திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இவ்விருப்பில் வாசி அறியாத
இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள் கண்டு அனுபவிக்க –
என்கிறார்

விழுங்குவது போலே பார்ப்பது
பருக சப்தம்
பதார்த்தங்கள் அபிமத லாபம்
பஞ்ச விம்சதி இள வாலை-மீன்கள் -களித்து துள்ளா நிற்பதான நிலம்
அழகிய மறுத்த நிலம் ‘
கூற்றம் பிரதி பஷம் -மிர்த்யு போலே
திவ்ய ஆயுதம் -அவனே கூற்றம்
குலம் முதலிலே போக்கி
தம்முடைய பிரதி பஷம் மயர்வு போக்கி அருளினான்
உடனே அனுக்ரகம் பண்ண வேண்டும் என்கிறார்

————————————————————————————————————————————————————-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே

—————————————————————————————————————————————————————

வீற்று இடம் கொண்டு –
சேஷியாய் இருக்கும் தன்மையால் வந்த வேறுபாடு தோன்றும்படி –

வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் –
அகன்றதான பெரிய மண் உலகமான இதிலேயும் இருந்திடாய்
உன்னைக் கொண்டு ஒரு கார்யம் இல்லாத இப்பூ உலகத்திலும் -என்பார் –
ஞாலத்து இதனுளும் -என்கிறார்
அன்றிக்கே –
இதனுளும் இருந்திடாய் -என்பதற்கு
இந்த திருப் புளியங்குடியாகிற திருப் பதிலேயும் இருந்திடாய் -என்னுதல் –
பரம பதத்தில் உன்னை ஒழிய செல்லாமை உடையார் முன்னே இருந்தாய்
என்னும் இது போருமோ -என்பார் -ஞாலத்து இதனுளும் இருந்திடாய் -என்கிறார் –
சாய்ந்து அருளின போது இருக்கும் இருப்பின் அழகை
அனுபவிப்பித்து அருளிற்று
இனி இருந்தால் இருக்கும் அழகையும் அனுபவிப்பித்து அருள வேண்டும் -என்பார்
இதனுளும் -என்று உம்மை கொடுத்து ஓதுகின்றார் –
நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –
நாம் இங்கு இருக்க நீர் பெறப் புகுகிற பேறு யாது -என்ன
அருளிச் செய்கிறார் மேல் –
அடியோம் –
அவ் விருப்பு பட விட
அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் –

போற்றி –
இவ் இருப்பு -இங்கனே நித்யமாக செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் செய்து –

யோவாதே –
உச்சி வீடு விடாதே –

கண்ணினை குளிரப் –
காணப் பெறாமையாலே கமர் பிளந்து கிடந்த கண்கள்
விடாய் எல்லாம் தீர்ந்து குளிரும்படியாக –

புது மலர் ஆகத்தைப் பருக –
செவ்விப் பூ போலே இருக்கிற
திரு மேனியை அனுபவிக்கும்படியாக -என்றது –
மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை
திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து
வார்த்தை அருளிச் செய்தார் -என்கிறபடியே –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்
வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுகையை தெரிவித்தபடி –

சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய் –
செந்நெலின் நடுவே சேற்றிலே
இருபத் தைந்து வயசு படைத்த முக்தர்கள் போலே இருக்கிற
வாளைகள் களித்து துள்ளா நிற்கின்ற அழகிய நீர்
நிலத்தை உடைய திருப் புளிங்குடியாய் –
பணை –
மருத நிலமுமாம் –
இதனால் அவ் ஊரில் உள்ள பொருள்கள் அடைய விரும்பினவற்றை பெற்ற காரணத்தாலே
களித்து வாழும்படியான ஊர் -என்பதனைத் தெரிவித்த படி –

கூற்றமாய் அசுரர் குல முதலரிந்தகொடு வினைப் படைகள் வல்லானே –
பகைவர்களுக்கு கூற்றமாய் கொண்டு
அவர்கள் உடைய குலத்தை முதலிலே அரிந்து போகடுமவனாய்
அதற்கு கருவியாக கொடிய தொழில்கள் உடைய திவ்ய ஆயுதங்களை உடையவனாய் -இருக்கிறவன் -என்னுதல் –
இப்போது இது சொல்கிறது
இதற்கு முன்பு தம்முடைய விரோதிகளை போக்கினபடிக்கு எடுத்துக் காட்டு -என்னுதல்
உனக்கு என்ன குறை உண்டாய் இழக்கிறேன் -என்னுதல்

இவ் இருப்பில் வாசி அறியாத
சம்சாரத்தில்
ருசி உடையாருக்கு உத்தேச்யம் என்கிறார் –
செஷதவத்தால் வந்த வீறு தோற்ற இருந்து வீற்று இருந்து
வியன் கொள் மா ஞாலம் விஸ்மயம் ஆச்சர்யச்மான பிரித்வி
உன்னை கொண்டு கார்யம் கொள்ளாத சம்சாரம்
உன்னை ஒழிய செல்லார் நித்யர் முன்னால் இருந்தால் போதுமோ
இதனுள்ளும் இருந்திடாய்
நமக்கு இது எல்லாம் இங்கே காணலாம் -பட்டர்
பெரிய பெருமாள் -கிடந்த அழகு
நம் பெருமாள் -நின்ற அழகு
பிராட்டியார் இருந்த அழகு
நமக்கு திரு வல்லிக் கேணியில்
அடியோம் ஓவாதே போற்ற
ஓவாதே கண்ணால் பருக
இதுவே ஜீவனம்
மங்களா சாசனம் பண்ண
ஓவாதே -கமர் பிறந்த கண்கள் விடே தீர
புது மலர் ஆகத்தை பருக
திருமேனி அனுபவிக்க
புஷ்பா காசம் -லோசநாம் பிபநிவா-கண்களால் பருகும் படி

—————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: