மேலே சொல்லப் பட்ட நாராயணன்
என்னும் திருப் பெயரின்
பொருளை -அருளிச் செய்கிறார்-
———————————————————————————————————————–
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே
——————————————————————————————————————-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுதானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –
அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து
வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே கவர்ந்து கொள்ளப்பட
எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் வேறு துணை இன்மையை
தெரிவித்தவாறு –
யவனும் அவனுமவனும் அவனே –
பிரமனும் சிவனும் இந்த்ரனும் ஆகிய இவர்கள் உடைய
ஸ்வரூபம் ரஷணம் ஸ்திதி நிற்றல் இருத்தல் பிரவ்ருத்தி நிவ்ருத்தி –
முதலான செயல்கள் அவன் இட்ட வழக்கு
ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா -என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார் -என்றது
அவன் அவன் அவன் என்றே போருகிறார்-என்றபடி –
அவனே மற்று எல்லாமும்-
ஸ அஷர பரம ஸ்வராட் –
அவனே உயர்ந்தவனும்
விகாரம் இல்லாதவனும்
கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே
பிரதானரோடு
பிரதானம் இல்லாதாரோடு
வேற்றுமை இல்லாதபடி
சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –
அறிந்தனமே –
பிரமன் முதலாயினோர்- ஈச்வரோஹம் -என்று இருக்கையும்
அவர்களைப் பற்று கின்றவர்களுமாக சொல்லா நிற்க
நீர் -அவனே -என்றது என் கொண்டு -என்னில் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற காரணத்தால் நாம் அறிந்தவர் ஆனோம்
அதனாலே சொல்லுகிறோம் -என்கிறார் –
ஆக
இரண்டு பாசுரங்களாலும்
திரு மந்தரத்தையும்
அதன் பொருளையும்
அருளிச் செய்தாராய் நின்றார் –
அவனே -நாராயண சப்தம் சொல்லி
மந்த்ரத்தை மந்தரத்தால்
வியாபகம் ஒண் மிதியில்
எண் பெருக்கு அன்னலத்து
நாரணன் தின் கழல் சேர
எல்லாம் அவன் அறிந்தோம் என்கிறார்
அவனே ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன்
அகல் ஞாலம் படைத்து
இடந்து மகா வராகமாய்
அவனே -ஸ்ருஷ்டியாதிகளால் நைரபேஷ்யம்
முக் காரணங்களும் அவனே
உண்டு உமிழ்ந்து
அளந்து -எல்லை நடந்து மீட்டுக் கொண்டு அவனே
ரஷகத்வத்திலும் நிரபேஷமாக சக காரி இல்லாமல் செய்து அருளுவான் –
ஆபத் சகன் -இத்தனை கார்யம் யாரும் இல்லாமல்
அவனே அவனும் அவனும் அவனும்
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரன் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் இட்ட வழக்கு
சகா ப்ரஹ்ம சக சிவா சவ இந்தரன்
சக -அவனும்
ஆதி சப்தம்
அத்வைதி -மாம்பலம் சதச் -சாந்தச் சேர வராதே
ஸ்மார்த்த பாடம் இடைச் செருகு-காஞ்சி ஸ்வாமி காட்டி அருளி –
அவனே மற்று எல்லாம் -பரம ஸ்வராட் வேதம் -சப்தம்
சகல சேதன அசேதனம் அவன் ஆதீனம் –
அறிந்தனமே ஆழ்வார் நன்றாக அறிந்தேன்
அருளினபடியால்
ஈச்வரோஹம் -இருப்பார் அறியார்
மற்றவர் ப்ரஹ்மா ஆசரிக்க
சு பிரதான ஞானம் இல்லை
ஈஸ்வர அனுக்ரஹீத ஞானம் அறிந்தனமே
திருமந்தரம் அர்த்தம் இரண்டு பாட்டாலும் காட்டி அருளி –
——————————————————————————————————————————————
Leave a Reply