திருக் குறும் தாண்டகம் –15-முன்பொலா ராவணன் தன் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை –

முன்புத்தை இழவு எல்லாம் தீர
நீராட்டுகிறார் –

———————————————-

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –

———————————————————————

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம்
ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே
தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –

முது மதிள் –
வலித்த மதிள் –

இலங்கை வேவித்து –
திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –

அன்பினால் அனுமன் வந்து –
காலால் அன்று போலே –
அந ஸனம் தீஷித்தும் –
கடல் கடந்தும் –
யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –
த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –

ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு –
பிராட்டி விருத்தாந்தம் கேட்டு
ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

என்பொலாம் உருகி யுக்கிட்டு –
அந் நிலையை நினைத்து சிதிலர் ஆனபடி –

என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் –
என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –
நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –
அன்புடனே கூடின நீர் –
அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –

அடியனேனே –
அங்குத்தைக்கு யோக்யராவது
அடியார் ஆனால் போலே காணும் –

——————————————————————————— –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: