சிறிய திருமடல்-11- நீரார் கமலம் போல் செங்கண் மால் — 28-ஆராத தன்மையனாய் – -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் -அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி
ஏரார் கிளிக் கிளவி-எம்மனைதான் வந்து என்னை –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
அதனாலும் தீராது என் சிந்தை நோய்
தீராது என் பேதுறவு வாராது மாமை
மற்று ஆங்கே ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவான் என்றார் அது கேட்டு

காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –
நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன்
அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய்-

————————————————————————–

நீரார் கமலம் -இத்யாதி –
என் உத்தியோகம் ஒன்றும் அன்று என்னும்படி
அவன் உத்தியோகம் இருந்தபடி-

நீரார் கமலம் போல் செங்கண் மால் –
ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –
ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று
வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –
கமலம் போல் செங்கண் -என்கையாலே
குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது –

என்று ஒருவன் –
ஒருவன் என்னும் ஆபாத ப்ரதீதி அமையும் கிடீர் –
இப்படிப் பட்டான் என்று உள்ளபடி எல்லாம் பரிச்சேதிக்க
போச்சுதில்லை என்றபடி –
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –
என் கையாலே அடையாளம் சொல்லா நிற்க அறிந்திலேன் என்னும் போது
உள்ளபடி எல்லாம் பரிச்சேதிக்கப் போச்சுதில்லை -என்றபடி –

பாரோர்கள் எல்லாம் மகிழ
சிறியார் பெரியார் விலஷணர் அவிலஷணர் -என்னாதபடி
இருந்ததே குடியாக ப்ரியப்ப்படும்படி வந்து தோன்றினான் –
பாரோர்கள் எல்லாம் என்கையாலே மத்யமரையும் கூட்டிக் கொண்டு பிரியப்படும் படி வந்து தோன்றினான் -என்கை

பறை கறங்க –
கொல்லும் ஆனைக்குத் தலைப் பறையடிப்பாரைப் போலே
பறை யடிக்க வந்து தோன்றினான் –

-சீரார் குடம் –
பதார்த்தங்களுக்குச் சீர்மையாவது –
அவனோடு ஏதேனும் ஒரு ஸ்பர்சம் உண்டாகை இ றே –
சீரார் குடம் -என்று தன்னுடைய நோயாசை இருக்கிறபடி –

இரண்டு –
ஒரு பந்தைப் பொகடுவிக்க எடுத்தது இரண்டு குடம் இ றே –

ஏந்தி –
வியாபாரியா நிற்கச் செய்தே -ஏந்தி என்னும் போது
ஆகாசத்திலே நிற்கிறாப் போலே நிற்கையும்-
கையிலும் அப்படியே பொருந்தி இருக்கிறாப் போலே மாறி மாறி வருகிற சடக்கு இருக்கிறபடி –

செழும் தெருவே –
அகல நீலங்களாலே குறைவற்ற தெரு –
வீதியார வருவான்-என்று வடிவைப் பாரித்துக் கொண்டு வந்த தெரு வி றே –

ஆராரெனச் சொல்லி –
காரிகையார் நிறை காப்பவர் யார் -என்னுமா போலே
என்னுடைய உத்தியோகம் இருந்தபடி கண்டது இ றே –
ஸ்த்ரீத்வ அபிமானம் உடையவர்களே உங்கள் ஸ்த்ரீத்வத்தைக் காக்க வல்லார் காத்துக் கொள்ளுங்கோள் –
என்பாரைப் போலே வந்து தோன்றினான் -என்கை –

ஆடுமது கண்டு
அக்குடக் கூத்தாடுகிற படியைக் கண்டு

எராரிள முலையார் –
அக்குடக் கூத்தாடுகிற படியைக் கண்டு -குறி யழியாத முலை படைத்தவர்கள்

என்னையரும் எல்லாரும் –
விலக்கக் கண்ட தாய்மாரும் மற்றும் உள்ளாறும்

வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
ஹிதம் சொல்லுவாரோடு
பிரியம் சொல்லுவாரோடு
வாசி அற எல்லாரும் ஒக்க -கெடுவாய் கெட்டாய் இ றே
வந்து கொள்ளாய் -என்று அழைத்தார்கள் –
கண்ணை அங்கே வைத்து வாயாலேவாராயோ -என்கிறார்கள் –

சென்றேன் என் வல்வினையால் –
கௌரவ்யர் சொன்னபடி செய்ய வேணும் இ றே –என்று சென்றேன் –

என் வல்வினையால் –
என்னுடைய மகா பாபத்தாலே
வல்வினை என்கிறது இப்போது பக்தியை இ றே –
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே –

காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
அவனோடு கலந்து பெற்ற நிறமும்
அத்தாலே தரித்த வளைகளும்-கண்டிலேன் –
தன் நிறத்தை தான் காரார் மணி நிறம் -என்பான் என் என்னில்
நீல மணி போலே ஒரு வடிவு இருக்கும் படியே -என்று அவன் வாய்ப் புலத்தக் கேட்ட வாசனையாலே
காரார் மணி நிறம் -என்று ஸ்லாக்கிகிறாள்-

நான் -காணேன் –
எதிர்த்தலையை இக்காட்சி காணக் கடவ நான்
அத்தலை இத்தலையாய் நான் காணேன்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் -என்று
எப்போதும் அவன் விரும்பிக் கொள்வது இவை இ றே –

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் –
பிரியம் சொல்லுவாரும்
ஹிதம் சொல்லுவாரும்
சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –
அதாவது -பிரிவாற்றாமைக்கு ஆஸ்வாச ஹேதுவாக
வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்க கடவது இ றே –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் ஏகாஷி ஏக கரணிகளுக்கு அகப்பட்ட அன்று
பன்னிரண்டாண்டு நானும் பெருமாளும் எங்கள் மாமனார் மாளிகையிலே ரசித்தோம் காணுங்கோள் -என்று
தன் ஆற்றாமையாலே ராஷசிகளுக்குச் சொல்லி தரித்தாள் இ றே –
அப்படி நான் சொல்ல மாட்டா விட்டால் பந்துக்கள் சொல்லிற்று கேட்கலாம் இ றே
அதுவும் மாற்றிற்று இலேன் –

அதுக்கு நிபந்தனம் என் என்னில் –
அறிவழிந்து –
கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே

தீரா வுடம்போடு
இப்படி ஆற்றாமை மிக்கால் -அச்சேத்யம் அதாஹ்யம் -என்னும்
ஆத்மவஸ்துவைப் போலே ஆக வேணுமோ அழியக் கடவதான உடம்பு –

பேதுறுவேன்  கண்டிரங்கி
இப்படி ஆற்றாமையாலே அறிவு கெட்டுக் கிடக்கிற என்னைக் கண்டு இரங்கி –
ஆஸ்ரயித்தில் இரக்கம் குடி புகுராமல் வார்த்தை சொல்ல வி றே இவள் கற்றது –
அவளும் ஸ்ராவ்யமாக வார்த்தை சொல்லக் கற்றாள் காணும்
என் தசா விபாகம் இருந்தபடி –

ஏரார் கிளிக் கிளவி-
கிளியின் பேச்சு -பேய்ப்பாட்டு என்னும் படி -காணும் இவள் பேச்சின் இனிமை –

எம்மனை
இதுக்கு நிபந்தனம் என் என்னில் -பெற்றதாகையாலே –
அதாவது -அதி மாத்திர ப்ராவண்யம் ஆகாது -என்று நிஷேதிக்கும் அதுக்கு மேற்பட
என் சத்தையை அழிய விடாள் இ றே-

தான் வந்து என்னை –
என் ஆற்றாமை கண்ட படியாலே தானே வந்து –

சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
மாயன் தமரடி நீறு கொண்டு அணி முயலில் மற்று இல்லை கண்டீர் இவ் வணங்குக்கு-என்று
இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் ஆகையாலே
தான் பாத ரேணுவை வாங்கி ரஷையாக இட்டாள் –

செங்குறிஞ்சி –
என் ஆற்றாமைக் கண்ட கலகத்தாலே தான் பாத ரேணுவை எனக்கு இட்ட அளவில் பர்யவசியாமல்
தேவதாந்த்ரங்கள் என்றால் அருவருக்கும் குடியாய் இருந்து வைத்து
தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி ஆயிற்றுக் காணும் –

செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு –
ஒரு திருத் துழாய் பரிமாறாத தேவதையாக வேணுமோ பின்னை –

தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள் –
தான் வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்சலி பண்ணினால் -அது சாதனத்தில் அன்வயிக்கில் செய்வது என் -என்று
இருக்கக் கடவதான -ஓர் அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் போலே காணும்

அதனாலும் தீராது என் சிந்தை நோய் –
பண்டே மிக்கு வருகிற நோவு தேவதாந்தர ஸ்பர்சத்தால் அற மிக்கது –

தீராது என் பேதுறவு –
அறிவு குடி புகுந்தது இல்லை –

வாராது மாமை –
நிறம் வரும் என்கைக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே
நிறம் வந்ததில்லை -என்றாள் இ றே –
என் ஆற்றாமை கண்டால் நிறம் தானே வர வேணும் -என்று இருக்கிறாள் காணும்

மற்று ஆங்கே யாரானும் மூதறியும் அம்மனைமார்
சொல்லுவார் –
தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்

மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் –
இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க
தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன்
இந்த்ரன் படி கேட்கிறாய்
வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இ றே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும்
மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
தான் வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்சலி பண்ணினால்
அதுசாதனத்தில் அன்வயிக்கில் செய்வது என் -என்று
இருக்கக் கடவதான -ஓர் அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் போலே காணும்

பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்-
பூமியில் அறிவாரும் அறியாதாரும் ஒக்க
கட்டுப் படுத்தக்கால் நோய்க்கு நிதானம் தெரியும் -என்று சொல்லா நிற்பர்கள் -.
அத்தைச் செய்யுங்கோள் என்ன –

அதுக்கு பிரயோஜனம் என் என்னில்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார்
பெண்களைத் தீம்பு செய்து முகம் காட்டாதே இருக்கும்
கிருஷ்ணனே யாகிலும் வெளிப்படும் -என்கிறார்கள் –

அது கேட்டு –
கட்டுப் படுத்துங்கோள் -என்றார்கள் மூதறி வாட்டிகள் –
இவர்களும் கட்டுப் படுப்பாராக இசைந்தார்கள் –
அவ்வளவிலே தன்னை அழியாது இருக்கச் செய்தே
இவர்கள் இசைவைக் கேட்டுத் தானே வந்து புகுந்தாள் கட்டுவிச்சி .
பகவத் விஷயங்களைக் கேட்கைக்கு ருசி உண்டு என்று அறியும் இத்தனை இ றே வேண்டுவது –
ஆசார்யர்கள் தாங்களே வந்து சொல்லுவார்கள் இ றே –
முன்புத்தை ஆசார்யர்கள் பகவத் விஷயம் போது நாலிரண்டு
பேருக்கு ஆயிற்று சொல்லுவது –
அது தானும் அவர்கள் படி அறிந்தால் சொல்லுவது –
அங்கன் அன்றிக்கே -ருசி உடையார் -என்று தோற்றின அளவிலே சொல்லுவர் எம்பெருமானார் –
அப்படிக் காணும் இக்கட்டு விச்சியும்

காரார் குழல் கொண்டை-
கட்டுப் படுத்தினவள் சொல்லும் வார்த்தையிலும் காட்டில்
இவள் மயிர் முடியே இவளுக்கு போக்யமாய் இருக்கிறபடி .
ஆசார்யர்கள் உடைய ஆத்ம குணங்களிலும் காட்டில்
தேக குணமே உத்தேச்யமாய் இருக்கிறபடி –

கட்டுவிச்சி கட்டேறி
தேவா விஷ்டை யானாள் –
அதாவது -கொட்டாவி கொள்ளாதே மூரி நிமிராதே செய்தபடி –

சீரார் சுளகில்
சுளகுக்கு சீர்மை யாவது -பதர் அறுத்து
மணியும் மணியாக்கிப் பதரும் பதராக்குமது இ றே –
இச் சுளகும் -தேவதாந்த்ரங்கள் ஆகிற கூளத்தையும்
பதரையும் அறுத்து
மணியே மணி மாணிக்கமே -என்கிற மணியைக் காட்டப் புகுகிறாள் இ றே –
ஆகையால் -சீரார் சுளகு –

சில நெல் பிடித்து எறியா-
அவையும் சில நெல்லே -என்கிறாள் –

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –
பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இ றே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா
ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறேசொல்லுகிறேன் என்றான் இ றே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ் தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரச்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இ றே –நினைதொறும் சொல்லும்தொரும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே
கண்டு வணங்கினார்க்கு -இத்யாதி
காமன் உடல் கொண்ட தவத்தாற்கு
தன்னையும் அபிமத விஷயத்தையும் சேர்த்ததுவே குற்றமாக காமனை தஹித்த அக்நி வர்ணன் ஆனவன் இ றே ருத்ரன் –
அவனுக்கு -உமை உணர்த்த -இத்யாதி
ப்ரச்ன ரூபத்தாலே இப்படிப் பட்ட திரு நாமங்களை உடையவன் ஆர் -என்று உமை கேட்க
சிஷ்யாசார்ய க்ரமம் அறியாத தான்
தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே அவன் அவளைத் திரு நாமங்களைச் சொல்ல விட்டுத் தான் கேட்டு இருந்தான் ஆயிற்று –
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து –
கேடடுக் குறி யழியாதே இருந்தானோ என்னில்
முடி யுண்ட மாலை போலே ஒசிந்து இருந்தான்
திரு நாம பிரசங்கத்தாலே வன்னெஞ்சனான ருத்ரன் பட்டபடி கண்டால்
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
சாஷாத் கரித்தார் என்படுகிறார்களோ –

கை மோவா
பாவனா பிரகர்ஷத்தாலே –விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழும் –என்கிறபடியே
கை திருத் துழாய் நாறும் இ றே

பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
நாமம் பலவுமுடைய நம்பி இ றே இப்படி பண்ணினாலும்

பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
ஓன்று தோற்றிற்று
இரண்டு தோற்றிற்று
நாலு தோற்றிற்று
பத்து தோற்றிற்று
நூறு தோற்றிற்று
ஆயிரம் பேர் தோன்றா நின்றதீ -என்றாள் –

பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
அவனது காளமேகம் போன்ற திரு மேனியை உவமையாக காட்டினாள் –
ஸ்ரமஹரமான மேகத்தைக் காட்டி வடிவைக் காட்டினாள் –
காரார் திரு மேனி கண்டதுவே காரணமாக வி றே இவள் தான் இப்படிப் பட்டது-

கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள் –
ஒரு கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவள் -என்றாள் –
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
உண்ணும்படி சொல்லில் அவன் வாயாலே ஊட்ட உண்பது
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
அவன் வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு திருக்கையிலே யாயிற்று இடம் வலம் கொள்வது –
பிரசாதாத்தை சூடிக் கைப் புடையிலே கிடப்பாரைப் போலே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
இவன் பெண்களுக்குத் துறையாய் இருக்கும்
ஸ்ரீ மதுரையிலும் திருவாய்ப்பாடியிலும் உள்ள பெண்கள் கை எடுத்துக் கூப்பிடா நின்றார்கள் –
பண் பல செய்கின்றாய் –
பகவத் விஷயத்திலே ப்ரத்யா சன்னர் செய்வதும் செய்கிறிலை -அவர்கள் தனியே அனுபவியார்கள் இ றே
பாஞ்ச சன்னியமே
நீ வந்து சேர்ந்த விடத்துக்குத் தகாது உன் குணம்
உன் பிறப்புக்குச் சேரும் அத்தனை
பாஞ்ச ஜன்யம் இ றே –

திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் –
உபய விபூதி நாதனாக இட்ட தனி மாலையைச் சொன்னாள் –
தாமத் துளப நீண் முடி மாயன் தனக்கு இ றே இவள் மடல் எடுக்கிறது –

கீழ்ச் சொன்னவை யடைய ஸ்வகதமாக சொன்னாள் –
கட்டுரையாக –
அவற்றைத் தன்னிலே சொன்ன அநந்தரம் –
நீர் ஏதம் அஞ்சினேன் –
நீங்கள் ஏதேனும் சில வென்று பயப்படாதே கொள்ளுங்கோள்-
தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை –
நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் -என்கிறாள்

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் –
இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ

ஆரானும் அல்லன் –
நாய் தீண்டிற்று இல்லை –

அறிந்தேன் அவனை நான்
ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே
அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –

கூரார் வேல் கண்ணீர் –
அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி
எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ
இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும்
நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
பூமிப் பரப்பைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவர் ஆர் –
ஆரால் -என்கையாலே
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றாள்
அவன் -என்ன வேண்டும் பிரசித்தியை உபஜீவித்து நின்று சொல்லுகிறாள்

இவ்வையம் –
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
பூமிப் பரப்பை அடைய துழாவி யிருந்து அவன் அடிச் சுவடு மோந்தவரைப் போலே சொல்லும் –
விச்வாமித்ர மகரிஷி யாகம் காக்க பெருமாள் எழுந்து அருளுகிற போது –
ருஷியே இங்கே தோற்றுகிற ஆஸ்ரமம் ஏது-என்று கேட்டு அருள
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ் ஸூ பண்ணின சித்தாஸ்ரமம்
அவன் எழுந்து அருளி இருந்து போன இடம் -என்று நான் இம் மண்ணை மோந்து கொண்டு கிடப்பன் -என்றான் இ றே
அப்படியே இவ்வையம் என்று அடிச் சுவடு தோன்றுகிறபடி –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
இத்தால் -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
தன்னுடைமையை இரந்து பெறுமவன் அன்றோ –
இவளை விட்டு வைக்குமோ -என்றபடி –
மண்ணை இரந்து அளந்து கொள்ளுமவன்
பெண்ணை நோவுபட விட்டு வைக்குமோ –என்றபடி –

ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
வரபல புஜ பலங்களாலே மிக்க இலங்கை யாராலே துகளாயிற்று –

ஆரால் –
தங்கள் தரம் அறியாதே -வரத்தைக் கொடுத்து
அவனாலே குடி இருப்பு இழந்து கழுத்தும் கப்படமுமாய்க் கூப்பிட்டுத் திரிந்த ப்ரஹ்மாதிகளாலேயோ –
புதுக்கும் பிடாகையாலே செய்வது அறியாதே செய்தபடி –
இத்தால் –
ஒருத்திக்காக -உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
இப்படி அரியன செய்து கைக் கொள்ளுமவன் இவளை நோவு பட்டு இருக்க விடான் -என்றபடி –

மற்று ஆராலே கல்மாரி காத்தது தான் –
பசிக் கோபத்தாலே இந்த்ரன் வர்ஷிக்க -அவ்வர்ஷம் நோக்கப் பட்டது ஆராலே
அவ்வர்ஷத்திலே அகப்பட்ட இடையராலும் பசுக்கலாலுமோ –
இத்தால் தன்னால் வந்த நலிவும் தானே பரிஹரிக்கும் என்றபடி –

ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது –
அப்ரமேயோ மஹோததி –
ஒருவராலும் பரிச்சே திக்க ஒண்ணாத படி பேர் ஆழத்தை யுடைத்தாய் இருக்கிற சமுத்ரத்தைக் கடைந்து –
கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நிற்றூற லறுத்தவர் -என்கிறபடியே
அதில் நற் சீவனான அம்ருதத்தைக் கொண்டவர் ஆர் –
கடலைக் கடைய வெந்தற்று உபக்ரமித்துக் கை வாங்கி இனி தேவர்களாலும் அசுரர்களாலும் அன்று இ றே
அன்று தேவரசுரர் வாங்க -இத்யாதியிறே
தேவர்களும் அசுரர்களும் கை வாங்கின பின்பி றே கடலைக் கடையப் புக்கது –
இத்தால் பல வடிவைக் கொண்டு உடம்பு நோவ பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்படக் கார்யம் செய்யுமவன்
அமுதில் வரும் பெண்ணமுதைநோவு பட வைக்குமோ -என்றபடி
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவன் இ றே –

அவன் காண்மின் –
இவ் வவபதானங்கள் எல்லாம் செய்தவனுக்கு உங்கள் நோவு படும் இத்தனை யல்லது
வேறு தேவதாந்தரங்களுக்கு நோவு படுமோ –

ஊராநிரை மேய்த்து –
தங்களுக்கு பசுக்கள் அளவு பட்டு ஊராநிரை மேய்க்கிறான் அன்று இ றே –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது-என்று கண் எச்சிலாம் படி இ றே இவர்கள் கோ சம்ருத்தி இருப்பது –
அப்படி இருக்கச் செய்தேயும்
கோ ரஷணத்தில் அன்வயித்தவன் ஆகையாலே ஊராநிரை மேய்க்கும் –
ஒருவன் ஒரு ரஷணத்திலே உத்யுக்தனானால் ரஷ்ய வர்க்கம் பெற்றதில் பர்யாப்தனாகான் இ றே
அப்படியே ஊராநிரையை எல்லாம் மேய்க்கும் –

உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
பிரளயத்தில் அகப்பட்ட லோகங்களை எல்லாம் திரு வயிற்றிலே நோவு படாமே வைத்து
அங்கே நெருக்கு ஒண்ணாத படி வெளி நாடு காண உமிழ்ந்து
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
என்று
ஊராநிரை மேய்த்தத்தோடு உலகம் எல்லாம் உண்டு உமிழ்ந்ததோடு வாசி இன்றியே இருக்கிறது காணும் இவருக்கு

ஆராத தன்மையனாய் –
ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்
தான் ஒன்றும் செய்யாதானாய் இருக்கிறபடி –
அதாவது –
தன்னை விஸ்வசித்து உடன் கிடந்தவனை மடி தடவினவன் நெஞ்சாறல் படுமா போலே யாயிற்று
ரஷ்ய வர்க்கத்தை நோவு படக் கொடுத்து நோக்குகையாவது என்னென்புது-என்று அவன் புண் பட்டு இருக்கும் படி
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் ராஷசராலே நோவு பட்ட சரீரங்களை
ஏஹி பஸ்ய சரீராணி – என்று காட்டி அந்யாயப்பட-
ஒரு ரஷகன் உளன் -என்று சொல்லிப் பட்ட நிவால் வந்த லஜ்ஜை இ றே உங்களுக்கு
கர்ப்ப பூதச்த போதனா – என்று உங்கள் கையிலே உங்களை ரஷித்துக் கொள்ளும் கைம்முதல் உண்டாய் இருக்கச் செய்தே
கர்ப்ப பூதரைப் போலே உங்களுடைய ரஷணத்துக்கு நீங்கள் கடவிகோள் அன்றியிலே இருக்கிற
உங்களுக்கு வந்த லஜ்ஜை சஹிக்கலாம் –
நோவு படுவிகோளும் நீங்களேயாய் –
வந்து அறிவிப்புதி கோளும் நீங்களே யாம்படி பிற்
பாடரானோம் என்பதாய்க் கொண்டு
லஜ்ஜை நம்மால் பொறுக்க ஒண்ணாது -என்றான் இ றே –
அப்படியே -ஆராத தன்மையனாய் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: