முதல் ஆழ்வார்கள் -வைபவம் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி -அடி ஒற்றி -ஸ்ரீ P .B A-ஸ்வாமிகள் .-

பெரிய திரு மொழி திருக் கோவலூர் பதிகம் -நான்காவது பாசுரம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து
அன்பு கூரும் அடியவர்கட்கு
ஆராவமுதம் ஆனான் தன்னை –

ஆசார்ய ஹிருதயம்-
மூன்றாம் பிரகரணம் -சூர்ணிகை -155–
பூண்ட நாள் சீர்க் கடலை யுட் கொண்டு
திருமேனி நன்னிறம் ஒத்து
உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞானஹரத்தைப் பூரித்து தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூரும் அடியவர்
உறையிலிடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும்–

மணவாள மா முனிகள் வியாக்யானம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவரான
முதல் ஆழ்வார்கள் –
அப்படிப் பட்ட அடியவர்கட்கு அமுதமாய் இருந்தவன் திருக் கோவலூர் எம்பெருமான்
அடியவர் –
அன்பு கூரும் அடியவர் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவர்-
என்று வகுத்துக் கொண்டு
அடியவர் -என்றது பேய் ஆழ்வாரை –
இவர் -திருக்கண்டேன் –இன்றே கண்டேன் -திருவடி ஒன்றே உத்தேச்யம் என்று உபகிரமித்து
பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி-என்றும்
முயன்று தொழு நெஞ்சே தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும் –
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்றும்
மத்யத்தில் -40-60-பாசுரங்களில் பேசி அருளி –
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்கு சார்வு -என்று
அவசானத்திலும் தாளையே பேசித் தலைக் கட்டினார்
ஆக இப்படி அடியையே சிக்கெனப் பிடித்து -பேய் ஆழ்வார் அடியார் -ஆகிறார் –

அன்பு கூரும் அடியவர் -அன்பு மிகுந்த அடியவர் -பூதத் ஆழ்வார்
அன்பே தகளியா -தொடங்கி
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
தம் அன்பு மிகுதியை வாய் விட்டு உரைத்தவர் –

இனி
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் – பொய்கை ஆழ்வார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
இப்படிப் பட்ட மூன்று அடிவர்கட்கும் ஆரா வமுதம் ஆனான் -திருக் கோவலூர் ஆயன்–

ஸ்ரீ தேசிகனும்
காஸார பூர்வே கவி முகய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ
ஸூ பகஸ்ய ரசோ பஹூஸதே –
அமுதம் -என்ற ஆழ்வார் சொல்லை இங்கே கரும்பு -என்கிறார் -பரம போக்யதை –
குழாவரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீம் கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த -என்கிற பாசுரம் பற்றியே தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

திருமங்கை ஆழ்வார்
அடியவன்
அடியவர்
அடியவர்கள்
என்று முப்புரி யூட்டினமை-காண்க-
ஸ்பஷ்டமாக அருளாமல் -ரசம் மிக்கு -அனுபவிக்க-

ஆளவந்தார் -மாதா பிதா யுவதயா-நம் ஆழ்வார் திரு நாமம் சொல்ல வில்லை –
வகுளாபிராமம் -விசேஷண சுவாரஸ்யம் –

விந்தை மேய கற்புடை மடக்கன்னி
பல்லவன் -வில்லவன் -வயிரமேகன் -செங்கணான் கோச் சோழன் -வாய் விட்டு
திருமங்கை ஆழ்வார் பேசினது அந்த வ்யக்திகள் திறத்தில் விசேஷ பிரதிபத்தி இல்லாமை பற்றியே –

எம்பெருமானார் -ஆமுதல்வன் -ஆளவந்தார் -கடாஷித்து அருள
அவர் அருளிய தனியன் –
யத்பதாம் போருஹத்யான வித்வச்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம்யாமுநேயம் நமாமி தம் –
பதாம் போருஹ -ஐந்து எழுத்துகளால் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும் —
பதாம் போருஹ -பராங்குச தாசர் பெரிய நம்பியை இப்படி அருளுகிறார் என்பர்-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: