ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -4-5-6—ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை-4-அவதாரிகை –

இனி மேல் இப்படி பிரார்தன அநு குணமாக அங்கீ க்ருதனாய்
கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருப்பான்
என்கிறது –ததோ பாகவதா -இத்யாதியாலே

ததோ பகவதோ ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன
(அமர்யாத சீலவதா அதி ப்ரேமான் வி நேன )
அவலோக நேன அவலோக்ய
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித
அத்யந்த சேஷ பாவாயா ச்வீக்ருத
அநு ஜ்ஞாதச்ச அத்யந்த சாத்வச விநாயாவநன
கிங்குர் வாண
க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத

தத-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணின அநந்தரம்
பகவதோ –
புருஷோத்தமனாலே
ஸ்வயமேவ -இனி இவன் அபேஷித்த படி தானே
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன-
ஆத்ம சமுஜ்ஜீவன ஹேதுவான பார்வையாலே
அவலோக்ய –
கடாஷித்து
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித அத்யந்த சேஷ பாவாயா-
எல்லா தேசத்திலும் எல்லா காலத்திலும்
எல்லா அவஸ்தை களிலும்
உசிதமான முடிவு இல்லாத சேஷ பாவத்தின் பொருட்டு
ச்வீக்ருத அநு ஜ்ஞாதச்ச –
அங்கீ கரிக்கப் பட்டவனாயும் அனுமதி பண்ணப் பட்டவனாயும் கொண்டு
ஸ்வரூப அநு ரூபமான அஞ்சலியைப் பண்ணிக் கொண்டு
அத்யந்த சாத்வச விநாயாவநன கிங்குர்வாண க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத –
சோஸ் நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஜ்ஞான சக்தியாதி கல்யாண குணங்களை அனுசந்தித்து –
ஏதத் சாம காயன்னாச்தே-என்றும்
அடியாரோடு இருந்தமை -என்றும் சொல்லுகிறபடியே சேவித்து இருப்பான் என்கிறார் –

————————————————————————————–

சூரணை -5- அவதாரிகை –

அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வேறு ஒன்றுக்கு ஆளாகாத படி
சதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருப்பான் -என்கிறது
ததஸ்ஸ -இத்யாதியாலே
ததஸ்ஸ அநு பூயமான பாவ விசேஷ
நிரதிசய ப்ரீதா
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் சமர்த்தும்
அசக்த புநரபி சேஷ பாவமேவ யாசமான
பகவந்தமேவ அவிச்சின்ன
ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன அவலோகயன் ஆஸீத
ததஸ்ஸ –
பின்னையும்
அநு பூயமான பாவ விசேஷ –
அனுபவிக்கப் படா நிற்கிற சர்வேஸ்வரனுடைய
ரஷகத்வாதி ஸ்வபாவ விசேஷத்தை உடையனாய்க் கொண்டு
தத்பாவ பாவமா பன்ன -என்கிறபடியே
பகவத் ஸ்வ பாவமான அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்குமவனாய் -என்றுமாம் –
நிரதிசய ப்ரீத்யா
தன்னோபாதி புறம்பில் மிகுதி இல்லை என்னும்படியான ப்ரீதியாலே
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் சமர்த்தும் அசக்த –
ஏவமுக்தா சமுத்பத்ய சீதா சசி நிபா நனா
ப்ரஹர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ன் கிஞ்சன -யுத்தம் -116-14-என்று
பிராட்டி ப்ரீதி பிரகர்ஷம் மிடறு பிடிக்கப் பேசாது இருந்தால் போலே
ஆனந்த அதிசயத்தாலே வேறு ஒன்றைப் பண்ணுதல் நினைத்தல் பார்த்தல் செய்ய மாட்டாதானாய் -என்னுதல்-
நோபஜனம் ஸ்மரன்னிதம் சரீரம் -என்கிறபடியே சாம்சாரிக்க வியாபாரங்களை தவிர்த்து யென்னவுமாம்
புநரபி சேஷ பாவ மேவ யாசமான –
சேஷ பாவம் பெற்று இருக்கச் செய்தேயும் அதின் இனிமையாலே
இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கையாலே
பின்னையும் இப்படிப் பட்ட சேஷ பாவம் குலையாதே நிற்க வேணும் என்று வேண்டிக் கொண்டு
பகவந்தமேவ –
ஸ்ரீ வைகுண்ட நாதனையே
அவிச்சின்ன ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன –
இடை விடாமல் இருக்கும் தரா ரூபமான பார்வையாலே
அவலோகயன் ஆஸீத –
பார்த்துக் கொண்டே இருக்கக் கடவன்-

நாஸநந்தி ந பிபந்தி யேததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி என்கிறபடியே
புறம்புள்ள அன்ன பாநாதிகளைப் பேணாதே சதா தர்சனம் பண்ணி இருப்பான் -என்று ஆகவுமம் –

————————————————————————————–

சூரணை -6- அவதாரிகை –

அநந்தரம்
கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே
முடி சூடும் அரசாய்
சுகமே வர்த்திப்பாய்
என்கிறது –

ததோ பாகவதா ஸ்வயமேவ
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய
சஸ்மிதமா ஹூ யா சமஸ்த க்லேசாபஹம்
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்
ஸ்ரீ மத் பாதார விந்த யுகளம்
சிரஸி க்ருதம் த்யாத்வா
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ –

ததோ பாகவதா -ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய சஸ்மிதமா ஹூ யா –
அவன் எவ்விடத்தான் யானார் -திருவாய் மொழி -5-1-7-என்று
ஸ்வரூபத்தை நினைத்து அகல நிற்க
அழகிய கடாஷத்தாலே குளிரப் பார்த்து
ஈச்வரோஹம் -என்று இருந்தவன்
தாசோஹம் –என்று ஒதுங்குவதே -என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே முறுவல் செய்து
குஹேன ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸமி திவசான் பஹூன்
ஆசயா யதிவா ராம புன சப்தாபயேதிதி -அயோத்யா -59-3-என்று சுமந்த்ரன் ஆசைப் பட்டால் போலே
அழகிய மிடற்று ஓசையாலே அருளப்பட்டு
சமஸ்த க்லேசாபஹம்-
சாமசாரகமான சமஸ்த கிலேசங்களையும் போக்கக் கடவதாய்-
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்-
நிரதிசயமான -சுகத்தைப் பண்ணக் கடவதாய்
ஸ்ரீ மத் –
நிரதிசய போக்யமான
பாதார விந்த யுகளம்-
திருவடித் தாமரைகளை –
சிரஸி க்ருதம் த்யாத்வா-
தன தலையிலே வைத்தானாக த்யானம் பண்ணி –
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ –
ஆனந்தம் ஆகிற அம்ருத சமுத்ரத்துக்கு உள்ளே முழுகின
சர்வ அவயவங்களை உடையவனாய் கொண்டு
சுகமே வர்த்திப்பான்
ஒன்றாக சொல்லிற்று ஆயத்து –
ஸ்வரூப அனுரூபமான பிரபத்தியே உபாயமாகக் கொண்டு
ப்ராக்ருத மண்டலத்தை விட்டு
அப்ராக்ருதமான தேசத்திலே சென்று
ஸூ ரி பரிஷத் சேவ்யனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டிக்
கைங்கர்ய பிரார்த்தனா பூர்வகமாக
கைங்கர்யத்தைப் பெற்று
யாவதாத்மபாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் –
என்கிறது-

யாமுனார்ய ஸூதாம் போதி மவகாஹ்ய யதாமதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்ச யாம்யஹம் -எம்பெருமானார் அருளிச் செய்த –ஸ்ரீ வைகுண்ட கத்ய மங்கள ஸ்லோகம் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: