திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பரம பதத்தில் அன்றோ
வீற்று இருத்தலின் அழகு
காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்
திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –
என்கிறார் –

சாய்ந்து அருளின அழகை கண்டவர்
வீற்று இருந்தால் நின்றால் என்ன இருக்கிறதோ
எம்பெருமான் விஷயம்
நம் போல்வார் நரக அனுப்பவ விஷயம்
பரிவின் காரணம்
நமக்கு பிராக்ருத விஷயம் தான் இப்படி இருக்கும்

————————————————————————————————————————————————————————-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே

————————————————————————————————————————————————————————–

எங்கள் கண் முகப்பே -இருந்திடாய் –
எங்கள் கண் முகப்பே இருக்க வேண்டும்
அது செய்யும் இடத்து –

யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி –
உலகத்துள்ளார் அடங்க -திருவடிகளில் உண்டான சேர்த்தி அழகு கண்டு
திருவடிகளில் விழுவது எழுவதாய்க் கொண்டு வணங்கி –

தங்கள் அன்பாரத் –
தங்கள் பக்தி மிக்கு வர –

தமது சொல் வலத்தால் –
தமது ஆற்றலுக்கு தகுதியான சொற்களாலே –என்னுதல்
அன்றிக்கே –
தாம் தாம் சொல்ல வல்ல அளவுகளாலே -என்னுதல் –
அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்
யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –
அதாவது
நூறு பிராயம் புகுவீர் –
பொன்னாலே பூணூல் இடுவர்
பழம் உண்பீர்
பால் உண்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன
ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே
எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தலைச் தலைச் சிறந்து பூசிப்ப –
ஒருவர்க்கு ஒருவர் மேல் விழுந்து மிகவும் துதித்துக் கொண்டாட –

திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் –
இங்கும் அங்கும் திரிந்து கொண்டே இருக்கிற சந்த்ரனுக்கு
திரிந்து வருகையாலே உண்டான இளைப்பு
எல்லாம் ஆறும் படியாக
இருக்குமாயிற்று மாடங்களின் உடைய ஒக்கம் –
அத் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கிறவனே –

திருவைகுந்தத் துள்ளாய் –
அவ்வளவே இன்றிக்கே
திரு வைகுந்தத்திலே நின்று அருளுகின்றவனே –

தேவா –
தீவு கிரீடா –
பரம பதத்தில் காட்டில் இவ்வுலகத்தில் நிலையால் வந்த புகர் –

இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் –
இந்தப் பெரிய பூமியிலே
திருப் புளிங்குடியிலேயும் ஒரு நாள் இருந்து அருள வேணும் –
இருக்கும் இடத்தில் –

வீற்று இடம் கொண்டே –
பரமபதத்தில் இருக்குமாறு போலே உன்னுடைய வேறுபாடு
தோற்ற இருக்க வேண்டும்
இதனுள்ளும் -என்பதற்கு கருத்து என் என்ன –
சாய்ந்து அருளின அழகு கண்டோமுக்கு
இவன் இருந்தால் எங்கனே இருக்கிறதோ என்றும்
இப்படி இருக்கிறவன் தான் நின்றால் எங்கனே இருக்கிறதோ என்றும்
இங்கனே சில விருப்பங்கள் பிறக்கும் அன்றோ இவர்களுக்கு
அது வேறு ஒரு படி நமக்கு
இவை எல்லாம் நரகத்திற்கு காரணமான விஷயங்களிலே உண்டு
பகவத் விஷயத்தில் தெரியாது
செய்த எல்லாம் பரிதாகையும் அதற்கு மேலே வேறு சில செயல்களிலே
ஆசைப்படுகையும் எல்லாம் நமக்கு இவ் உலக விஷயங்களிலே உண்டாய் இருக்கும் –
இப்படி இருக்குமோ என்று அறியும் இத்தனை-

பரம பதத்தில் இருந்த திருக்கோலம்
நின்றவாறு -திருமலை
கிடந்த வாறு திருப்பாற்கடல்
இங்கே இருந்து காட்ட வேண்டும்
இதனுள்ளும் இருந்திடாய்
எங்கள் கண் முகப்பே
தங்கள் -பிரேமம் மிக்கு
சொல் பலத்தால் -அவர் அவர் தக்க படி
தங்கள் சக்தி அனுரூபமான சொல்
சொல்ல வல்ல அளவு யதா ஜ்ஞானம்
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே
நூறு பிராயம் புகுவார்
விஜய ஸ்ரீ
வங்கி புரத்து நம்பி ஆண்டான் வார்த்தை நினைப்பது
உரி அடி உத்சவம்
அவர்கள் பொன்னாலே பூணூல் இடுவீர் -இரட்டை இடுவீர்
அங்கே போனாலும் முரட்டு சமஸ்க்ருதம் விட்டீர் இல்லையே
மேல் விழுந்து ஆஸ்ரயித்து கொண்டாட
திங்கள் சேர் மாடம் சந்தரன் இளைப்பார ஒக்கம்
திரு வைகுண்டம் திவ்ய தேசம் உள்ளே
தேவா பிரகாசம் இங்கே வந்த தேஜஸ்
இதனுள்ளும் ஒரு நாள் இருந்து காட்டி அருள வேணும் –

————————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: