ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -2-3–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -2- அவதாரிகை

இப்படி ஒருகால் சரணம் புக்கு விடும் அத்தனையோ -என்னில்
ததஸ்ஸ ப்ரத்ய ஹமாத்மோ ஜ்ஜீவனா யேத்யாதி —
பலத்துக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
சத்தா தாரணத்துக்கு நாள்தோறும்
அனுசந்திப்பான் என்கிறது –

———————————————————————————–

ததஸ்ச ப்ரத்யஹம் ஆத்மா உஜ்ஜீவ நாய ஏவம் அநுஸ் மரேத்

———————————————————————————–

ததஸ்ச –
தத் த்வயம் சக்ருது ச்சாரோ பவதி -என்றும் –
சக்ருதேவ பிரபன்னாய -என்றும் –
உபாய அம்ஸ்த்துக்கு ஒரு கால் அமைந்து இருக்க -பின்னையும் வேணும் என்கிறது -ஆகிறது -அதுக்கு அவதி என் என்னில் –
ப்ரத்யஹம் –
ஒரு கால் அனுசந்தித்தோம் என்று விடுகை அன்றிக்கே
நாள் தோறும் –
இப்படி நாள் தோறும் அனுசந்திக்கிறது சாதனா பூர்த்தி போராமையோ என்னில் –
ஆத்மா உஜ்ஜீவ நாய –
யன் முஹூர்த்தம் ஷணம் வாய் வாஸூ தேவோ ந சிந்த்யதே
சா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா -என்கிறபடியே
ஷண மாத்ரமும் அகவத் அனுசந்தானம் பண்ணாத போது ஆத்ம விநாசம் ஆகையாலே
நித்ய அனுசந்தாநத்தாலே ஆத்மா உஜ்ஜீவிக்கும் படியாக
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்கும் இடத்து போலியாக அனுசந்திக்க அமையுமோ -என்னில் –
ஏவம் –
பிரதம பர்வத்தில் யாதோர் ஆதரம் யாதொரு க்ரமம் -அப்ரகாரத்தில் ஒன்றும் குறையாத படி –
அநுஸ் மரேத்ப்ரத்யஹம் -என்னச் செய்தே –அநுஸ் மரேத் -என்கிறது
நாள் தோறும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கால் நினைத்தாலும் போரும் இ றே –
அங்கன் அன்றிக்கே
த்வயம் அர்த்த அனுசந்தா நேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே
அநவரத அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

—————————————————————————————–

சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய

சதுர தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –
சமஸ்தம் –
ஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்
கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை
அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து

—————————————————————————————–

பரம வ்யோம சப்தாபி தேய
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே
சனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை
நித்ய சித்தை அனந்தை
பகவத் அனுகூல்யைக போகை
திவ்ய புருஷை
மஹாத்மபி
ஆபூரிதே தேஷாமபி
இயத் பரிமாணம்
இயத் ஐஸ்வர்யம்
ஈத்ருச ஸ்வ பாவமிதி
பரிச்சேத்தும் அயோக்யே
திவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே

இத்தைக் கடந்து போய்ப் புகுகிற தேசம் இருக்கும் படி என் என்னில் –
பரம –
இதுக்கு அவ்வருகு இல்லை என்னும் படி இருக்கை-
வ்யோம சப்தாபி தேய –
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா -என்று கர்ம பூமி போலே தமஸாய்  இருக்கை அன்றிக்கே தெளி விசும்பாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர –
அல்ப ஜ்ஞராய் அசக்தராய் நம்மளவு அன்றிக்கே அதிகரான
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட வாக்குக்கும் நெஞ்சுக்கும்
விஷயம் அன்றியிலே இருக்கும்
இப்படி இருக்கும் தேசத்தின் பேர் என்ன என்னில் –
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே –
ஸ்ரீ வைகுண்டம் என்று பேர் –
கர்ம பூமி போலே கைங்கர்ய ஸ்ரீ உண்டானாலும் விச்சேதம் பிறக்கை அன்றிக்கே -கைங்கர்ய ஸ்ரீ நித்தியமாய் இருக்கை –
வைகுண்டே -கர்ம திரோதானம் இல்லாமையாலே ஜ்ஞான சக்த்யாதிகள் குண்டிதம் அன்றிக்கே இருக்கும் தேசம்
திவ்ய லோகே -மானுஷ லோகமாய் இருக்கை அன்றிக்கே அதில் வ்யாவருத்தமாய் இருக்கை –
தேசம் சொல்லி தேசாதிபதிகளைச் சொல்லுகிறது மேல் –
சனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை-
ப்ரஹ்ம பாவனா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளோடு கர்ம பாவனா நிஷ்டரான சனகாதிகளோடு வாசி யற நினைக்க
ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
நித்ய சித்தை –
முக்தரைப் போலே காதா சித்க பகவல் லாபராய் இருக்கை அன்றிக்கே
சர்வதா லப்த பகவதநுபவராய் இருக்கை –
அனந்தை –
இப்படி இருக்குமவர்களுக்கு ஓர் எல்லை இல்லை
இவர்கள் தங்களுக்கு ஓர் அந்தம் இல்லை -யென்னவுமாம்
பகவத் அனுகூல்யைக போகை
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை –
திவ்ய புருஷை
பூமியிலே கால் பாவாது இருக்கை
மஹாத்மபி –
ஷண அபி தே யத் விரஹோ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரனும் அவர்களோட்டை ஷணம் மாத்திர விச்லேஷமும் பொறுக்க மாட்டாதானாம் படியான
பெருமையை உடையராய் இருக்கை –
ஆபூரிதே-
ஏக தேசமும் பாழே கிடவாமே அவர்களால் நிரந்தரமாய் இருக்கை
தேசம் தான் ப்ரஹ்மாதிகளால் அளவிடப் போகாதபடி இருந்ததே யாகிலும் இவர்களுக்குத் தான் அளவிடலாய் இருக்குமோ என்னில்
தேஷாமபி
தங்களை பிறரால் அளவிட ஒண்ணாது இருக்கிறவர்களுக்கும்
தேஷாமபி
அனந்தமாய் இருக்கிறவர்களில் ஒருவரால் தான் அளவிடலாய் இருக்குமோ -என்னில்
ஓர் ஒருத்தரும் கூட அளவிட ஒண்ணாதாய் இருக்கும் -என்கிறது

மேல் வாக்கியம் எது என்னில்
பரிச்சேத்தும் அயோக்யே –
பரிச்சேதிக்கைக்கு அயோக்கியம் -என்கிறது –
இப்படிப் பரிச்சேதிக்கைக்கு அயோக்யமாய் இருக்கிறது எது என்னில்
இயத் பரிமாணம் –
இவ்வளவு என்றும்
இயத் ஐஸ்வர்யம் –
இவ்வளவு சமத்து என்றும்
ஈத்ருச ஸ்வ பாவம் –
இப்படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையது என்றும்
இதி பரிச்சேத்துமயோக்யே-
இப்புடைகளாலே இன்னபடி என்றும் அளவிடப் போகாது –
திவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே –
லோக வ்யாவ்ருத்தமான ஆயிரம் திரு மதிள்களை உடைத்ததாய் இருக்கும்
சமஸ்த க்லேச ரஹீதமான தேசத்துக்கு திரு மதிள்கள் என் என்னில்
புரம் ஹிரணமயம்- ப்ரஹ்மா விவேச ஆராஜிதாம் – என்று எழுந்து அருளி இருக்கும் திருப்படை வீடு ஆகையாலே
இதுக்கு உள்ள லஷணங்கள் அடைய வேண்டுகையாலும்
ததஸ் த்வஹம் சோத்தம சாப பாணத்ருக்
ஸ்திதோ அபவம் தத்ர ஸ் யத்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்க்னாதிபி ராத்த கார்முகைர்
மஹேந்திர கல்பம் பரிபால யம்ஸ் ததா -என்றும்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்றும்
அஸ்தானே பய சங்கிகளாய் அத்தலை இத்தலையாய்
ரஷகனையும் ரஷிக்கத் தொடங்குவர்கள் இ றே –
ஆகையால் அநேகம் திரு மதிள்கள் உண்டாய் இருக்கும்

————————————————————————————————–

திவ்ய கல்ப தரு உபசோபிதே
திவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி
ஆவ்ருதே அதி ப்ரமானே
திவ்ய ஆயதனே கச்மிம்ச்சித் விசித்ர
திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே
திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே
திவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே
திவ்ய அலங்கார அலங்க்ருதே
பரித பதிதை பதமானை
பாதபஸ் தைச்ச நாநா கந்த வர்ணை
திவ்ய புஷ்யை சோபா மானை
திவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே
சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை

இப்படி ரஷகமேயாய் போக்யதை யற்று இருக்குமோ என்னில் –
திவ்ய கல்ப தரு உபசோபிதே
அர்வாசீன ச்வர்க்காதிகலில் கல்பக தருக்கள் போல் அன்றிக்கே
அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே நிரதிசய போக்யமாய் இருக்கும்
திவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே
நாய்ச்சிமாருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் லீலா விஹாரம் பண்ணுகைக்கு ஈடாய் இருந்துள்ள
திருத் தோப்புக்கள் அநேகங்களாலே சூழப் பட்டு இருக்கும்
அதி ப்ரமானே
இத்தனை அகலமும் ஆயாமமும் என்று சொல்ல ஒண்ணாத படி இருக்கும் –
திவ்ய ஆயதனே –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட கோயிலிலே –
கச்மிம்ச்சித் விசித்ர-
ஒரு பிரதேசத்திலே
திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே –
நாநா விதமான ரத்னங்களாலே பிரசுரமாய் இருப்பதான
திரு வோலக்க மண்டபத்திலே
திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே-
அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களாலே அலங்க்ருதமாய்
திவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே-
நாநா விதமான மாணிக்கங்களால் செறிந்த ஸ்தலத்தை யுடைத்தாய்
திவ்ய அலங்கார அலங்க்ருதே –
திரு மேல் கட்டி திருத் திரை தூக்கன் தூணுடைத் தூங்கு பள்ளிக் கட்டில் தொடக்கமான அலங்காரங்களால் அலங்க்ருதமாய்
பரித பதிதை
நாலு திக்குகளிலும் உதிர்ந்து நிற்பவனாய்
பதமானை –
விழுந்து கொடு நிற்பனவாய்-
பாதபஸ் தைச்ச –
மரங்களில் நிற்பனவாய்
நாநா கந்த வர்ணை-
நாநா விதமான நாற்றம் என்ன நிறம் என்ன இவற்றை உடைத்தாய்
திவ்ய புஷ்யை சோபா மானை –
இப்படிப் பட்ட திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நிற்பனவாய்
திவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே
ஊரடைய வளைந்து கொடு நிற்கிற திருத் தோப்புக்களாலே சோபிதமாய்
சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை
பாரிஜாதம் -சந்தானம் ஹரிசந்தனம் தொடக்கமான வருஷ விசெஷங்களோடு கூடின
சாமான்ய கல்பக வ்ருஷங்களாலே சோபிதமாய்

——————————————————————————————-
அசங்கீர்னைச்ச கைச்சித்
அந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை
சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி
க்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை
கைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை
கைச்சித் பத்ம வநாலயா திவ்ய லீலா அசாதாரணை
சாதாரனைஸ் ச கைச்சித் சுக சாரி காம யூர கோகிலாதிபி
கோமல கூஜிதை ஆகுலை
திவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி
ஆவ்ருதே மணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை
திவ்ய அமல அம்ருத ரசோதகை
திவ்ய ஆண்ட ஜவரை
அதி ரமணீய தரசனை
அதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை
அந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை
திவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை
திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே

அசங்கீர்னைச்ச கைச்சித்
தன்னில் தான் சேர்ந்து இருக்கை அன்றிக்கே இருப்பன சிலவற்றால்
அந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை-
இத் தோப்புக்களுக்கு உள்ளே சமைந்த புஷ்ப மண்டபம் -மாணிக்க மண்டபம் இவற்றின் உடைய
அநேகங்கங்களாலே அலங்க்ருதங்களாய்
சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி –
எப்போதும் அனுபவியா நின்றாலும் புதுமை போலே விஸ்மய நீயமாய் இருப்பதுகளாய்-
க்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை –
அநேகம் ஆயிரம் கிரீட அசைலங்களாலே அலங்க்ருதங்களாய்
கைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை-என்று தொடங்கி –
சாதாரனைச்ச கச்சித் -என்கிறது இறுதியாக
எம்பெருமானதாயும் நாய்ச்சிமாரதாயும் இருவருக்கும் பொதுவாயும் உள்ள திருத் தோப்புக்களாலே
சுக சாரி காம யூர கோகிலாதிபி-
கிளிகள் -அவற்றில் அவாந்தர ஜாதியான சாரிகைகள்,மயில்கள் ,குயில்கள் ,இவை தொடக்கமான பஷிகளாலே
அவற்றில் சுகம் ஆகிறது பைம் கிளி
சாரிகை ஆகிறது பூவை
ஆதி சப்தத்தாலே அன்னம் குருகு தொடக்கமானவை
கோமல கூஜிதை ஆகுலை
இனிய பேச்சை உடைய பஷிகளாலே ஆகுலங்களாய் உள்ள
திவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே –
இப்படிப் பட்ட அநேகம் தோப்புக்களாலே சூழப் பட்டு இருப்பதாய்
மணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை –
ரத்னம் முத்து பவளம் தொடக்கமானவை களால் பண்ணப் பட்ட படி ஒழுங்குகளை உடைத்தாய் இருப்பனவாய்
திவ்ய அமல அம்ருத ரசோதகை –
அப்ராக்ருதமாய் நிர்மலமாய் அம்ருதம் போலே ரசவத்தான நீர்ப் பரப்பை உடையவைகளாய்
திவ்ய ஆண்ட ஜவரை –
அப்ராக்ருதமான பஷி ஸ்ரேஷ்டங்களாலே
அதி ரமணீய தரசனை
கண்ணுக்கு அழகியவாய் இருப்பனவாய்
அதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை
மிக்க மநோ ஹாரியான பேச்சில் இனிமையை உடையவனாய்
அந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை –
உள்ளே உண்டான முத்துக்களாலே சமைந்த லீலா ஸ்தானங்களாலே சோபிதங்களாய்
திவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை –
அப்ராக்ருதமான செங்கழு நீரை உடைத்தான நீர் வாவிகள் உடைய நூறு ஆயிரங்களாலே
திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே –
சுத்த சத்வ மயமான ராஜ ஹம்சங்கள் உடைய ஒழுங்குகளாலே விளங்கா நின்றுள்ள
முன் சொன்ன வற்றாலே  சூழப் பட்டு இருப்பதாய்

—————————————————————————————————-

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
ஆனந்த யாச்ச பிரவிஷ்டான் உன்மாதயத்பி
க்ரீடோத்தேசை விராஜிதே
தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே
நாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி
உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே
சந்தன அகரு கர்ப்பூர
திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே
மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம்
ஆபா யயன்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம்
ஆஜ்ஞா பயந்த்யா
சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
நிரஸ்தமான மிகுதியை உடைத்தாய்
ஆனந்தமாய் முடிவு இன்றிக்கே இருக்கிற சுகமாய் இருக்கையாலும் –
ஆனந்த யாச்ச –
முடிவு இல்லாமையாலும்
பிரவிஷ்டான் உன்மாதயத்பி –
ரச்யதையாலே உட்புகுந்தவர்களை பிச்சேற்ற வற்றான
க்ரீடோத்தேசை விராஜிதே-
இப்படிப் பட்ட க்ரீடோத்தே சங்களாலே விளங்கா நிற்பதாய்
தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே –
அவ்வோ இடங்களிலே பண்ணப் பட்ட பூம் படுக்கைகளாலே அலங்க்ருதமாய் –
நாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே –
நாநா விதமான புஷ்பங்களில் உண்டான மதுவைப் பானம் பண்ணி அத்தாலே களித்த வண்டுகளின்
ஒழுங்குகளாலே பாடப் படா நின்ற காந்தர்வ வித்யையாலே நிறைந்து இருப்பதாய் –சந்தன அகரு கர்ப்பூர திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே –
சந்தனம் அகில் கர்ப்பூரம் பூக்கள் இவற்றிலே உட்புகுந்து
அங்கு உள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற தென்றலாலே சேவிக்கப் படுமதாய்-
மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே –
நடுவில் விடு பூக்களாலே விசித்ரமாய்
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
பெரிய திருப் பள்ளிக் கட்டிலாய் இருக்கிறதிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே –
இப்படி இருக்கிற படுக்கையிலே நாய்ச்சிமார் உடன் கூடி எழுந்து அருளி இருக்கும் படி சொல்லுகிறது மேல் –
ஸ்ரீ மத்  வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் –
இப்படி இருக்கிற திவ்ய லோகத்தை
ஆத்ம காந்த்யா-
தன்னுடைய காந்தியாலே
விஸ்வம் ஆபா யயன்த்யா –
விஸ்வத்தையும் ஆப்யாயனம் பண்ணு விப்பியா நின்று கொண்டு –
சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் –
திரு வநந்த ஆழ்வான் -சேனை முதலியார் உள்ளிட்ட பரிஜனம் எல்லாவற்றையும்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா
சர்வேஸ்வரனுக்கு அந்த அந்த அவஸ்தைகளுக்கு ஈடாம்படியான கைங்கர்யத்திலே நியமியா நிற்பாளாய்
சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா –
சீல குண உபலஷிதமான ஆத்ம குணம் என்ன
ரூப குண உபலஷிதமான சௌந்த்ர்யாதி குணம் என்ன
விலாசம் என்ன
இவை தொடக்கமானவற்றாலே-சர்வேஸ்வரனுக்கு சத்ருசையாய் உள்ளவளாய்
ஸ்ரீ யா சஹ ஆஸீனம் –
இப்படிப் பட்ட பெரிய பிராட்டியோடு கூடி இருப்பானாய்

————————————————————————————————

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம்
ஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம்
அத்யுஜ்ஜ்வல பீத வாசசம்
ஸ்வயா ப்ரபயா
அதி நிர்மலயா
அதி சீதலையா
ஸ்வ ச்சயா
மாணிக்யபயா
க்ருத்ச்னம் ஜகத் பாசயந்தம்
அசிந்த்ய திவ்ய அத்புத
திவ்ய யௌவன ஸ்வ பாவ
லாவண்ய மய அம்ருத சாகரம்
அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம்
பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
சூ விப்ரமப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம்
அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்
திவ்ய அங்கு லீயக விராஜிதம்

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம் –
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்  கண்களை உடையவனை –
ஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம் –
தெளிந்த காளமேகம் போலே இருக்கிறவனை
அத்யுஜ்ஜ்வல பீத வாசசம் –
அறப் பளபளத்த திருப் பீதாம்பரத்தை உடையவனை
ஸ்வயா ப்ரபயா –
தன்னுடைய காந்தியாலே
அதி நிர்மலயா –
மிகவும் ஆளுக்கு அற்று
அதி சீதலையா –
அறக் குளிர்ந்து இருப்பதாய்
ஸ்வ ச்சயா –
மிகவும் அச்சமாய் இருப்பதாய்
மாணிக்யபயா
மாணிக்கம் போலே இருக்கிற ப்ர்பையை உடைத்தாய்
க்ருத்ச்னம் ஜகத் பாசயந்தம்
எல்லா ஜகாத்தையும் பிரகாசிப்பிக்கும் அவனாய்
அசிந்த்ய திவ்ய அத்புத
சிந்தயிதும் அசக்யமாய் -அப்ராக்ருதமாய் -மிக ஆச்சர்ய பூதமாய்
திவ்ய யௌவன ஸ்வ பாவ லாவண்ய மய அம்ருத சாகரம் –
போது செய்யாத படியான நித்ய யௌவனத்தையே ஸ்வ பாவமாக உடைத்தாய்
அழகாகிற அம்ருதத்துக்கு கடலாய்
அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம் –
அற மெல்லியதாகையாலே தளிர் போலே புரிந்து தோற்றுகிற திரு நெற்றியிலே அலை எறிகிற திருக் குழல் கற்றையாலே
விளங்கா நிற்பானாய்
பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
சூ விப்ரமப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம் –
பிரபுத்த -தொடங்கி விராஜிதம் -இறுதியாக உள்ள பதங்களுக்கு பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் கண்டு கொள்வது

அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்
அதி கோமளமாய்-சால அழகியதாய் இருக்கிற திவ்ய ரேகை உண்டு
தாமரை சங்கம் சக்ரம் தொடக்கமான ரேகைகள்
அவற்றைத் திருக் கைத் தலத்திலே உடையவனாய்
திவ்ய அங்கு லீயக விராஜிதம்
திரு விரலில் சாத்தின அறுகாழி மோதிரத்தால் விளங்கா நிற்பவனாய்

—————————————————————————————————–

அதி கோமள நகாவலீ விராஜிதம்
அதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம்
தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அதி மநோ ஹர க்ரீடேத்யாதி
கிரீட மகுட சூடா அவதம்ச
மகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக
ஸ்ரீ வத்ஸ கௌச்துப முக்தாதாம உதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராதிபி
அத்யந்த ஸூ க ஸ்பர்ச
திவ்ய கந்தை பூஷணை பூஷிதம்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம்
சங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை
சேவ்யமானம் -ஸ்வ சங்கல்ப மாத்ர
அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி
த்வம் சாதிகே ஸ்ரீ மதி விஷ்வக்சேனே
ந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம்
வைனயதே யாதஈ பி –

அதி கோமள நகாவலீ விராஜிதம் –
மிகவும் ஸூ குமாரமாய் இருக்கிற திரு யுகிர் ஒழுங்குகளாலே விளங்கா நிற்பானாய் –
அதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம் –
சிவந்த திரு விரல்களாலே விளங்கா நிற்பானாய் –
தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற இரண்டு திருவடிகளை உடையனாய்
அதி மநோ ஹர க்ரீடேத்யாதி-
கண்டார் நெஞ்சு பரி உண்ணும்படியான கரீடாதிகளாலே அலங்க்ருதன் என்கிறது –
கிரீட மகுட –
கிரீட மகுடம் என்ன அன்றிக்கே கிரீடமான மகுடம் என்ன
சூடா
அதிலே சாத்தின திருச் சூட்டு என்ன
அவதம்ச
திருச் செவிமலர் என்ன –
மகர குண்டல –
திரு மகரக் குழை என்ன
க்ரைவேயக –
திருக் கழுத்து அணி என்ன –
ஹார –
திரு மாரிலே தலையச் சாத்தும் திரு வாரம் என்ன –
கேயூர –
பாகூ வலயம் -என்ன
கடக –
முன் கையில் சாத்தும் கடக வலயம் என்ன
ஸ்ரீ வத்ஸ-
திரு மார்பில் அநிதர சாதாரணமாக திரு மறு என்ன
கௌச்துப –
ஸ்ரீ கௌஸ்துபம் -என்ன
முக்தாதாம –
திரு முத்து வடம் என்ன
உதர பந்தன –
திரு உதர பந்தம் என்ன –
பீதாம்பர –
கனகலேசம் என்ன –
காஞ்சி குணா –
அரை நூல் பட்டிகை என்ன
நூபுராதிபி
திருச் சிலம்பு என்ன
ஆதி பி –
இவை தொடக்கமான –
அத்யந்த ஸூ க ஸ்பர்ச –
திரு மேனிக்கு பூத் தொடுமா போலே ஸ்பர்சிக்கும் பொது ஸூ க கரமாய் இருப்பவனாய்-
திவ்ய கந்தை –
அப்ராக்ருதமான திவ்ய பரிமளத்தை உடைத்தாய் இருப்பனவாய் –
பூஷணை பூஷிதம்
இப்படிப் பட்ட திவ்ய ஆபரண ஆழ்வார்களாலே அலங்க்ருதனாய் இருப்பானாய்-
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம் –
அழகை உடைத்தாய் -வைஜயந்தி என்று பேர் பெற்று இருக்கிற வனமாலையால் விளங்கா நிற்பானாய் –
சங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை- சேவ்யமானம் –
ச்நேஹத்தால் ஆஸ்தான சங்கா-ரஷா-வ்யசநிகளான பஞ்சாயுதம் தொடக்கமான திவ்ய ஆய்தங்களாலே
சூழ்ந்து இருந்து ஏத்தப் படுமவனாய் –
ஸ்வ சங்கல்ப மாத்ர அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி த்வம் சாதிகே –
நினைத்த மாத்ரத்திலே நிர்வஹிக்கப் பட்ட ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த வஸ்துக்களின் உடைய
உத்பத்தி ஸ்திதி விநாசங்கள் என்ன இவற்றை உடையராய் –
ஸ்ரீ மதி விஷ்வக்சேனே –
கைங்கர்ய லஷ்மிக்கு இட்டுப் பிறந்த சேனை முதலியார் பக்கலிலே –
ந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம் –
வைக்கப் பட்ட தம்முடைய எல்லா நியந்த்ருத்வத்தை உடையவராய் உள்ளவரை –
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான ஸூ ரி பரிஷத்தாலே சேவ்யனாய் இருக்கும் என்கிறது மேல் –
வைனயதே யாதஈ பி –
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான பார்ஷ்தாத்யர்
கணநாயகர்கள் தொடக்கமானவர்களாலே.
பார்ஷதாத்யர் ஆகிறார் கஜ வக்த்ராதிகள்-
கண நாயகர்கள் ஆகிறார் -குமுதாதிகள்

—————————————————————————————————–

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை
பகவத் பரிசர்யா கரண யோக்யை
பகவத்
-பரிசர்யைக போகை
நித்ய சித்தை
அனந்தை
யதாயோகம் சேவ்ய மாநம்
ஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமல கோமள அவலோக நேன
விச்வம் ஆஹ்லாத யந்தம்
ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன
திவ்யா நநாரவிந்த சா ஜனகேன
திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண
திவ்ய லீலா லாபா அம்ருதேன
அகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம்
பகவந்தம் நாராயணம் த்யான யோகேன த்ருஷ்ட்வா

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை –
ஒரு நாள் வரையில் அன்றிக்கே
ஸ்வ சத்தா நிபந்தனமாக இன்றியிலே இருக்கிற சகல சாம்சாரிக்க ஸ்வ பாவத்தை உடையராய்
பகவத் பரிசர்யா கரண யோக்யை –
உடையவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகைக்கு இட்டுப் பிறந்தவர்களாய் –
பகவத் பரிசர்யைக போகை –
பகவத் கைங்கர்யம் ஒழியத் தங்களுக்கு தாரகம் இன்றியிலே இருப்பாராய்
நித்ய சித்தை –
இப்படி இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே-
அனந்தை –
இன்னதனை என்று முடிவு இல்லாதவர்களாலே
யதாயோகம் சேவ்ய மாநம்-
நின்ற நிலைகளுக்கு ஈடாக சேவிக்கப் படுமவனை –
ஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமலகோமள அவலோக நேன –
இக் கடாஷம் பரார்த்தமாக அன்றிக்கே -கால தத்வம் உள்ளது அணையும்
ஸ்வ பிரயோஜனமாக அநு சந்திக்கப் பட்டு
வி லஷணமாய் அபராதங்களை நினைத்துக் கலங்குகை அன்றிக்கே
ஸூ பிரசன்ன ஸூந்தரமான கடாஷத்தாலே –
விச்வம் ஆஹ்லாத யந்தம்
சமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய் –
ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன –
சிறிது அலர்ந்த திரு முகத் தாமரையிடையின் நின்றும் புறப்பட்டு இருப்பதாய்
திவ்யா நநாரவிந்த சா ஜனகேன-
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினாள் போலே அழகை உண்டாக்க கடவதாய்
திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
பெரிய முழக்கம் என்ன -அர்த்த போதகத்வம் என்ன இனிமை என்ன
ஓஜ ப்ரசாதாதிகள் என்ன -இவை தொடக்கமான எண்ணிறந்த குண கணங்களாலே அலங்க்ருதமாய் இருப்பதாய் –
அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண-
நெஞ்சை வருத்தக் கடவதாய்
திவ்யமான அபிப்ராயத்தை உள்ளே உடையதாய்
திவ்ய லீலா லாபா அம்ருதேன-
ஹர்ஷம் வழிந்த சொல்லாகிற அம்ருதத்தாலே-
அகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம்
எல்லாருடைய நெஞ்சுகளின் அவகாசம் அடைய நிறைப்பானாய் உள்ளவனை –
பகவந்தம் நாராயணம் –
இப்படி ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களுக்கு ஆகரனான நாராயணனை
த்யான யோகேன த்ருஷ்ட்வா
மானச சாஷாத் காரம் பண்ணி
த்யான யோ கேன த்ருஷ்ட்வா -என்கையாலே பக்தியைப் பண்ணினால் தத் பலமாக வரும் சாஷாத்காரம் சொன்னால் போலே இரா நின்றது –
சரணம நுவ்ரஜேத் -என்று பிரபத்தி பண்ணினது நிஷ்பலமோ என்னில் அன்று
பிரபத்தி பலமான சாஷாத் காரத்தையேசொல்லுகிறது
ஆனால் த்யான யோ கேன -என்றது செய்யும் படி ஏன் என்னில்
த்யான யோகத்தால் காணுமா போலே கண்டு என்கிறது
ப்ரத்யஹமாத்ம உஜ்ஜீவநாய ஏவம் அனுச்மரேத்-என்று சொன்ன
கால ஷேப அனுசந்தானம் முற்றி வெளிப்பட்ட தாகவும் –

———————————————————————————————————

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய
கதா அஹம் பகவந்தம் நாராயணம்
மம நாதம் மம குல தைவதம் மம குல தனம்
மமபோக்கியம் மம மாதரம் மம பிதரம் மம சர்வம்
சாஷாத் கரவாணி சஷூஷா
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி
சங்க்ரஹீஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ
தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய –
இருவருடையவும் சாஸ்திர சித்தமான சம்பந்தத்தை உணர்ந்து
இனி அந்த சாஷாத் கார லாபமான பேற்றில் மநோரத பிரகாரம் சொல்லுகிறது –
கதாஹம் இத்யாதியாலே
கதா -அந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-1-8 என்று பதறுகிறார் –
அஹம் -அவ்யபிசாரியான உபாயம் கை புகுந்து பேற்றில் பதற்றத்தை உடையனான நான்
பகவந்தம் நாராயணம் –
ஆறி இருக்க ஒண்ணாத படியான குணங்களையும் ப்ராப்தியையும் உடையவனை –
மம நாதம் –
எனக்கு வகுத்த சேஷியாய் உள்ளவனை
மம குல தைவதம்
சாமான்யமாய் இருக்கை அன்றிக்கே எங்களுக்கு குல க்ரமாகதனான நாதனாய் உள்ளவனை
மம குல தனம்
எனக்கு குல க்ரமமாக ஆபத்துக்கு ஜீவிக்க கைம் முதலாய் உள்ளவனை
மமபோக்கியம்
எனக்கு போக்யமானவனை
மம மாதரம்
எனக்கு தாரகனுமாய் ஹித பிரிய ப்ரவர்த்தகனாயும் உள்ளவனை –
மம பிதரம் –
எனக்கு உத்பாதகனுமாய் ஹித ப்ரவர்த்தகனுமாய் உள்ளவனை
மம சர்வம் –
மாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -என்றும்
சேலேய் கண்ணியரும்-என்றும் சொல்லுகிறபடியே அனுக்தமான சமஸ்த வஸ்துக்க்களுமானவனை –
சாஷாத் கரவாணி சஷூஷா-
இப்போதை மானஸ சாஷாத் காரம் ஒழிய
சதா பச்யந்தி -என்கிறபடியே
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ கழிக்கும் நாள் -பெருமாள் திரு மொழி -1-1-என்கிறார் –
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி -சங்க்ரஹீஷ்யாமி
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி-என்றும்
தளிர் புரையும் திருவடிகள் என் தலை மேலவே-திரு நெடும் தாண்டகம் -1- என்றும்
சொல்லுகிறபடியே வகுத்த சேஷியானவன் உடைய
நிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளை நான் சிரஸா வஹிப்பது என்றோ -என்கிறார் –
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி –
சர்வேஸ்வரன் திருவடிகளில் -கைங்கர்ய ருசியாலே போக்கடிக்கப் பட்ட
புறம்புள்ள விஷயங்களில் உண்டான போக ஸ்ரத்தையை உடையவனாய்
தன்னடையே பாறிப்போன ராக த்வேஷாதிகள் ஆகிற சமஸ்த சாம்சாரிக ஸ்வபாவத்தை உடையேனாய்க் கொண்டு
நான் என்றைக்கோ அந்தப் பாதாம் புஜ த்வயத்தைக் கிட்டுவென் -என்கிறார்

———————————————————————————————————-

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா
தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய
தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம்
வைநதேயாதிபி
சேவ்யமானம்
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
அத்யந்த ஸாத் வஸ விநயாவநந
பூத்வா பகவன் பாரிஷத கண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித
பூத்வா சமயக் அபிவந்திதை தைரேவ அநுமத
பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மாதா மூல மந்த்ரேண
பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா
கரணாய பரிக்ருஹ்ணீஷவ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
புருஷோத்தமன் ஆனவன் தன்னுடைய அறக் குளிர்ந்த
திருக் கண்களாலே கடாஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்தில் என்னை ஏவப் புகுகிறது எப்போதோ –
இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா –
என்று இப்புடைகளிலே பகவத் கைங்கர்யத்தில் ஆசையை வளர்த்தி –
தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய-
பகவத் பிரசாதத்தாலே மேன் மேல் எனக் கரை புரண்டு பெருகி வருகிற
அந்த ஆசை யோடு கூட சர்வேஸ்வரனைக் கிட்டி –
தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம் -இத்யாதி –
தூர தேவ ப்ரணம்ய -என்று மேலே அந்வயம்-
திரு வநந்த ஆழ்வான் மடியிலே பெரிய பிராட்டியாரோடு கூட இருப்பானாய்-
வைநதேயாதிபி-சேவ்யமானம்
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான நித்ய ஸூ ரிகளால் சதா சேவ்யமானனாய் இருக்கிற பகவானை –
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
என்று தூரத்திலே தண்டன் இட்டு விழுவது எழுவதாய்
பின்னையும் ஆதர அதிசயத்தாலே பலகால் தண்டன் இட்டு
அத்யந்த ஸாத் வஸ விநயாவநந பூத்வா பகவன் பாரிஷதகண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித பூத்வா –
மிகவும் உண்டான உள் அச்சத்தாலே புடைவை ஒதுக்குவது
வாயைப் புதைப்பதாய்க் கொண்டு
தலை சாய்த்து –
பகவான் உடைய பாரிஷதத் திரு ஓலக்கத்தில் அவர்கள் –
காண நாயகர் -படைத் தலைவர் -திரு வாசல் காப்பார் -இவர்களால்
ச்நேஹத்தைப் பொதிந்து கொண்டு இருக்கிற கிருபையாலே பார்க்கப் பட்டு –
சமயக் அபிவந்திதை தைரேவ அநுமத பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மாதா மூல மந்த்ரேண பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்ருஹ்ணீஷவ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் –
புத்தி பூர்வகமாக தண்டன் இடப் பட்டு இருக்கிற அவர்களால்
அனுமதனாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதன் அருகே சென்று பெரிய திரு மந்த்ரத்தாலே
அடியேனை அநந்ய பரனாக்கி நிரவதிகமான கைங்கர்யத்தின் பொருட்டு
கைக் கொண்டு அருள வேணும் -என்று ப்ரார்த்தியா நிற்கிற தன்னை
எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க கடவன்

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: