வேதங்களும்
வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்
அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி
எனக்குத் திருவருள் புரிந்தான் –
என்று இனியர் ஆகிறார்-
———————————————————————————————————————————–
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
————————————————————————————————————————————-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் –
அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற
வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –
அன்றிக்கே
அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும்
ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன கொள்க-
அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி
தைத்ரியம் -என்றும்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி
வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ
அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது
அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது
என்னும் இவ்வளவே அறிந்தது –
அறிந்தனர் எல்லாம் –
எல்லாம் அறிந்தனர் –
மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற
பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –
அரியை வணங்கி –
எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து –
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்
க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர –
சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள்
கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே
பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்
அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே
வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர் கள்
வேதங்களும்
வேத வித்துக்களும் போலே அன்றிக்கே
தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்
அறிய முடியாதவன் என்று அறிந்தன வேதங்கள் இதிகாசம்
பிறவி நீக்கும் மருந்து என்று ரிஷிகள் அறிய
பூரணமாக உள்ளபடி -சீல குணத்தால் தானே தன்னை காட்டியதால் -அறிந்தேன்
அபௌருஷேயம் வேதம் -வேத வித்துக்கள் -அறியாமல்
நூல்களும் -இதிகாச புராணங்கள்
அறிந்த வேதம் -அறிய முடியாதவற்றை அறிந்தன —
ப்ரஹ்ம சூத்திரம் –இதிகாசம் புராணம் -இவற்றைக் காட்டி அருள –
சங்கை தீர்க்க சூத்தர காரர் மீமாம்சை –
16 அத்யாயம் ஜைமினி போல்வார் கர்ம மீமாம்சை தர்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா ப்ரஹ்ம மீமாம்சை -விளக்க -விசாரம் தீர்க்க –
அரும் பொருள் ஆதல் அறிந்தன -அறிவதற்கு அரியவன் என்றே அறிந்து கொண்டன என்று கொள்க
கொள்க -கொள்ளுங்கோள்-
துரஞ்ஞேயம் என்றே அறிந்தன -என்று கொள்க
எதோ வாசோ நிவர்த்தந்தே ஆனந்த குணம்
யஸ்ய மதம் தஸ்ய மதம் அமதம் -அறியப் பட முடியாதே
அவிஞ்ஞானம் –
அறிந்தனர் -என்று சொல்லி கொள்ளும் ரிஷிகள் -பராசாரர் வால்மீகி வியாசர் போன்ற மக ரிஷிகள்
ஹரியை வணங்கி அறிந்தனர் -என்னவாக
சம்சார துரித பேஷ்ஷம் -சம்சாரம் நோயை தீர்க்க
சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட ஏக பேஷ்ஷம் -என்றே அறிந்து
மருந்து -தான்
போக்யதையில் இலிய வில்லை
நிரபேஷ உபாயம் என்று அறிந்திலர்
கீழ் பாட்டில் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே –
நான் தான் அறிந்தேன் –
அவன் காட்டக் கண்டு அறிந்தன –
அனுபவிக்க அமுதிலும் ஆற்ற இனியன் என்று அறிந்து கொண்டேன் –
————————————————————————————————————————————-
Leave a Reply