ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -1-ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

பிரவேசம் –

ஸ்ரீ பாஷ்யகாரர் தம் திரு உள்ளக் கருத்தில் அறுதி இட்ட அர்த்தம்
பனை நிழல் போலே தம் ஒருவர் அளவிலே பர்யவசியாதே
கல்பக தருச் சாயை போலே பர உபகார அர்த்தமாக
உபாய உபேயங்களை அனுஷ்டிப்பான் என்று பர உபதேச ப்ரவருத்தர் ஆகிறார் -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே –
பெரிய கத்யத்திலே சாமான்ய பகவத் விஷயமாக அவரை நோக்கி
ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார்
ஸ்ரீ ரெங்க கத்யத்தில் சௌலப்யத்துக்கு எல்லை நிலமான
பெரிய பெருமாள் விஷயமாக அவரை நோக்கி ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார் –
இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக
பிறரை நோக்கிக் கர்த்தவ்ய உபதேசம் பண்ணுகிறார் –

ஸ்ரீ பாஷ்யத்தில்
லோகத்தில் துராசாரம் உபாயம் என்பார்
தேவ தாந்திர உபாசனம் உபாயம் என்பார்
தேவதையை ஒழியவே கேவல கர்மம் உபாயம் என்பார்
கேவலம் ஜ்ஞானம் உபாயம் என்பார்
கர்ம ஜ்ஞான சமுச்சயம் உபாயம் என்பாரே கொண்டு
வேத வாக்யங்களை விகல்ப்பிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளை
நிரசிக்கைக்காக
நீங்கள் சொல்லுகிற வாக்யங்களுக்கு பொருள் நீங்கள் சொல்லுகிற படி அல்ல –
யுக்திகள் இருந்த படியாலும்
பரமாணாந்த ரங்கள் இருந்த படியாலும்
கர்ம ஜ்ஞான சஹ க்ருதையான பக்தியே உபாயம் என்று சொல்லுகிற இதுவே பொருள் -என்று
சாதிக்க வேண்டுகையாலே
பிரபத்தியும் உள்ளே ஸூசிதமாய்க் கிடக்கச் செய்தேயும்
பக்தியிலே நோக்காக உபபாதித்து அருளினார் –
இவ்வளவாலே-துஸ் சகையான பக்தியை உபாயம் என்று பிரமித்து மந்த மதிகள் பயப்படாமைக்காக
இப்படிப் பட்ட பக்தி சித்திக்கும்
புருஷார்த்த சித்திக்கும்
சரமமான உபாயம் பிரபத்தியே என்னும் இடத்தை உபபாதித்து அருளினார் -பெரிய கத்யத்திலே –
பக்தி சாத் குண்யத்துக்கும் பிரபத்தியே வேணும் என்று பிரபத்தி வைபவம் சொன்ன இவ்வளவாலே
பிரபத்தி அங்கமாய்
பக்தி தானே ஸ்வ தந்திர உபாயமோ என்னும் அதி சங்கை பிறவாமைக்காக
ஸூ சகமாய் ஸ்வரூப அனுரூபமாய் -இதர நிரபேஷமாய்
ஸ்வ தந்த்ரமான பிரபத்தி உபாயம்
என்னும் இடத்தை வெளி இட்டார் ஸ்ரீ ரெங்க கத்யத்திலே –
இனி
இதில் -இப்படி உபாய நிஷ்கர்ஷம் பிறந்த பின்பு
இவ் உபாய பிராப்யமான தேச விசேஷ வைபவத்தையும்
அத் தேசாதிபதியாய் -அனுபாவ்யமான அவ் வஸ்து வைபவத்தையும்
அவ் வஸ்து வைபவ அனுபவ ஜநிதமான கைங்கர்யத்தையும்
ஸ்ரோதாக்களுக்கு ருசி பிறக்கைக்காக அருளிச் செய்து
இவ் வர்த்தத்தில் ருசி பிறக்கைக்கு அடியான பாக்கியம் உடையார்
இப் பேறு பெற்று வாழ்ந்திடுக -என்று
உபாய அம்சத்தை சங்குசிதமாக அனுவதித்து
உபேய அம்சத்தை பரக்க அருளிச் செய்து -தலைக் கட்டுகிறார் –

இக் கத்யம் தானும் ஆறு சூரணை யாய் இருக்கும் –
அதில் முதல்  சூரணையாலே –சரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வைலஷண்யத்தையும்
அதுக்கு எதிர் தட்டான தன்னுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து
இப்படி இருந்துள்ள எனக்கு அவ் வஸ்துவைப் பெறுகைக்கு பிரபத்தியை ஒழிய வேறு உபாயம் இல்லை என்று அறுதி இட்டு
அவனுடைய சௌசீல்யாதி குணங்களே பற்றாசாக அவன்
திருவடிகளிலே சரணம் புகுவன் -என்கிறார்-
இரண்டாம் சூரணையிலே பலத்துக்கு சக்ருதேவ அமைந்து இருக்கச் செய்தேயும்
மனஸ் வேறு ஒன்றில் கவலை போகாமைக்கும் தனக்கு கால ஷேபத்துக்குமாக நித்ய அனுசந்தானம் பண்ணுவன் -என்கிறார்

மூன்றாம் சூரணையிலே இவ் உபாய நிஷ்டனானவனுக்கு பல பிராப்த்திக்கு உறுப்பான
அர்ச்சிராதி வழியே போய் பிரகிருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று பிரவேசிக்கிற நித்ய விபூதி வைபவத்தையும்
அத் தேசத்தின் உடைய பண்பையும்
அங்கு உள்ள அலங்காரங்களையும்
அப்படி அலங்க்ருதமான தேசத்தில் உபய  நாய்ச்சிமாரும் தானுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அவர்களாலே பரிசர்யமாணனாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனையும்
அந்த நாய்ச்சிமாருக்கு அனுபாவ்யமான திவ்ய  அவயவ சௌந்த்ர்யத்தையும்
அதுக்கும் அதிசய பாதாகமான திவ்ய ஆபரணங்கள் உடைய ஸூ கடிதத்வத்தையும்
இவற்றைக் காத்தூட்டும் திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
இஸ சமுதாய சோபையைக் கண்டு அனுபவித்து
அவ் வநுபவ ஜனித ப்ரீதியாலே அநேக்தாபாவித்து அடிமை செய்யும் சூரி பரிஷத்தையும்
அவர்களால் அநவரத பரிசரித சரண நளினனாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இப் பேற்றை நாம் எப்போது பெறக் கடவோம் -என்று மநோ ரதித்து
அம மநோ ரத அனுகுணமாகச் சென்று கிட்டி
பெருமாளே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவன் -என்கிறார்

நாலாம் சூரணையிலே இவன் அபேஷ அனுகூலமாக அவனாலே ச்வீக்ருதனாய்க் கொண்டு
அனுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பன் -என்கிறது

ஐந்தாம் சூரணையிலே இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்த இழவு தீர
அநந்ய பரனாய் இமையாத கண்ணினாய்க் கொண்டு
சதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது

ஆறாம் சூரணையிலே
அவன் இவனைக் குளிரக் கடாஷித்துத் திருவடிகளை தலையிலே வைக்க
அடி சூடும் அரசாய்-பெருமாள் திரு மொழி -10-7-
ஸ்வாராஜ்ய சாம்ராஜ்ய துரந்தரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

————————————————————————————–

சூரணை 1- அவதாரிகை
அதில் முதல் சூரணையிலே
ஸ்வாதீன த்ரிவிதசேதன -என்று தொடங்கி
நாராயணம் -என்னும் அளவாக
சேதன அசேதன விலஷண ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுகுணமான குணங்களையும் சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்ம விபாகாதி
அசேஷ தோஷ அசம்ப்ச்ப்ருஷ்டம்

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜ

ப்ரப்ருதய அசந்க்யேய கல்யாண குணா கனௌ மஹார்ணவம்

பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன்ன மே கல்ப கோடிசஹச்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தச்யைவ  பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரச்ய
அனலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ச்லேஷைக போகச்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத்கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்

ஸ்வ அதீன –
இத்தால் பராதீனமான சேதன அசேதனங்களைப் போல் அன்றிக்கே
ஸ்வ அதீன வ்யாபாரனாய் -இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
ஜகத் வசே வர்த்த தேதம் க்ருஷ்ணச்ய ஸ சராசரம் -என்கிறபடியே
தன்னை ஒழிந்தவை அடைய தான் இட்ட வழக்கை இருக்கும் -என்கிறது –

அவை தான் என் என்னில் –
த்ரிவித சேதன அசேதன –
பத்த முக்த நித்ய பேதேன மூன்று படிப் பட்ட ஆத்மவர்க்கம் -என்ன
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித்து என-இவை

இவை தானேயோ பர தந்த்ரமாய் இருப்பன -எனில்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
இவற்றின் உடைய தர்மி ஸ்வரூபம் என்ன –
தர்மமான ஸ்வபாவம் என்ன
இவற்றின் உடைய வியாபாரம் என்ன இவை
ஸ்திதி
வ்யவஸ்தித ஸ்வ பாவம்
நித்யோ நிதயாநாம் சேதனஸ் சேதநாநாம்
ஏகோ பஹூ நாம் யோ விததாதி காமான் -என்றும்
அசேதன பரார்த்தா ஸ நித்யா சத்த விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே -என்றும்
சேதன அசேதனங்கள் இரண்டின் ஸ்வ பாவமும் நித்யம் ஆகையாலே
ஸ்வரூப ஸ்திதி என்று சத்தா நுவ்ருத்தி சொல்ல வேண்டா –
சேதனனுக்கு ஸ்வரூப பேதம் ஆவது -மாயாவாதிகள் போலே ஏகாத்மா வாய் இருக்கை அன்றிக்கே
ஏகோ பஹூ நாம் -என்றும்
நாநாத்மா நோ வ்யவஸ்தாத- என்றும்
சுக துக்காதி பேதத்தாலே ஆத்மாக்கள் அநேக ரூபமாய் இருக்கை –
ஸ்வபாவ பேதம் ஆவது –ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ நித்யத்வ ஸ்வயம் பிரகாசத்வ சேஷத் வாதிகள் –
பிரவ்ருத்தி பேதம் ஆவது -ஜ்ஞான சிகீர்ஷா ப்ரயத் நாதிகள் –
அசேதனத்துக்கு ஸ்வரூப பேதம் ஆவது -பிரகிருதி மஹத் அஹங்கார தன்மாத்ர ஆகாசாதி பேதத்தாலும்
கலா காஷ்டா முஹூர்த்தாதி பேதத்தாலும்
பின்னமான கார்ய காரணா வஸத வஸ்துக்கள் –
ஸ்வபாவ பேதம் ஆவது -ஜடத்வ பரிணாமித்வ நித்யத்வ பரார்த்தத்வ சத்வாதி குண ஆஸ்ரயத்வாதிகள்
பிரவ்ருத்தி பேதம் ஆவது -கார்யாரம்ப கத்வ -உபாதா நத்வ -திரோதா யாக்த்வ -அப்ரகாசத்வாதிகள்-க்ருஹ உபகரண -ப்ருத்யாதிகள் உடைய-ஸ்வரூப சம்பாத நாதி வியாபாரங்கள்
ராஜாதி களுக்கும் ஸ்வ அதீனமாய் அன்றோ இருப்பது –
அவ்வோ மாதரமோ -என்னில்
க்லேச கர்ம விபாகாதி அசேஷ தோஷ அசம்ப்ச்ப்ருஷ்டம் –
என்கிறபடியே

ஈத்ருச சமஸ்த தோஷங்களும் இன்றிக்கே இருக்கும் இறே
க்லேச -அதாவது -ராக த்வேஷ அபி நிவேசா க்லேசா –
கர்ம -அதாவது -புண்ய பாப ரூப கர்மம்
விபாக -அதாவது -சதி மூலே தத் விபாகா ஜாத்யாயுர்போகா-
ஆதி -சப்தம் வாசனையை சொல்லுகிறது
ஆசயோ நாம வாஸநா – என்னக் கடவது இ றே –
இவற்றுக்கு வச்யனாய் இன்றிக்கே இருக்கை –
இவை ஹேயங்களுக்கு எல்லாம் உப லஷணமாய்
ஏவம் பிரகார மமலம் நித்யம் வ்யாபக மஷயம்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-53-என்றும்
விநா ஹேயைர் குணாதிபி -என்றும் சொல்லுகிறபடியே
சமஸ்த ஹேய ப்ரத்ய நீகன் என்று சொல்லுகிறது –

—————————————

இப்படி ஹேய ப்ரத்ய நீகனாய் இருக்கும் அளவேயோ-என்னில்
சமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆதார பூதன் -என்கிறார்

பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ – என்றும் -த இமே சத்யா காமா -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு சாதனா அனுஷ்டானத்தாலே யாதல்
ஒரு தேவதா ப்ரசாதத்தாலே யாதல்
ஒரு நாள் வரையிலே யாதல்
போதல் வருதல் செய்கை அன்றிக்கே –
குணங்கள் தர்மிக்கு சத்தா பிரயுக்தமாய் இருக்கும் –என்கை
இப்படி ஸ்வபாவ சித்தமாய் இருந்துள்ள குணங்கள் தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
அநவதிக அதிசய –
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குத்ஸ்சநேதி -என்றும்
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -என்றும் சொல்லுகிறபடியே
குணங்களின் உடைய மிகுதிக்கு எல்லை அற்று இருக்கும் –
உள்ள குணங்களுக்கு எல்லை அற்று இருந்தாலும்
இல்லாத குணங்களும் சில உண்டாய் இருக்குமோ –
உள்ள குணங்கள் தான் எவை -என்னும் அபேஷையிலே கிளம்புகிறது –
மஹார்ணவம் –
ஜ்ஞான —
அதாவது -யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேன சதா சவாத -என்கிறபடியே
சர்வ காலமும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத் காரம் –
பல –
அதாவது -ஸ தாதார ப்ருதிவீம் த்யாமுதேமாம் -என்றும்
அதவா பஹூ நோக்தேன கிம் ஜ்ஞா நேன தவார்ஜூன
விஷ்டப் யாஹமிதம் க்ருத்ஸ் நமேகாம் சேன ஸ்திதோ ஜகத்-என்றும்
சொல்லுகிறபடியே -உபய விபூதியையும் அக்லேசேன வஹிக்க வல்ல மிடுக்கு –
ஐஸ்வர்ய –
ஷரம் ப்ரதா நமம்ரு தாஷரம் ஹர
ஷராத்மா நாவி சதே தேவ ஏக – என்கிறபடியே
இப்படி த்ரிவித ஜகத்தை தன் குடை நிழலின் கீழே -துடைக் கீழே -அமுக்கி ஆள வல்லனாகை யாகிற நியந்த்ருத்வம்
வீர்ய –
ந ஸ்ரமோ ந ஸ கேதஸ் தே ஜகத் தாரண சாசனே -என்று சொல்லுகிறபடியே
ஜகத் தாரண நியமனந்களிலே சாரீரமான சமான சர்வ கிலேசங்கள் என்றும் இன்றியிலே இருக்கை –
சக்தி –
பராஸ்ய சக்திர் விவிதை வ ஸ்ருயதே -என்றும்
ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ச்திதௌ ஸ்திதம் மஹா ப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கச்யசித் -என்றும்
சேஷ்டா தஸ்யா ப்ரமே யஸ்ய வியாபி நோவ்யாஹதாத்மிகா -என்றும்
சொல்லுகிறபடியே ஏறிட்டுக் கொண்டதொரு கார்யம் முட்டுப் படாதபடி செய்து தலை கட்ட வற்றான சாமர்த்தியம்
தேஜ-
ரகாராதீ நி நாமாநி ராமதரஸ் தஸ்ய ராவண
ரத்தானி ஸ ரதாச்சைவ தராசம் சஞ்சயந்தி மே -ஆரண்ய -39-17-என்கிறபடியே
வ்யாபாராந்தர நிரபேஷமாக இவன் பேர் சொன்ன போதே
எதிரிகள் குடல் குழம்பும் படியான மதிப்பு
அன்றியே
இத்தால் பஹூ பிரயத்ன சாத்தியம் ஆனவற்றை அல்ப யத்னத்தாலே
தலைக் கட்ட வல்லன் -என்றபடி
ந தச்யேசே கச்சன தஸ்ய நாம மஹத் யச -என்கிறபடியே
வீர்ய சக்தி யாதிகளால் பிறக்கும் புகழாகவுமாம்

ஆனால் இப்படி ஷாட் குண்யமேயோ உள்ளது -என்னில்
ப்ரப்ருதய
த்வா நந்த குணச யபி ஷடெவ ப்ரதமே குணா
யைஸ் த்வஏவ ஜகத் குஷாவன்யேஸ் அப்யந்தர் நிவேசிதா -என்கிறபடியே
இவை தொடக்கமான குணங்கள் பலவும் உலா -என்கிறார்
இப்படி பல உண்டானாலும் இத்தனை என்று எண்ணப் பட்டு இருக்குமோ என்னில்
அசங்க்யேய  –
சக்யாதும் நைவ சக்யந்தே குணா -என்றும்
ஸ தே குணா நாம யுதைக தேசம் வதேன்ன வா -என்றும் சொல்லுகிறபடி
எண்ணிறந்து இருக்கும்
இப்படி எண்ணிறந்து இருக்கைக்கு அடி தோஷ குணங்கள்  கூடியோ என்னில்
கல்யாண –
பஹாவோ ந்ருப கல்யாண குணா -என்றும்
சந்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷாச்ச சார்ன்கின
ஆனந்த்யாத் ப்ரதமோ ராசி அபாவாதேவ பச்சிம -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ- என்றும் சொல்லுகிறபடியே
ஹேய ரஹீதமான குணங்கள் முடிவு இன்றிக்கே இருக்கும்
கல்யாண -ஆஸ்ரயமான அவன் தன்னோடு
அநு போக்தாககளோடு வாசி அற மங்களா வஹமாய் -சுகா வஹமாயும் இருக்கும்
கல்யாணம் மங்களம் சுபம் -என்னக் கடவது இ றே
லோகத்திலும் இங்குத் திரள் என் -துக்கமோ கல்யாணமோ -என்று துக்க ப்ரதியோகியாக
சுகத்தை சொல்லக் கடவது இ றே
குணா –
கேட்ட போதே செவி புதைக்க வேண்டும்படி இருக்கை அன்றிக்கே
குன்யந்த இதி குணா -என்றும்
ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திருவாய்மொழி -8-1-6-என்றும் சொல்லுகிறபடியே
அஹோ அஹோ என்று கிழவி நூல் கொண்டு -கீழ் நூல் -பலகாலும் ஆவர்த்திக்கும் படியாய் இருக்கை
இப்படி ஒரோ குணங்களேயோ சங்கையும் அவதியும் இன்றிக்கே இருப்பது -என்னில்
கனௌ –
தெஜசாம் ராசும் -என்றும்
ஒண் சுடர்க் கற்றை -திரு வாய் மொழி -7-7-6-என்றும் சொல்லுகிறபடியே
ச்வாமித்வ அனுபந்தியான சுர்யம் என்ன வீர்யம் என்ன பராக்ரம் என்ன
சாதுர்யம் என்ன ஸ்தைர்யம் என்ன தைர்யம் என்ன
ஏவமாதி குணங்கள் –
சௌலப்ய அனுபந்தியான பவ்யத்தை என்ன கிருபை என்ன அபராத சஹத்வம் என்ன
கிலேச சஹிஷ்னுத்வம் என்ன
தோஷத்தில் குணபுத்தி என்ன பிரத்யுபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்-
சௌசீல்ய அனுபந்தியான ஸ்வ வைப அஞ்ஞானம் என்ன
பரகீய ஹேய அஞ்ஞானம் என்ன அக்ருத்ரிமத்வம் என்ன ஏவமாதிகள்
வாத்சல்ய அனுபந்தியான பஷபாதம் என்ன தோஷத்தில் குணபுத்தி என்ன
உபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்
சந்தோஷ அனுபந்தியான  பிரமோத ஆனந்தாதி குணங்கள் என்ன
ஏவமாதியான ஒரோ குணங்களைப் பற்றி திறம் திறமாக வரும் குணங்களுக்கு ஓர் எல்லை இல்லை என்கிறது
இப்படிக்கொத்த குணங்கள் தான் தனித் தனியே அலககாயோ இருப்பது என்னில்
ஒக
ஊர் வாரியம் காட்டு வாரியம் மலை வாரியம் ஏரிகள் உடைந்த வாரியம் ஓர் இடத்திலே கூடினால்
கங்கும் கரையும் அழிந்து கரை காண ஒண்ணாதே திரை மேல் திரையாக ஒரு வெள்ளமாக வருமா போலே
சமஸ்த குணங்களும் ஒரு வழிப் பட்டு இருக்கும் என்கிறது
எல்லாம் கூடினாலும் ஆற்று வெள்ளம் தனித் தனி நீர்களைப் பிரித்து அறிய ஒண்ணாதபடியும்
கரை அழியப் பெருகினாலும் ஓர் இடத்தில் வந்த நீர் அவ்விடத்தில் நிலை நில்லாது ஒழியக் கடவதுமாய்
மலையிலே அடி அற்றவாரே  வற்றக் கடவதுமாய் இ றே இருப்பது
அப்படி இவ் வாஸ்ரயத்தில் நிலை நில்லாதபடி அஸ்திரங்களுமாய் அநித்யங்களுமாயோ  இருப்பது என்னில்
அரணவம் -என்கிறது –
சமுத்திர இவ சிந்துபி -என்கிறபடியே எல்லா நீரும் கூடிக் கடலிலே பர்யாவசிக்கவும்
அவ்விடத்தை விட்டுப் போகாது ஒழியவும் வற்றாது ஒழியவும் கடவதே இருக்குமா போலே
இங்கும் எல்லா குணங்களும் சேர இருக்கக் கடவதே நித்யமுமாயும் இருக்கும்
அரணவம் -அர்ணஸ் ஆகிறது ஜலம் ஆகையாலே
லவண இஷூ சூரா சர்ப்பி ததி ஷீரங்கள் ஆகிற இவ்வருகில்
பரிச்சின்னங்களான ஷட் சமுத்ரங்கள் போல் அன்றிக்கே
இவை இத்தனைக்கும் அவ்வருகாய்
அதிக பரிமாண சுத்த ஜலம் போலே பெருத்து இருக்கும் -என்கிறது
இப்படி யானாலும் அது தானும் லோகாலோக ஸ்வேத த்வீபாதிகளால் பரிச்சின்னமாய் அன்றோ இருப்பது
அது போலேயோ இங்கும் -என்னில்
மஹார்ணவம்
குணா நாமா கரோ மஹான்-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோ ததி -என்றும் சொல்லுகிற படியே
அம்ருதமாய் இருப்பதொரு பெரும் புறக் கடல் -பெரிய திருமொழி -7-10-1- -என்கிறது –

—————————————————————————————

பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன்ன மே கல்ப கோடிசஹச்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தசைவ பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரச்ய
அனலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ச்லேஷைக போகச்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத் சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத்கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்

இப்படிப் பட்ட ஸ்வரூப ரூப குணங்களை உடையதான ஆஸ்து எது என்னில்
பரம புருஷம் -இத்யாதி
ஏவம் பூதன் நாராயணன் -என்கிறது –
கீத் ருக் பூதன் -என்னில் –பரம புருஷம் –
புருஷ சப்தம் ஜீவ ஈஸ்வர சாதாரணம் ஆகையாலே
பரம -பதத்தை இட்டு வ்யாவர்த்திக்கிறது
பரோமா அஸ்மாதி தி பரம -என்று இவனுக்கு மேலாய் இருப்பார் இல்லை -என்கிறது –
இப்படி சர்வ அதிசாயியான வஸ்துவுக்குப் பேர் என் என்னில்
பகவந்தம் –
ஸ்வா தீன த்ரிவித -என்று தொடங்கி சிருஷ்டி ஸ்திதி யாதி கர்த்ருத்வம் சொல்லுகையாலும்-
ஜ்ஞான பல ஐஸ்வர்ய -என்று ஷாட்குண்ய யோகம் சொல்லுகையாலும்
பூர்ண ஷாட் குண்யன் என்றும் –ஜகத் காரண பூதன் என்றும் சொல்லிற்று ஆயத்து
ப்ரஹ்மாதி களுக்கும் தத் குண லேச யோகத்தாலே ஔபசாரிகமாக பகவச் சப்த வாச்யத்வம் உண்டாய் இராதோ -என்னில் -அதுக்காக
நாராயணம் –
அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தனாய்
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே-என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் கூட காரண பூதனாய்-ப்ராப்யனும் ஆனவன் -என்கிறது
நாராயணம் -பகவச் சப்தத்தாலும் ஷாட் குணய மாத்திரம்  இறே சொல்லிற்று
ப்ரப்ருதி அசந்க்யேய கல்யாண குணா கனௌ மஹார்ணவம் -என்று சமஸ்த கல்யாண குணாஸ்ரயம் சொல்லுகையாலே
அத்தால் பளிதமான திரு நாமம் சொல்லுகிறது –
நாராயணம் பரம புருஷம் -என்கையாலே
ஸ்ரீ புருஷ ஸூக்த பரமான பிரதிபாத்யம் சொல்லுகிறது –
பகவந்தம் -என்கையாலே
பகவான் பவித்ரம் வாசுதேவ
பவித்ரம் வாசுதேவோ பகவான்
சங்கர்ஷணோ பகவான்
ப்ரத்யும்னோ பகவான் -இத்யாதி
ரஹச்யாம்னாய ப்ரதிபாத்யத்வம் சொல்லுகிறது –
நாராயணம் -என்கையாலே நாராயண அநுவாக பிரதிபாத்யம் சொல்லுகிறது
ஆக -இத்தால் வேதே ராமாயனே சைவ புராணே பாரதே ததா
ஆதௌ மத்யே ததாந்தெ ஸ விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும்
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ச்ம்ருதிர் ஜ்ஞான மபோ ஹ நஞ்ச
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் -என்று
சொல்லுகிற படியே க்ருத்சன வேத ப்ரதிபாத்யனான நாராயணன் -என்னும் அர்த்தம் சொல்லுகிறது-

இதுக்கு முன் ப்ராப்ய விஷய வைலஷண்யம் சொல்லிற்று ‘இனி இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லுகிறதுதத் பிராப்தயே-என்னும் அளவாக –
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய –
நாராயண சப்தத்தால் பிரதிபாதிக்கப் படுகிற அர்த்தத்தை அனுசந்திக்கிற படி –
ச்வாமித்வ -சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகள் இ றே நாராயண சப்தார்த்தம் –
ஸ்வாமித்வேந -என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லுகிறது
குருத்வேந -என்கையாலே பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்கிற சௌலப்யம் சொல்லுகிறது –
ஸூ ஹ்ருத்த் வேந -என்கையாலே சௌசீல்யம் சொல்லுகிறது
ஸ-காரத்தாலே வாத்சல்யம் சொல்லுகிறது
அன்றிக்கே -உக்த சமுச்சயமாய் -வாத்சல்யம் உப லஷிதம் ஆகவுமாம் –
அன்றிக்கே
ஸ்வாமித்வேந -என்று பரம புருஷம் -என்று பரம புருஷ சப்தத்தாலே ஸூ சிதமான புருஷ ஸூ க்தத்தில்
பிரதிபாதிதமான ச்வாமித்வத்தை சொல்லுகிறது
குருத்வேந -என்று பகவந்தம் -என்கையாலே பகவச் சப்த ஸூ சிதமான ரஹச்யாம்நாயத்தில்
சங்கர்ஷணோ பகவான் -என்று சங்கர்ஷ ண ரூபேண ஜ்ஞானப் பிரதானம் பண்ணின குருத்வத்தைச் சொல்லுகிறது –
ஸூ ஹ்ருத்த் வேந -என்று -நாராயணம் -என்று நாராயண சப்தத்தாலே ஸூ சிதமான நாராயண அனுவாகத்தில்
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ருயதேஅபி வா
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்
தஸ்ய மத்யே வஹ்நிசிகா அணி யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார ஸூ கவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா
தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித
ஸ ப்ரஹ்மா ஸ சிவச் சேந்த்ரஸ் சோஷர பரம்ஸ் ஸ்வராட் -என்றும்
இவற்றை விட மாட்டாதே உட்புகுந்து கலந்து இருக்கும் -என்று ப்ரதிபாத்யமான சௌஹார்த்த தத்தைச் சொல்லுகிறது –
ஸ்வாமித்வேந -என்கையாலே சரணாகதி பண்ணுகைக்கு பற்றாசான ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லுகிறது
குருத்வேந -என்கையாலே சிஷ்ய -ஆச்சார்யா சம்பந்தம் சொல்லுகிறது –
ஸூ ஹ்ருத்த் வேந -என்கையாலே சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்று சக்ய நிபந்தனமான சம்பந்தம் சொல்லுகிறது –
சௌசீல்யம் சொல்லுகிறது என்றும் சொல்லுவார்கள்
இத்தால் சர்வ வித சம்பந்தமும் அவனோடு -என்றபடி
பரிக்ருஹ்ய -என்று ஒரு தலை மாற்றமாக தான் ப்ரீதி பத்தி பண்ணுகை  அன்றிக்கே சர்வாவி கீதமாக லோக பரிக்ரு ஹீதமான அர்த்தம் என்கை-
பரிக்ருஹ்ய -பரித்தோ க்ருஹீத்வா
சாஸ்திர அவலோக நத்தாலும் ஆச்சார்யா உபதேசத்தாலும்
பகவத் அனுஷ்டானத்தாலும் ஆகிற சர்வ பிரகாரத்தாலும் நெஞ்சிலே ஸ்வீகரித்து

இப்படி அத்தலையில் ச்வாமித்வ அனுசந்தானம் பண்ணின அநந்தரம்
ஸ்வ உஜ்ஜீன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
ச்வாமித்வ பிரதி சம்பந்தி யான தாஸ்ய அனுகுண வ்ருத்தி விசேஷத்தை ஆசைப் படும்படி சொல்லுகிறது –
ஐகாந்திக ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய பரிசர்யைக மநோ ரத–என்கிற பதத்தாலே –
ஐகாந்திக –
ஏகாந்த சம்பந்தியாய் இருக்கை -அதாவது அந்தரங்கம் -என்றபடி –
அது –தத் -பதத்தோடு -அன்வயிக்கவுமாம் –
தத் பாதாம் புஜ த்வயத்தோடே-அன்வயிக்கவுமாம் –
பரிசர்யை யோடு அன்வயிக்கவுமாம்
தத் பதத்தோடு அந்வயித்த போது –நிருபாதிக பந்துவானவன் -என்றபடி –
தத் பதாம் புஜ த்வயத்தோடே அந்வயித்த போது
த்வத் பாத பங்கஜ பரிக்ரஹ தன்ய ஜந்மா
பூயாசமித்யபி நிவேசகதர்த்யமான
ப்ராமயன் நருமாம்ச பண நாய பரேத பூமா
வாகர்ண்ய பீரு ருதிதானி தவாக தோஸ்மி -என்றும்
கிம் சீதலை க்லமவி நோதி பி ரார்த்ரவாதான்
சஞ்சாரயாமி நளி நீதள தால வ்ருந்தை
அங்கே நிதாய கர போரு யதா ஸூ கம் தே
சம்வாஹயாமி சரணாவுத பத்மதாம் ரௌ -என்றும்
பாஹ்ய விஷயங்களில் காமம் போலே அப்ராப்தமாய் இருக்கை அன்றிக்கே
சேஷி உடைய திருவடிகளிலே சேஷ பூதனுக்கு பிறக்கும் காமம் ச்வத ப்ராப்தம் –என்கை –
தத் பாதாம் புஜ த்வய -தத் சதம் பிரக்ருத பராமர்சி யாகையாலே -நாராயணம் -என்று பரஸ்துதனானவனை பராமர்சிக்கிரது
இத்தால் நாராயண சரனௌ-த்வயம் –என்கிற பதத்தை நினைக்கிறது
பாதாம் புஜ த்வய-தத் -என்று தர்மி  ப்ரஸ்துதமாய் இருக்கச் செய்தேயும்
பாத -என்று திருவடிகளைச் சொல்லுகிறது -ஸ்தநந்தய பிரஜைக்கு மாதாவினுடைய முலைக்கண் அபேஷிதம் ஆனால் போலே
சேஷ பூதனுக்கும் ஸ்வரூப ப்ராப்தமாகை
அங்கு முலைக் கண்ணில் பலூருமா போலே –
ததச்ய ப்ரியமபி பாதோ அஸ்யாம்
நரோ யத்ர தேவயவோ மதநதி
உருக்ர மஸ்ய ஸ ஹி பந்து ரித்தா
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும்-
தவாம் ருதஸ் யந்தினி பாத பங்கஜே
நிவேசிதாத்மா கத மன்யதிச்சதி
ஸ்திதேர விந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே -ஸ்தோத்ர ரத்னம் -27-என்றும்
சொல்லுகிற படியே இவனுக்கும் திருவடிகளிலே போக்யதை யூற்று இருக்குமே –
அம்புஜ-இது தான் தைவதமாய் -காஷாய பானம் போலே இருக்கை அன்றிக்கே
ராக பிராப்தமாம் படி போக ரூபமாய் இருக்கும் –
அம்புஜ -அமரர் சென்னிப் பூவை -திருக் குறும் தாண்டகம் -6–ஆகையாலே
குளித்து

மயிருக்கு பூ வைக்கும் போது -சிரஸா தாரயேத் -என்று விதிக்க வேண்டா இ றே
த்வயஉபாயம் த்வயமாய் இருக்கையாலே
உபேயமும் த்வ்யமாய் இருக்கிறபடி
தேவா நாம் தாநவா நாம் ஸ சாமான்ய மதி தைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தே -2-என்னக் கடவது இ றே –
இத்தால் சரனௌ -என்கிற த்வி வசனத்தை  நினைக்கிறது
பரிசர்ய-
சர்யா -சரித்ரம் -அனுஷ்டானம் -கைங்கர்யம் -என்றபடி –
பரிசர்யை ஆவது -சர்வ வித கைங்கர்யம் -என்றபடி –
இவ் வ்வயவசக்தியை ஒழிய பரி சர்யை என்கிற ரூடியாலே
கௌரவ விஷயத்தில் பண்ணும் அநு வ்ருத்திக்குப் பேராய்
அத்தால் கைங்கர்யத்தை விவஷிககிறதாகவுமாம் –
அன்றிக்கே
பரிதஸ் சர்யையாய் -அதாவது -விஸ்வத பர்யேதி-என்றும்
கொண்ட கோயிலை வலம் செய்து -திருவாய் மொழி -10-1-5-என்றும்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கு -திருவாய் -2-10-8-என்றும்
சொல்லுகிறபடியே
பிரதஷிண ஆதி உப லஷணமான அனுகூல வ்ருத்தியைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஏக -மநோ ரத-
புறம்புள்ள பலன்களை எல்லாம் விட்டு
கைங்கர்யம் ஒன்றுமே பெற வேண்டும் என்னும் படியான அபிநிவேசத்தை யுடையவனாய்
தத் பராப்தயே ஸ –
கீழே ப்ரஸ்துதமாய் மநோ ரத விஷயமான பரிசர்யையைப் பெறுகைக்காக
-என்று கீழ் வேறு ஒன்றின் உடைய பிராப்தியைச் சொல்லி
இதன் உடைய பிராப்திக்கும் என்று சமுச்ச்சயிக்கிறது அல்லவே –
சகாரத்துக்கு பொருள் என் -என்னில் அநுக்த சமுச்சயமாய்
சக்ருத் த்வ தாகார விலோக நாசயா
த்ரு ணீ க்ருதா நுத்தம புத்தி முக்தீ
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷண அபி தே யத் விரஹோஸ் திதுஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் சொல்லுகிறபடியே
தத் ப்ராப்தி பலமான ததீய சேஷத்வ ப்ராப்திக்குமாக வென்று
அநுக்த சமுச்சயம் ஆகவுமாம் –
அன்றிக்கே
-என்று –
நின் புகழில் வைகும் தாம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் – பெரிய திருவந்தாதி -59-என்றும்
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாசம் ந விந்தெத தாவ தாஸ்மி கருதீ சதா -ஜிதந்தோ -12-என்றும்
சொல்லுகிற படியே
பரிசர்யா மநோ ரதம் தானே போந்து இருக்க
அதுக்கு மேலே இது பெற வேணும் என்று இருந்தான் ஆகில் என்று பிராப்தி சமுச்சயிக்கிறது -யென்னவுமாம்
இதுக்கு கீழ் உபேய ஸ்வரூபம் சொல்லிற்று –
மேல் இதுக்கு சத்ருசமான உபாய நிஷ்கர்ஷமும்
தத் அனுஷ்டான பிரகாரமும் சொல்லுகிறது –
சரணம் அநு வ்ரஜேத் -என்றது அறுதியாக –
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே -என்று தொடங்கி
மந்வான -என்று அறுதியாக உபாய நிஷ்கர்ஷம் சொல்லுகிறது –
அநந்ய ஆத்ம -தொடங்கி -அனுவ்ரஜேத் -என்றது அறுதியாக உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –
தத் பாதாம் புஜ த்வய-பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஒன்றாகில் – கார்ய காரண யோர் ஐக்கியம் பிரசங்கிக்கும்
ஐக்கியம் பிரசங்கித்தால் சாத்திய சாதனங்கள் இன்றிக்கே ஒழியும்-
இன்றிக்கே ஒழிந்த வாறே அவற்றில் பிரவர்த்தகர் இன்றிக்கே ஒழியும்
பிரவ்ருத்தி இல்லாமையாலே பிரவர்த்தக சாஸ்தரத்துக்கு வையர்த்தமும் அப்ராமாண்யமும் பிறக்கும் –
இத்தனை அநர்த்தங்கள் உண்டாய் இருந்தன –
இதுக்குப் பரிஹாரம் எது என்னில்
தத் பாதாம் புஜ த்வய பரிசர்யை பிராப்யம்
தத் பாதாம் புஜ த்வய பிரபத்தி உபாயம் என்று இட்டு பேதம் உண்டு ஆகையாலே ஒரு விரோதம் இல்லை –
ஆனால் பரிசர்யா ப்ரபத்திகள் உபாய உபேயங்கள் ஆகில்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றும்
தவம் ஏவ உபாய உபேதோ மே பவ -என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஓன்று என்றும்
எம்பெருமானே உபாய உபேயங்கள் என்றும் சொல்லுகிற பிரமாண வ்யவஹாரங்கள் செய்யும்படி என் -என்னில்
பரிசர்யா விஷயமும் பிரபத்தி விஷயமும் ஓன்று ஆகையாலே
விஷயம் ஓன்று ஆனால் பேதம் நடக்குமோ என்னில்
பேதகம் -விசேஷணம் -பேத்யம் -விசேஷ்யம்-என்கிற ந்யாயத்தாலே
பரிசர்யா ஜனித ப்ரீதி விசிஷ்ட விஷயமும்
பிரபத்தி ஜனித பிரசாத விசிஷ்ட விஷயமும்
விசேஷண பேதத்தால் வேறு ஆகையாலே வஸ்து ஒன்றானாலும் பேதத்துக்கு குறை இல்லை
ஆனால் அஜோ கஜோ மகிஷா
கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கௌ -என்கிற இடத்தில்
விசேஷண பேத அதீனமாக விசேஷ்ய ஸ்வரூபத்துக்கு பேதம் நடந்தது இல்லையோ -என்னில் –
விருத்த விசேஷமான அவ்விடத்தில் அப்படி ஆகிலும்
தேவ தத்த ச்யாமோ யுவா சம பரிமாண -என்ற இடம் போலே அவிருத்த விசேஷணம் ஆனவிடத்தில்
விசேஷண பேதாயத்த விசிஷ்டாகார பேதம் வரச் செய்தேயும் ஸ்வரூப பேதம் பிறவாது –
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதெ ஸ
ப்ரஹ்மாத் யவஸ் தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ வராதோ வரேண்ய-என்று
ப்ரஹ்மம் ஒன்றுமே கார்ய காரணமாம் இடத்தில் சூஷ்ம சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம்
ஸ்தூல சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யம் என்று அவிரோதேன நிர்வஹிக்கிறாப் போலே

ப்ரபத்தே –
ததே கோபாய தாயாச்ஞா பிரபத்தி -என்று
துர நுஷ்டேயமான உபாயங்களில் எனக்கு அன்வயம் இல்லை
ரஷகனானவனே உஆயம் ஆக வேணும் என்று பிறக்கிற பிறக்கிற ப்ரார்த்தன அத்யாவசாயம் பிரபத்தி –
அந்யத்-இப்பிரபத்தியை ஒழிய மற்ற உபாயாந்தரங்கள் இல்லையோ -என்னில்
அந்யத் -தொடங்கி -மந்வான -அறுதியாக
அவை எல்லாம் நெஞ்சு உடையார்க்கு நல்ல தீர்த்தம்
நமக்கு அதிகாரம் இல்லை என்று இருப்பான் -என்கிறார் –
அந்யத் -பக்தி -தத் பேதமான சத்வித்யை தொடக்கமானவை –
தத் அங்கமான ஜ்ஞான கர்மங்கள் தொடக்கமான பிரபத்திவ்யதிரிக்தமான உபாயம் –
இப்படி சாஸ்த்ரங்களிலே தாத்பர்யம் பண்ணி விதிக்கிற இவை உபாயங்கள் அன்றோ -என்னில்

ந மே
-இங்கே அஸ்தி யை கூட்டி –ந மே அஸ்தி -இவை எல்லாம் சக்த அதிகாரம் –
அஜஞனாய்-அசக்தனாய் -கர்ம ப்ரவாஹத்திலே அழுந்தி
அது அடியாக -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6-8-
மாதரார் வன முலைப் பயனே பேணி -பெரிய திருமொழி -1-6-1-
இப்படி விபரீதப்ரவ்ருத்தி பண்ணி -ஷிபாமி -ந ஷமாமி -க்கு இலக்காய் இருக்கிற எனக்கு உபாயம் இல்லை –

இப்படி மாறி மாறி பல பிறப்பும் பிறக்கிற பிறவிகளில் இதுக்கு முன்பு இல்லை யாகிலும்
இனிப் பிறக்கும் பிறவிகளிலே ஆகிலும் சாதன அனுஷ்டானம் பண்ணத் தட்டு என் -என்னில்
கல்ப கோடிசஹச்ரேணாபி –
ஒட்டடையை ஆயிரம் நாள் நீரிலே இட்டு வைத்தாலும் முளையாதாப் போலே
கால தத்வம் உள்ளது அனையும் திரிந்தாலும் அதிகாரம் உண்டாக மாட்டாது –
சதா நமஸ்தி –
இத்தை கீழே கூட்டினால் போலே கீழே உள்ள நஞ்ஞை இங்கே கூட்டி
சாதனம் நாஸ்தி -என்று ஆகிறது
எல்லாம் செய்தாலும் க்ருத பிராய சித்தமாம் அத்தனை போக்கி
அபிமத பலத்தை சாதித்து தர மாட்டாது –
சாதனம் நாஸ்தி -என்றால் ஸ்வ ரசமாகத் தொடருவது சாதனம் இல்லை என்று இ றே
அங்கன் அல்ல
சாதனம் ந பவதி -எனக்கு சாதனம் ஆக மாட்டாது -என்ற படி –
இதி மந்வான –
இப்பிரகாரத்திலே அறுதி இட்டு
மந்வான -இந் நினைவு உருவ நடக்க வேணும் என்கிறது வர்த்தமானத்தாலே
தச்யைவ பகவதோ நாராயணஸ்ய-
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று பிரச்துதமான அவன் தன்னுடைய
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று
சோச்னுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே –
பிராப்த்ய உபயோகியான குணங்களையும் குணாஸ்ரயமான தர்மியையும் சொல்லிற்று
இங்கு பகவதோ நாராயண்ச்ய-என்று பிராபகத்வ உபயோகியான குணங்களையும் குணியையும் விவரிக்கிறது –
அகில சத்வதயைக சாகரச்ய-
சகல சத்வ விஷயமாக தைக்கு ஒரு கடலாய் இருக்கும்
அகில சத்வ -இன்னான் இனையான் என்று வரையாதே சகல ஜந்து விஷயம் என்றபடி –
தயா -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷ்ணுதவம்-
தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே பிறர் நோவு கண்டால் ஐயோ -என்கை –
ஏக சாக ரஸ்ய –
தயை யாகிற ஜலத்துக்கு வேறு ஒரு ஆஸ்ரயம்  இன்றிக்கே இவனே ஆஸ்ரயம் ஆகை
அகில சத்வ தயைக சாக ரஸ்ய -என்றது பர பீடா நிரூபணம் பண்ணியோ வென்னில் –
அனலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூலஅமர்யாத சீலவத –
இப்படி குணா தோஷ நிரூபணம்   பண்ண ஒண்ணாத படியான
சீல குணம் உடையவன் -என்கிறது –
திரு உள்ளத்தால் ஆராயப் படாத படியான நன்மை தீமைகளை உடையராய் இருக்கிற
அகண்ட ஜனம் உண்டு -பிரியப் படாத மனுஷ்யர்கள்
அவர்கள் உஜ்ஜீவிக்கைக்கு ஈடாம் படியான நிரவதிக சீலத்தை உடையவனுடைய
தோஷம் திரு உள்ளத்தில் படாத அம்சம் ஏற்றம் ஆகிறது
உள்ள குணங்களை அங்கீ கரித்திலன்  என்றால் இது ஓர் ஏற்றமோ என்னில்
நிக்ரஹிக்கைக்கு அடியான தோஷங்களை நிரூபியாத மாதரம்
ரஷிக்கைக்கு பற்றாசான குணங்களையும் அபேஷியான் -என்றபடி
தான் ரஷிக்கும் போது குண அபேஷை இல்லை என்று கருத்து
அனலோசித –ஆலோசிதம் ஆவது -இவ் வாஸ்ரயத்தில் நன்மை உண்டோ தீமை உண்டோ என்று விடுத்து ஆராய்கை
அது இன்றிக்கே ஒழிகை
குணாகுண-அவை யாவன -நன்மை தீமைகள் -அதாவது அஜஞனோ ப்ராஜ்ஞனோ-நாஸ்திகனோ ஆஸ்திகனோ-
தார்மிகனோ அதார்மிகனோ – விநீதனோ அவிநீதனோ-என்று ஏவமாதிகள் –
அகண்ட ஜன -தேவ மனுஷ்யர்களோடு
ப்ராஹ்மன ஷத்ரியாத் -யநுலோம ஜாதியோடு பிரதிலோம ஜாதியோடு வாசி அற சர்வ விஷயமாக
அனுகூல -இவை கு-மார்க்கங்களைத் தவிர்ந்து நல் வழி போய்க் கரைமரம் சேருகைக்கு உறுப்பாம் படி இருக்கை
அமர்யாத -மரியாதை யாகிறது -அவதி நிரவதிகம் என்றபடி
சீல -பெரியவன் தாழ்ந்தவனோடு கலக்கும் இடத்தில் தன் மேன்மை பார்த்து இறுமாத்தல்
மற்றையவன் தண்மை பார்த்து கூசுதல் செய்யாதபடி புரை அறப் பரிமாறுகிற நீர்மை –
சீல வத -மதுப்பாலே
பூமா நிந்தா பிரசம் சாசூ நித்ய யோகே அதிசாயனே
சம்பந்தே அஸ்தி விவஷாயாம் பவந்தி மதுபாதய -என்று
நித்ய யோக மதுப்பாலே
இக்குணம் இவனுக்கு நித்ய சித்தம் -என்கிறது –
இப்படி அவன் தன நீர்மையாலே எல்லாரோடும் கலந்தாலும் அவர்கள் தன்னைக் கண்டால் வெருவும்படியாய் இருக்குமோ என்னில் –
தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய –
விவேகிகளோடு அவிவேகிகளோடு வாசி அற எல்லாருடைய நெஞ்சும் உருகும்படியாய் இருக்கும்
இப்படிச் செய்கைக்கு அடி என் என்னில்
து -ஒரு விசேஷம் உண்டு
அது தான் என் என்னில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா –
ச்வதஸ் சித்தமான எல்லை இல்லாத மிகுதியை உடைத்தாய் இருக்கிற குணவத்தையாலே-
அடியே தொடங்கி ஒருபடிப் பட்ட குணங்களைச் சொல்லி வர செய்தே
புதுமை போலே குணவத்தயா -என்று சொல்கிறது -என் என்புது -என்னில் –
அவை எல்லாம் ஆத்ம குணங்களைச் சொல்லுகிறது
இங்கு -ராம ராம நய நாபி ராம தாமாச யஸ்ய சத்ருசீம் சமுத்வஹன்
சர்வ தேவ ஹ்ருத யங்க மோசசி -ஆரண்ய -17-9–என்கிறபடியே கண்ணுக்கு பிடிக்கும் படியான
காந்தி சௌகுமார்யாதி களை-விக்ரஹ குணங்களைச் சொல்லுகிறது –
தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய —
பாப்ப வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -ஆரண்ய 17-9- என்றும்
தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா ப லௌ
புண்டரீக விசாலா ஷௌ சீர கிருஷ்ணா ஜி நாம்ப ரௌ -ஆரண்ய -19-14-
அதி ஜயத ந்வாநம வேஷ்ய ராமம்
சரந்தமே காந்த விலாசிநீபி
நூனம் பபூவுர் வன தேவ தாச்ச
மர்த்யான்க நாஜன் மகு தூஹ லின்ய -என்றும் –
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூதோ ஜனகாத்மஜே -சுந்தர -35-8-என்று திருவடியும் அகப்பட்டான் இ றே –
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு -பெரிய திரு மொழி -5-8-1-
என்று மூன்றுக்கும்- இது தானே உதாஹரணமாக்கவுமாம்
மனுஷ்ய
ரூப சம்ஹனனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரு ஸூ ர விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாசின -ஆரண்ய -1-13-என்று ரிஷிகள் அகப்பட்டார்கள் –
ஆதி சப்தத்தாலே ஸ்தாவரங்கள்-அதாவது –
பாஷாண கௌதமவதூவ புராப்தி ஹேது – என்று கல் உருகிப் பெண்ணாம் படி இருக்கை –
அகில ஜன -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற
ஹ்ருதயா நந்த தஸ்ய -கண்ணுக்கு அழகியனாய் -அநபிமத விஷயமாய் நெஞ்சுக்கு பிடியாது இருக்கை அன்றிக்கே
சித்தாபஹாரிணம் -என்றும்
கண்டவர் தாம் மனம் வழங்கும் -பெருமாள் திரு மொழி -8-2–என்றும் சொல்லுகிற படியே எல்லார் நெஞ்சை உருக்கும் படியாகவும்
நெஞ்சு உடையார் நெஞ்சை இழந்து
என் நெஞ்சினாரைக் கண்டால் -திரு விருத்தம் -30-என்று தன் நெஞ்சுக்கு தூது விட வேண்டும்படியாயும் இ றே வடிவு அழகு இருப்பது

இப்படி சர்வ சாதாரணமாய் இருக்கும் இத்தனை போக்கி ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் இல்லையோ -என்னில் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
அவர்கள் விஷயத்தில் தோஷம் தானே போக்கியம் என்று நினைத்து இருக்கும் -என்கிறது
ஆஸ்ரித -பவத் விஷய வாசின -என்றும் -சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி -என்றும் சொல்லுகிறபடியே
அவன் எல்லைக்கு உள்ளே கிடத்தல்
ஒரு பச்சிலை யாதல்
ஒரு மலர் ஆதல்
ஒரு உக்தி ஆதல்
நேர்ந்தவர்கள் –
வாத்சல்ய -கன்றின் உடம்பில் வழும்பை தாய் போக்யமாக நாககுமா போலே
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-என்னும்படி சிநேக விஷயமாகை-
அதாவது -தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
நத்யஜேயம் கதஞ்சன -என்று இருக்கை –
ஏக ஜலதே -ஏகாஸ்ரயமாய் இருக்கை –
இப்படி இவன் ஆஸ்ரயித்தால்-இத்தலைக்கு பலம் கொடுத்து விட்டானாய் இருக்கும் அது போக்கி
தன பேறாக இருக்கும் அது இல்லையோ என்னில்
பக்த ஜன சம்ச்லேஷைக போகச்ய-
தனக்கு நல்லாராய் இருப்பாரோடு சேருகையே பரம பிரயோஜனமாய் இருக்கை –
பக்த ஜன -பக்தி யாகிறது –
பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரிகீர்த்தித
தஸ்மாத் சேவா புதை ப்ரோக்தா பக்தி சப்தேன பூயசீ -என்கிறபடியே
ச்நேஹமாய் -இது பக்த பிரபன்னாதி சாதாரணம்
சம்ச்லேஷக போகச்ய-ஷானே அபி தே யத் விரஹ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -திருவாய் -10-7-8-என்கிறபடியே
இப்படி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாரோடு ஷண மாத்திர விச்லேஷமும் பொறாத படி
கூட இருக்கையே தனக்கு தாரக போஷாக போக்யங்களாக இருக்கும்

இப்படி அனந்தாத்மாக்களோடு புஜிக்கும் இடத்தில்
பரிகர வைகல்யம் உண்டாய் இருக்குமோ என்னில் –
நித்ய ஜ்ஞான க்ரிய ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய-
நித்தியமாய் -போகய சமஸ்த வஸ்துக்களின் உடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டா
பிரயோஜன காலாதி விஷய ஜ்ஞானம் என்ன
க்ரியை என்ன
போக்யங்கள் தான் நினைத்த போது கை புகுரும்படியாய் இருக்கிற பரபுத்வம் ஆதல் சம்பத்தாலான ஐஸ்வர்யம் என்ன
ஏவமாதியான போக சாமக்ரியுண்டு -புஷ்கல காரணம் -இவற்றால் பூரணன் ஆனவனுடைய
இப்படி போகமும் போக சாமக்ரியும் உண்டானால் போக ஸ்தானம் இல்லை யாகில் பிரயோஜனம் இல்லை யாகாதோ என்ன
மஹா விபூதே
லீலா விபூதி போலே கால் கூறாய் பரிச்சின்னமாய் இருக்கை அன்றிக்கே
அதில் மும்மடங்கு பெருமையை உடைத்தாய்
போகத்துக்கு ஏகாந்தமான நித்ய விபூதியை உடையவனுடைய
இப்படிப் பட்ட ஸ்தானத்தில் இருந்து
அநந்த அநந்த போகம் பண்ணும் இடத்தில்
கூட்டு இன்றியே பிரமச்சாரி நாராயணனாயோ இருப்பது என்னில்
ஸ்ரீ மத –
போக ஸ்ரோதஸ் ஸில் கரை காண்கைக்கு சஹாய பூதையாய்
சாஷால் லஷ்மியைத் தனக்கு பிரதான மகிஷியை உடையவனுடைய
இவனுக்கு சம்சாரி சாதாரணமான போகம் அன்றே
அவாப்த சமஸ்த கமதயா ஆனந்த மயனாய் இருந்துள்ள வனுக்கு
நாய்ச்சிமாரோட்டை சேர்த்தியாலே பிறக்கும் போகம் ஆவது என் –
அதில் சகாயம் ஆவது என் என்புது -என்னில்
இவனுக்கு போகமாவது ஆஸ்ரித உஜ்ஜீவனம்
அதுக்கு புருஷகார பூதையாய் நின்று சேர விடுகை சஹாய பூதையாகையாவது
இப்பை இருகிறவன் தன்னையோ பற்றுவது –
சரணாரவிந்த யுகளம் –
ஸ்வரூப ப்ராப்தமுமாய் நிரதிசய போக்யமுமாய் தன் சேர்த்தி அழகே நிதர்சனமாம் படியாக
எல்லாரையும் சேர்த்துக் கொள்ளக் கடவதாய் இருக்கிற இத் திருவடித் தாமரைகள் இரண்டையும்
பற்றும்படி என் என்னில்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன –
ஆத்ம உஜ்ஜீவனம் இது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற நினைவோடு
தத்கத சர்வ பாவேன –
வேறு ஓன்று இல்லாமையாலே இதுவே ரஷகம் என்கிற நினைவோடும்
இந் நினைவுகளோடு கூடச் செய்யப் புகுகிற கார்யம் என் என்னில்
சரணம் அநு வ்ரஜேத் –
புருஷார்த்தத்துக்கு சாதனம் இவனே என்று அத்யவசிப்பன்
புத்யர்த்தத்துக்கு வேண்டுவது வ்ரஜேத் -அன்றோ
அது என் என்னில் –வ்ரஜ -கதௌ -என்கிறது ஜ்ஞான மாத்திர வாசியாய்
அத்யவசாயம் ஆகிற அதிசயத்தை விவஷிக்கிற தாககவுமாம்
அனுஸ் யூதம் வ்ரஜேத் -என்று
த்வய மார்த்தா நுசந்தா நேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே
சர்வ கால அனுவ்ருத்தியைச் சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சரணம் அநு என்று உபாய உத்தேசேன அடைவன் -என்று ஆகவுமாம்

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: