திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி
தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்
வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

பிரதி பஷம் பிரபலம் அல்லவோ
மாலி சுமாலி போல்வாரை -முடித்தாய்
எம் இடர் கடிவானே
கண் அழிவு அற்று அளிக்கும் பெரிய திருவடி
உனக்கு தயை இருந்தாலும் கண் அற்று அளிக்கும் காய்ச்சின பறவை
காள மேகம் -மேரு போர்த்தி
கருடன் பொன் நிறம் -மேரு –
மலிந்த -கார் வானில் மின்னே போலே
வையம் கண்ட வைகாசி விசாகம் கருட சேவை
மின்னி –
அதுக்கு மேலே கருப்பாக குரங்கு என்னது –
பெரிய திருவடி மேல் இருப்பை காண ஆசை பட்டு
மா சின மாலி மாலிமான் -சுமாலி -இருவரையும்
கனன்று முன் நின்ற சீறி வடிவைக் கண்ட பொழுதே
காய்ச்சின வேந்தே திரு நாமம்
பூ பாலன் -ஆனதே -கொண்ட சீற்றம் உண்டு என்று உளது
haamilton piridge ammayyan pridge aarar pridge ஆனது போலே
கதிர் முடியானே ரஷனம் முடி சூட இழக்கவோ
தூரஸ்தன் இல்லையே -கூப்பிடு தூரம்
சம்ருதமான வயல் இருக்க
சங்கு வில் -பஞ்ச ஆயுதம் தரித்து வர வேண்டும் –
ஆஸ்ரிதர் ஆபத்து விளம்பு அசகன்
எம் இடர் கெட -வர வேண்டும்

 

————————————————————————————————————————————————————————-

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே

————————————————————————————————————————————————————————-

காய்ச்சினப் பறவை யூர்ந்து –
பகைவர்கள் இடத்து உனக்கு கண்ணோடிலும்
கண் அற்று அழியச் செய்யும் -பெரிய திருவடியை நடத்தி –

பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் –
அப்பொழுது இருக்கும்படி –
மேருவைக் கினியக் -கபளீகரிக்க -காளமேகம் படிந்தாப் போலே ஆயிற்று இருப்பது –
இப்பொழுது இது சொல்லுகிறது
பெரிய திருவடி முதுகில் இருப்பை காண்கைக்காக-

மாசின மாலி –
பெரிய சினத்தை உடையனாய்க் கொண்டு வந்த மாலி

மாலிமான் -என்று அங்கவர் படக்
மகானான மாலி சுமாலி -என்றபடி -என்ற அவர் அங்குப்பட
என்கிறவர்கள் -அங்கே முடியும்படியாக
என்று –

கனன்று முன்னின்ற –
சீறி அவர்கள் முன்னே நின்ற
வடிவைக் கண்ட போதே எதிரிகள் முடியும்படியாக அன்றோ வீரம் இருப்பது –
ஆதலின் முன் நின்ற -என்கிறார் –

காய்சின வேந்தே-
திருநாமம் –
காயும்சினத்தை உடைய நிர்வாஹகனே -என்றபடி –

கதிர் முடியானே –
விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி

கலி வயல் திருப் புளிங்குடியாய்-
நிறைந்த வயல்கள் உடைய திருப் புளியங்குடியில்
திருக் கண் வளர்ந்து அருளுகிறவனே
நீ சேய்மையில் உள்ளவனாய் தான் நான் இழக்கிறேனோ -என்பார்
திருப் புளிங்குடியாய் -என்கிறார் –

காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே –
காயும் சினத்தை உடைய திரு ஆழி முதலான திவ்ய ஆயுதங்களைத் தரித்தது
அடியார்கள் உடைய ஆபய்த்தைப் போக்குகைக்காக அன்றோ –
எம் இடர் கடிவானே -திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –
என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

—————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: