திரு நெடும் தாண்டகம்–23—உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து —-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை –

தானே கிருஷி பண்ணி வந்து கலந்தவன் பிரிகிற போது
போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ -என்ன –
அதுவும் சொன்னேன் –
அது அகார்யமாய்த்து -என்கிறாள் –
உனக்கு பவ்யனாய் இருக்கிறவன் உன் வார்த்தை கேளாது ஒழியுமோ -என்ன –
நிலமல்லாத நிலத்தில் நீ இருக்கக் கடவதோ என்று
பெரிய திருவடி கொண்டு போக போனான் -என்கிறாள் –
ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே கூடுகையும் –
ரஷகமாய் பிரிகையும் –
ரஷகமாய் இறே இருப்பது –
போகம் உன்மச்தகம் ஆனால் -சாத்மிப்பிவித்து அனுபவிப்பிக்க வேணும் என்று இருக்கும் இறே அவன் –
ஸ்வ ரஷணத்திலே சிந்தை இல்லாமையாலே கூடு பூரிக்கிறாள் இறே இவள் –

—————————————————————————————————————————————–

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும்  இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே

—————————————————————————————————————————————–

உபய விபூதி உக்தனாய் பரம உதாரனாய் இருக்கிறவனுக்கு நீ
பிரிய விஷயமாகக் கொண்டு இருந்தாய் ஆகில்
அவன் உனக்கு தந்துபோய்த்தது என் என்ன –
-உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
அவன் தந்து போந்தது இது காண் -என்கிறாள் –
உள்ளில் நோய் –
கண் கண்டு சிகித்ஸிக்கலாம் நோய் அன்று காண் தந்தது –
பாஹ்யமான நோயாகில் இறே கண் கொண்டு சிகித்ஸிக்கலாவது –
உள்ளூரும் நோய் –
சர்ப்பம் ஊர்ந்தால் போலே சஞ்சரியா இருக்கை –
கண்ணுக்கு தெரியாது இருந்தாலும் ஒரு பிரதேசத்தில் ஆகில் அவ்விடத்தே அன்வேஷித்து சிகித்ஸிக்கலாம் இறே –
அது செய்ய ஒண்ணாதபடி கழலைக் காப்பான் போலே எங்கும் ஒக்க சஞ்சரிக்கும் நோய் -என்கை –
காதல் நோயாகையாலே கிலாய்ப்பைப் பற்றி நிற்குமோ –
பந்தத்தைப் பற்றி நிற்குமோ -இன்னபடி இருக்கும் என்று நிர்ணயிக்க ஒண்ணாத படியாய் இருப்பது –

சிந்தை நோய்
அபரிஹரணீயமான நோய் –
ஒரூருக்கு நோய் வந்தால் வைத்யனால் பரிஹரிக்கலாம் –
வைத்தியனுக்கு நோவு வந்தால் ஒருவராலும் பரிஹரிக்க ஒண்ணாது இறே –
அபிபூய மாநா வ்யசனை –
கர்ம ஷயம் இறே என்று தரித்து இருக்கலாம் –
நெஞ்சில் வியாதிக்கு பரிஹாரம் இல்லை இறே –

நோய்
இப் ப்ரேமம் தான் அவஸ்தா அனுகுணமாக
-புருஷார்தமாய் இருக்கும் –
போக உபகரணமாய் இருக்கும்
நோயாயும் இருக்கும்
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தார்க்கு புருஷார்தமாய் இருக்கும்
போக்தாவுக்கு போக உபகரணமாய் இருக்கும்
விச்லேஷித்தார்க்கு வியாதியாய் இருக்கும் –

எனக்கே தந்து –
எனக்கே கூறாகத் தந்து
கலவி இருவருக்கும் ஒக்குமாகில் ஆற்றாமை இருவருக்கும் ஒவ்வாதோ -என்கை –

தந்து -என்பான் என் என்னில் –
என்னைப் போல் அன்றியே பிறர் முகம் பார்க்க வேண்டாத படியான ஸ்வாதந்தர்யத்தை உடையவர்
பிரிந்து போகையாலே அவர்க்கு இல்லை என்னும் இடம் கண்டிலையோ -என்கிறாள் –
நைவதம்சான் நமசகான் -என்கிறபடியே ஊர்ந்ததும் கடித்ததும் அறியாதே அவன் படும்பாடு தான் அறியாள் இறே –
ஊர்த்த்வம் மாசான் நஜீவிஷ்யே -என்னும் அளவு தன்னது
நஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி அவன் ஆற்றாமை எனக்கே ஆய்த்து என்கிறாள் –
அவன் கிருஷியால் வந்தது ஆகையாலே –

எனக்கே தந்து
அவன் பெரியவர் அன்றோ –
தமக்கு என்று ஓன்று வைக்க வல்லரோ
எல்லாம் பக்தாநாம் -என்று அன்றோ அவர் இருப்பது -என்று ஷேபம் ஆதல் –

என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார்-
நோவை விளைத்ததுக்கு மேலே
நோவுக்கு ஆச்வாசகரமாய் இருக்குமத்தையும் கொண்டு போனார் –

என் ஒளி வளையும் மா நிறமும் –
மதீயஞ்சநிகிலம் -என்றும் –ததைவ -என்றும் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தை உடைய இவள் –
தேஹாத்மா அபிமானிகளைப் போலே சொல்லக் கடவளோ -என்னில்
சம்ச்லேஷ தசையில் -இது ஒரு வளை இருந்தபடி என் –
சேர்த்தியால் வந்த ஒளி இருந்தபடி என் –
வடிவில் நிறம் இருந்தபடி என் –
என்று கொண்டாடுமவை ஆகையாலே சொல்லுகிறாள்
அவனுக்கு ஆதரணீயமானவை -அவ்வழியாலே தனக்கும் ஆதரணீயமாக இருக்கையாலே -என்னது -என்னலாம் இறே –
மா நிறம் -ஸ்லாக்கியமான நிறம் –

இங்கே –
நான் வழி பறி வுண்ட தேசம் -என்கிறாள்-
நான் வழி பறிக்க வந்து வழி பறி வுண்டேன் -என்கிறாள்-
இங்கே இருவராய் வந்தார் -என்று நான் நிதி எடுத்த தேசம் என்றார்அங்கு
பறி கொடுத்த தேசம் இது என்கிறாள் -இங்கு

ஆனால் அவன் போகிற போது உம்முடைய ஊர் எது என்று கேளாது விட்டது ஏன் என்ன –
அது நான் கேட்க வேண்டிற்று இல்லை-
வ்யதிரேகத்தில் தரித்து இருக்கைக்காக தானே சொல்லிப் போந்தான் -என்கிறாள்

தெள்ளூரும் இத்யாதி –
தெளிந்து பாயா நின்றுள்ள இளம் தெங்கின் தேனை நுகர்ந்து
சேல்களானவை உகளும்படியான தேசம் –

இளம் தெங்கு –
தேச விசேஷத்திலே பஞ்சவிம்சதி வார்ஷிகராய் இருக்குமாய் போலே ஆய்த்து -இத் தேசத்தில் ஸ்தாவரங்களும் இருப்பது –

தெள்ளூரும் இத்யாதி —
தெளிந்து தெங்கின் நின்று வாரா நின்றுள்ள தேறல் திரு வீதிகளிலே பாயா நிற்கும் ஆயத்து –
தேன் திருவீதியிலே பாயாத போது -சேல் பருகிற்று என்னக் கூடாது இறே
இது தேட்டறும் திறல் தேனினை தென்னரங்கனை -என்கிற தேனுக்கு ஸ்மாரகமாய் இருக்கிறதாய்த்து –

சேலுகளும் –
முக்தர் களித்து வர்த்திக்குமா போலே -இத்தேசத்தில் திர்யக்குகளும் அகப்பட களித்து வர்த்திக்கிற படி –
தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் –
ஜன்ம தேசமான ஆற்றை விட்டு போக ஸ்தானத்திலே புகுந்து தேனை நுகர்ந்து களித்தது என்கை
முக்தம் சம்சாரத்தை நினைக்கும் அன்று இறே இவை தமக்கு ஜன்ம பூமியான ஆற்றை நினைப்பது –

இளம் தெங்கு -இத்யாதி –
சம்சார சம்பந்தம் அற்றுப் போன முக்தனுக்கு சம்சார ஸ்பர்சம் இல்லாத நித்யசூரிகள்–ஆள்மின்கள் வானகம் -என்று
ஸ்வ போகத்தை கொடுக்குமா போலே
ஆற்றிலே பிறந்து புகுந்த கயல்களுக்கு ஊரில் ஸ்தாவர பிரதிஷ்டிதமான
தெங்குகள் தம்முடைய தேனைக் கொடுக்க-
அத்தை நுகர்ந்து களிக்கிற கயல்களை உடைய ஊர் –

நம்மூர் என்ன –
நமக்கு தேசம் என்ன-
எனக்கு தேசம் எனில் –
பக்தாநாம் -என்றது வ்யாஹதமாம்-
உனக்கு தேசம் என்னில் -தன் பாரதந்த்ர்யத்தோடு சேராமையாலே
அவள் உன்னை ஒழிய எனக்கு ஒரு தேசமாவது ஏன் என்னும் –
இரண்டு தலைக்கும் ஸ்வரூப ஹானியாகையாலே –நம்மூர் -என்கிறாள் –
இருவர் சத்தையும் உண்டாக்கும் தேசம் இது காணும் –
என்னை பிரணயி ஆக்கி உன்னை பிரணயிநி யாக்கும் தேசம் இது -என்கை –
திருமந்தரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர் –
இருவரும் விஷயார்த்திகள் ஆகையால் இருவருக்கும் தேசம் இது இறே–

கள்ளூறும் இத்யாதி –
தோளிலே இட்ட தனி மாலையும் தாமுமாய் வந்த வரவை நீ காணப் பெற்றது இல்லை காண் –
புழுகு நெய் ஏறிட்டுக் கொண்டு வருவாரைப் போலே நான் உகந்தபடி ஒப்பித்து வந்தார் –

கள்ளூறும் பைம் துழாய் மாலையானை –
அவனூர் பட்டது அத்தனையும் படும் காண் அவன் உடம்பு –
ரச சிரைகள் திறந்து மது ஒழுகா நின்றுள்ள திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே –

கள்ளூறும் –
தன்னிலத்தில் காட்டில் திரு மார்பில் ஸ்பர்சித்த பின்பு செவ்வி பெற்ற படி –

பைம் துழாய் –
திருத் துழாய் குளிர்ந்து இருந்தது என்று நீ அறிந்தபடி என் என்ன -என்னை அணைக்கையாலே அறிந்தேன் -என்கிறாள் –

கனவிடத்தில் –
இந்த்ரஜாலம் என்றும் -கனவு என்றும் -அஸ்த்ரங்களைச் சொல்லக் கடவது –
அஸ்திரமான தேசத்திலே தாமும் சந்நிஹிதராய்-
அனுபாவ்ய விஷயமும் சந்நிஹிதமாய் இருக்க –
தேசாந்தரம் வேண்டுகிறது –தேசமும் தேஹமும் அஸ்த்ரமாக இருக்கையாலே

கனவிடத்தில்
கனவு -என்று சம்ச்லேஷத்தில் ஸ்தர்யத்தைச் சொல்லவுமாம் –
முன்பு அனுபூதமான வற்றை கால நீளத்தாலே ஸ்வப்னம்-
கண்ட மாத்ரம் என்று சொல்லக் கடவது இறே –

யான் காண்பன்
அவனை ஒழிய செல்லாத படியான ஆற்றாமையை உடையவ நான் காண்பன் –

நான் –
அனுபவித்தேன் –
என் அபிநிவேசத்துக்கும் குறை இல்லை –
அனுபவத்துக்கும் குறை இல்லை –

சம்ச்லேஷத்தில் புரை இல்லை யாகில் அத்தசையில் உனக்கு அவன் கையாளாக அன்றோ இருப்பது –
போகாதே கொள் என்று ஓர் உக்தியால் விலங்கிட மாட்டிற்று இல்லையோ என்ன
அதுவும் செய்தேன் -என்கிறாள்
கண்ட போது
அனுபவித்த தசையில் –

புள்ளூரும் கள்வா –
பெரிய திருவடியை நடத்துக்கிற க்ரித்ரிமனே-
பெரிய திருவடியை பதிப்படையாக வைத்து வந்து புகுந்து கலந்து
இத்தலை அகப்பட்டவாறே -அவன் கடுமை போராது என்று
அசேதனமான தேரை நடத்துமா போலே பெரிய த்வரையோடே பெரிய திருவடியை நடத்துக்கிற கிரித்ரிமனே
வந்த போதே போகையாலே பெரிய திருவடியை பதிப்படையாக கடத்தி வந்த க்ர்த்ரிமனே -என்கிறாள்
வந்த போது –சிலையே துணையாக வந்தானாகில் பெரிய திருவடி வருகை யாவது என் –
கொண்டு போகை யாவது என் என்ன
ராஜாக்கள் அபிமத விஷயத்தை பற்ற கறுப்புடுததுப் புறப்பட்டால்
மந்த்ரிகள் வரவும் கொண்டு போகவும் கடவதாய் இருக்குமா போலே
பெரிய திருவடி வந்து கொண்டு போனான்-

புள்ளூரும் கள்வா –
வந்த கார்யம் தலைக் கட்டிற்று ஆகில் எழுந்து அருளல் ஆகாதோ -என்று பெரிய திருவடி சொல்ல
அவனை மேல் கொண்டு போனான் -என்கிறாள் –

புள்ளூரும் –
தேரூர்ந்தான் -என்னுமா போலே –
அதாகிறது -பெரிய திருவடியும் குழைச் சரக்காம்படி -காண் -போன கடுமை இருந்தபடி என்கிறாள் –
பெரிய திருவடி சிறகிலும்
திரு வநந்த ஆழ்வான் மடியிலும் –
சேனை முதலியார் பிரம்பிலும்
பிராட்டி கடாஷத்திலும்
வளரும் தத்வம் ஆகையாலே தான் நினைத்தபடி செய்யப் போகாது இறே –
வான் இளவரசு – இறே –

நீ போகல் என்பன் –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –
நாம் பிரியில் இவள் தரியாள் என்று இருக்க வேண்டாவோ-

நீ போகல் –
என்னையும் கூட்டிக் கொண்டு போதல்-
இங்கே கூட இருத்தல் செய்யுமது ஒழிய தனியே போகக் கடவையோ –

என்பன் –
நிஷ் பிரயோஜனமான வார்த்தையைச் சொன்னேன் –
அவன் ஸ்வரூபத்துடன் சேரும் வார்த்தையைச் சொன்னேன் அல்லேன்-
என் ஸ்வரூபத்துடன் சேரும் வார்த்தையைச் சொன்னேன் அல்லேன்-
பலிப்பது ஒன்றைச் சொன்னேன் அல்லேன் –
அவன் போகத் தேட நான் தடுக்கையாவது அவனுடைய பிரணயித்வத்துக்குச் சேராதே-
தத் தஸ்ய சத்ர்சம் பவேத் -என்று இருக்கை- ஸ்வபாவமாய் இருக்க
போகாதே கொள் என்கை என் ஸ்வரூபத்துக்கும் சேராதே

என்றாலும் –
இப்படி இவருடைய ஸ்வரூபத்துக்கும் சேராத வார்த்தையைச் சொன்ன விடத்திலும்

இது நமக்கோர் புலவி தானே –
இந்த சம்ஸ்லேஷம் நமக்கு ஆற்றாமைக்கு உறுப்பாய் ஒழிந்தது –
அவனைப் பேணினேன் அல்லேன் –
என்னைப் பேணினேன் அல்லேன் –
அபிமதம் பெற்றிலேன் அல்லேன் –
இத்தால் துக்கமே சேஷித்து விட்டது -என்கிறாள்
புலவி -துக்கம் –

நமக்கு –
அவன் அபிமதம் கைப் பட்டது என்று ஹ்ர்ஷ்டனாய்ப் போனான்
நமக்கு துக்கமே பலித்து விட்டது

தானே
நாட்டாருக்கு சுக ஹேதுவான தானே கிடீர் நமக்கு துக்க ஹேது ஆயத்து -என்கிறாள் –

ஓர் புலவி
ஸ்வரூப ஹானியால் வந்த துக்கமும்
அவனைப் பிரிகையால் வந்த துக்கமும் சேர்ந்து இரட்டித்து இருக்கையால்
அத்விதீயம் -என்கிறாள் –

—————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: