திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஓராயிரம் -பிரவேசம் –

நீர் இங்கனே விரும்பிக் கேட்க வேண்டுமோ
நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை
நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று வேண்டிக் கொண்டார் மேல் –
யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ
உம்மோடு நமக்கு உண்டான இரத்த சம்பந்தம் –
ஆனபின்பு நீர் விரும்பியவை அனைத்தையும் செய்யக் கடவோம்
நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்னக்  கடவது இ றே
ஸ்ரீ கௌசல்யார் ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்
கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய
மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –

ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை நினைந்தார் –
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு வேண்டிக் கொள்ளுதற்கு தனக்கு சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேடக் கடாஷம் செய்த படியையும்
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் நினைத்தார்
நினைந்த வாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –
இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்
இவர்தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் மிகுதியைச் சொல்லி
தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி
அன்றிக்கே
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே
அகாரார்தம் -ஆகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது
மேல்

ஒன்றரைப் பாசுரங்களாலே நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அருளிச் செய்தார்
நன்று -இது அடிமையாம் தன்மை -இது அவனுக்கே உரிமையாம் தன்மை -இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்துமா
என்று பிரித்து சொல்லாமல்
மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்துமாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்

அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்
உகாரத்தின் அர்த்தமும்
ஆத்துமாவை விட்டுப் பிரிந்து தனித்து இராமையாலே
கூட அருளிச் செய்தார் -என்க –
அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே
மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்துமாவின் உடைய ஞான ஆனந்தங்கள் முதலிய வற்றின் சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே
இம்முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத
வேதத்துக்கு புறம்பான புறச் சமயத்தாரையும்
அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –
ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்
இரண்டு திருவாய் மொழி களாலும் -நம –
என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சொல்லால் கிடைக்கின்ற பொருளும்
பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நம -என்ற சொல்லுக்கு
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்
நம -என்பதன் சொற்பொருள் -நானஎனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்
தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்
அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்
பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்
அதற்கு மேல்
கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்
நாராயண மந்த்ரத்தின் பொருளை அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்
ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –

வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த

உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –
அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் நான்காம் வேற்றுமையும்
அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –
பிரணவத்தின் பொருளும்
நம -என்ற சொல்லின் பொருளும்
எங்கும் பரந்து இருத்தலும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு எட்டு எழுத்தே -என்னுமதனை
ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே
அருளிச் செய்கிறார்
இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

——————————————————————————————————————————————–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-

—————————————————————————————————————————————-

அவன் நாராயணன் அன்றோ
நம் விருப்பத்தைமுடித்தல் நிச்சயம்
என்று தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —

ஓர் ஆயிரமாய் அளிக்கும் –
ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே காக்க வல்லதாய் இருக்கும் –
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர் யஸ்ய யசச ஸ்ரிய
ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74
நிறைந்த செல்வம் என்ன
வீர்யம் என்ன
கீர்த்தி என்ன
சம்பத்து என்ன
ஜ்ஞானம் என்ன
வைராக்கியம் என்ன
ஆகிய இவர் ஆருக்கும் பக -என்கிற நிருக்தி பேதத்தாலே
பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

உலகு –
காக்கும் இடத்து ஒவ்வொருவராக அன்றி
உலகம் முழுதினையும் காப்பாற்றும் –

ஏழ்-
அதிலும் ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே
எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்
ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-
அடியார் ஒருவரைக் காப்பாற்றுமது உண்டு அன்றோ அவனுக்கு –
திருப் பெயர்கள் காப்பது அங்கன் அன்று -என்றபடி –
அளிக்கும் –
இவை செய்த பாவங்களைப் பார்த்து -தள்ளுகிறேன் -என்பதும்
ஒரு காலத்தில் உண்டு அவனுக்கு –
அளிக்குமது ஒன்றுமே ஆயிற்று இவற்றுக்கு இயல்பு –

பேர் –
காப்பதற்கு ஒரு பேர் -காணும் -வேண்டுவது –
அப்படிப் பட்ட -ஒரே பெயரே ஆயிரம் முகமாக காக்க வல்ல -திருப் பெயர்களைத் தான்

எத்தனை உடையன் -என்னில் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –
சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு
சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே
தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்
பல பசுக்களை உடையவன் -என்னுமாறு
எல்லாருக்கும் உணவு அளிக்க நினைத்தவர்கள்
சோறும் தண்ணீரும் குறை அறுத்துக் கொண்டு
இருக்குமாறு போலே
உலகத்தை பாதுகாக்க நினைத்த ஈஸ்வரனுக்கு
அதற்குத் தகுதியாக ஆயிரம் திருப் பெயர்கள் உண்டாய்
இருக்கும் ஆயிற்று –

புத்திரன் இறக்க அதனாலே வருந்திய -கோயிலாய்த்தான்
பட்டர் திருவடிகளிலே வந்து தன்
சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க
அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ
துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா
அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி
அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –
ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் ஆகையால் வந்த பெருமையை உடையவன் –
அவை தான்
கரை கட்டா காவிரி போன்று பரந்து இருந்தால் -அவற்றை எல்லாம் ஒரு முகம் செய்து
அனுபவிப்பதற்கு தக்கதான வடிவை உடையவனாய் இருக்கும்
என்கிறார் -மேல் –

கார் ஆயின காளநல் மேனியினன்-
கார் என்றே இருக்கிறார் ஆயிற்று
முற்று உருவகம் இருக்கிறபடி
கறுத்து இருந்துள்ள காள மேகம் போலே இருப்பதாய் –
அது தானும் பெருக்காற்றில் இழிவார் ஒரு தெப்பம் தேடி
இழியுமாறு போலே
ஒன்றைச் சொல்லும் போது உபமானம் முன்னாக அல்லது சொல்ல
ஒண்ணாமை யாலே சொன்ன இத்தனை போக்கி
திரு மேனியைப் பார்த்தால் உபமானமில்லாததாய் ஆயிற்று இருப்பது
இப்படி இருப்பதனை உடையவன் தான் யார் -என்ன
நாராயணன் -என்கிறார் மேல் –

நாராயணன் –
ஞானம் சக்தி முதலானவைகளும் குணங்களாய் இருக்கச் செய்தே
ஞானத்துவம்
ஆனந்தத்துவம்
அமலத்துவம்
முதலானவைகள் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருக்கும் அன்றோ
ஸ்வரூபத்தை காட்டும் திரு நாமம் என்பதால் வந்த ஏற்றம் என்கிறார்
அப்படியே பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடுடையான் என்றவன் ஆகிறான் யார் -என்ன
இன்னான் -என்று விசேடிக்கிற இடத்தில் -நாராயணன் -என்கையாலே நிரூபகமாய் புக்க தன்றோ
ஆயிரம் திரு நாமங்களைச் சொல்லி
அவற்றிலே மூன்றினைப் பிரதானமாக -விஷ்ணு காயத்ரியிலே -எடுத்தது
வியாபக மந்த்ரங்கள் ஆகையாலே
அவற்றிலே இரண்டனை மற்றைய வற்றோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆயிற்று
இதற்கு உண்டான முதன்மை –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை -திரு நெடும் தாண்டகம் -4-என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் -பெரிய திரு மொழி -8-10-3-என்றும்
நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1- என்றும் –
நமோ நாராயணம் -பெரிய திருமொழி -6-10-1-என்றும்
இவை அன்றோ திரு மங்கை மன்னன் படி
நம் ஆழ்வாரும்
வண் புகழ் நாரணன் -திருவாய் மொழி -1-2-10-என்று தொடங்கி
திருவாய் மொழி முடிய அருளிச் செய்ததும் இதுவே இருக்கும் அன்றோ –
வேதங்களும் ஆழ்வார்களும் நம் ஆச்சார்யர்களும் எல்லாம் சென்ற வழி இது ஆயிற்று –
நாமும் எல்லாம் இப்போதும் அதனை ஆதரித்தால் ஒரு குற்றம் இல்லை அன்றோ
மற்றை இரண்டு திருப்பெயர்களையும் சூத்ரர் – சைவர்-முதலாயினாரும்-வைசிய ஷத்ரியர் – மற்றையாரும் -அத்வைதிகள் –
விரும்புவதனால் அன்றோ நாம் அவற்றைத் தவிர்ந்தது –
நம் ஆசார்யர்கள் சென்ற வழியை அன்றோ நாம் ஆதரிக்க வேண்டுவது –

நங்கள் பிரான் அவனே –
நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க
நமக்கு உரிமை இல்லை என்கிறது -அவனே -என்கிற ஏகாரத்தாலே –

நம்மோட்டை குடல் துவக்கு -அயன சம்பந்தம் அறியீரோ
அயனம் ஆஸ்ரயம் பற்றி இருப்பதால் நாராயணன்
நாரங்களை அவன் ஆஸ்ரயித்து இருக்கிறான்
எவ் உயிர் க்கும் தாயாக –
அத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –
கூவுதல் வறுவல்
யார் பிரார்த்திக்க கடவத்தை யார் பண்ணுவது
வஸ்து இழந்த அலாபம் பெற்ற லாபமும் அவனுக்கு
அவன் பாரிக்க வேண்டிய விஷயம் யார் பிரார்த்திக்கிறது
உதர தரிப்பு ரத்த சப்தம் -உண்டே
உம்முடைய லாபத்துக்கு -நான் தானே –
சமாதானம் பண்ணினான் இத்தை அருளி
நன்றாக -நாரணனே -நான் உன்னை அன்றி இலேன் -ணீ என்னை அன்றி இல்லையே -திரு மழிசை ஆழ்வார் –
சமாஹிதர் ஆனார் -ஆழ்வார்
கொடையாளி ஆக வாங்குபவர் வேண்டுமே –
மையல் ஏத்தி உன் முகம் மாய மயக்கு-மாய மந்த்ரம் தான் கொலோ அம்மான் போடி தான் இது மாமா கூப்பிட வைக்கும்
ஆழ்வார் முன்னமே அறிந்தார்
பொய் நின்ற ஞானம் போதே அறிவார்
திரு முகம் மண்டலம் -மாய மந்த்ரம் போட்டு மயக்க
வார்த்தை சொன்னால் வந்த கார்யம் மறந்து -திருஷ்டாந்தம் –
கௌசல்யார் -பின் தொடர
திரும்பி பார்த்து புரிந்து பார்த்து
மீட்ககைக்கு போன இவள் மங்களா சாசனம் செய்து மீண்டாள் இ ரே
தான் வந்த கார்யம் மறக்கும் படி
பார்வைகள் உக்திகள் இருக்கும் படி
வார்த்தை சொன்னால் அவன் வழி போகும் படி இ றே இருப்பது
பேறு இழவு-ஆராய வேண்டாமே அவனை அறிந்தால் -அவன் சொத்து -ஸ்வாமிக்கு தான் பேறு இழவு
விசேஷ கடாஷம் பண்ணின படியையும்
எல்லை நிலமான சீலம் அனுசந்தித்து
நாராணாம் அயனம் -ஆஸ்ரயம் -தத் புருஷ சமாயம் -வேற்றுமை தொகை -நாரன்கல் அத்தைனைக்கு ஸ்வாமித்வம் ஞான சக்திகள் தெரியும்
பகு விரூ கி சமாசம் அன் மொழி தொகை நாராயா அயனம் யஸ்ய -எவனுக்கு ஆஸ்ரயம் அந்தர்யாமி
சரீரம் உள்ளே -களேபரம் ஜுகுப்சை-வாத்சல்யம் சௌலப்யம் சௌசீல்யம் -மூன்றும்
எல்லை சீல குணம்
மகோத மந்த –
சீலவான் காண அபேஷை பிறந்து
இருந்த இடம் போக சக்தி இல்லை கால் நடை இட முடியாமல் உருகி உடை குலை பட்டார்
துவக்குண்டார்
போனாலும் ஓன்று செய்கை மிகையாம்படி இருந்தான் அவனும்
ஒன்று பிரதானம் பண்ண வேண்டாமே
படிப் படியாக சொல்லி
தொழுது எழுவதும் மிகையாக
இவர் செய்ய வல்லவராக இல்லை உருகி தளர்ந்து
சீல குணம் பிரசுரம் மிகுதி சொல்லி தலைக் கட்டுகிறார் -இத் திருவாய் மொழியில்
மா முனிகள்
உள்ளது எல்லாம் செய்கின்றேன்
நாராயணனோ அன்றோ நான்
பேறு இழவைக் காட்ட
சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் –
சமாகிதர் ஆனார் –
வேறு ஒரு நிர்வாகம்
கண்கள் சிவந்து 8-8-இது வரை 6 திருவாய்மொழி
கண்கள் சிவந்து பிரணவ அர்த்தம் -ஜெவாத்மா ஸ்வரூபம் காட்டி
நாம சப்தார்தம் அவனே உபாயம் கரு மாணிக்க மலை அனன்யார்க சேஷத்வம் சாப்தம்
உற்றமும் உன் அடியார்ர்க்கு அடிமை தாத்பர்யம் நெடுமாற்கு அடிமை சொல்லி
கொண்ட பெண்டிர் -அவனே பந்து நாராயண சப்தார்தம்
ஆய -நான்காம் வேற்றுமை கைங்கர்ய பிரார்த்தனை பிரார தனாயாம் சதுர்த்தி
பண்டை நாளாலே-சொல்லி
திருமந்தரம் அர்த்தம் -சப்தம் ஐந்து
என்ன மந்த்ரம் சொல்ல வேண்டுமே
வாசுதேவன் விஷ்ணு இவற்றிலும் உண்டே
நான் சொல்வது ஷட் த்வாதச அஷரி இல்லை அஷ்டாஷரம் சொல்கிறேன்
நாராயண சப்தம் தெளிவாக காட்டி

கண்கள் சிவந்து முதல் 2 அரை பாட்டாலே -அகாரார்தம்
மேலே 1 அரை லுப்த சதுர்த்தி அவனுக்கு
உணர்வு -அவனுக்கே மத்யம அஷார்த்தம் உகாரார்தம் –
மத்திய பதம் நமஸ்
த்ரிதிய அஷரார்தம் மகார்த்தம்
அத்யந்த சேஷத்வம் யானும் தானே ஒழிந்தான்
மத்யம அஷர அனன்யார்க சேஷத்வம்
தேனும் பாலும் கன்னலும் ஒத்து போக்யதை தான் உண்டு போக்த்ருத்வம் இல்லை
இது சேஷத்வம் -பிரித்து சொல்லாமல்
சதுர்த்தி அர்த்தம் -அவனுக்கு -மத்யம அர்த்தமும் -அவனுக்கே வேறு யாருக்கும் இல்லை
வஸ்து -இருக்க வேண்டும் –
கலந்து அருளிச் செய்தார்
மகார சப்த வாச்யன் -வை லஷண்யம் மேலே நான்கு பாட்டால்
ஆக 8 பாட்டு
கடைசி இரண்டு பாட்டுகளில் பாஹ்ய குத்ருஷ்டிகள் நிரசித்து
கைவல்யார்த்தி நிரசித்து
ஆக பிரணவ அர்த்தம் -கண்கள் சிவந்து
நமாஸ் -கரு மாணிக்க மலை நெடுமாற்கு அடிமை
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும்
வார்த்தை -தாத்பர்யம்
த்வனி -சூர்யன் அச்மித்தான் -திருடன் சொன்னால்
போகம் அனுபவிப்பவன்
தூங்கலாம் யார் சொல்கிறான் எத்தை நினைத்து சொல்கிறான்
பாகவத சேஷத்வம்
அனன்யார்க சேஷத்வம் -வேறுயாருக்கும் -பேச்சு பதில் வாழ மாட்டாள் -தெரிவிக்க
கன்னிகை ஒருவனுக்கு மட்டுமே என்றும் தனக்கு அன்று இருக்க -கரு மாணிக்க மலை காட்டி அருளி
தோழி அவனுக்கே அற்று தீர்ந்தவள் -ஸ்வரூபம் சேராது
அவனுக்கு அற்று தீர்ந்தவள் காட்டி
ஸ்வா தந்த்ர்யம் இல்லை
அவன் இட்ட வழக்கு
நெடுமாற்கு அடிமை -பாகவத செஷ்ச்த்வம்
கொண்ட பெண்டிர் நாராயண ஸ்வாமி வாத்சல்யம் உண்ட பிரான்
வ்யாபகத்வம் -காட்டி அருளி –
மேலே சதுர்த்தி அர்த்தம் கைங்கர்ய பிரார்த்தனை
பிரார்தயாயாம் சதுர்த்தி நான்காம் வேற்றுமை –
குற்றேவல் செய்து ஆக வேண்டும்
அல்லாத வ்யாபக மந்த்ரங்களில் பிரணவம் நமஸ் ஸ்வாமித்வம் இவை உண்டே
விஷ்ணவே ஷட் அஷரி
வாசுதேவ த்வாதச அஷரி
நாராயண -அஷ்ட அஷரி
மூன்றிலும் உண்டே –
தாம் ஆதரித்த -மந்த்ரம் இதில் விவரித்து காட்டுகிறார்
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் நிர்வாகம் இது –

நாராயணன்
தம் அபேஷிகை செய்வான் நிச்சயம் என்கிறார் முதல் பாட்டில்
நாங்கள் பிரான் அவனே –
உலகு அளிக்கும்
தேவோ நாம சகஸ்ரவான்
அவன் வேண்டாம் திரு நாமமே போதும்
பேர் உடையவன் என்ற பெருமை தான் என்கிறார்
பீடு -பெருமை
கார் போன்ற அர்த்தம் இல்லை
ஆயின -மேகமே அதுவே முற்று உவமை என்கிறார்
ஓர் திரு நாமமே ஆயிரம் முகத்தால் ரஷிக்கும்
ஐஸ்வர்யம் யஜச் -அநேகம் படி ரஷிப்பான்
ஓர் ஒப்பற்ற
ஓன்று ஒன்றே போதும்
அது போலே ஆயிரம்
உலகு -லோகமாக மொத்தமாக ரஷிக்கும்
whole sale போலே –
குனாகுனம் பாராமல் அனைவரையும்
ஏழு சர்வ லோகங்களையும் ஏழு ஏழு எல்லா
அவன் ஆஸ்ரிதர் ஒருவனை ரஷிப்பான்
திரு நாமம் அனைவரையும் ரஷிக்கும்
தீங்கு இன்றி நாடு எல்லாம் உத்தமன் பேர் பாடி –
ஷிபாமி -அவன் செய்யலாம்
திரு நாமம்
பேருக்கு ஓன்று ரஷிக்க அவனை வைத்து
ஆயிரம் கொண்டதோர் பீடு
பல பசுக்களை உடையவன்
நாமவந்தாக
சோறு தண்ணீர் -உபாயமாக ஆயிரம் திரு நாமங்கள்
சர்வ அதிதி சத்காரம் -செய்ய சேர்த்து வைப்பது போலே
திரு நாமம் ரஷிக்கும் வ்யக்தி வேண்டாம்

ஐதிகம் பேரே போதும் என்பதை காட்ட
கோயில் ஆத்தான் -பிள்ளை போனதும் பட்டர் திருவடி கிட்டி –
சிஷ்யர் -பட்டர் திரு நாமம் இட்டார்
அன்ன திருநாமம் ஆதரித்து பிள்ளை லோகாச்சார்யர் போலே
இந்த பிள்ளை பால்யத்தில் மறித்து போக
உம் பேருக்காக பேரை வைத்தேன்
பேர் உடையவன் நான் இருக்கிறேன் –
தம்மை போலே விக்ரகம் கொடுத்து அருளி பட்டர் பிரசாதித்து அருளினார் –
வ்யக்தியே வேண்டாம் திரு நாமமே போதும் –
பீடு பெருமை
கரை கட்டா காவேரி போலே
திரு நாமம் பெருமை அளவு படுத்தி அறிய திரு மேனி கொண்டவன்
கார் ஆயின காள நன் மேயினான்
முற்று உவமை
காராயினான் மேகமாய் இருக்கிறான் –
பெருககாற்றில் -தெப்பம் -உபமானம்
மேயினான் -உபமான ரஹிதம்
இப்படி உள்ளாவான் யார் -நாராயணன்
ஞான சக்தியாதிகளும்
ஞான ஆனந்தம் அமலத்வம்
ஸ்வரூபம் நிரூபகமாக தர்மம் -இவை மூன்றும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷங்கள் மற்றவை –
ஆயிரம் சொல்லி
அவற்றில் மூன்றை வ்யாபக
பிரதானம்
இரண்டை கழித்து இதுக்கு பிராதான்யம் -காட்டி
மத்வர் -1011 திரு நாமம் சங்கரர் பட்டர் 1000 திருநாமங்கள்
அந்தணர் மாடு அந்தி வைத்த மந்த்ரம்
நமோ நாராயணன்
வன் புகழ் நாராயணன்
கண்ணன் -திண்ணம் நாரணனே
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்து
நான்கு
திரு நாரணன் செல்வ நாரணன்
போகம் பேரர் வன் புகழ்
சயன பேரர் வாழ் புகழ் நாரணன் –
திரு மந்த்ரம் பரம உத்தேச்யம் -ஆச்சார்யர் –
நமக்கு அவற்றை ஆதரித்தால் குற்றம் இல்லை
சூத்ராதிகள் மற்றவர் பரிக்கிரகிக்க
அசிஷ்ட பரிக்க்ரகம் உண்டே
சைவ பண்டாரங்கள்
வைஷ்ணவர்
சைவா-வேற ஸ்மார்த்தா வேற
சைவா -சூத்ரார் முதல் மூன்று வர்ணங்கள்
சர்வத்ர வசதி வாசு
ருத்ரன் எங்கும் வசிக்கிறான் -வாசு சொல்வர்
யோகம் காரணத்தால்
அது போலே விஷ்ணு சப்தம்
அத்வைதிகள் உபாசன வாசுதேவ மந்த்ரம் சொல்லி
குறை இல்லா நாமம் நாராயண மந்த்ரம் ஒன்றே
அப்பைய தீஷிதர் நத்வம் பரம் நகாரம் தலையை உடைத்தது -தவர்க்க நகாரம் மூன்று சுழி நகரம்
அசிஷ்ட பரிக்கிரகம் அபூர்த்தி குற்றம் உண்டே இவற்றுக்கு –
இத்தால் தவிர்ந்தது
தேவதாந்தர பாதங்களாக சொல்ல முடியாதே -நாராயண
ஆச்சார்யர் போன வழி நாமும் போக வேண்டும் –
திருபுர தேவியார் வார்த்தை -எம்பெருமானார் வார்த்தை
நாங்கள் பிரான் அவனே
கூவுதல் வருதல் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க வேண்டாமே அவனே செய்து அருளுவான் –

——————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: