திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

எல்லை இல்லாத இனிமையை உடையதான
உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்
அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்
என்கிறார் —

நானும் அடிமை செய்ய –
என்னை அழைத்தல்
இங்கே வருதல் செய்ய வேணும்
கடு வினை நஞ்சே
என்னுடை அமுதே
கூவுதல் வருதல் செய்யாயே
கொடு வினை படைகள் வல்லை
பிரதி பஷர்
வல்லையாய் -வல்லவன் -வல்லவன் அல்லை
எதிர்மறை அர்த்தம்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே
சேஷமாய் வைத்து பிரதி கூலிம் செய்வர் பக்கல் சீறி ஆயுதம்
எடுக்க மாட்டாதவன்
-ஆயுதம் தான் எடுப்பாய் பயப்பட வைப்பாய்
ஆயுதத்தால் உடன் அழிக்க மாட்டான்
யதிவா ராவணம் சுயம் என்பவர்
கடலை ஆணை செய்து
முற்றுகை இட்டு அங்கத தூது
கச்சா சொன்னார்
இன்னம் ஒரு கால் அனுகூலிக்குமோ தபோப
நான் முடிந்தே போவேன்
கண்ணும் கண்ண நீருமாய் கொன்றாயே –
பிராதி கூல்யத்தால் அழிகிறார்கள்
தானே அழிப்பது இல்லை
அமரர்கள் துக்கம் விளைக்கும் அசுரர் கூட்டம் –
கடு வினை நஞ்சு
அப்போதே சடக்கு என்று முடித்து
என்னுடைய அமுது
தேவர்கள் உப்பு சாறு இல்லை
அமுதம் கடல் கடைய ஸ்வர்க்கம் போக வேண்டாம்
திருப் புளின்குடி
தாயார் திருவடி பிடிக்கும் -கோலம்
வடிவில் ஒப்பு இன்றிக்கே
பகவத் தத்வமும் ஒப்பு இல்லை அஸி தீஷணா
மற்றை நிலா மகள் விசெஷனம் இட முடியாதே
பூ தொடுவாரை போலே
திருவடி கன்ட்ருகிரதொ கூசி
கண்கள் சிவந்த நிகர்ஷம் நிச்சயம் இல்லை
அவர்கள் சன்னிகிதர்
பிராப்தன்
இழக்க வேண்டுமோ கொடு வினையேன் –
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாதே
முற்பட வருதல் -சொல்லாமல்
சமுதாயம் சேர்த்தி குலையாமல் இருக்க -கூவுதல் முதலில்
அபேஷை உடையார் -தனியாக விட மாட்டார்கள் –
வருதல் -கூடவே வருவார்
மனுஷ்யத்வ மானுஷம் சேர்த்தி பிரியாதே -அப்புறமும் அதனால் சொன்னார் –

—————————————————————————————————————————————

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே

———————————————————————————————————————————————

கொடு வினைப் படைகள் வல்லையாய் –
உனக்கு அடியவர்களாய் இருந்தும்
பகைமை கொண்டவர்கள் பக்கல்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி
ஆயுதம் எடுக்க வல்லையாய் -என்றது –
சிலரை அழிய செய்ய -என்றால் ஆற்றல் இல்லாதவனாய் இருக்கையைத் தெரிவித்தபடி –
இறைவன் அப்படி இருப்பானோ -என்ன –
ஆனய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-34-
இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்துக் கொண்டு வாரும் -என்னுமவன் அன்றோ –
ஆயின் அவனை கொல்வான் என் என்ன –
கச்ச அனுஜா நாமி ரனார்த்தி தஸ்த்வம் பிரவிச்ய ராத்ரிம் சர ராஜ லங்காம்
ஆச்வச்ய நிர்யாஹி ரதீ ஸ்தன்வீ தாதா பலம் தாஷ்யசி மே ரத்ஸ்த -யுத்தம் -59- 144
கடலை ஆணை செய்து
ஊரை முற்றுகை இட்டு
பின்னை அங்கத பெருமாளையும் புக விட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை
ராஷேச்வரனான ராவணனே போரில் அடி பட்ட நீ போ
என்று அனுமதி தருகிறேன்
இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக் கொண்டு
வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா
அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய் –
என்று தப்ப விட்டது இன்னும் ஒரு கால் அனுகூலிப்பானோ -என்று
நான் முடிந்தே போம் இத்தனை என்று அதிலே முதிர நின்ற பின்பே
கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ நின்று கொன்றது –
ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூனை ஆயினை கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினேன் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் -கம்பர் –
இவர்கள் செய்யும் தீய செயலாலே அழியச் செய்யும் அத்தனை போக்கி
தானாக அழியச் செய்ய மாட்டான் ஆயிற்று

அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய் –
அசுரர்களாலே தேவர்களால் உண்டான துன்பம் தீரும்படி
அசுரர்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் –

கடு வினை நஞ்சே-
அப்போதே சடக்கென முடிக்க வற்றாய்
மாற்றும் மருந்து இல்லாத நஞ்சு ஆனவனே –

என்னுடை யமுதே –
அந் நஞ்சு தான் இவர்க்கு அமுதமாய் இருக்கிறபடி
தமக்கு அமுதம் தேவர்கள் உடைய உப்பு சாறு அன்று என்பர் –
என்னுடைய அமுதே -என்கிறார் –

கலி வயல் திருப் புளிங்குடியாய் –
இவ் வமுதினைப் பெறுதற்கு
கடல் கடைதல்
சுவர்க்கத்துக்கு போதல்
செய்ய வேண்டா
திருப் புளியங்குடியில் அண்மையிலே இருக்கிறது இவ் வமுதம் -என்கிறார்
கலி வயல் -நிறைந்த வயல் –

வடி விணை யில்லா மலர்மகள் –
வடிவில் வந்தால் ஒப்பு இன்றிக்கே இருக்கும் -என்றது
பகவானும் ஒப்பு ஆகான் -என்றபடி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்
ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-
பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே
எற்றமாயே நின்றது அன்றோ –

மற்றை நிலமகள் –
இந்த விதமான ஏற்றத்தை உடைய பூமிப் பிராட்டியும்

பிடிக்கும் மெல்லடியை –
அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்
பூத்தொடுவாரைப் போலே
கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –
அப்படிப் பட்ட திருவடிகளை –

கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழிக்கு பின்பு
இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு இல்லை அன்றோ –
அவர்களும் அண்மையில் இருப்பாராய்
சம்பந்தமும் உண்டாய் இருக்க
நான் இழந்து இருப்பதே -என்று
பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –

நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்
அண்மையில் இருப்பவனான நீ
ஸ்வரூபத்தை நோக்குகைக்கு
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்
செய்து அருள வேண்டும்
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று
அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

——————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: