திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி
தன் இனிமையினால்
நித்ய சூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -என்கிறார்

———————————————————————————————————————————–

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே

—————————————————————————————————————————————-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய
குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே
என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக
ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே
நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் –
தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

இப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –
இத் திருவாய்மொழி நித்ய சூரிகள்
மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு எறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்

நிகமத்தில்
போக்யதையால் நித்யர் ஹிருதயம் ஈர்க்கப் பண்ணும்
உருக பண்ணும்
வானவர்
மத யானை குவலையா பீடம் நிரசித்து
ஆரா மதம் கொண்ட யானை
என்னுடைய விரோதியை போக்கி
அது தான் திரு நகரி வயலை உழுது ஆக ஒட்டாமல் தடுக்க
சேறு ஆர்ந்து இருக்கும் வயல்
யானை படுத்து இருக்க –
ஆழ்வார் சமுரதர் ஆனாதும் குருகூரும்
விரோதி கலிந்தவாரெ ஆழ்வார் தரிக்க
திரு நகரியும் வயலும் சேருமாக ஆனதே
கிழி கிழியாக கட்டு கட்டாக பணம்
நூறு நூறு பாட்டு
கிழி கிழி அந்த காலம்
கிழி சீரை பட்டு துணி பகட்டின மாணிக்கம்
காண்ட பர்வத பேதம் போலே
பிரித்து பிரித்து
எளிதாம் படி -நூறு நூறாக
இப்பத்து
வானவர் தன் இன் உயிர் க்கு ஏறு தரும்
சர்வேஸ்வரன் தரும்
ஈடுபாடு உண்டாகும்
பிரகாரம் தரும்
இன்பம் தரும்
ரிஷபம் அமரர் ஏறு -இவனையே தரும்

——————————————————————————————————————————————-

மையார் கண் மா மார்பில் மண்ணும் திருமாலைக்
கையாழி சங்குடனே காண எண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர் -84

சாரம்
மையார் கரும் கண்ணி மன்னும் திருமாலை
சங்கு சக்கரத்துடன் காண கருதி
மெய்யான காதல் உடன் கூப்பிட்டு
கண்டு
உகந்த
மாறன்
கண்டு கொண்டேன்
உகந்தேன்
மாறன் பேர் ஓத இன் உயிர் உய்யும்

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: