ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -1 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

பிரவேசம் –

ஸ்ரீ ரெங்க கத்யத்தால் செய்தது ஆகிறது –
ப்ராப்யமான கைங்கர்யத்தை ப்ரதமத்திலே  பிரார்த்தித்து
தத் சித்தி அர்த்தமாக ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு
ஸ்வ தோஷக்யாபன பூர்வகமாக திருவடிகளையே உபாயமாக ஸ்வீகரித்து
அநந்தரம்
அர்த்தநா மாத்ரத்தாலே
இப்படி விலஷணமாய் இருந்துள்ள தாஸ்யத்தை தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இவ் விஸ்வாசம் தன்னையும்
காருண்யாதி கல்யாண குண பரி பூரணரான தேவரே தந்து அருள வேணும் என்று அபேஷித்து
தேவருக்கு அனன்யார்ஹ சேஷ பூதமான இவ் வஸ்துவை
ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி பர்யந்தமாக தேவரே பண்ணி அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே அபேஷித்து தலைக் கட்டுகிறார்-
இப் பிரபத்தி அதிகாரத்திலே இழிந்த முமுஷூக்கள் யாவச் சரீர பாதம்

கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில் –
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வெநநாகத்து உன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -திருவந்தாதி -63-என்கிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே அனுகூல வருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச்
சார்த்தி இருப்பார் தவம் -நான் முகன் திருவந்தாதி -18- என்றும்
ஆராத நாநாம் சர்வேஷாம் விஷ்ணோ ராராதனம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததி யாராதனம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே பரவண ஹ்ருதயரான ததீயர் உடைய ஆராதனம் ஆகிற
அனுகூல வருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்
அ தல் அசக்தராய் இருப்பார்
கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான்
பார்கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திருவந்தாதி -86-என்கிறபடியே
பகவத் குண அனுபவத்திலேயே கால ஷேபம் பண்ணுதல்
அவ்வளவு பகவத் ப்ராவண்யம் போராதவர்கள்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறபடியே
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணா நின்று கொண்டு கால ஷேபம் பண்ணுதல் ஆயத்து இருப்பது
அதில் இவர் த்வயத்தின் அர்த்த அனுசந்தானத்துடனே கால ஷேபம் பண்ண நினைத்து
இதில்
பெரிய கத்யத்தில் விஸ்த்ருதமாக அனுசந்தித்த அர்த்தத்தை
ஸ்ரோதாக்களுக்கு ஸூ க்ரஹமாகவும்
பெரிய பெருமாளுக்குத் திருச் செவி சாத்த ஏகாந்தமாகவும்
அந்த த்வயத்தின் உடைய அர்த்தத்தை பாசுரப் பரப்பற
திரு முன்பே விண்ணப்பம் செய்யலாம்படி
சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————————————————————————————-

சூரணை -1- அவதாரிகை –

அதில் முதல் சூரணை யிலே
பரம புருஷார்த்தமாக நிர்ணீதமான கைங்கர்யத்தை அபேஷிக்கிறார்
கைங்கர்ய பிரதி சம்பந்தியாவான் நாராயணன் இ றே
அந் நாராயண சப்தத்துக்கு அர்த்தம்
உபய விபூதி யோகமும்
ஹேய பிரதி படத்வமும்
சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் இ றே
அதில் உபய விபூதி யோகத்தை முதலில் அருளிச் செய்கிறார்-

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்மாத் யசேஷ தோஷா சம்ச்ப்ருஷ்டம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
சௌசீல்ய வாத்சல்ய மார்த்த்வ ஆர்ஜவ
சௌஹார்த்த சாம்ய காருண்ய மாதுர்ய
காம்பீர்ய ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய
தைர்ய சௌர்ய பராக்கிரம சத்யகாம
சத்ய சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்ய
அசங்க்யேய கல்யாண குண கனௌக
மஹார்ணவம் பரப் ப்ரஹ்ம பூதம்
புருஷோத்தமம் ஸ்ரீ ரங்க ஸாயினம்
அஸ்மத் ஸ்வாமினம் பிரபுத்த
நித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்ம
ஸ்வ பாவோஸஹம்
தத் ஏக அனுபவ
தத் ஏக பிரியா
பரிபூரணம் பகவந்தம்
விசத தம அனுபவேன
நிரந்தர அனுபூய
தத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷை தை கரதி ரூப
நித்ய கிங்கரோ பவானி

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
த்ரிவித சேதனர் -என்ன
த்ரிவித அசேதனங்கள் -என்ன
இவற்றின் உடைய ஸ்வரூப பேதம் என்ன
ஸ்திதி பேதம் என்ன
ப்ரவ்ருத்தி பேதம் என்ன
இவற்றை ஸ்வாதீனமாக உடையவன் –
சேதன த்ரைவித்யம் பத்த முக்த நித்ய பேதத்தாலே  –
அசேதன த்ரைவித்யம் -சுத்த சத்வ ஆத்மகதை யாலும் -சுத்த சத்வமான அசித்தும் –
குண த்ரயாத்ம கதையாலும் -குண த்ரயாத் மிகையான -பிரகிருதியும் –
சிருஷ்டி யாதி நிர்வாஹகமான கால ரூபத்தாலும் –
அதில் பத்தர் ஆகிறார் -ஜ்ஞான சங்கோச அர்ஹ ஸ்வரூப ராய்
புண்ய பாப பலமான சுக துக்க அனுபவத்திலே ஸ்திதியை உடையராய்
தத் ஹேதுவான புண்ய பாப ரூப கர்ம ப்ரவ்ருத்தி கரராய் இருப்பார்கள்
முக்தர் ஆகிறார் -நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
ஜ்ஞான சங்கோச ஹேதுவான தேக சம்பந்தாதிகள் நிவ்ருத்தமாய்
அதடியாக ஆவிர்ப்பூத ஸ்வரூபராய்
கைங்கர்ய சோகத்திலே ஸ்திதியை உடையராய்
தத் அனுரூபமாக
சோஸ் நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்கிறபடியே
பகவத் குண அனுபவ ப்ரவ்ருத்திகராயும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி
தத் யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்வம் அனுகச்சேத் ததாப்ரகாரம் -என்கிறபடியே
காயிகமான கைங்கர்ய ப்ரவ்ருத்த கராயும்-
அத்தாலே கழித்து
ஹாவு ஹாவு ஹாவு -என்கிறபடியே -வாசிக ப்ரவ்ருத்திகராயும் இருப்பார்கள்

நித்யர் ஆகிறார் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தரைப் போலே ஒரு நாள் அளவிலே வந்து
கிட்டினவர் அன்றிக்கே -அநாதி அனந்த கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையவ ராய்
சதா தர்சன ப்ரவ்ருத்தி கராயும் நித்ய அஞ்சலி புடராய் பிரவ்ருத்தி கராயும்
நித்ய ஸ்துதி பிரவ்ருத்தி கராயும் இருப்பார்கள்
ஆகையால் ஆயிற்று நித்யர் என்று இவர்களுக்கு பேராயிற்று –
பிரகிருதி தத்வம் -குண த்ரயாத் மகமாய
சத்த பரிமாண ஸ்வரூபமாய்
சேதன கர்ம அனுகுணமாகப் பரிணமிக்கை யாலே ஸ்திதியை உடைத்தாயும்
சேதனருக்கு ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூப உபாய ஸ்வரூப விரோதி ஸ்வரூப
சம்பந்த ஸ்வரூப திரோதானகரமாயும் இருக்கும்
பஞ்ச உபநிஷண் மயமான அசித்து சுத்த சத்வ மயமாயும்
சதைக ரூப ரூபமாயும்
நித்ய முக்தர்கள் உடைய கைங்கர்யத்துக்கு உபகரண ரூபேணவும்
ஈஸ்வரன் உடைய ரஷண் க்ருத்யத்துக்கு அனுகூலமாக வ்யூஹ விபவ ரூபேணவும்
ஸ்திதி யை உடைத்தாயும்
சர்வத்ர பிரகாச ப்ரவ்ருத்திக மாயும் இருக்கும்
காலம் -பிரக்ருதியில் காட்டில் வ்யாவ்ருத்தமாய்
ஏக ஸ்வரூபமாய்
நிமேஷ காஷ்டாத்யவ அவஸ்தா யுக்தமாய்க் கொண்டு
ப்ராக்ருத பதார்த்தங்கள் என்ன
தத் சம்ஸ்ருஷ்ட சேதனர் என்ன
இவற்றின் உடைய நிர்வஹணத்திலே ஸ்திதியை யுடைத்தாயும்
சகலத்தி உடைய உத்பத்தி விநாசாதி ப்ரவ்ருத்தி கமாயும் இருக்கும்
இவற்றை ஸ்வாதீனமாக உடையனாகை யாவது
அந்தராத்மா தயா நின்று நியமிக்கை-
ஆக சகல சேதன சேதனங்களின் உடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள்
ஈஸ்வர அதீனமாகையாலே இவற்றின் உடைய சரீரத்வமும் ஈஸ்வரன் உடைய சரீரித்வமும் சொல்லிற்று ஆயிற்று –

க்லேச கர்மாத் யசேஷ தோஷா சம்ச்ப்ருஷ்டம்
சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய்
ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில்
சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் –
தத் கத தோஷை ரசம் ஸ்ப்ருஷ்டன் -என்கிறது
கிலேசம் ஆவது –
அவித்யாஸ் மிதாபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன
இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன
ஆதி -சப்த க்ராஹ்யமான விபாகா சயங்கள் -என்ன
இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ச்பர்சிக்கப் படாதவன் –
விபாகம் ஆவது -தேவாதி ஜாதி யோகம் -என்ன
ஆயுஸ் என்ன -இவை முதலானவை
ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனுகுண புத்தி பேதங்கள்
அசேஷ -பதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும்
சேதன கதமான துக்க அஜஞநாதிகளையும் நினைக்கிறது
அசம்ச்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது
ஸ்வாபாவிக -இத்யாதி-
இதில் சர்வ சாதாரணமாயும்-ஆஸ்ரித விஷயமாகவும் -ஆஸ்ரித விரோதி விஷயமாகவும்
மூன்று வகைப் பட்ட குணங்களைச் சொல்லுகிறது –
ஸ்வா பாவிகம் ஆகையாவது -ஜலத்துக்கு சைத்யம் போலேவும் அக்னிக்கு ஔஷ்ண்யம் போலேயும் யாவத் த்ரவ்ய பாவியாய் இருக்கை-
அநவதிக அதிசய –
உபர்யுபர்யப்ஜபு வோஸபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதெ கைக குணவதீபசய சதா ஸ்திதா நோத் யமதோஸ்தி சேரதே-ஸ்தோத்ர ரத்னம் -19-என்கிறபடியே
தனித் தனியே நிஸ் சீமமாய் ஆச்சர்ய அவஹமுமாய் இருக்கை

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது -யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்ய ஷேண சதா ச்வத – என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கரமே பாவித்து இருந்துள்ள அசந்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –
பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹச் ரைக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ச்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-
சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்
தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்
இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே
அநந்தரம் –ஆஸ்ரித விஷயமாக பன்னிரண்டு குணம் சொல்லுகிறது
1-சௌசீல்ய –
சீலம் ஆவது -மகதோ மந்தைச் சஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வபாவத்வம்
சௌசீல்யம் ஆவது -அந்த மஹத்வம் தன திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை –
ஆத்மானம் மானுஷம் மன்யே –
2-வாத்சல்ய –
அதாகிறது -ஆஸ்ரித கதமான தோஷமும் குனமாய்த் தோற்றும்படியான ப்ரேமம் –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷத்தை தன பேறாகப் போக்கி ஸ்வ குணங்களாலே தரிப்பிக்கை
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உன்னை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய் நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – -திருச் சந்த விருத்தம் -111
மாலே படிச் சோதி மாற்றெல் இனி உனது
பாலே போல் சீரில் -பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி -58
அதாவது அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவிருக்கும் படி
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

3-மார்த்த்வ –
இது ரூப குணமாய் இருக்க
ஆத்ம குண பிரகரணபடிதமாகையாலே மாநசமான
தௌர்ர்ப்பல்யத்தைக் காட்டுகிறது –
அதாகிறது -ஆஸ்ரித விச்லே ஷம் பொறுக்க மாட்டாது ஒழிகை –
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யானி பிரியாணி மது ராணி ச
ஹ்ருத் யான் யம்ருத கல்பானி மன ப்ரஹ்லாத நானி ச -ஆரண்ய -16-39
அநித்ரஸ் சத்தம் ராம -சுந்தர -36-44-
4-ஆர்ஜவ-
அதாவது -ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாக தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை-
அதாவது -அவர்கள் உடைய செவ்வைக் கேடு தானே செவ்வியம் படி தான் செவ்வியனாய் இருக்கை –
5-சௌஹார்த்த –
அதாவது -சோபா நாசம்சீதி ஸூ ஹ்ருத் –
ஆஸ்ரிதர் உடைய சந்நிதியோடு அசந்நிதியோடு வாசி அற
அவர்கள் உடைய சர்வ மங்களங்களையும் அன்வேஷியா நிற்கை –
6-சாம்ய
அதாவது ஜாதி குண வ்ருத்தாதிகள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே ஆபிமுக்கியமே ஹேதுவாக
ஆஸ்ரயணீயத்வே சமனாகை-
குஹென சாஹித
சபர்யா பூஜிதாஸ் சமயக்
7-காருண்ய –
அதாவது –ஸ்வார்த்த நிரபேஷ பரதுக்கஅசஹிஷிஷ்ணுத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
உத்சவேஷூ ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40–என்றும்
இயம் சா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி பரிதப்யதே
காருண்யே நான்ரு சம்ச்யேன சோகேன மத நேன ச – சுந்தர -15-49-என்றும்
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருனண்யாதா ஸ்ரிதேத் யான்ரு சம்ச்யத
பத்நீ நஷ்டேதி சோகேன ப்ரியேதி மத நேன ச -சுந்தர -15-50 -என்றும் -இருக்கை
8-மாதுர்ய-
அதாவது ஸ்வரூப ரூப குண விபூதிகளால் உண்டான சர்வதோ முகமான சாரச்யம்
ஹந்தும் ப்ரவ்ருத்தன் ஆனாலும் அவனுக்கு ரசாவஹனாய் இருக்கை
அசூர்யமிவ சூர்யேன-
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்று இருக்கை
9-காம்பீர்ய –
அதாவது -ஆஸ்ரீதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருத்தராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்கை
அதாவது தன்னுடைய கோடையின் சீர்மையையும்
கொள்ளுகிறவன் உடைய சிறுமையையும் பாராது ஒழிகை
எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கை
யா ஆத்மாதா பலதா
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ -நின் புகழில்
வைக்கும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் -பெரிய திருவந்தாதி -53-
10-ஔதார்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை இரந்து கொடுக்கை –
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்ய ச –
உதாராஸ் சர்வ ஏவைத –
11-சாதுர்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்து வைக்கை
ஆஸ்ரிதராய் இருப்பார் தன்னுடைய ரஷகத்வத்திலே அதி சங்கை பண்ணினால்
அவ் வதி சங்கியைப் போக்கி ரஷிக்கை –
பாதாங்குஷ்டென சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்-
பிபேத ச புநஸ் சாலான் –
12-ஸ்தைர்ய-
அதாவது ப்ரத்யூஹ சஹஸ்ரம் உண்டானாலும்
ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞை குலையாது ஒழிகை –
மகா ராஜர் தொடக்க மானவர் நேராக விரோதிக்கச் செய்தேயும் -ந த்யஜேயம் கதஞ்சன -என்றார் இ றே
ஆக
இப்பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்
அநந்தரம் மூன்று குணம் ஆஸ்ரித பிரதி பஷ விஷயம் –
1-தைர்ய-
அதாவது எதிரியை மதியாது ஒழிகை
இலங்கையிலே ராவணனும் பலமும் யல்லாம் குறி அழியாது இருக்க
அவன் தம்பியை கடலுக்கு இக்கரையிலே லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணி வைத்தான் இறே
அப்திம் ந தேரித ந ஜிக்யித ராஷ சேந்தரம்
நைவாச்ய ஜிஜ்ஞித யதா ச பலா பலம் த்வம்
நிச் சம்யச் சபதி தஸ்ய பதெச்ப் யாஷி யஷிஞசஸ்
தஸ்யா நுஜம் கதமிதம் ஹாய் விபீஷணஞ்ச -அதிமாநுஷ ஸ்தவம் -24
மூல பலம் சந்நிஹிதமான வன்று பெருமாள் திரு உள்ளம் பூர்வ ஷணத்தில் காட்டில்
ஒரு விக்ருதி இன்றிக்கே  இருந்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
2-சௌர்ய –
அதாவது பர பலத்திலே சென்று புகும் போது ஸ்வ பலம் போலே இருக்கையும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்கிறபடியே ப்ரஹர்த்தாவாய் இருக்கையும் –
3-பராக்கிரம –
அதாவது சாரிகை வரும் போது கையும் வில்லுமாக சஞ்சரிக்கும் சஞ்சாரத்திலே
எதிரிகள் துவகுண்டு எதிரி என்று அறியாதபடி சஞ்சரிக்கை
ப்ரஹர்த்தாரம் சரீரேஷூ ந தே பஸ்யந்தி ராகவம்
இந்த்ரி யார்த்தேஷூ திஷ்டந்தம் பூதாத்மா நமிவ பிரஜா -யுத்தம் -94-23

1-சத்யகாம-
அநந்தரம் ஆஸ்ரித விஷயமாகவும்
உபாய விஷயமாகவும்
உபேய விஷயமாகவும்
நாலு குணங்களைச் சொல்லுகிறது
நித்தியமான காமங்களை உடையவன் -என்கிறது –
அன்றிக்கே -காம்யந்த இதி காமா -ஆஸ்ரித ரஷண விஷய மநோ ரதம் –காமம் ஆகிறது
அது அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம் –

2-சத்ய சங்கல்ப –
அதாவது -அபூர்வமான போக்யங்களை சங்கல்ப்பித்து அனுபவிப்பிக்கும் இடத்தில் அமோகமாய் இருக்கை –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -திருவாய் -8-5-2- இருக்குமவர்களுக்கு
கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்கு தேவ மனுஷ்யாத் யவதார சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம்

3-க்ருதித்வ –
அதாகாது ஆஸ்ரிதர் அபிமதம் பெற்றால் அப் பேறு தன்னதாய் இருக்கை –
அபிஷிச்ய ச லங்கா யாம் –
இவர்கள் கர்த்தவ்யங்களை யடையத் தான் ஏறிட்டுக் கொண்டு செய்கை -என்றுமாம்
ஆதி கர்மணி க்தின் நந்த –

4-க்ருதஜ்ஞதா-
அதாவது ஆஸ்ரிதர் ஒரு கால் சரணம் என்ன
அம்மாத்ரத்தாலே   பின்பு செய்யும் குற்றம் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –
ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த வற்றை ஒழிந்து அவர்கள் செய்த வற்றையே நினைத்து இருக்கை -யென்னவுமாம்
ஆஸ்ரீதர்க்கு எல்லாம் செய்தாலும் பிரதமத்தில் சரணம் என்ற உக்தி மாதரத்தையே நினைத்து இருக்கும் யென்னவுமாம்
ஆஸ்ரீதர்க்கு எல்லாம் செய்தாலும் அத்தை மறந்து அவர்கள் செய்ததை ஒழிய தான் செய்யாத வற்றையே
நினைத்து இருக்கை -யென்னவுமாம்
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா
ஆதி –
இவை முதலான

அசங்க்யேய கல்யாண குண கனௌகமஹார்ணவம் –
என்னுடைய மனஸ் ஸூ க்கு கோசரமாய் இருப்பன சில குணங்கள் சொல்லிற்று இத்தனை போக்கி
அனுக்தமான குணங்களுக்கு எண்ணில்லை
ஒரு மஹார்ணவத்தில் ஜல பரமாணு வுக்கு சங்க்யை யுணடாகில் யாய்த்து
பகவத் குணங்களுக்கு சங்க்யை யுணடாவது
வர்ஷா யுதைர் யஸ்ய குணா ந சகா
சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ர –
பரப் ப்ரஹ்ம பூதம் புருஷோத்தமம் –
பர ப்ரஹ்ம சப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும்
வேதாந்தங்களில் ப்ரசித்தனானவன்
பர ப்ரஹ்மம் -ஆவது -ப்ருஹத்த்வ ப்ரும்ஹணத்வ குண யோகத்தால் ப்ரஹ்ம சப்த வாச்யத்வம் –
ப்ருஹத்வம் ஆவது -தான் பெரியனாகை
ப்ரும்ஹணத்வம் ஆவது –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – -பெரிய திருமொழி -11-3-5-என்றும்
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சா தர்ம்யமாகதா
சர்க்கேசபி நோப ஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -கீதை -14-2-என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -திருவாய் -3-9-4

புருஷோத்தமத்வம் ஆவது –
யஸ்மாத் ஷரமதீ தோசஹம் அஷராதசபி சோத்தம
அதோச்ச்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-18-என்று சர்வாதிகன் -என்றும்
புரு பஹூ ஸூ நோதி ததாதீதி புருஷ -என்று சர்வ அபேஷித பல ப்ரதன் ஆகையாலே பரம உதாரன் என்றும் சொல்லப் படுகை –

ஸ்ரீ ரங்க ஸாயினம்-
இப்படி என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையைச் சொல்லுகிறது –

அஸ்மத் ஸ்வாமினம் –
இத்தால் -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்கிறபடியே
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகாலும் சீலத்தாலும்
தம்மோடு எனக்கு உண்டான முறையை உணர்த்தினவர் -என்றபடி –
அஹம் அஸ்யாவரோ பராதா குணைர் தாஸ்யம் உபாகத -கிஷ்கிந்தா -4-12-

இதுக்கு கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று
இனி மேல் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை சொல்லுகிறார்
பிரபுத்தநித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்மஸ்வ பாவோஸஹம்-
நித்ய நியாம்யமாய்
நித்தியமான தாஸ்யததையே ஏக ரசமாக
உடைத்தாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வபாவம் உள்ளபடி பிரகாசித்த நான் –
இத்தால் ஸ்வா தந்த்ர்யமும் விஷயாந்தரமும் ஆத்ம நாசகம் -என்றபடி –

தத் ஏக அனுபவ
பகவத் விஷயம் ஒன்றுமே ஜ்ஞாநத்துக்கு விஷயமாம் படி யாய் –
தத் ஏக பிரியா
அவனையே பக்திக்கு விஷயம் ஆக்கினவனாய்
இத்தால் பகவத் அனுபவ ஹேதுவாய் இருந்துள்ள பர பக்தியாதிகளை நினைக்கிறது –

பரிபூரணம் பகவந்தம் விசத தம அனுபவேன நிரந்தர அனுபூய-
ஜ்ஞாநாதிகளால் குறைவற்று இருக்கிற ஈஸ்வரனைப்
பரி பூரணமாக
விசததம அனுபவத்தாலே
இடைவிடாதே  அனுபவித்து –
பூர்ண அனுபவம் ஆகிறது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் அனுபவத்துக்கு விஷயமாய் இருக்கை –
விசத அனுபவம் ஆகிறது -பிரத்யஷ அனுபவம் என்னலாம் படி தத் சமமாய் இருக்கை –
அது தான் பர பக்தி தச அனுபவம்
விசத தர அனுபவம் ஆகிறது -பரஜ்ஞான அனுபவம் –
விசத தம அனுபவம் ஆகிறது -பரம பக்தி தச அனுபவம் –
நிரந்தர அனுபவம் ஆகிறது -இடை இடையே விஷயாந்தரம் கலசாது இருக்கை –

தத் அனுபவ ஜனிதஅநவதிக அதிசய ப்ரீதி காரிதஅசேஷ அவஸ்த உசிதஅசேஷ சேஷை தை கரதி ரூபநித்ய கிங்கரோ பவானி-
அவ் வனுபவத்தாலே ஜநிதமான
அநவதிக அதிசய ப்ரீதியாலே செய்விக்கப் படுமதாய் –
சர்வ அவஸ்தை களிலும் உசிதமான சகல சேஷ வருத்தி ஒன்றையே பற்றின ஆசையை வடிவாக உடைத்தாய்
யாவதாத்மா பாவியான கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதனாக வேணும் –
அநவதிக அதிசயம் ஆகையாவது –
யாவதாத்மபாவியான கைங்கர்யத்துக்கு அடியாய் இருக்கையும்
பர பக்தி யாதிகளைக் காட்டில் அதிசயத்து இருக்கையும் –
அசேஷ அவஸ்தை களாவன
அந்தபுரம் -திரு வோலக்கம் பூம் சோலை நீர் வாவி இவை முதலானவை -என்னுதல்
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்கள் ஆகிற அவஸ்தா விசேஷங்கள் -என்னுதல்
அசேஷ சேஷைதை யாகிறது –
நிவாச சய்யா ஆசன பாதுகாம் ஸூ கோபதான வர்ஷாத பவாரணாதிபி -என்றும்
சென்றால் குடையாம் -என்றும்
கிம் சைனாம் ப்ரதிவஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருசம்
யதா யதா ஹி கௌசல்யா தாசி வச்ச சகீ வ ச
பார்யாவத் பகிநீ வச்ச மாத்ரு வச்சோப திஷ்டதி -அயோத்யா -12-68- என்றும்
சொல்லுகிறபடியே நாநா விதமான அடிமைகள்

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: