திருக் குறும் தாண்டகம் –6 -மூவரின் முதல்வனாய யொருவனை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –

——————————————————————

மூவரின் முதல்வனாய –
இந்த்ரனைக் கூட்டுதல்
தன்னைக் கூட்டுதல்
சசஜ்ஞ்ஞாயாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்கிறபடி
மூவருக்கும் காரணம் ஆகையாலே -முதல்வன் -என்கிறார் –

முதல்வனாய -யொருவனை –
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்கிறபடியே
மூவரையும் தனித் தனியே கண்டால் –
இவனே காரண பூதன் –
இவனே காரண பூதன் -என்னலாய்–
மூவரையும் சேரக் கண்டால் –
இருவர் கார்ய கோடி நிஷ்டராய்
இவனே இருவருக்கும் காரணம் என்னும்படி –
பரஞ் சோதிஸ் சப்த வாச்யன் இவனேயாய் இருக்கையாலே
ஆஞ்சோதி ஓன்று -என்கிறார் –

உலகம் கொண்ட கோவினைக்-
மூவருக்கும் ப்ரதானன் ஆனால்
அவர்கள் கார்யம் செய்து கொடுக்க வேணுமே –
அவர்களில் ஒருவனுக்கு கார்யம் செய்த படி –

உலகம் கொண்ட –
இந்த்ரன் உடைய ராஜ்யத்தை மகாபலி பறித்துக் கொள்ள
அவன் பக்கலிலே தானே சென்று அபேஷித்து-
மூவடி -என்று
இந்த்ரன் கார்யம் செய்ய முதலடி இட்டபடி —
முன்பே ஒருவனுக்கு கை ஒட்டையைத் தீர்த்து விட்டான் –
முடை யடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவான் -இடர் கெடுத்த திருவாளன் -இறே –
அவன் தமப்பனுக்கு தானே வேத பிரதானம் பண்ணினான் –

இப்படி செய்கைக்கு ஹேது என் என்னில் –
கோவினை –
நிர்வாஹகன் ஆகையாலே

குடந்தை மேய –
இன்னும் சம்சாரிகள் இடர்பட்டார் உண்டாகிலும்
கை கழியப் போக ஒண்ணாது என்று
திருக் குடந்தையிலே படுக்கை பொருந்தி பள்ளி கொண்டவனை –

குரு மணித் திரளை –
ஸ்ரேஷ்டமான நீல ரத்ன சமூஹம் போலே
புகர்த்து குளிர்ந்த -வடிவு அழகை உடையவனை –

இன்பப் பாவினைப் –
செவிக்கு தம்முடைய கவி போலே தித்தித்து இருக்கிறபடி –
பா -என்பது இயல் -பாட்டு –
இன் கவி பாடும் பரம கவிகளான
முதல் ஆழ்வார்கள் கவி போலே
இனியனாய் உள்ளவனை -என்னவுமாம் –

பச்சைத் தேனைப் –
செவிக்கே அன்றிக்கே
நாக்குக்கும் இருக்கிறபடி –

பைம்பொன்னை –
உடம்புக்கு அணையலாம் படி
ஸ்பர்ஹணீயமாய் இருக்கை –

யமரர் சென்னிப் பூவினைப் –
அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –
அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்
பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –

புகழும் தொண்டர் –
இவ் விஷயத்தை புகழ்ந்தார்களாகக் கொண்டோம் –
இதுக்குப் பாசுரம் எங்கே தேடிச் சொன்னார்கள் –
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே
குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி –
என் சொல்லிப் புகழ்வர் தாமே –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன -என்று
அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டுப் புகழப் போகாது –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: