திருக் குறும் தாண்டகம் –14 -காவியை வென்ற கண்ணார் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –

—————————————

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி-
கருங்குவளையை வென்ற கண்ணார் கல்வியே கருதி
எப்போதும் –
அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் -என்னும்படியே
அவர்கள் கலவியே கருதி –
நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் -என்னும்படியே
அதுக்கு எதிர் தட்டாக இத்தையே நினைத்து –

நாளும் பாவியேனாக எண்ணி –
அநாதி காலம் ஒரு ஸூஹ்ருத லேசமும் பண்ணாத
மகா பாபியாக மநோரதித்து –

நாளும் -மேலும் கீழும் அன்வயித்து

அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் –
சக்கரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே
பழுத்தாப் போலேயும்
ஆழ்வார் -உனது பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தாப் -போலேயும் –

தூவி சேர் அன்னம் மன்னும் –
சிறகை உடைய அன்னம் பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
ஹம்ச பரஹம்சர் -பிரியாதே வர்த்திக்கிற தேசம் –
பெரியாழ்வார் -நாத யாமுநர் போல்வார்

சூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –
வகுத்த விஷயம்
அசந்நிஹிதமாய் இழந்தேனோ –
வாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
சொல்லுமா போலேயும்

பாவியாது –
நினையாது –

பாவியேன் ஆயினேனே –
பாவிகள் -எண்ணுக்கு -சிறு விரல் ஆனேன் –
முன்பு பண்ணின பாபம் இதுவானால்
இதுக்கும் மேலே பலிப்பது இங்கனே இறே –
தீயதும் நல்லதும் கார்ய -காரண -பாவத்தாலே இறே வருவது –

பாபி யாகையாலே நினைக்க வில்லை
நினைக்காமையாலே பாவி ஆனேன்
இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: