ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -2 -3–4-5-6-7–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -2- அவதாரிகை

ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் கீழ்
இத்தால்
அநந்ய கதித்வம் -என்ன
ஆகிஞ்சன்யம் – என்ன
ஸ்வ தோஷம் – என்ன
இவற்றை முன்னிட்டுக் கொண்டு
இந்தக் கைங்கர்ய சித்த்யர்த்தமாக திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

ஸ்வாத்ம நித்ய நியாமய
நித்ய தாஸ்யை கரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வாக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்யாத்
யகில குண கண அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய
பூத
பக்தி தத் உபாய சமயக் ஜ்ஞான
தத் உபாய சமீசீ நகரியா
தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி
சமஸ்த ஆத்ம குண விஹீன
துருத்தரா நந்த
தத் விபர்யய
ஜ்ஞான க்ரிய அனுகுண
அநாதி பாப வாசனா மஹார்ணவ
அந்தர் நிமக்ன

தில தைலவத் தாரு வஹ் நிவத் துர்விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசகா
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணாரவிந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

ஸ்வ ஸ்வரூப அனுசந்தான ப்ரீதியாலும்
பகவத் குண அனுபவ ப்ரீதியாலும்
கைங்கர்ய ஸ்வரூப கதன ப்ரீதியாலும்
ஸ்வாத்ம நித்ய நியாமய -என்று தொடக்கி -நித்ய கைங்கர்ய -என்னும் அளவும்
செல்ல உக்தத்தை அனுபாஷிக்கிறார்–
பார தந்த்ர்ய ரசத்தாலே ஸ்வரூப அனுசந்தானமும்
பகவத் வை லஷணயத்தாலே தத் குண அனுபவமும்
உபய அனுகூலமாக ப்ரீதி காரிதம் ஆகையாலே கைங்கர்யமும் அபிமதமாய் இருக்கும் இ றே –
அநவதிக அதிசய ச்வாம்ய -என்று
ஸ்வாத்ம நித்ய நியாமய
நித்ய தாஸ்யை கரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வாக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்ய-என்று ஔ பாதிக ச்வாம்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
மாதா பித்ரு ப்ரப்ருதிகள் உடைய ஸ்வாமித்வம்
ஒரோ ரஷணங்களுக்கு உறுப்பாய் -ஒரு நாளிலே முடியவும் கடவதாய் இ றே இருப்பது –
அங்கன் அன்றிக்கே இந்த ஸ்வாமித்வம் சர்வ வித ரஷணங்களுக்கும் உறுப்பாய்
சத்தா பிரயுக்தமாயும் இருக்கும் இ றே
ஸ்வாமித்வ பிரயுக்தமான குணங்களை சொல்லிற்று கீழ் சூரணை யிலே
அவற்றுக்கு அடியான ஸ்வாமித்வத்தை முதலாகச் சொல்லுகிறது இங்கு
கைங்கர்ய ப்ராப்த் யுபாய பூத பத்தி யாகிறது –பரபக்தி
தத் உபாய சமயக் ஜ்ஞானம் ஆகிறது -ஜீவ பர யாதாம்ய விஷயமாய்
அநவரத பாவமே யாம்படி பரி பக்வமான ஜ்ஞான விசேஷம்
தத் உபாய சமீசீ நகரியா –
சமீசீ நகரியை யாகிறது -ஆத்ம யாதாம்ய ஜ்ஞானத்தை உடைத்தாய்
த்ரிவித பரித்யாகயுக்தமன கர்ம யோகம் –

தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி சமஸ்த ஆத்ம குண விஹீன –
கீழ்ச் சொன்ன கர்ம யோகத்துக்கு அநுகுணமாய்
சத்வ பிரதானமாய்
சமோ தமஸ் தபஸ் சௌசம் ஷாந்தி ஆர்ஜவம் ஏவச
ஜ்ஞானம் விஞ்ஞானம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வ பாவஜம்-கீதை -18-42
என்கிறபடியே சம தமாத் யாஸ்திக்யம் பர்யந்தமான குணங்களும்
அமா நித்வாத் யாத்ம குனங்களுமான சமஸ்த ஆத்ம குணங்களாலே
சூன்யனாய் இருந்தேனே யாகிலும் –

துருத்தரா நந்த தத் விபர்யய ஜ்ஞான க்ரிய அனுகுண அநாதி பாப வாசனா மஹார்ணவ அந்தர் நிமக்ன –
இதுக்கு கீழ்
அஹம் அஸ்ம் யபராதானாம் ஆலயோ அகிஞ்சநோச்கதி
த்வமேவோபாய பூதோ மே பவேதி பிரார்த்தனா மதி
சரணாக திரித் யுக்தா ஸா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் –என்கிறபடியே
தம்முடைய ஆகிஞ்சன்யம் சொன்னாரே
இதுக்கு மேலே
ஸ்வ தோஷ ஞாபனம்  பண்ணுகிறார்
கடக்க வரிதாய்
அவதி இன்றிக்கே  கீழ் சொன்ன கர்ம ஜ்ஞானங்களுக்கு
விபரீதமாய் இருந்துள்ள
ஜ்ஞானம் என்ன -வ்ருத்தம் என்ன – இவற்றுக்கு அநுகுணமாய்
அநாதியாய் இருந்துள்ள பாப வாசனை யாகிற பெரும் கடலிலே
அழுந்திக் கிடக்கிற –
பாப வாசனை யாகிறது -பாபத்தால் வந்த வாசனை யாதல்
பாப ஹேதுவான வாசனை யாதல்-

—————————————————————————————————

தில தைலவத் தாரு வஹ் நிவத் துர்விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசகா
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

பாப வாசனையில் அகப்படுகைக்கு அடியான
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான
ஸ்வரூப திரோதா நத்தைச் சொல்லுகிறது –
தில தைலவத் தாரு வஹ் நிவத் துர்விவேச-
பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ணும் இடத்தில்
சிலரால் பிரிய அனுசந்திக்க அரிது என்னும் இடத்துக்கு
இரண்டு திருஷ்டாந்தம் சொல்கிறார்
விரகராய் சக்தருமாய் இருப்பார் பிரிக்கில் பிரிக்கும் இத்தனை இ றே
எள்ளில் எண்ணெய் போலேயும்
அரணியில் அக்நி போலேயும் -இருக்கை –
இப்படி ஜ்ஞான வாசனையாலும்
பகவத் பிரசாதத்தாலும் ஆக பிரக்ருதியையும் ஆத்மாவையும்
பிரிய அனுசந்திக்குமது ஒழிய
அல்லாதார்க்கு பிரிய அனுசந்திக்க ஒண்ணாத படி இ றே
பிரக்ருதியில் ஆத்மா அழுந்திக் திரோ ஹிதமாகக் கிடக்கிற படி –
தாருணயக் நிர்யதா தைலம் திலே தத்வத் புமா நபி
பிரதானே அவஸ்தி தோ வ்யாபீசேத நாதமா ஆத்ம வேதன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-28-என்னக் கடவது இ றே –
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ –
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களையும்
சத்த பரிணாமித்வத்தையும் ஸ்வ பாவமாக உடைத்தாய் –

அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப –
ஜடா ஸ்வ பாவமான பிரக்ருதியிலே அவர்ஜீயமான சம்பநதத்தை உடைத்தாய் –

துரத்யய பகவன் மாயா திரோஹிதஸ்வ பிரகாச –
மம மாயா துரத்யயா-என்கிறபடியே
கடக்க அரிதுமாய்
ஒரு சர்வ சக்தியாலே பிணைக்கப் பட்டதாய்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மஹேச்வரம்-என்கிறபடியே
மாயா சப்த வாச்யையாய் இருந்துள்ள பிரக்ருதியாலே
மறைக்கப் பட்ட ஆத்ம பிரகாசத்தை உடையனாய்

அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசகா விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித –
அநாதியான அஜ்ஞ்ஞாநத்தாலே திரட்டப் பட்டதாய்
முடிவு இன்றிக்கே என்னோடு பிறரோடு வாசி அற
ஒருவராலும் அவிழ்க்க சக்யம் அன்றிக்கே
இருந்துள்ள புண்ய பாப ரூபமான கர்மம் ஆகிற கயிற்றாலே
புறமறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறையாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிறமுடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே -திருவாய் -5-1-6-என்கிறபடியே
கட்டுண்டவனாய் –
இவ்வளவும் வர -அபராதானாம் ஆலயத்வம் -சொல்லிற்று ஆய்த்து-

பாப வாஸநா மஹார்ண வாந்தர் நிமக்ன -என்று வைத்து
பின்பு -பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாச -என்று வைத்து
பின்பு -கர்ம பாசப்ரக்ரதித -என்கையாலே
வாஸநா கார்யம் ஸ்வரூப திரோதான ரூபமான அஞ்ஞானம்
தத் கார்யம் கர்மம் -என்று சொல்லிற்று ஆய்த்து –

அநாக தாநந்த கால சமீஷயாபி அதருஷ்ட சந்தா ரோபாய அஹம் –
ஆகையாலே
இதுக்கு முன்பு பாராதே மேலும் முடிவு இன்றிக்கே இருந்துள்ள –
மேல் வரப் புகுகிறதாய்
அனந்தமாய் இருந்துள்ள கால பரம்பரைகளை அடையப் பார்த்தாலும்
காணப் படாமல் இருந்துள்ள சம்சார சாகர சமுத்தரண உபாயத்தை உடையனான நான்

நிகில ஜந்து ஜாத சரண்ய
இப்படி அனுகூலங்களில் ஒன்றும் இன்றிக்கே
பிரதி கூலங்களில் இல்லாதது இன்றிக்கே
ஜன்ம மாத்திர யோகிகளான சகல ஜந்துக்களுக்கும்
சரண வரண அர்ஹன் என்று கருத்து –
அகில ஜகத் ஸ்வாமின் -என்று வைத்து
அஸ்மத் ஸ்வாமின் -என்னுமா போலே

———————————————————————————-
ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணாரவிந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

ஸ்ரீ மன் –
பூர்வ வ்ருத்தம் பார்த்து
ஷிபாமி -என்ன அவசரம் இன்றிக்கே
அருகே இருந்து சேர்ப்பாரும் உண்டு -என்கிறார்

நாராயணா –
இஜ் ஜந்து விமுகமாய்க் கிடக்கும் தசையிலும்
சத்தையை நோக்கிக் கொண்டு போந்தவன் அல்லையோ –
ஆக
அருகு இருக்கும் பிராட்டியைப் பார்த்தாலும்
தேவரைப் பார்த்தாலும்
எவ் வழி யாலும் ரஷித்தே யாக வேணும் -என்றபடி

த்வ சரணாரவிந்த யுகளம் –
பரம காருணிகரான தேவர் உடையதாய்
சர்வ ஸூ லபமாய்
நிரதிசய போக்யமாய்
ஒன்றுக்கு ஓன்று உபமாநமாம் அது ஒழியச்
சலித்துப் பார்த்தாலும்
வேறு உபமானம் இன்றிக்கே இருக்கிற திருவடிகளை –

சரணம் அஹம் ப்ரபத்யே –
உபாயமாக அத்யவசிக்கிறேன்
இது கத்யர்த்தம் ஆனாலும்
கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற ந்யாயத்தாலே
அத்யவசாயத்தைக் காட்டுகிறது

———————————————————————————–

சூரணை -3- அவதாரிகை –

உபாய வரண சமநந்தரம்
அர்த்தித்வ மாத்ரத்தாலே
எனக்கு தாஸ்ய ரசத்தைத் தந்து அருள வேணும்
என்று மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு
தம்முடைய ப்ராப்யத்தை அர்த்திக்கிரார் –

ஏவம் அவஸ்தி தஸ்யாபி
அர்த்தித்வ மாத்ரேண
பரம காருணிகோ பகவான்
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உப நீதை காந்தி காத்யந்திக
நித்ய கைங்கர்ய ரதி ரூப
நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி
விஸ்வாச பூர்வகம்
பகவந்தம் நித்ய கிங்கர
தாம் ப்ரார்த்தயே

ஏவம் அவஸ்தி தஸ்யாபி –
உக்தி பிரகாரத்தாலே நின்ற எனக்கும்
அதாகிறது -அபராதாநாம் ஆலயனாய்
அகிஞ்சனனாய் கொண்டு
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றின எனக்கும் -என்றபடி

அர்த்தித்வ மாத்ரேண
விரோதி வர்க்கத்தில் உபேஷை யாதல்
பிராப்யத்தில் தவறை யாதல் -இன்றிக்கே
நிரபேஷனாய் இராதே
அபேஷித்த மாத்ரமே கொண்டு

பரம காருணிகோ பகவான் –
என்னுடைய சாம்சாரிகமான துக்கத்தைக் கண்டு
ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
அறப் பொறுக்க மாட்டாத ஸ்வ பாவத்தை உடையனாய்
ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவான ஜ்ஞான சக்தியாதிகளால்
பரி பூரணராய் இருந்து உள்ளவர் .
இவ் விசேஷணங்கள் இரண்டும் அர்த்தநா மாத்ரத்தாலே
புருஷார்த்த ப்ரதனாகைக்கு ஹேதுக்களாகச் சொல்லுகிறது –

இனி மேல் அபேஷிதம் தன்னையே சொல்லுகிறது –
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உப நீதை காந்தி காத்யந்திக நித்ய கைங்கர்ய ரதி ரூப –
தன்னை அனுபவிக்கும் அத்தாலே உண்டான ப்ரீதியாலே உண்டாக்கப் பட்டதாய்
ஒருபடிப் பட்டு முடிவு இன்றிக்கே இருந்துள்ள
கிங்கர பாவத்தைப் பற்றி இருந்துள்ள
ஆசையை வடிவாக உடைத்தான –

நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி-
யாவதாத்மபாவியான தாஸ்யத்தை தந்து அருளும் என்கிற

விஸ்வாச பூர்வகம்
விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு

பகவந்தம் நித்ய கிங்கர தாம் ப்ரார்த்தயே –
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஊற்றுவாயான
ஜ்ஞான சக்த்யாதிகள் ஆறும் தன்னை
ஆஸ்ரயித்து நிறம் பெறும் படியான சர்வேஸ்வரனைக் குறித்து
நித்ய கிங்கரதையை பிரார்த்திக்கிறேன்
தாஸ்யம் என்றும் கிங்கரதை என்றும் பர்யாயம்

———————————————————————————–

சூரணைகள் –4-5-அவதாரிகை –
தம் பாசுரத்தாலே
ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் -கீழ் –
ஐதி ஹாசிக புருஷர்கள் பிரார்த்தித்த பிரகாரத்தே
பிரார்த்திக்கிறார் இங்கு –
என்ன பாசுரத்துக்கு இரங்கும் என்று அறியாத படியான
தம்முடைய பிராப்ய த்வரையாலே-

தவா நுபூதி சம்பூத ப்ரீதிகாரித தாசதாம்
தேஹி மே க்ருபயா நாத ந ஜானே கதிமந்யதா–சூரணை -4

தவா நுபூதி சம்பூத ப்ரீதிகாரித தாசதாம் தேஹி –
உன்னுடைய அநு பூதியில் உண்டான
ப்ரீதியாலே பண்ணப் பட்ட
தாஸ்ய ரசத்தைத் தந்து அருள வேணும்

-மே –
ருசிக்கு மேற்பட இன்றியிலே இருக்கிற எனக்கு –

க்ருபயா நாத –
இத்தளையிலே துர்க்கதியைக் கண்டு
இரங்கின இரக்கத்தாலும்
அவர்ஜநீய சம்பந்தத்தாலும்

ந ஜானே கதிமந்யதா–
இப் பிரகாரம் ஒழிய வேறு ஒரு உபாயம்
அறிகிறிலேன்

சர்வ அவஸ்த உசித அசேஷ சேஷைதை கரதிஸ் த்வ
பவேயம் புண்டரீகாஷ த்வமே வைவம் குருஷ்வ மாம் —சூரணை -5

சர்வ அவஸ்த உசித அசேஷ சேஷைதை கரதிஸ் த்வ-
இத் தாஸ்யத்துக்கு அடியான ப்ரீதியும்
எனக்கு உண்டாம்படி தேவரீரே பார்த்து
அருள வேணும் -என்கிறார் –
தேவர் திருவடிகளிலே சர்வ அவஸ்தை களிலும்
உசிதமான சர்வ சேஷத்வத்தை ஒன்றையுமே
பற்றி இருந்துள்ள ப்ரேமத்தை உடையேனாக வேணும் –

பவேயம் புண்டரீகாஷ –
ஜிதந்தே புண்டரீகாஷ -என்கிறபடியே
ருசி ஜநகமான கடாஷத்தாலேயே
இப் ப்ரேமத்தை உடையேனாம் படி
பண்ணி அருள வேணும் –

த்வமே வைவம் குருஷ்வ மாம் —
என் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே
சர்வ அபேஷிதங்களுக்கும்
தேவர் கை பார்த்து இருக்கிற எண்ணெய்
தேவரே இப்படிப் பண்ணி அருள வேணும் –

————————————————————————————

சூரணை -6- அவதாரிகை –

நாம் உம்முடைய அபேஷிதம் தருகைக்கு
பிராப்யத்தின் உடைய யதா ஜ்ஞானமும்
தத் ருசியும் உமக்கு உண்டோ -என்ன
இப்பாசுரம் சொன்ன மாத்ரமே கொண்டு
அதின் அர்த்த தாத்பர்யத்தில் என் மனஸ் ஸூ நிஷ்டமாம் படி
தேவரே பார்த்து அருள வேணும் -என்கிறார்-

ஏவம் பூத தத்வ யாதாம்ய போத
தத் இச்சா ரஹிதஸ்யாபி
ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன
உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம்
மே மனஸ் த்வமேவ அத்யைவ காரய

ஏவம் பூத தத்வ யாதாம்ய போத தத் இச்சா ரஹிதஸ்யாபி –
ஜீவ ஸ்வரூபம் என்ன
பர ஸ்வரூபம் என்ன
ப்ராப்தி பலமான கைங்கர்யம் என்ன
இவற்றின் உடைய யாதாம்ய ஜ்ஞானம் இன்றிக்கே இருந்ததாகிலும்
அதில் இச்சையும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன –
உக்தமான பாசுரத்தின் உடைய
உச்சாரண மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு –

உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம் மே மனஸ் –
ஒரு முதல் இன்றிக்கே இருக்கிற
என்னுடைய நின்றவா நில்லா -பெரிய திருமொழி -1-1-4-
பிரமாதியான -ஸ்ரீ கீதை -6-34- மனஸ் சை
இதில் சொல்லப் படா நின்றுள்ள அர்த்தித்தின் உடைய
யாதாத்ம்யத்திலே நிஷ்டமாம் படி

த்வமேவ அத்யைவ காரய –
சஹகார்யந்தர நிரபேஷரான
தேவரே விளம்பம் அற
இப்போதே பண்ணி அருள வேணும் –

—————————————————————————————-
சூரணை -7- அவதாரிகை –

இப்படித் தம் அபேஷிதம் செய்கைக்கு ஹேதுவான
அத்தலையில் ஸ்வ பாவங்களை அருளிச் செய்கிறார் –

அபார கருணாம்புதே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே
அநவரத விதித்த நிகில பூத ஜாத யாதாத்ம்ய
சத்யகாம
சத்யசங்கல்ப
ஆபத்சக
காகுத்ச்த
ஸ்ரீ மன்
நாராயண
புருஷோத்தம
ஸ்ரீ ரெங்க நாத
மம நாத
நமோஸ்து தே

அபார கருணாம்புதே –
கரை கடந்த க்ருபா சமுத்ரம் ஆனவனே
கருணை யாகிறது -பர வ்யசன அசஹிஷ்ணுத்வம்
அது தான் அபரிச்சேத்யம் ஆகையாலே
சமுத்ரமாகப் பேசுகிறார்
அதுக்கு அபாரத்வம் ஆகிறது –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
ஆஸ்ரிதர் அளவன்றிக்கே மனுஷ்ய சாமான்யத்திலும் வந்தேறுகை
இத்தால் என்னளவும் வர வெள்ளம் கோத்தது -என்கிறார் –

அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வரும் ஏற்றத் தாழ்வுகள் ஏதேனும் பாராதே
இருந்ததே குடியாக எல்லார்க்கும் சரண வரண அர்ஹன் ஆனவனே
இத்தால் கீழ் சொன்ன க்ருபா கார்யமான சர்வ லோக சரண்யத்வம் சொல்லிற்று ஆயிற்று –

பிரணதார்த்தி ஹர
இப்படி உக்தமான கிருபையையும்
சர்வ லோக சரண்யதையையும் அனுசந்தித்து
திருவடிகளிலே தலை சாய்ந்தார் –
இழவுகளைப் போக்குமவனே –

ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே –
அன்று ஈன்ற கன்றின் உடம்பில்
வழும்பைத் தன பேறாக போக்கும் தேனுவைப் போலே
ஆஸ்ரிதர் உடைய தோஷங்களை தன் பேறாக
ஷமிக்கை யாகிற ஸ்வபாவம்
அனுசந்தா தாக்களுக்கு பரிச்செதிக்க ஒண்ணாது இருக்கும்
பெருமையை உடையவனே

மஹோ ததே –என்று
கீழ் சொன்ன கருணாம் புத்தியில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது

அநவரத விதித்த நிகில பூத ஜாத யாதாத்ம்ய –
சர்வ காலத்திலும் அறியப் பட்ட சகல பூத சமூஹத்தின் உடைய
உண்மையை உடையவனே
இத்தால் -ஸ்வதஸ் சர்வஜ்ஞரான தேவர்க்கு நான் அறிவிக்க வேண்டும்படியாய்
இருந்ததோ என்னுடைய தண்மை–என்று கருத்து –

சத்யகாம
நித்தியமான காமங்களை உடையவனே –
இத்தால் ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை கொடுக்கைக்கு
அடியான அவாப்த சமஸ்த காமத்வம் -சொல்லுகிறது

சத்யசங்கல்ப
அமோகமான சங்கல்பத்தை உடையவனே
அபூர்வமாக போகங்களை சங்கல்பித்துக் கொடுக்கும் இடத்தில்
அவை தப்பாது இருக்கை –

ஆபத்சக –
ஆபத்து நேரிடுமாகில் அங்குத்தைக்கு துணை யாமவனே-
தன்னால் வரும் ஆபத்துக்கும் பிறரால் வரும் ஆபத்துக்கும்
ரஷகரான தேவர் கை விட்டாலும்
தேவரையே துணையாகப் பற்றலாய் இருக்கை –

காகுத்ச்த-
தன்னால் வரும் ஆபத்துக்கும் நாமே துணை என்னும் இடம் எங்கே கண்டீர் -என்ன
ககுச்த வம்ச ப்ரசூதரான தேவர் ஆசரித்ததாக
வதார்ஹம்பி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்-என்று ஸ்ரீ ராமாயணத்தில் எழுதக் கண்டிலோமோ -என்கிறார் –

ஸ்ரீ மன்
தேவர் உபேஷித்தாலும் தேவராலும் உபேஷிக்க ஒண்ணாத படி
அருகே இருந்து சேர விடுவாரும் உண்டு -என்கை
இத்தால் அருகு இருக்கிற பிராட்டியைப் பார்த்து –
ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

நாராயண
அவள் தானே சித குரைக்கிலும் -என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-10-2-
என்னுமவர் அல்லீரோ தேவர்
இத்தால் நம் இருவருக்கும் உண்டான சம்பந்தத்தைப்
பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார்

புருஷோத்தம –
உன் பக்கல் அர்த்தித்துப் பெறு வாரை உதாரா -என்னுமவர் அல்லீரோ தேவர்
தேவர் ஔதார்ய குணத்தைப் பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

ஸ்ரீ ரெங்க நாத
கீழ் சொன்ன ஸ்வ பாவங்கள் எல்லாம் என்றும் ஒக்க
ஓலைப் புறத்திலே
கேட்டுப் போகாமே பிரத்யஷிக்கலாம் படி
அன்றோ தேவர் கோயிலிலே கண்வளர்ந்து அருலுகிரபடி –

மம நாத –
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது இம் முறையை
எனக்கு உணர்த்துகைக்காக -என்கிறார் –

நமோஸ்து தே –
முறையை அறிந்தவர்களுக்கு அபேஷிதமாய்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை அபேஷித்துத் தலைக் கட்டுகிறார்
எனக்கு ஆராவமுதாய் யெனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ திருவாய்மொழி -10-10-6- என்னக் கடவது இறே-
தேவர்க்கே சேஷமான இவ் வாத்ம வஸ்து தேவரீர்க்கே போக்யமாய்த்
தலைக் கட்ட வேணும் –

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: