ள அசுரர்களுக்கு யமனாக உள்ளவன் –
ஞானக் கண் தா கனம் ஒக்கும் பவம் துடை நஞ்சிருக்கும்
தானக் கண்டா கனல் சோதி என்று ஏத்தும் வன்தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்றோது ஒலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பரகதி என் அப்பனே – திருவேங்கடத் தந்தாதி
கண்ட கனவின் பொருள் போலே யாவும் பொய் காலன் என்னும்
கண்டாகன் ஆவி கவர்வதுவே மெய் கதி நல்கு எனக்கு
அண்டகனா இப்பொழுதே செல்க என்று அருள் கார் அரங்கன்
கண்டகனாவின் புறக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினோ – திரு வரங்க தந்தாதி –

ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் –
இன்று அடைகிற நமக்கும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -10-9-9-என்கிறபடியே
எப்பொழுதும் தன்னையே அனுபவித்து கொண்டு இருப்பவர்க்கும்
ஒக்க இனியன் ஆனவன் –

வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் –
அழகிதான நீர் நிலத்தையும்
வளவிதான வயலையும் உடைய
திரு மோகூரிலே நின்று அருளின மேலான பந்து –
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்

தாதா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்
என்னும் பரம ஆப்ததமன்
தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே பாரத்தை விட்டவனாய்
பாரம் இல்லாதவனாம் படியான ஆப்த தமன் -என்றபடி –

தாமரை யடி யன்றி –
நம்பத் தகாதவனாய் இருப்பினும்
விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –

மற்று இலம் அரணே –
பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் -என்றது
இனிமை இல்லையாகிலும்
விட ஒண்ணாதபடி
புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –

பரம ஆப்த தமன் திருவடிகள் ஒன்றே ரஷணம்
ஆத்தன் சப்தம் இங்கு
கூத்தன் வல்லார் ஆடினால் போல நடக்கை
அகர பிரயோ ராம அனுஜகாம
மையோ -விரி சோதியில் மறைய -பொய்யோ எனும் இடையால் கம்பர்
மரகதமோ -ஐயோ -நீல மேனி அழியா அழகு உடையான்
கூத்து கண்டு போவது போலே
ஆடல் பாடல் மறந்தனர் தாமே
அப்சரஸ் பாடல் ஆடல் தவிர
கோவலன் தன்னை தாழ விட்டு கோவை மேய்த்து ரஷிக்கிறவன்
பிசாசு கண்டா கர்ணன் மோஷம் கொடுத்து
அசுரர் கூற்றம் -குடற்று -அசுரர்
எமன்
ஏத்தும் நமக்கும் இன்று ஸ்தோத்ரம்
வைகுந்தத்து அமரர்  முனிவர்  போலே
ஒக்க இனியன்
குணா அனுபவ கைங்கர்ய நிஷ்டர்
நீர் நிலம் வயல்கள்
ஆப்தன் பரம பந்து
அஹம் ஸ்மராமி -தான் தனக்கு இல்லாமல் நயாமி பரமாம் கதிம்
தன்னை தானே அஞ்சி ந்யச்த பரனாக ஒரு கால் சொல்லி வைத்து இருந்தாலும்
அங்கெ நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி
ஆப்தன் இல்லா விட்டாலும் விட ஒண்ணாத தாமரை அடிகள்
மற்று அரண் இல்லை
போக்யதை இல்லா விட்டாலும் இவனே அரண் பிராப்தி அவன் தான்

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 19, 2014

அவன் எழுந்து அருளி நிற்கின்ற
திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்
என்கிறார் –

———————————————————————————————————————

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே

————————————————————————————————————————

தொண்டீர் வம்மின் –
பகவான் இடத்தில் ஆசை உடையீராய் இருப்பீர்
அனைவரும் வாருங்கோள் –

நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்
மூன்று விதக் காரணமும்
தானே யானவன்
தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த
நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர
நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும்
சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற
பிரமாண சித்தியைப் பற்றி -நம் -என்கிறார்
அன்றிக்கே
தம் வடிவு அழகினையும்
தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்
மகா பலியால் கவரப் பட்ட
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற
மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி
படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்
அளந்து -என்கிறார் –
அணி திரு மோகூர் –
அவனுக்கு ஆபரணமான நகரம் -என்னுதல்
இந்த உலகத்துக்கு ஆபரணமான நகரம் -என்னுதல் –

எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய –
எட்டுத் திக்குகளிலும்
ஈன்ற கரும்போடு
பெரும் செந்நெல் விளையும்படி –

கொண்ட கோயிலை –
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்
கரும்புக்கு நிழல் செய்தால் போல் இருக்கும் -பெரும் செந்நெல் –
அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா
பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18-
அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்
காலம் அல்லாத காலங்களிலும்
மரங்கள் பயனைக் கொடுக்கின்றன -என்றபடியே ஆயிற்று –

வலம் செய்து –
வலம் வந்து –

இங்கு ஆடுதும் கூத்தே –
அங்கு சென்று
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
என்று களிக்கும் களிப்பினை
இங்கே களிப்போம் –

திரு மோகூர்  அனுபவிப்பதே பாக்கியம் வாரும் என்கிறார்
தொண்டீர் வம்மின்
சபலம் -கைங்கர்யம் செய்ய
நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
நிரவதிக தேஜோ
முதல்வன்
தனி முதல்வன்
ஒரு
மூன்று காரணங்கள்
நம்
அழகு -பிராப்தி காட்டி
நம்
அண்டம் மூ உலகு அளந்தவன்
மூன்று வகைப் பட்ட உலகங்கள் அளந்து
சிருஷ்டித்து விடாமல் எல்லை நடந்து ரஷிப்பவன்
கீழே ஒரு தனி முதல்வன் சிருஷ்டித்து
பிரபலர்-மகா பலி போல்வார் துர்பலனை அபஹரித்தால்
அவனுக்கு ஆபரணம்
சம்சாரத்துக்கும் ஆபரணம்
எட்டு திக்கிலும் கரும்பும் பெரும் செந்நெலும்
திரு உள்ளத்தால் விரும்பு உகந்து அருளின நிலங்கள்
கரும்புக்கு நிழல் செந்நெல்
நெல்லு காய்ச்சி மரம் பட்டணத்தான் பயிர் என்று அறியாதவன்
பெரும் செந்நெலும் -கரும்பை விட
அவன் சந்நிதியால் அகாலோ வருஷோ
வளம் செய்து
ஆடுதும் கூத்தே இங்கு
அங்கு போனால் அஹம் அன்னம் ஆடுகிற கூத்தை இங்கே களிப்போம் வாரும்
ப்ரீதிக்கு போக்குவீடு
அனைவரையும் அழைக்கிறார்

——————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 19, 2014

நம்முடைய எல்லா துக்கங்களும் கெட
திரு மோகூரிலே வந்து சுலபனாய் நிற்கிறவனை
அடைவதற்கு வாருங்கோள் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்

———————————————————————————————————-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே

———————————————————————————————————————-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி –
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று ஆயிற்று
தங்களை தாங்களே ஈச்வரர்களாக மதித்துக் கொண்டு இருக்கிற தேவர்களும்
சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களுக்கும் வார்த்தை
இடர் கெட –
வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக
எம்மை –
முன்- ஈச்வரோஹம் – என்று இருந்தவர்கள்
ஆபத்து மிக்கவாறே
ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-
எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும் -என்றாப் போலே
தங்கள் வெறுமையை முன்னிடுவார்கள் இத்தனை –
போந்து அளியாய் –
அவதரித்து வந்து காப்பாற்ற வேண்டும் -என்பார்கள் -என்றது
முன்பு எல்லாம் விருப்பற்று இருந்தவர்கள்
ஓன்று கெட்டவாறே-படி காப்பாரை பிடிக்குமாறு போலே
நாங்கள் ஆபத்தை அடைந்தவர்களாய் வர நீ கிடக்கிறது என் -என்பார்கள் என்றபடி
என்று என்று ஏத்தி தொடர –
தங்களுக்கு வந்த ஆபத்தாலே இடை விடாதே புகழ்ந்து
வடிம்பிட்டு -நிர்பந்தித்து -அடைவதற்காக –

சுடர் கொள் சோதியைத் –
ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று
பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே
மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்
அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக
உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –

தேவரும் முனிவரும் தொடர –
தேவர்களும் இருடிகளும்
ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –
வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை
அநந்ய பிரயோஜனரை
அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –
பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்
ஆதலின் -படர் கொள் பாம்பு -என்கிறார் –
தன்னுடைய செர்க்கையாலே
சர்வஞ்ஞானானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரை க்கு
இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் -பள்ளி கொள்வான் -என்கிறார்

திரு மோகூர் –
தேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்
நமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –

இடர் கெட வடி பரவுதும் –
நம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக
அவனுடைய திருவடிகளை அடைவோம் –

தொண்டீர் வம்மினே –
நம்மோடு ஒரு குலத்தாராய்
இருப்பார் அடங்க திரளுங்கோள்

சமஸ்த துக்கங்களும் போக்க
இடர் கெட அடி பரவுதும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் இதில்
முனிவர் -இடர் கெட -போந்து -துக்கம் போக்க
சுடர் கொள் சோதியை
தேவர் முனிவர்
படர் கொள் பாம்பணை பள்ளி கொள்வான்
எம்மை இடர் கெட போந்து -ஈஸ்வர அபிமானிகள் தேவர் சாப அனுக்ரக சமர்த்தர் முனிவர்
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசன
எம்மை ஈச்வரோஹம் -என்று இருந்தவர் ஏகி பஸ்ய-சரீராணி -கழுத்தும் கப்ப்படுமாகவந்து ஸ்திரீகள் புத்ரர்கள் கூட்டி வந்து
போந்து -அவதரித்து
அளியாய் ரஷிக்க வேண்டும்
முனு உபேஷித்து இருந்தவர்கள்
படி காப்பானை -ஆபன்னராய் நாங்கள் வர நீ கிடப்பது என்ன
தலையாரி –
என்று என்று இடைவிடாதெ
வடிம்பிட்டு நிர்பந்தம் பண்ணி
ஆபத்து காலத்தில் ஆகிலும் நம் இடம் வந்தார்கள் உஜ்ஜ்வலன்
சுயம் பிரகாசன் -அல்ப பிரியஜனம் பெற ஆழ்வார் வயிறு பிடிக்கிறார் யென்னவுமாம்
தேவர்
ஈச்வரோஹம்
முனிவர் ஐஸ்வர்யம் வேண்டி
அநந்ய பிரயொஜனரை அடிமை கொள்பவன் கிடீர் படர் கொள் பாம்பணை
சேர்த்தி ஸ்பர்சத்தால் மலர்ந்த
சென்றால் குடையாம்–
சர்வஞ்ஞன் அஞ்ஞர் போலே நித்தரை செய்யும் படி படர் கொள் பாம்பணை
ஸ்பர்சத்தால் மலர்ந்த பணங்கள்
தேவாதிகளுக்கு சுலபன் போலே
நமக்காக திரு மோகூர்
சகல துக்கங்களும் போகும்
தொண்டீர் சகோதரி –
அனைவரையும் வம்மின் அழைக்கிறார் –

திரு மோகூரிலும்  பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதி
திரு நீர் மலை அப்படி -நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -நான்கு சந்நிதிகள் வைத்து

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 19, 2014

மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை
நம்முடைய எல்லா துக்கங்களும்  கெடச் சென்று அடைவோம்
என்கிறார் –

—————————————————————————————————————————–

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே

———————————————————————————————————————————-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
பிரயோஜநாந்த பரர்களும்
அநந்ய பிரயோஜனர் கூறுகின்ற பாசுரத்தை சொல்லுவார்கள்
ஆயிற்று அவன் முகம் காட்டுகைக்காக –
தேவரை ஒழிய நாங்கள் ஒரு புகல் உடையோம் அல்லோம்
என்று எப்பொழுதும் அடைவு கெட சொல்லிக் கூப்பிட்டு நின்று
அநந்ய பிரயோஜனர்களைப் போலே
தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட –
பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய

வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று
அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி
அதுவே தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —

நன்று நாம் இனி நணுகுதும் –
அவன் எல்லாரையும் காப்பாற்றுவான் ஒருவன் ஆனபின்பு
காப்பாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தை உடைய நாம்
நன்றாகக் கிட்டுவோம்
ஸ்ரீ மதுரையிலே -காலயாவனன் ஜராசந்தன் – முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று
பிரமன் சிவன் முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
அநந்ய பிரயோஜனர்களாய் கிட்டுவோம்

நமது இடர் கெடவே –
ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று
இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக

சர்வ ரஷகன்
துக்கங்கள் போக அவனை ஆஸ்ரயித்து
நன்று நாம் இனி நாம் நணுகுதும் இடர் கெட
மூ உலகும் காப்பவன்
ஆபத்து  வரும் காலம் அன்று யாம் ஒரு புகல் இடம் என்று என்று அலற்றி –நாட
அசுரர்களை வென்று
பிரயொஜனாந்தார பரரும் அநந்ய பிரயோஜனர் பாசுரம் கார்யம் ஆக  -வேஷம் போட்டு –
வார்த்தை சொல்லி முகம் காட்டப் பெற
வேறு புகல் இடம் இல்லை
நின்று -பிரயோஜனம் கை புகுரும் அளவும் நின்று
எழுவார் விடை கொள்வார் போலே
நான்முகன் அரண் தேவர்கள் ஜாதி அடைய ஆஸ்ரயிக்க
வென்று -பிரதி பாஷம்
த்ரை லோக்யம் ரஷித்து
உழல்வான் வர்த்திக்கிறான்
இனி நாம் ரசிக்க அபெஷை உடைய நாம்
நன்றாக கிட்டுவொம்
காலயவனன்  கிட்டினான் ஜராசந்தன் போல்வாரை போலே இல்லை
நாம் நன்று அநந்ய பிரயொஜனராக
இடர் கெட
ஆரார துணை கிலேசம் போக

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

February 19, 2014

இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்
உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும்
உடையவனுடைய திருவடிகளை அல்லது
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்
வேறு புகழ் உடையோம் அல்லோம் –
என்கிறார் –

—————————————————————————————————————

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே

———————————————————————————————————————

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் –
இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி
எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –
எல்லா காலத்துக்கும் இது ஒழிய
வேறு துணை உடையோம் அல்லோம் –

ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி –
தாரையும் குளிர்த்தியையும் உடைய
திருத் துழாயின் ஒளியை உடைத்தான அழகிய மாலை –
அலங்கல் -ஒளி-அசைதலுமாம் –
பின்னே போகா நின்றால்-அடி மாறி இடும் போது –
வளையும் அசைந்து வரும்படியைக் கூறியபடி –
திருமேனியிலே சேர்ந்து இருப்பதனாலே வந்த புகரைச் சொன்னபடி –

ஆயிரம் பேருடை –
தோளும் தோள் மாலையுமான அழகைக் கண்டு
இவன் ஏத்தப் புக்கால்
இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி
கணக்கு இல்லாத திருப் பெயர்களை உடையவன் –

யம்மான் –
வடிவு அழகினைக் கண்டு
சம்பந்தம் இல்லாதவர்களை ஏத்திற்றாக வேண்டாதே –
ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி-82-
என்று ஏத்தாத நாள்களுக்கும் வயிறு பிடிக்க வேண்டும்படியான விஷயம் –

நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் –
அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து
கை வந்து இருக்குமவர்களாய்
வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்
அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்
இதனால் அத் தேசத்தில் வசிப்பதனாலே –
அடைந்தவகளை பாது காத்தலே மிக உயர்ந்த தர்மம்
என்று சர்வேஸ்வரனும் அதிலே நிலை நிற்க வேண்டும்படியான நகரம் -என்பதனைத் தெரிவித்தபடி
அவ் ஊரிலே சென்று அடைந்தவர்களை
நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –

நலம் கழல் அவன் –
அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்
நினையாத திருவடிகள் –
அன்றிக்கே –
அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்
இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும்
நான் விட மாட்டேன் -என்னுமவன் என்னலுமாம்-
வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ
ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன
தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –
அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய
நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
அவன் -என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக

போக ஹேது ஒப்பனை
உஜ்ஜீவிக்க திரு நாமங்கள்
திருத் துழாய் மாலை சூட்டி -கொண்டு ஆயிரம் பேர் உடை அம்மான்
தடம் அன்றி நாம் இலம்
எம்மைக்கும் இலம் கதி
நலம் கொள் நான்மறையாளர் வாழும்
அவன் திருவடிகள் ஒன்றே புகல்
மற்று ஓன்று கதி இலம் எம்மைக்கும் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
ஈன தண் துழாய் தாரை குளிர்ச்சி அழகிய மாலை
அலங்கல் ஒளி அசைவு
ஆயிரம் -அசந்கித
அம்மான் -பிராப்தி சம்பந்தம்
அழகும் -ஆழி அம் கை அம்மானை ஏத்தாது  இருந்தேன் கீழ் நாள்களில் எல்லாம்
ஏத்தா நாள்களுக்கும் வயிறு பிடிக்கும்படி
ஆன்ருசம்சயம்-கருணை ஐயோ -தர்மம் இது ஒன்றே
நலம் கொள் நான்மறை இது தான்
வேதம் வல்லவர்கள்
நன்மையால் மிக்க நான் மறை யாளர்
பிராட்டி கூரத் ஆழ்வான் ஆண்டாள் போல்வார் –
ஹிம்சித்த ராஷசி
ஆழ்வான் நாலூரானுக்கும்
ஆண்டாள் -அபராதம் வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் அபசார ஷாமணம் பண்ணிக் கொள்ளாமல் மாண்டானே
வேதம் வியாச பதம் அர்த்தம் சொல்பவர்
வர்த்தனம்
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்
ஆஸ்ரித சம்ரஷணமே உத்தேச்யம்
அவனுக்கும் இங்கே இருப்பதால் கருணை வந்தது
ஆஸ்ரயிக்க செல்வாரை அஸ்மாத் துல்யோ பவது -விபீஷணனை எங்களைப் போலே முதலிகள்
நலம் கொள் நான் மறை வாணர்கள் நம்மையும் அவர் போலே
நலம் கழல் -குணா தோஷம் நிரூபணம் செய்யாத திருவடிகள்
நத்யஜேயம் என்னுபவன்-வத்யதாம் -கொல்லப் படட்டும் என்பார் இதே சுக்ரீவன் பரிவின்காரணம்

அவன் அடி –
அவன் இரண்டு இடத்திலும்
பாத நிழல் தடம்
சம்சார வெக்கை தீர்க்க
வாசுதேவ தரு சாயை
மரகத மணித் தடாகம்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-