காண ஆசைப் பட்ட அளவிலே
அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள
தம்முடைய மனம் உகந்து
அனுபவிக்கிறபடியை
அருளிச் செய்கிறார் —
—————————————————————————————————————
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –
———————————————————————————————————————-
கருத்தே உன்னைக் காண கருதி-
எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே
முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்
கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி
அனுபபத்தியைக் கொண்டு அர்த்தா பத்தியாலே கற்பித்தல்
அனுமானத்தாலே அதீந்த்ரியம் என்று அறிதல் செய்யும் பொருளை
நேரே காண வேண்டும் என்று எண்ணுகிறார் என்கை
அநுபவத்தி -பொருத்தம் இன்மை
அர்த்தா பத்தி -அர்த்தத்தாலே கிடைத்தால் –
என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –
மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்
இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்
பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –
யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே
லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்
பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்
இதம்புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்
இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது
மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி
இனி -இருத்தாக என்பதற்கு
சிநேக பாவமே அன்றோ என் பக்கலில் உள்ளது என்கிறார் -என்னுதல்-
தேவர்கட்கு எல்லாம் விருத்தா –
இனி அவ்வருகு இல்லை என்னும்படி உயர்ந்தவர்கட்கும் அவ்வருகானவனே
தலை மகனையும் தலை மகளையும் கிழவனும் கிழத்தியும் என்று தமிழர் சொல்லுவர்
அவளையும் மலர்க் கிழத்தி –திருச் சந்த விருத்தம் -55-என்றார்கள் அன்றோ –
விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –
அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்
இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –
என்கிறபடியே
எப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்
எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற
பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது
பிரகாரி ஒருவனே ஆம் –
உன்னை என் உள்ளம் உகந்து உள்ளும் –
சடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு
கலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது
தேவர்கட்கு எல்லாம் விருத்தா
விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –
என்று சொல்லுகிற இவ் விசெஷனங்கட்கு கருத்து
மேலானார்க்கும் மேலாய்
பரம பதத்தில் எழுந்தருளி இருந்து
அவர்களை அனுபவிக்குமாறு போலே
தன்னை அனுபவிப்பிக்க
அனுபவித்த என் நெஞ்சம் உகந்தது ஆகா நின்றது -என்கை –
காண ஆசைப் பட்ட அளவில்
திரு உள்ளத்தில் புக
ப்ரீதி உடன் தலைக் காட்டும் திருவாய் மொழி –
அனுபவித்து அருளிச் செய்கிறார்
உன்னை உள்ளும் ஏன் உள்ளம் உகந்தே
கருத்தே -உன்னை
கண்ணே -உன்னை என்றார் முன்னால்
விருத்தா மூத்தவன் -தேவர்களுக்கு விருத்தர் முற்பட்டவன்
உயரத்து பரமபதத்தில் ஒருத்தா அத்விதீயன்
முகம் காட்டி
இந்த விஷயம் லாபிக்க ருசியே அமையும்
மிடுக்கான உன்னை காண கருதின அளவிலே முகம் காட்டி
கருத்தே –
அனுபபத்தி கொண்டு அர்த்தாபத்தி
பொருத்தம் இல்லாதவற்றை கொண்டு அர்த்தா பத்தி அனுமானம்
அவயவங்கள் உடன் கூடியவை கார்ய வஸ்து
கடம் வாயும் வயிறுமாக உண்டே
கடம் உண்டாக்கக் பட்டதால் கார்யம்
குயவனும் உண்டே நிமித்தம்
சக காரி தண்டம் சக்கரம்
மண் உபாதானம்
காரணங்கள் அனுமானம் -அர்த்தா பத்தி பார்க்காமல்
ஜகம் அவவயவம்
ஈஸ்வரன் அனுமானம் கொண்டு சாஸ்திரம் கொண்டு இல்லாமல்
அனுபபத்தி -கொண்டு அர்த்தாபத்தி கல்பித்தல்
அனுபபத்தியால் அதீந்த்ரம்
இந்த்ரியங்கள் கொண்டு அறிய முடியாதே
அனுமானம் -சாஸ்திர விருத்தமாக தான் த்யாஜ்யம்
சாஸ்திர யோநித்வாத்-
சாஸ்திரம் ஒன்றாலே தான் அறிய வேண்டும் –
அனுமானம் -குயவன் போலே ஞான சக்திகள் குறைவு இல்லையே
குயவன் வேஷ்டி பண்ண மாட்டான்
ஜகத் சிருஷ்டி மட்டும் இல்லை
நாம் நினைக்கும் படி இல்லை
கட்டடம் பலர் சேர்ந்து கட்ட -அது போலே இல்லை
நிறைய ஈஸ்வரங்கள் இல்லையே
சர்வ சக்தன் அத்விதீயன் அறிய சாஸ்திரம்
வையம் தகளியா -வார் கடல் நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக
சமுத்ரம் ஜகத்துக்கு உள்ளே வாராமல் இருக்க கட்டுப் படுத்த
ஈஸ்வர ஆஞ்ஞை உண்டே
பூமி காடின்யம் குலையாமல் -ஆஞ்ஞை
சூர்யன் இட்ட கார்யம் சரியான -ஆஞ்ஞை நியாமகம் உண்டே
அனுமானம் -கொண்டு சாதிக்கலாமா
நியாய சாஸ்திர -சாச்த்ரதுக்கு உட்பட்ட அனுமானம் ஒத்து கொள்ளலாம்
சாஸ்திர சம்மதமான அனுமானம் –
பிரத்யஷம் விருத்தமான அனுமானம் தள்ளப் படுவது போலே
சாஸ்திர விருத்தமான பிரத்யஷம் அனுமானம் தள்ள வேண்டுமே
கல்யாண சுந்தர சாஸ்த்ரி தர்க்க சாஸ்திரம்
மரம் கிளி -கண்டு -உண்டு இல்லை இருவரும்
கண்ணால் கண்டும் இல்லை என்பான் அனுமானம்
கிளையில் கிளி
மீதி கிளைகளில் கிளி இல்லையே
அத்தை கொண்டு சொல்கிறேன்
வாதம் -அனுமானம் குறை இல்லை
பிரத்யஷ விருத்தம்
விதண்டா வாதம் குதர்க்க வாதம் –
எம்பெருமான் கருத்து -காணும் வஸ்து இல்லையே
கண்ணே உன்னை காண –
கண்ணும் கருத்தும் இவருக்கு அவன் தானே சார்த்தி
மறுகல் செய்த நெஞ்சினை –
மறுகலில் ஈசன் -நான்காம் பத்து
இருத்தாக இருத்தினேன்
இசைவு பெற்றால்
தள்ளிக் கதவு அடைத்தாலும் போகான்
பரம பதம் போலே பொருந்தி இருந்தான் –
பெருமாள் தண்ட காரண்யம் சித்ர கூடம் பொருந்தி இருந்தால் போலே
இஹ வஸ்யாமி –பஞ்சவடி -சித்ர கூடே சீதா ராம
அநேக காலம் –
சரத் காலம் -சஞ்சீவ சரதாம் சதம் -மாங்கல்ய தாரணம் –
தந்து கயிறு
ஆனேன கண்டே -கழுத்தில் கட்டுவது
சௌபாக்யத்தால்
சரதாம் சரம் நூறு சரத்க்கல் ஜீவித்து இருக்க
சரத் காலம் ருது -ஓன்று தான் ஒரு வருஷத்தில்
ஜடாயு பஷி அடியில் வசிக்க -ஐயர் கண் வட்டத்தில் வர்த்திக்காத இலவு
நடுவில் ஆய்ச்சி ஆணையால் பிரிந்து
அது போலே ஆழ்வார் நெஞ்சில் பொருந்தி
வீற்று இருந்தான் -இருப்பாக இருத்தாக -ஸ்தாவர பிரதிஷ்டை
அன்றிக்கே
இருத்தாக -ப்ரீதி இல்லாமல் இருந்தாலும் மித்ரா பாவேன
விருத்தா -தேவர்களுக்கும் அவ்வருகே-மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா
குமரன்
தலை மகன் தலை மகள் கிழவன் கிழத்தி என்பார்
மலர் கிழத்தி மன்னு மா மலர் கிழத்தி திரு சந்த விருத்தம்
விளங்கும் சுடர் சோதி -பரோ ஜ்யோதி தீப்யதெ பிரகாசிக்கும்
உயரம் -தேஜோ ரூபமான பரமதம்
ஒருத்தா அத்விதீயம்
பிரகாரி ஒருவன்
பிரகாரங்கள் பல உண்டே பிரகாரி ஒருவனே
உன்னை –
சடக்கு என்ன முகம் காட்டின உன்னை கண்டு அனுபவியா நின்றது
மேலார்க்கும் மேலாய்
அவர்கள் போலே தன்னை அனுபவிப்பித்த நெஞ்சம் உகந்தது
————————————————————————————————————————————–
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-