திருக் குறும் தாண்டகம் –16-மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை –

கீழில் பாட்டிலே -திருமஞ்சனம் பண்ணி
இப்பாட்டிலே-திரு மாலை சாத்துகிறார் –

—————————————————————–

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே –

———————————————————————

மாயமான் –
பொலா ராவணன் -என்றதுக்கு அடியான
ஜந்து விசேஷம் இறே –

மாயச் செற்று –
முன்பு போலே தொற்றம்பாக விடாதே
பிணத்தையும் மாய்த்து –
பிணமும் காணாதபடி -நசிப்பித்து –

மருது இற நடந்து-
அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –
தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –

வையம் தாய –
முன்புத்தை அது வளர்ந்த பின்பு பண்ணின வியாபாரம் –
நடுவு தவழுகிற போது வியாபாரம்
இது பிறந்த அன்றே பண்ணின வியாபாரம் -இறே –
பூமியை அநாயாசேன அளந்து கொண்டு –

மா பரவை பொங்கத் –
அப்பெரிய கடல்
தயிர்த் தாழி பட்டது பட –

தடவரை திரித்து –
கடலை கண் செறி இட்டாப் போலே
யானை மலையை -பிள்ளைகள் சிறு துரும்பை
திரிக்குமா போலே திரித்து –

வானோர்க்கு ஈயுமால் –
உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுத்தது –
பிரயோஜநாந்த பரருக்கு-
பிச்சேறினவர்கள் எண்ணி அன்று இறே செய்வது –

எம்பிரானார்க்கு –
எனக்கு உபகாரகர் ஆனவருக்கு –

என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு –
தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
பிரயோஜன நிரபேஷமான
சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு –

சூட்டுவன் தொண்டனேனே –
இத்தால் அல்லது செல்லாத சபலன் –
அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: