திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நீர் இங்கன் அஞ்சுகிறது என் என்ன –
தேவர்கள் முதலானோருக்கு அரியை ஆகையாலே
எனக்கும் அரியை ஆகிறாயோ-என்று
என் நெஞ்சு கலங்கா நின்றது –
என்கிறார் –

——————————————————————————————————————————————-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே

——————————————————————————————————————————————–

உறுவது இது என்று –
சீரியது அடிமை செய்யும் இது -என்று

உனக்கு ஆட்பட்டு –
ஆத்மா பகவானுக்கு அடிமைப் பட்டது என்ற சேஷத்வ ஞானம் வந்ததும் பின் சீரிய பயன்
கைங்கர்யமே அன்றோ –

நின் கண் பெறுவது எது கொல் என்று –
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –
சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்
கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து
சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ
அன்றி
என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –
என்கைக்காக சொல்லுகிறார் எனபது –

பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் –
நாம் விரும்பிய படி பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கிற
என் நெஞ்சம் கலங்கா நின்றது –
இங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –
மனத்தின் உடைய அறிவின்மையே இதற்கு காரணம் –
நீயும் கூட இதற்கு காரணம் –

வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் என்றும் ஒக்க அறிய அரியையாய் –
தேவானாம் தானவானாம்ச சாமான்யம் அதிதைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தா
அந்நிலையிலே ஒரு சிறுக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாம்படி இருந்தாய்
அதில் நான் எக்கோடியில் ஆகிறேனோ -என்ற அறியாமை –
தேவர்களையும் அசுரர்களையும்பிரித்த பின்னர் அர்ஜுனன் -நான் எக் கோடியிலே ஆகிறேனோ
என்று அஞ்சினாப் போலே
பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –
தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது
எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்
உமக்கு இனி
நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி

தேவாதிகளுக்கு அரியை
அதனால் எனக்கும் அறியனாவாயோ நெஞ்சு பயப்படுகிறது
பேதையேன் நெஞ்சம் மருகல் செய்ய
வானவர் தானவர்க்கும் அரிய
உறுவது இது சீறியது அடிமை செய்வதே -உறுவது
ஸ்வரூபம் பார தந்த்ர்யம் அறிந்தால் செய்ய வேண்டுவது கைங்கர்யம்
உனக்கு ஆள் பட்டு
அநந்ய பிரயொஜனர்
உன் கண் பெறுவது எது -சொல்வாரோ
ஸ்வரூபம் உணர்ந்து
கைங்கர்யம்-,ஆம்பரிசு அறிந்து கொண்டு
மெய்ம்மையை உள்ளபடி உணர்ந்த பின்பு
ஈஸ்வரன்-வேறு ஒன்றை கொடுத்து விடுவான் அல்லன்
தன்னையே கொடுத்து அருளுவான் –
இப்படி இருக்க
உன் பக்கல் பெறுவது எது -என்பான் என்
க்ரமத்தில் செய்கிறோம் தவரை அறிந்து சம்சார இருப்பு நீக்கி
ஆகட்டும் பார்க்கலாம் சுவாமி போலே இல்லாமல் –
சம்சார இருப்பே சேஷமாய் போகுமோ
உன் பக்கல் பெறுவது எது என்று பேதையேன் நெஞ்சு
உறுதி குலைந்து நெஞ்சு கலங்க
விவேக சூன்யத்தை பேதையேன்
ணீ தான் இதுக்கடி
வானவர்க்கு
தேவானாம் தானாவான் பொதுவாக இருந்தும் -ஒக்க அரிய
சிருக்கனுக்கு அறியும் படி
வானவர்க்கு அறிவது அரிய
தானவர்க்கு அறிவது அரிய
இருவருக்கும் ஒக்க
அரியாய நர சிம்கனாய் -சிருக்கன் -பிரகலாதனுள்ளபடி
நான் எந்த கோடியில் ஆகிறேனோ –
தேவாசுர விவாகம் அநந்தரம்
தைவி சம்பத்து ஆசூர சம்பத்து அர்ஜுனன் சொக்கிக எந்த கோஷ்டி
நீ தைவி கோஷ்டி தான் மாசுச -பரிஹாரம் செய்து அருள
சௌலப்யம் பிரகாசிப்பித்தது ஆழ்வார்
கை புகுந்தோம் என்று இருக்காய் அமையாதோ
எளியவன் கோஷ்டி
எளியவர்க்கு உதவினான் என்றீர்
அடி நாயேன் சொன்னீர்
யாருக்கு கிடைப்பேன் நீரே சொல்லும்
சங்கைக்கு இடமே இல்லையே -சமாதானம் இப்படி காட்டி அருளி –
சௌசீல்ய சௌலப்யம் காட்டிய பின்பு
அம்மான் -நமக்கு என்று யெர்ப்பட்டவன் –
நின் கண் பெறுவது எது கோள் மறுக வேண்டாமே

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: